அன்புடன் வரவேற்கின்றோம்


you are welcome to our web page

எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்

Please give your GOOD IDEAS FOR DEVELOPING
THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPS

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்

வெள்ளி, 15 அக்டோபர், 2010

வானிலை மாற்றம்




சர்வதேச இயற்கை பாதுகாப்பு கூட்டுறவு


உலகம் வெப்பமயமாதல்
Global WarmingGlobal Warming

  • உலகம் வெப்பமயமாதல் என்றால் என்ன?
    முன்னுரை
    உலகம் வெப்பமயமாதல் என்பது சுற்றுப்புறச்சூழலின், பசுமைக்குடில் வாயுகளின் நிலை அதிகரிக்கும் போது பூமியின் நிலப்பரப்பில் ஏற்படும் அளவுக்கடந்த தட்பவெப்பநிலையாகம். பசுமைக்குடில் வாயுக்கள் என்பது சுற்றுப்புறச்சூழலின் வெப்பத்தை தடுக்கும் வாயுக்கள் ஆகும் (கார்பன் டை ஆக்ஸைடு, மீதேன், நைட்ரஸ் ஆக்ஸைடு மற்றும் குளோரோஃபுளோரோ கார்பன்). இது தான் பசுமைகுடில் விளைவிற்கு அடிப்படையாகும். இந்த பசுமைகுடிலை போல, வளி மண்டலத்திலும், சூரியனிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சானது இந்த வாயுக்களால் தடுக்கப்பட்டு புவியின் வெப்பத்தை அதிகரிக்கிறது.
    Global Warming
  • காரணங்கள்
    உலகம்வெப்பமயமாதலின் காரணங்கள்
    1. அதிக பயன்பாட்டில் உள்ள தொல்லுயிர் எச்சஎரிபொருள்
    2. அதிக பயன்பாட்டிலுள்ள தொல்லுயிர் எச்சஎரிபொருட்கள் வெளியேற்றும் அதிக அளவ பசுமைகுடிால் வாயுக்கள், அதிலும் கார்பன்டைஆக்ஸைடு
    3. காட்டழிப்பு நகராக்கம்
          அதிகரித்து வரும் மக்கள் தொகை பெருக்கத்தினால், பயன்பாட்டில் உள்ள நிலங்களின் தேவை அதிகரித்து வருகிறது. இந்த செயலால் பல்வேறு பகுதிகளில் வனப்பகுதிகளை அழிக்கும் அபாயம் அதிகரித்துள்ளது. இவ்வாறு வனப்பகுதிகள் அழிக்கப்படுவதால், சுற்றுப்புற்சசூழலின் கார்பன்டைஆக்ஸைடின் பக்களிப்பு அதிகரிக்கிறது.
    • மின்பொருளில் குளோரோஃபுளோரோ கார்பனின் பயன்பாடு
    CFC அல்லது குளோரோஃபுளோரோ கார்பன் என்பது ஒரு வாயு இது வாயுமண்டலத்திலுள்ள ஒசோனை (O3) குறைக்கிறது. இதனால் ஒசோன் செறிதளர்வு ஏற்பட்டு சூரிய கதிர்வீச்சின் அளவானது அதிகரிக்கிறது.
    Global Warming Causes
    • வெளிபுறத்தில் எரிக்கப்படும் குப்பை
    உலகளவில் வெளிப்புறமாக எரிக்கப்படும் குப்பையிலிருந்து வெளியேற்றப்படும், பசுமைகுடில் வாயுக்கள்
    • வாகனம் மற்றும் தொழிற்சாலை வெளியேற்றம்
    • எரிமலை குமறல்
  • அறிகுறிகள்
    உலகம் வெப்பமயமாதலின் அறிகுறிகள்
    1. பூவியில் பனிக்கட்டியின் அமைப்பு உருகி கீழிறங்குதல் (மலை குன்றில் மழைப்பொழிவு, நகரும் மிகப்பெரிய பனிக்கட்டில் மற்றும் அண்டார்டிக் மற்றும் ஆர்டிக் பனிக்கட்டி)
    2. ஆர்டிக் பகுதியில் புதரின் அதிகரிப்பு
    3. வானத்திலர் உள்ள மெல்லிய மேகம், இதனால் சூரியனிலிருந்து வரும் வெப்பத்தினை திருப்பி அனுப்பும் தன்மை குறைகிறது. (நாசாவால் (NASA) கண்டறியப்பட்ட ஆராய்ச்சி)
    4. புவியின் வெண்எகிர்சிதறலானது 22.5 சதவீதம் குறைந்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது, புவியிலிருந்து சூரிய வெளிச்சத்தை நிலாவிற்கு பிரதிபலிக்கும் தன்மை குறைந்துள்ளது.
    5. காற்று திசையில் மாறுபாடு

    Global Warming - Signs
    Global Warming - Signs
    வறண்ட பனி உருவாக்கம்
      அண்டார்டிக் பனிக்கட்டி          
              
    தாக்கம்
    Global Warming - Signs Global Warming - Signs
    • புயல் வானிநிலை (சூறாவளி, வெள்ளம், பலத்த புயல் காற்று மற்றும் புயல் காற்று ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு)
    • வறட்சி, பசி மற்றும் நோய் பரப்பு போன்றவற்றினை அதிகரித்தல், குறிப்பாக ஏழை நாடுகளில் அதிகரித்தல்
    • மழையின் காலம் மாறுபாடு அடையும் பொழுது, ஏரி மற்றம் குளங்களில் நீரின் அளவு குறைந்து காணப்படுவதால் நீர் நில வாழிகள் அழிந்து வருகிறது.
    • பவளப் பாறையில் சேதம்
    • ஒசோனின் தட்ப வெப்பநிலை அதிகரிப்பு
    • கடல் சார் நோய்கள்
    • சூழ்நிலைமண்டல பெருமதிக்குறைவு
    • உயிரியற் பல்வகைமை சரிவு
    • பொருளாதார மற்றும் சமூக மந்தம்
  • எல் நினோ மற்றும் லாநினா
    எல் நினோ
    தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல அமைப்பின் படி எல் நினோ (El Nino) என்பது பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பில் இடம் பெறும் முக்கியமான வெப்பநிலை ஏற்றதாழ்வு ஆகும். பெரு, எக்குவடோர் மற்றும் தெற்கு அமெரிக்கா பகுதிகளின் கடற்கரையருகில் வழக்கத்திற்கு மாறான வெப்பத்தை தோற்றுவிக்கிறது. எல்நினோ என்பது வெப்பநிலை ஏற்றதாழ்வை குறிக்கும் ஒரு பொருளாகும். இது ஒவ்வொரு ஆண்டின் டிசம்பர் மாதத்தில் தோன்றும். ஆனால் தற்பொழுது இதன் தீவிரம் மற்றும் தாக்கம் கடந்த வந்த ஆண்டுகளில் அதிகமாக காணப்படுகிறது. முக்கியமாக 1982 மற்றம் 1983 காலத்தில் மற்றும் ஒரு முறை இதன் தாக்கம் தோன்றும்போது உலக முழுவதும் அந்த ஆண்டிற்கு தீவிரம் இருந்துகொண்டேயிருக்கிறது. ஆனால் தற்பொழுது ஒவ்வொரு 3 முதல் 7 ஆண்டுவரைக்கும் இதன் தாக்கம் தோன்றுகிறது. அதாவது 1972 1976, 1982 1983, 1987, 1991. 1994, 1997 ஆகும்.
    கிழக்கும் மற்றும் மேற்கத்திய பசிபிக் பெருங்கடலின் சாதாரண காலநிலை மாறுபாட்டின் தீவிரத்தை பொருத்து எல் நினோவின் தாக்கமானது கண்டுபிடிக்கப்படுகிறது. இந்த தாக்கத்தின் போது காற்றின் கிழக்கு மேற்கு என்ற திசை மாறி அதற்கு நேர் மாறான மேற்கு கிழக்கு திசைக்கு இடம்பெயருவதால் மேற்கத்திய மற்றும் கிழக்கத்திய பசிபிக்கின் காலநிலை முற்றிலும் மாறுகிறது.  மேற்க்கத்திய பசிபிக் வழக்கமாக ஈரப்பதத்தையும் மிதவெப்பத்தையும் அதிகமழையையும் கொண்டுயிருக்கும், ஆனால் இந்த தாக்கத்திற்கு பிறகு ஈரப்பதம் இல்லாமலும் குறைந்த மழையையும் கொண்ட வறண்ட நிலையை தென்கிழக்கு ஆசியா, இந்தியா, தென்ஆப்பிரிக்கா பகுதிகளுக்க தருகிறது. இதை போலவே கிழக்கத்திய பசிபிக்கானது வழக்கமான வறண்ட குளிரான மற்றும் குறைந்த மழையை கொண்டுயிருக்கும். இந்த தாக்கத்திற்கு நேர் மாறாக அதாவது ஈரமாக மித வெப்பம் மற்றும் அதிக மழையை உடைய பகுதியாக மாற்றப்படுகிறது.
    கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையானது எல் நினோவின் முக்கிய நிகழ்வுகளை விளக்கியுள்ளது

    தாக்கம்
    1. கிழக்கத்திய பசிபிக்கில் மழையை அதிகரிக்கிறது
    2. மேற்கத்திய பசிபிக்கில் வறட்ச்சியை அதிகரிக்கிறது. இதனால் காடுகள் எரியும் அபாயம் ஏற்படுகிறது.
    3. கடற்கரை பகுதிகளான பெரு மற்றும் எக்குவடோர் பொருளாதாரரீதியாக பாதிக்கிறது. வழக்கமான நிலையில் நீரானது குளிர்ச்சியாக இருப்பதால் மீன்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது ஆனால் எல்நினோவின் தாக்ககத்திற்கு பிறகு கடற்கரைப்பகுதி வெப்பமாக மாறுவதால் ஊட்டப்பொருட்களில் தளர்வு ஏற்பட்டு மீன்களுக்கு உணவு கிடைக்காத நிலைஏற்படுகிறது.
    4. உடல்நிலை பிரச்சினை,முக்கியமான வறட்ச்சி பகுதிகளில் ஏற்படுகிறது.
    பெயரின் விளக்கம்
    எல்நினோ என்பது ஸ்பானிஷ் மொழியில் சிறு பையன் என்னும் பொருள் கொண்டது டிசம்பர் மாதத்தில் அதாவது கிறிஸ்மஸ் -கிற்கு அருகில் வருவதால் இப்பெயரை கொண்டுள்ளது.
    லா நினா
    எல்நினோவிற்கு எதிர்மறையானது லா நினா ஆகும். இது கிழக்கத்திய பசிபிக்பகுதியில் வழக்கத்திற்கு மாறாக குளிர்ச்சியை கொண்டதாகும். இதன் தாக்கத்தின் போது அதாவது பெரு மற்றும் எக்குவடோர் கடற்கரையின் பகுதியில் அதிக வறட்சியும் குளிர்ச்சியாகவும் இருக்கும். மேற்கத்திய பசிபிக் பகுதியில் மிதவெப்பமாகவும் அதிக ஈரப்பதத்தையும் மற்றும் அதிகமழையையும் கொண்டுயிருக்கும் இது எல்நினோவிற்கு அடுத்தாக வரும் ஆனால் அனைத்து நேரங்களில்  எல்நினோவிற்கு அடுத்ததாக இருக்காது.
    லா நினாவின் விளக்கம் “சிறு பெண்” ஆகும். எல் நினோவிற்கு எதிர்மறையாகும்.
  • ஒசோன் படலம்
    ஒசோன் படலம்

    ஒசோன் படலம், நமது வளிமண்டலத்தில் பாதுகாப்பு படலமாகும். (O3, மூன்று ஆக்ஸிஜன் அணு) புவி நிலப்பரப்பிலிருந்து இது 19-30கி.மீ இடைதொலைவில் உள்ளது. இந்தபடலமானது சூரியனிலிருந்து வரும் புறஊதாகதிர்களை தடுக்கிறது. இந்த ஒசோன் படலம் இல்லாமல் இருந்தால் புற்றுநோயின் தாக்கம் அதிகமாகயிருக்கும். இந்த உலகில் ஒருவரும் உயிர் வாழமுடியாதநிலை ஏற்படும். இந்த படலத்தில் நிலைப்பாடு 10ppm ஆகும். இந்த ஒசோன் படலமானது சூரியஒளியை ஆக்ஸிஜனாக மாற்றி உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் அளவானது இருப்பிலிருக்கும் நைட்ரஜன் மூலம் நிலைப்படுத்தப்படுகிறது.
    இன்றைய காலகட்டத்தில் ஒசோன் படலத்தில் தெரியக்கூடிய செறிதளர்வு காணப்படுகிறது. இது 1970ல் கண்டறியப்பட்ட குளோரோஃபுளோரோ கார்பன் ஆகும். இது ஒசோன் படலத்தை தாக்குகிறது. இந்த குளோரோஃபுளோரோ கார்பன் (CFC) குளிர்சாதனப்பெட்டி குளிர்விப்பான் மற்றும் காற்றில் மிதக்கும் தின்ம துகள்கள் தெளிப்பான் போன்றவற்றில் இருக்கிறது. நாம் இந்த சாதனங்களை அதிகமாக பயன்படுத்தும்போது புவியின் ஒசோன் படலத்தில் செறிதளர்வு  ஏற்படுகிறது. எனினும் தற்போது வரும் பொருள்களில் CFC ஆனது இருப்பதில்லை. மேலும் இது மட்டுமல்லாமல் மற்ற பொருட்களான புரோமைன் ஹேலோகார்பன் மற்றும் நைட்ரஸ் ஆக்ஸைடுகள் போன்றவையும் தாக்குகிறது.

    ஓசோன் படல செறிதளர்வின் விளைவு
    • அதிக புறஊதாகதிர்கள் புவியை வந்தடைதல் (இதனால் புவி சமையல் அடுப்பினை போல் இருக்கும்)
    • அதிக வெப்பத்தால் உலக வெப்பமயமாக்கலின் அபாயம் அதிகரிக்கிறது
    ஒசோன் படலத்தை CFC எப்படி செறிதளர்த்துகிறது?
      • மூலக்கூறில் ஒரு புளோரைன் அணு ஒரு கார்பன் அணு மற்றும் 3 குளோரின் அணுக்கள் உள்ளது. இது புறஊதா கதிரால் தாக்கப்படுகிறது.
      • இதில் ஒரு குளோரின் அணு உடைந்து ஒசோனை (O3) தாக்குகிறது. ஒரு ஆக்ஸிஜன் அணு வெளியேறி குளோரின் மோனாக்ஸைடை உருவாக்கிறது. இந்த குளோரின் மோனாக்ஸைடு ஒரு ஆக்ஸிஜன் மூலக்கூறினை வெளியேற்றுகிறது.
    3. மற்றொரு ஆக்ஸிஜன் அணு குளோரின் குளோரின் மோனாக்ஸைடை உடைத்து ஆக்ஸிஜன் அணுவை வெளியேற்றுகிறது. மேலும் குளோரின் அணுவையும் வெளிதள்ளுகிறது. இதனால் ஒசோன் மூலக்கூறுகள் நீக்கப்படுகிறது. இந்த இயக்கமுறையானது தொடர்ந்து நடத்தப்படுகிறது.

  • அமில மழை அமிலமழை
  • அமிலமழை என்பது மற்ற மழையை போல அல்லாமல் அதிக அளவு அமிலத்தன்மையுடைய ஒரு வகை மழையாகும். மழைநீரானது சிறிதளவு அமிலத்தன்மையையும் 5 மற்றும் 6 காரஅமிலநிலையையும் கொண்டுயிருக்கும். நீரானது வளிமண்டலத்தில் ஆவியாகி கார்பன்டைஆக்ஸைடுடன் கலந்து ஒரு வாரத்தில் அமிலமாகமாறிகிறது. அமில மழையானது அதிக கார அமிலநிலையை கொண்டது. காற்று மாசுபடுத்திகளான சல்பர்டைஆக்ஸைடு மற்றும் நைட்ரஜன் ஆக்ஸைடுகள் போன்றவற்றின் தாக்கத்தினால் இது உருவாகிறது. இந்த சல்பர்டைஆக்ஸைடு, நைட்ரஜன் ஆக்ஸைடு நீருடன் கலந்து அமிலத்தை தருகின்றது.
    அமில மழையானது நிலப்பரப்பினை அடைவதற்கு முன் காற்றிலுள்ள ஈரப்பதத்துடன் கலந்து ஈரம் படிவமுடைய மாசுபடுத்தியாகவும், ஈரப்பதத்துடன் கலக்காமல் இருந்தால் உலர்ந்த படிவமுடைய மாசுபடுத்தியாகவும் இருக்கும்.
    எரிமலை குமறலின் போது இயற்கையாகவே அமிலமழை உண்டாகிறது. இது மட்டுமல்லாமல் மனிதனால் ஏற்படுத்தப்படும் வாகனங்களின் புகை, தொழிற்சாலைபுகை மற்றும் தொல்லுயிர் எச்சபொருட்களை எரிப்பதால் ஏற்படும் புகை போன்றவற்றின் மூலம் உண்டாகிறது. நாம் தொடாச்சியாக காற்று மாசுபாட்டினை அதிகரிக்கும்போது அமிலமழையின் விளைவையையும் அதிகரித்துக்கொண்டேயிருக்கிறோம்.
    அமிலமழையின் தாக்கம் என்ன?
    • பெருங்கற்களால் கட்டப்பட்ட கட்டிடங்களில் அரிப்பு
    • மண் மற்றும் ஏரிகளில் அமிலம் படிதல்
    • சுற்றுவட்ட நிலப்பரப்பில் உள்ள நச்சு கலந்த தாதுக்களான அலுமினியம் மற்றும் பாதரசம் போன்றவற்றை பிரித்தெடுத்தல், ஏரிகள் நீர் நிறைந்த பகுதிகளில் தொற்றுகளானது அதிகமாக இருத்தல்
    • மரங்கள் மற்றும் வனப்பகுதிகள் அழிதல்
    Global Warming
    அமிலமழையின் இயக்க முறை
    Global Warming
    அமில மழை
     
  • உலக வெப்பமயமாதலின் தன்மை

    உலகம் வெப்பமயமாதலின் தன்மை
    உலக வெப்பமயமாதலின் தன்மையானது பசுமைகுடிலின் வாயு மற்றும் இதன் வளிமண்டலத்தின் ஆயுட்காலம் போன்ற மூலக்கூறின் வினைத்திறனை பொருத்துள்ளது. கார்பன் டைஆக்ஸைடின் தொகுப்பினை பொறுத்து GWP-ன் தன்மை அளவீடு செய்யப்பட்டு, தனிப்பட்ட நேர அளவு மூலம் மதிப்பிடப்படுகின்றது. 20 வருட கால அளவில் அதாவது குறுகிய கால அளவில் மூலக்கூறானது அதிக யைகொண்டு இருக்கும். ஆனால் 100 வருட கால அளவில் குறைவாகவே இருக்கும். மாறாக மூலக்கூறானது, கார்பன்டைஆக்ஸைடை விட நீண்ட வளிமண்டல ஆயுட்காலம் கொண்டிருக்கும் போது இதன் GWP ஆனது குறித்த நேரத்தில் அதிகரிக்கும்.
    பல்வேறு பசுமைகுடில் வாயுக்களின், வளிமண்டல ஆயுட்காலம் மற்றும் க்கு உதாரணங்கள் பினவருமாறு
  • கார்பன்டைஆக்ஸைடு ஆனது மாறுபட்ட வளிமண்டல் ஆயட்காலத்தை கொண்டது. இதனை தனிப்பட்ட துல்லியமாக வரையறுக்க முடியாது. சமீபத்திய நிலவரப்படி, எரிக்கப்படும் தொல்லுயிர் எச்சப் எரிபொருட்களின் வளிமண்டல கார்பன்டைஆக்ஸைட்டின் ஆயுட்காலம் பத்தாயிரம் வருடமாகும் எல்லா கால கட்டங்களிலும் கார்பன்டைஆக்ஸைடின் ஆகும்.
  • மீத்தேன் - வளிமண்டல ஆயுட்காலம் 1213 வருடங்கள் ஆகும். இதன் GWP ஆனது 20 வருடங்களில் 72,100 வருடங்களில் 25 மற்றும் 500 வருடங்களில் 7.6ஆகும். நீண்ட கால வருடங்களில் குறைந்து கொண்டெ வரும். வளிமண்டல வேதியியல் மாற்றத்தின் போது மீத்தேனானது நீராகவும், கார்பன்டைஆக்ஸைடாகவும் மாறுகிறது.
  • நைட்ரஸ் ஆக்ஸைடின் வளிமண்டல ஆயுட்காலம் 114 வருடங்களாகும். GWP ஆனது 20 வருடங்களில் 289, 100 வருடங்களில் 298 மற்றும் 500 வருடங்களில் 153 ஆகும்.
  • குளோரோபுளோரோ கார்பன் 12 - ன் வளிமண்டல ஆயுட்காலம் 100 வருடங்களாகும். இதன் GWP ஆனது 20 வருடங்களில் 11,000, 100 வருடங்களில் 10.900 மற்றும் 500 வருடங்களில் 5200 ஆகும்.
  • ஹைட்ரோ குளோரோஃபுளொரோ கார்பன் 22 - ன் வளிமண்டல் ஆயுட்காலம் 12 வருடங்களாகும். இதன் GWP ஆனது 20 வருடங்களில் 5160, 100 வருடங்களில் 1810 மற்றும் 500 வருடங்களில் 549 ஆகும்.
  • ட்ராபுளோரோமீத்தேனின் வளிமண்டல ஆயுட்காலம் 50,000 வருடங்களாகும், இதன் GWP ஆனது 20 வருடங்களில் 5210, 100 வருடங்களில் 7390 மற்றும் 500 வருடங்களில் 11,200 ஆகும்.
  • சல்பர்ஹெக்ஸாஃபுளோரோரைடு -ன் வளிமண்டல ஆயுட்காலம் 3200 வருடங்கள் ஆகும். இதன் GWP ஆனது 20 ஆண்டுகளில் 16300, 100 வருடங்களில் 22800 மற்றம் 500 ஆண்டுகளில் 32600 ஆகும்.
  • நைட்ரஜன் டரைபுளோரைடின் வளிமண்டல ஆயுட்காலம் 740 ஆண்டுகள் ஆகும். இதன் GWP ஆனது 20 ஆண்டுகளில் 12300, 100 ஆண்டுகளில் 17200 மற்றும் 500 ஆண்டுகளில் 20700 ஆகும்
பசுமைக் கூடகத்தின் விளைவு
பசுமைக் கூடக விளைவு என்றால் என்ன?பசுமை கூடக விளைவு என்றால் என்ன?
பசுமை கூடக விளைவிற்கு இரண்டு பொருள் உள்ளது. இயற்கை வழி பசுமை கூடக விளைவு, புவியின் காலநிலையை மித வெப்பமாகவும், வசிக்கதக்காதாகவும் வைத்துள்ளது. மனிதனால் ஏற்படுத்தப்படும் பசுமை கூடக விளைவு என்பது, தொல்லுயிர் எச்ச எரிபொருட்களை (முக்கியமாக பெட்ரோலியம், நிலக்கரி மற்றும் எரிவாயு) எரிப்பதால் உண்டாகும் பசுமைக்குடில் வாயுக்கள், புவியின் இயற்கை வழி பசுமை கூடக விளைவினை மேம்படுத்துவதாகும். இந்த பசுமை கூடக வாயுக்கள் புற ஊதாக்கதிர்களை தடுக்கும் ஒரு படுக்கை போர்வையாக அமைந்து, கீழ் அடுக்கினை மித வெப்பமாகவும், மேல் அடுக்கினை குளிராகவும் வைக்கிறது.
Environment & Pollution
பசுமை கூடக விளைவு

சூரியனிடமிருந்து வரும் சூரிய கதிர்களை புவியானது உட்கிரகித்து, நீண்ட அலைநீள புறஊதாக் கதிர்களை வெளியேற்றி குளிராக வைக்கிறது. இந்த கதிர்களானது, பசுமை கூடக வாயுக்களால் உட்கிரகிப்பட்டு, வெளியேறாமல் தடுக்கப்படுகிறது. இதன் நிகர விளைவு தட்பவெப்பநிலை அதிகரிக்கிறது.
முக்கிய வாயுக்கள்
பசுமை கூடக வாயுக்கள் என்பது வளிமண்டலத்திலுள்ள வாயுக்கள் வெப்பமுள்ள வெப்பம் சம்பந்தமான அகச்சிவப்பு கதிர் இயக்கங்களை உட்கிரகித்து மற்றும் உமிழ்வதாகும். இந்த செயல்முறை பசுமை கூடக விளைவிற்கு முக்கிய அடிப்படை காரணமாககும். நீராவி, கார்பன்-டை-ஆக்ஸைடு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்ஸைடு, ஒசோன் மற்றும் குளோரோ புளோரோகார்பன் போன்றவை வளிமண்டலத்திலுள்ள பொதுவான வாயுக்களாகும்.
நம்முடைய சூரிய மண்டலத்தில் வெள்ளி, செவ்வாய் மற்றும் திங்கள் டைட்டான போன்றவற்றின் வளிமண்டலங்களில் உள்ள வாயுக்கள் பசுமை கூடக விளைவினை ஏற்படுத்துக்கின்றது.
அதிகரிக்கும் பசுமை கூடக வாயுக்களின் தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
ஒரு வருடத்திற்கு கார்பன்டை ஆக்ஸைடு (CO2) 1ppm அதிகரிக்கிறது.
வாகனங்களின் மாசுபாடுகளினால் நைட்ரஸ் ஆக்ஸைடு வெளியேற்றப்படுகிறது.
மீத்தேன் தற்போது கண்டறியபட்டவையாகும், ஒரு வருடத்திற்கு வீதம் அதிகரிக்கிறது. ஒரு மீத்தேன் மூலக்கூறு 25 கார்பன்டைஆக்ஸைடின் மூலக்கூறுகளுக்கு சமமாகும். இதன் சரிவிகித வளர்ச்சி வீதத்தில் அதாவது கார்பன்டை ஆக்ஜைடு 25 ஆகும். நம்டைய வளிமண்டலத்தால் மீத்தேனின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது.

புவியிலுள்ள பசுமை கூடக வாயுக்கள்:
  1. நீராவி
  2. கார்பன்டைஆக்ஸைடு
  3. மீத்தேன்
  4. நைட்ரஸ் ஆக்ஸைடு
  5. ஒசோன்
  6. குளோரோஃபுளோரோ கார்பன்
      பசுமை கூடக விளைவில் பங்கு பெற்றுள்ள வீதத்தின் அடிப்படையில் வாயுக்களானது பட்டியலிடப்பட்டள்ளது. அவை பின்வருமாறு
  1. நீராவி, 36-72 % பங்கு
  2. கார்பன்-டை-ஆக்ஸைடு, 9-26% பங்கு
  3. மீத்தேன், 4-9 % பங்கு
  4. ஒசோன், 3-7% பங்கு
      புவியின் பசுமை கூடக விளைவில் மேகங்களின் பங்கு முக்கியமாக கருத்தப்படுகிறது. ஏனெனில் இது மற்ற வாயுக்களைப் போல, அகச்சிவப்பு கதிர்களை உட்கிரகிப்பது மற்றும் உமிழ்வது போன்ற செயல்களை செய்கின்றது. பசுமை கூடக விளைவில் வாயுக்களின் பங்களிப்பு அதன் தன்மை மற்றும் வளத்தினை பொறுத்து அமைகிறத. எடுத்துக்காட்டாக, மூலக்கூறு அடிப்படையில் பார்க்கும் பொழுது கார்பன்-டை-ஆக்ஸைடை விட மீத்தேன் பசுமை கூடக விளைவிற்கு முக்கிய பலமாக காரணமாக உள்ளது. ஆனால் மீத்தேனின் நிலைபாடு மிகக்குறைவாகும். அதனால் இதன் பங்களிப்பு மிகக் குறைவாக இருக்கிறது.
காரணிகள்

வாயுக்களின் காரணிகள்- இயற்கை மற்றும் மனிதர்களின் செயல்கள்
இயற்கையான செயல்முறைகள் மற்றம் மனிதர்களின் செயல்பாடுகள், இவைகள் தான் பசுமை கூடக வாயுக்களுக்கு காரணிகளாகும். அதிகரித்து வரும் தொழிற்சாலை, தொல்லுயிர் எச்ச எரிபொருளின் எரிப்பு மற்றும் காடுகளை அழித்தல் போன்ற மனிதர்களின் செயல்பாட்டால் வளிமண்டலத்தில் பசுமை கூடக வாயுக்கள் கூடுதலாக அதிகரிக்கிறது.
Global Fossil Carbon Emission
மனிதர்களின் செயல்பாட்டால் கார்பன் வெளியேற்றம்

Annual Green house Gas Emissions by Sector
2000 வருடத்தில் உலக மனிதர்களின் செயல்பாட்டினால் பசுமை கூடக வாயுக்களானது 8 வெவ்வேறு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

மனிதர்களின் செயற்பாடுகள்
மனிதர்களின் செயற்பாடுகள், மற்ற சாதனங்களை விட வளிமண்டலத்தில் பசுமை கூடக வாயுக்களின் தன்மைக்கு முக்கிய தாக்கமாக அமைகிறது. ன் 2007 மதிப்பீட்டு அறிக்கையானது 20ம் நூற்றாண்டில் பின் பகுதியில் உலகளவிலாக காணப்பட்ட சராசரி வெப்பத்தின் அளவு உயர்வதற்கு காரணம் மனிதனால் உருவாக்கப்பட்ட கிரீன் ஹவுஸ் வாயுக்களின் செறிவூட்டமாக இருக்கலாம். என அறிவித்துள்ளது.
பசுமை கூடக வாயுக்களின் முக்கிய காரணிகளான மனிதர்களின் செயற்பாடுகள் பின் வருமாறு:
  • பொருளை எரிப்பதால் ஏற்படும் வாயு மற்றும் காடுகளை அழிப்பதால் கார்பன் டை ஆக்ஸைடின் செறிவு அளவு அதிகரிக்கிறது. நில பயன்பாட்டில் மாற்றம் முக்கியமாக காட்டுகளை அழிப்பது) போன்றவற்றின் அடிப்படையில் கார்பன்டைஆக்ஸைட்டின் வெளியேற்றம் மூன்றாம் ஒரு பங்காகும்.
      புதை படிம எரிபொருள் எரிப்பு
காடுகளை அழித்தல்
கால்நடைகளின் நொதிமுறை
நெல் நிலங்களில் மீத்தேனின் வெளிபாடு
  • குளிர் பதன பெட்டி முறையில் குளோரோஃபுளோரோ கார்பனின் பயன்படும், தீயணைப்பு முறைகள் மற்றும் உற்பத்தி முறைகள் போன்றவற்றில் குளோரோஃபுளோரோ கார்பன் மற்றும் ஹோலோன்களின் பயன்பாடு
  • வேளாண்மை செயற்பாடுகள், இதனுடன் உரங்களின் பயன்பாடு போன்றவை நைட்ரஸ் ஆக்ஸைடுகளின் அதிக பங்குகளுக்கு வழிவகுக்கிறது.

  • வாயுக்கள் வெளிப்படுதல்
  • பசுமை கூடக வாயுக்கள் வெளியேறுதல்
    தொழிற்சாலை வெளியேற்றத்திற்கு முன், வளிமண்டலத்தில் கார்பன்டைஆக்ஸைடின் அளவு 280 ஆக இருக்கிறது. என அண்டார்டிக் பனி மையம் அளவீட்டுள்ளது. இதன் அளவு பத்தாயிரம் வருடங்களுக்கு முன் 260-280 இடையே இருந்ததாக காட்டுகிறது. ஏழு மற்றும் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் கார்பன்டைஆக்ஸைடின் செறிவு 300 பிபிஎம் ஆக இருந்தாக ஒரு ஆய்வு வெளியிட்டுள்ளது. கார்பன்டைஆக்ஸைடின் வேறுபாட்டை விட மற்றவை அதிக பிரச்சனைகளை பிரதிபலிக்கிறது. ஏனெனில் காற்றானது, பனிக்கட்டியில் இடையில் சிக்கிக் கொள்கிறது மற்றும் இதனடிப்படையில் ஆராய்ந்து வளிமண்டலத்தில் கார்பன்டைஆக்ஸைடின் செறிவு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
    CO2 Change

    தொல்லுயிர் எச்ச எரிபொருட்கள் எரிப்பதினால் கிடைக்கும் கார்பன்டைஆக்ஸைஸடின் ஏழு காரணிகள் பின்வருமாறு (2000-2004-ன் அடிப்படையில், செறிவுகள் சதவிகிதத்தில்)
    1.திடமான எரிபொருள் (நிலக்கரி):35%
    2. திரவ எரிபொருள் (பெட்ரோல்):36%
    பெட்ரோலை உற்பத்தி செய்யும் ஆயில் துய்விப்பாலை
    3. வாயு எரிபொருள் (எ-கா இயற்கை வாயு): 20%
    4. தீச்சுவாலையின் வாயு: <1%

    5. சிமெண்ட் உற்பத்தி: 3%

    6. எரிபொருளற்ற  ஹைட்ரோகார்பன்: <1%
  • தற்போதைய நிலவரம்
    பசுமை ஊடக விளைவு - தற்போதைய நிலவரம்
    தொழிற்புரட்சி ஆரம்பத்திலிருந்து கிரீன் ஹவுஸ் வாயுக்களின் செறிவு அதிகரித்து வருகிறது. எடுத்துக்காட்டாக, கார்பன்டைஆக்ஸைட்டின் செறிவு 36 மேலாக உயர்ந்து 300 ஆகவும் அல்லது அதிக நவீனமயமான முன் தொழிற்சாலையின் செறி”வு ஆகவும் உள்ளது. இதில் முதல் செறிவு வருடங்களில் அதாவது தொழிற்புரட்சி ஆரம்பத்திலிருந்து ஆண்டு வரை அதிகரித்தள்ளது. அடுத்த 50 ஆளது 33 வருடங்களில், அதாவது 1973 முதல் 2006 வரையில் அதிகரித்துள்ளது.
    தற்போதைய நிலவரப்பபடி இதன் செறிவு அதிகரித்து கொண்டே வருகிறது. அதாவது 1960ல் 37 ஆக இருந்த இதன் செறிவு 2007ம் ஆண்டில் 2000 ஆக உயர்ந்துள்ளது.
    மனிதர்களின் செயற்பாட்டால் உற்பத்தியாகும் மற்ற வாயுக்களும் இதனைப்போலவே அதிகரிக்கிறது. இதனை பற்றிய பல்வேறு விபரங்கள் வளிமண்டல வேதியியல் கண்காணிப்பு தகவல்தளத்தில் உள்ளது. கதிர்வீச்சு விசையை பொருத்து அமையும்.

    வாயு
    தற்போதைய செறிவு
    தொழிற்புரட்சிக்கு முன்பு (1950)
    சதவிகித முன்பு (அதிகரிப்பு)
    கதிர்வீச்சு விசை
    ()
    கார்பன்டைஆக்ஸைடு
    365 ppm {383 ppm(2007.01)}
    87 ppm {105 ppm(2007.01)}
    31% {37.77%(2007.01)}
    1.46 {~1.532 (2007.01)}
    மீத்தேன்
    1,745 ppb
    1,045 ppb
    150%
    0.48
    நைட்ரஸ் ஆக்ஸைடு
    314 ppb
    44ppb
    16%
    0.15
          கதிர்வீச்சு விசை மற்றும் ஒசோன் செறிதளர்வு போன்றவற்றினை பொருத்து அமையும். கீழே கொடுக்கப்பட்ட அனைத்தும் இயற்கை காரணிகளற்ற மற்றும் தொழிற்புரட்சிக்கு முன்பு இதன் செறிவு பூஜ்ஜியமாகும்.

    வாயு
    தற்போதைய (1998) செறிவு
    கதிர்வீச்சு விசை
    CFC11
    268PPt
    0.07
    CFC12
    533PPt
    0.17
    CFC113
    84PPt
    0.03
    கார்பன் டெட்ராகுளோரைட்
    102PPt
    0.01
    HCFC-22
    69PPt
    0.03


  • பசுமைக்கூட வாயுக்களின் வரைமுறை
    பசுமைக்கூட வாயுக்களின் வரைமுறை
    வளர்ச்சி பெற்ற மற்றும் வளர்ந்து வரும் நாடுகளில் கார்பன் வெளியேற்றம் குறைப்பதில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சிதான் 1990ல் வருடத்திற்கு 1.1 % என்ற நிலையில் வெளியிடப்பட்ட கார்பன் அளவு 2006ல் வருடத்திற்கு >3% என்ற அளவில் உயர்ந்துள்ளது. வளர்ந்த நாடுகளில் ஏற்படும் மனித நடவடிக்கைகளால் முக்கால் பங்கு கார்பன் வெளியேற்றம் இருந்தாலும் இக்கால கட்டத்தில் ஏற்பட்ட அதிக அளவு வெளியேற்றத்திற்கு காரணம் சீனாவே ஆகும். சோவியத் யூனியன் பிரிந்து விட்டதாலும் உபயோகிக்கும் அங்கு கார்பன் வெளியேற்றம் குறைந்து காண்படுகிறது. மீத்தேன் வாயு அதிகரிக்காமல் N2O வாயு மட்டும் வருடத்திற்கு 0.25 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.
    தொழில் சாலைகளில் இருந்து நேரடியாக வெளியேறும் அளவு வெகுவாக குறைந்துவிட்டது. இதற்கு ஆற்றல் திறன் அதிகரித்தும் மின் ஆற்றல் அதிகமாக உபயோகித்ததும் காரணம் ஆகும். ஆயினும் மின்உற்பத்தி ஏற்படும் மறைமுக வெளியேற்றத்தை கணக்கில் கொண்டாலும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள தொழில்சாலைகளின் வெளியேற்றம் 1994 ம் ஆண்டு முதல் நிலையாகிவிட்டது.
    ஆசியா
    ஆசியா நாடுகளில் குறிப்பாக சீனாவின் தொழில்சாலைகளின் வளர்ச்சியே அதிக வெளியேற்றத்திற்கு காரணம் ஆகும். 2000-2010 ம் ஆண்டில் சீனாவின் கார்பன் டை ஆக்சைட் வெளியேற்றம் 600 மெட்ரிக் டன்களாக உயர்ந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது சீனாவின் உட் பிராந்தியங்களில் உள்ள பண்டைகால மின் நிலையங்கள் புதுப்பிக்கப்படுவதே இதற்கு காரணமாகும்.
    ஐக்கிய இராஜ்ஜியம்
    ஐக்கிய இராஜ்ஜியம் தனது கார்பன் டை ஆக்சைட் வெளியேற்றத்தினை 1990 லிருந்து 2010 ற்குள் 20 சதவிகிதம் குறைக்கவேண்டும் என்ற சுய கட்டுப்பாட்டினை விதித்துக்கொண்டது. ஆயினும் இதனில் 4 சதவிகிதம் குறைவான அளவில் கட்டுப்பாடு உள்ளது.
    ஐக்கிய அமெரிக்கா
    ஐக்கிய அமெரிக்காவின் பசுமை குடில் வாயுக்களின் வெளியேற்றம் 1990- ஐ காட்டிலும் 2005 ல் 16.3 சதவிகிதம் அதிகமாக இருந்தது. நெதர்லாந்து சுற்றுப்புற ஆய்வு மையத்தின் ஒரு ஆரம்பநிலை கணக்கீட்டின்படி சீனா அதிகபட்ச கார்பன் டை ஆக்சைடினை வெளியேற்றுகிறது எனவும் 2006 ல் இதன் அளவு 6200 மெகா டன் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஐக்கிய அமெரிக்கா 5800 மெகா டன்களை வெளியேற்றுகிறது. ஆயினும் நபர்வாரி வெளியீடு அமெரிக்கா மக்கள்தொகைக்கு கால்பங்கே உள்ளது.
    2005 ம் ஆண்டினை ஒப்பிடுகையில் சீனாவின் கார்பன் டை ஆக்சைட் வெளியீடு 8.7 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. ஆனால் ஐக்கிய அமெரிக்காவில் 1.4% சதவீதமாக குறைந்துள்ளது. இம்மையம் அளவில் மிக சிறிய கார்பன் டை ஆக்சைடினை கணக்கில் கொள்ளவில்லை. அதேபோல் விமான போக்குவரத்தால் வெளியேறும் கார்பன் டை ஆக்சைடும் கணக்கில் கொள்ளவில்லை. இக்கணக்கீடுகள் பூமியின் வாயுமண்டல CO2 அளவினை காட்டிலும் குறைவு என்றாலும் தொழில்துறை புரட்சிக்கு முந்தைய அளவினை காட்டிலும் அதிகமானது.
    புள்ளியியல்
    நபர்வாரி பசுமைக்குடில் வாயுக்கள் வெளியீட்டின் படி உள்ள நாடுகளின் பட்டியல்
    2000 வருடம் நபர்வாரி பசுமைக்குடில் வாயுக்கள் வெளியீட்டின்படி நாடுகளின் பட்டியல் உள்ளது. இது கார்பன் டை ஆக்சைட், மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைடு, பெர்ப்ளுரோ கார்பன், ஹைட்ரோ ப்ளுரோ கார்பன் மற்றும் சல்பர் ஹெக்ஸ் ப்ளுரைடு ஆகியவற்றின் வெளியீட்டினை உலக ஆதார நிலையம் சிடிஐஏசி (CDIAC) மற்றும் ஐக்கிய அமெரிக்காவின் சுற்றுப்புற பாதுகாப்பு மையம் போன்றவை நிர்ணயம் செய்து தொகுத்துள்ளன.
    நபர்வாரி வெளியீட்டினால் இரு முறையில் கொடுக்கப்பட்டுள்ளது. ஒன்று நில உபயோக பயன்பாட்டினால் ஏற்பட்டது. மற்றொன்று ஹாக்டன் “(2003)” பயன்பாடு இல்லாமல் முதல் முறையானது அடிப்படையில் அமைந்துள்ளது.
    காடுகள் அழிவதும் பின்னர் உள்ள காடுகளின் மூலம் சேமிப்பில் உள்ள கார்பன் அளவுகள் மற்றும் நாடுகளுக்கு இடையில் ஏற்படும் கார்பன் பரிமாற்றம் போன்றவற்றால் நில உபயோக பயன்பாட்டினால் ஏற்படும் புள்ளியியல் பிழை அதிகபட்ச அளவினை அதாவது +/- 150 சதவிகிதம் வரையில் கொண்டுள்ளது. இப்பட்டியலில் அவை சேர்க்கப்பட்டுள்ளது பூமி வெட்பமடைவதற்கு நீர் உபயோக மாற்றம் ஒரு பெரும் பங்கு வகிக்கின்றது என்பதால் தான். இதன் பங்கு உலகளவில் பசுமைக்குடில் வாயு வெளியேற்றத்தில் 5 சதவிகிதம் உள்ளது என உலக ஆதார நிலையம் 2000- ஆம் ஆண்டு தெரிவித்தது.
    தற்போதைய வாயு மண்டல CO2 அளவிற்கான நபர்வாரி பொறுப்பு (நில பயன்பாடு வேறுபாடு உட்பட்டது) 
  • க்யோட்டோ வரைமுறை
    கியோட்டோ வரைமுறை
    கியோட்டோ வரைமுறையில் பங்களிப்பு
    • கையெழுத்திட்டு ஏற்கப்பட்டது
    • கையெழுத்திட்டது இன்னும் ஏற்கப்படவில்லை
    • கையெழுத்திட்டது இன்னும் ஏற்க மறுப்பு
    • கையெழுத்து இடாதவை
    முன்னுரை
    கியோட்டோ வரைமுறை என்பது பன்னாட்டு ஒப்பந்தமான ஐக்கிய நாடுகள் மட்பவெப்ப மாற்றம் தொடர்பான கட்டமைப்பு நடைமுறைகள் என்பதற்கான வரைமுறையாக குறிக்கும். இதன் நோக்கம் தட்பவெப்ப நிலைகளில் ஆபத்தான மாற்றங்களை உண்டாக்காத அளவுக்கு பசுமை கூடக வளிமங்களின் செறிவை சமநிலையில் வைத்திருப்பதாகும். நான்கு பசுமை கூடக வாயுக்கள் (கார்பன் டை ஆக்சைடு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைடு, கல்பர் ஹெக்ஸாபுளோரைடு) மற்றும் தொழில்மய நாடுகளில் உற்பத்தி செய்யப்படும் இரண்டு தொகுதி வளிமங்கள் (ஐதரோபுளோரோகார்பன்கள் மற்றும் பேர்புளோரோகார்பன்கள்) போன்றவற்றை குறைப்பதற்காக கியோட்டோ வரைமுறை உருவாக்கப்பட்டது. முதலில் 1997 டிசம்பர் 11ல் ஜப்பானின் கியோட்டோவில் கடைபிடிக்கப்பட்டது. ஆனால் 2005 பிப்ரவரி 16 ல் மற்ற நாடுகளும் கடைபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து 183 நபர்கள் இந்த வரைமுறை ஏற்கப்பட்டுள்ளது. கியோட்டோவின் அடிப்படையில் தொழில்நுட்ப நாடுகள் 1990 வருடத்தை விட பசுமை கூடக வாயுக்களின் செறிவு வெளியீட்டை 5.2 சதவிகிதம் குறைந்துள்ளது. பன்னாட்டு வரையானது ஐரோப்பிய ஒன்றியம் 8% பிற நாடுகளான ஐக்கிய அமெரிக்கா 7% ஜப்பானுக்கு 6% மற்றும் ரஷ்யாவுக்கு 0% ஆகும். இந்த உடன்பாடு ஆஸ்திரேலியாவை 8% மற்றும் ஐஸ்லாந்துவை 10% என சதவிகிதத்தில் பசுமை கூடக வாயுக்களின் வெளிப்பாட்டை உயர்ந்த அனுமதித்துள்ளது.
    கியோட்டோவுடன் இணக்குமுள்ள இயக்கமுறைகளான வாயு வர்த்தகம், சுகாதார மேம்பாடு இயக்கமுறை மற்றும் கூட்டு நடைமுறைகள் போன்ற இயக்க முறைகள் மூலம் கியோட்டோவின் இணைப்பு ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ள நாடுகள் பசுமை கூடக வாயுக்களின் வெளியேற்றத்தை கட்டுப்படுத்துகிறது. அதாவது இணைப்பு ஒன்றிலுள்ள நாடுகள் இணைப்பில் இல்லாத நாடுகளில் பசுமை கூடக வாயுக்களின் வெளியேற்றத்தை தடுப்பதற்கு வழிவகுத்து சமநிலைப்படுத்துகிறது. இந்த முறையில் இணைப்பில்லாத நாடுகளில் பசுமை கூடக வாயுக்களை தடுக்க எவ்வித எதிர்ப்பும் இல்லை. ஆனால் கியோட்டோவின் இணைப்பில் உள்ள நாடுகள் இணைப்பில்லா நாடுகளில் GHG வெளியேற்ற தடுப்பு திட்டத்தை செயல்படுத்தி கார்பனை சேகரித்து இந்த கார்பனை வாங்கும் நாடுகளாக திகழ்வது நிலை மேம்பாட்டை ஊக்குவிக்கிறது. இதன் மூலம் கியோட்டோவின் இணைப்பிலுள்ள நாடுகள் (அதிக தொழிற்சாலை கொண்ட நாடுகள்), வெளியேற்றும் மாசுபாடுடைய வாயுக்களை மேலே கூறப்பட்ட இயக்கமுறையின் மூலம் இணைப்பில்ல நாடுகளில் நடத்தப்பட்ட திட்டத்தினால் (கார்பன் சேகரிப்பு) சமநிலைப்படுத்துகிறது.
    கியோட்டோ இணைப்பில் கையெழுத்திட்டுள்ள நாடுகள் தேசிய அதிகாரமுடைய பசுமை கூடக வாயு இலாக்காவை வடிவமைக்கிறது. இணைப்பிலுள்ள நாடுகளான ஜப்பான், கனடா, இத்தாலி, நெதர்லாந்து, ஜெர்மனி, ப்ரான்ஸ், ஸ்பெயின், மற்றும் பிற நாடுகள் அரசாங்க கார்பன் நிதியை ஊக்குவித்தல், பலதரப்பட்ட கார்பன் சேகரிப்பு நாடுகளிடமிருந்து வாயுக்களை சமநிலைப்படுத்துதல் மற்றும் அதிக பயன்பாட்டிலுள்ள ஆற்றல் எண்ணெய் மற்றும் வாயு மற்றும் வேதிப்பொருட்களுடன் செயலாற்றுதல் போன்ற செயல்களை செய்கின்றது. இதனைத் தொடர்ந்து இணைப்பில்லா நாடுகள் தேசிய அதிகாரமுடைய பசுமை கூடக வாயுக்களின் திட்டத்தினை கியோட்டோ வரைமுறையின் மூலம் கையாளுகின்றன.
    குறிக்கோள்கள்
    வளிமண்டலத்தில் காலநிலை மாறுபாட்டினால் ஏற்படும் அபாயத்தினை தடுப்பதற்காக பசுமை கூடக வாயுக்களின் அளவை நிலைநிறுத்துதல் ஒரு முக்கிய குறிக்கோள் ஆகும்.
    காலநிலை மாறுபாட்டின் இடைப்பட்ட அரசாங்க குழுக்கள் (IPCC), சராசரி உலக வெப்பநிலையானது 1.4டிகிரி செல்சியஸ் (2.50 F) லிருந்து 5.8 டிகிரி செல்சியஸாக (10.40 F) 1990 மற்றும் 2100 ஆண்டில் உயரும் என முன்னுரைத்துள்ளது.
    இதற்கு ஆதாரவாளர்கள் கூட இந்த குறிக்கோளை அடைவதற்கு பன்னாட்டு ஒப்பந்தமான ஐக்கிய நாடுகள் தட்பவெப்ப மாற்றம் தொடர்பான கட்டமைப்பினை எதிர்கொள்ள கியோட்டா தான் முதல் அடிப்படை நிலை என கூறியுள்ளனர்.
    இந்த கியோட்டா, ஜப்பானில் டிசம்பர் 1997 ல் உடன்படிக்கை செய்யப்பட்டு 1998 ம் ஆண்டின் மார்ச் 16 ம் தேதி கையெமுத்திட்டு திறக்கப்பட்டது. ஆனால் 1999 ல் மார்ச் 15 ம் தேதி மூடப்பட்டது.
    2004 ம் ஆண்டு நம்பர் 18 ல் ரஷ்யா இந்த கியோட்டா முறையை புதுப்பித்து 2005 ம் ஆண்டு பிப்ரவரி 16 ல் மஞபடியும் ஒப்பந்தம் கொண்டுவரப்பட்டது இதனைத் தொடர்ந்து 2008 ன் மே மாதம் வரை மொத்தம் 181 நாடுகள் மற்றும் ஒரு பொருளாதார ஒன்றிணைப்பு போன்றவை இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டுள்ளது.
    கியோட்டா வரைமுறையின் 5 முக்கிய கொள்கைகள் பின்வருமாறு
    • கடமை: இந்த வரைமுறையானது கியோட்டா ஒப்பந்தத்தில் கையெழுத்திட நாடுகள் மற்ற பொதுவான உறுப்பு நாடுகள் போன்ற நாடுகளின் மூலம் பசுமை கூடக வாயு வெளியேற்றத்தினை குறைபவ்பதற்கு கையாளப்படும் கடமைகளை செயலாற்றுவதாகும்.
    • செயலாக்கம்: வரைமுறையின் குறிக்கோள்களை நிறைவு செய்ய கையெழுத்திட்ட நாடுகள் அதற்குரிய நாடுகளின் மூலம் பசுமை கூடக வாயுக்களை குறைப்பதற்கு சரியான திட்டங்கள் மற்றும் அளவீடுகளை தயாரிக்கிறது. மேலும் இவை பல்வேறு இயக்கமுறைகளான கூட்டு செயலாக்கம் தூய்மை மேம்பாட்டு இயக்க முறை மற்றும் வாயு வெளியேற்ற வர்த்தகம் போன்றவற்றின் மூலம் வாயுக்களை உட்கிரகிக்கும் அளவினை அதிகரிக்கிறது.
    • காலநிலை மாறுபாட்டின் தக்க வைத்துக் கொள்ளும் திட்டத்தினை செயலாற்றுவதன் மூலம் வளர்ந்து வரும் நாடுகளில் தாக்கத்தினை குறைக்கப்படுகிறது.
    • வரைமுறையின் ஒருமைப்பாட்டினை கணக்கீடு திட்ட அறிக்கை மற்றும் திறனாய்வு போன்றவற்றின் மூலம் உறுதிப்படுத்தப்படுகிறது
    • முறையீடு: வரைமுறையின் செயல்திட்டத்தில் ஏற்படும் முறையீட்டுகளை தவிர்க்க ஒரு குழுவானது செயல்படுத்தப்படுகிறது
  •  
  • கார்பன் சேகரிக்கப்படுதல்கார்பன் சேகரித்தல்
    கார்பன் சேகரித்தல் என்பது யாது ?
    வாயுமண்டலத்தில் உள்ள கார்பன் டை ஆக்சைடு (CO2) அளவினை குறைப்பது எதிர்காலத்தில் தட்ப வெப்ப நிலையின் மாற்றத்தை குறைத்து பயனளிக்கும். இதற்குறிய வழி யாதெனில் எதிர்காலத்தில் கார்பன் வெளியீட்டினை குறைப்பது மற்றும் ஏற்கனவே தேங்கியுள்ள கார்பனை பிரித்து சேகரிப்பதும் ஆகும். கார்பன் சேகரிப்பது என்பது வாயு மண்டலத்தில் உள்ள கார்பனை அகற்றி வேறோரு இடத்தில் தேக்கி வைப்பது ஆகும். (UNFCCC 2006).
    கார்பனை இரண்டு வகைகளில் சேகரிக்கலாம் உயிரியல் முறை மற்றும் நிலவியல் முறை. நிலவியல் முறையில் சேகரிப்பதற்கு அதிக தொழில்நுட்பங்கள் தேவைப்படுவதுடன் மிகவும் செலவு வாய்ந்ததும் ஆகும். மேலும் பெரிய அளவிளான கார்பன் வெளியீடுகளை சரிபடுத்த தேவையான செயல் விளக்கங்களும் இதுவரையில் இல்லை. கீழே விளக்கப்பட்டுள்ள அனைத்தும் உயிரியல் முறையில் கார்பன் சேகரிப்பதுவே ஆகும்.
    உயிரியல் முறை கார்பன் சேகரிப்பு என்பது யாது ?
    உயிரியல் முறையில் கார்பன் வாயுமண்டலத்திலிருந்து ஒளிர்ச்சேர்க்கையின் மூலம் உயிர் பொருள்களான தாவரங்கள் (இலை, மரக்கட்டை மற்றும் வேர்கள்) மற்றும் மண்களில் சேமிக்கப்படுகின்றது. உயிரியல் முறையானது காடுகள் மற்றும் வேளாண் நிலங்களை உபயோகித்து வாயுமண்டல கார்பன் டை ஆக்சைடின் இயற்கை சேமிப்பினை அதிகப்படுத்துகின்றது. உதாரணத்திற்கு மரங்கள் நடுதல் (அ) பாதுகாத்தல், பயிர் வளர்ச்சி முறைகளை மாற்றி அமைத்தல், மண்அரிப்பு உள்ள இடங்களில் தாவரங்களை வளர்த்தல் மற்றும் மேய்ச்சல் நிலங்களின் மேலாண்மையை மாற்றுதல் போன்றவை ஆகும். காடுகள், வயல்வெளிகள் மற்றும் மேய்ச்சல் நிலங்கள் கார்பனை சேகரிக்கும் என்பதால் அவை “கார்பன் சேமிப்பான்” என்றழைக்கப்படுகின்றது.
    காடுகள் மற்றும் வேளாண் நிலங்கள் கார்பன் சேமிப்பான்களாக நன்கு செயல்படுகின்றன. சில சமயங்களில் வாயுமண்டல கார்பன் அளவினை காட்டிலும் இந்நிலங்கள் அதிக அளவு கார்பன் சேமிப்பினை ஏற்படுத்திக் கொள்ளும்.
    ஐக்கிய அமெரிக்காவின் பசுமைக்குடில் வாயுக்கள் கண்டறிக்கை 2006 (EPA 2008), ன் படி நில உபயோக மாற்றம் நில உபயோகம் மற்றும் வனவியல் செயல்பாடுகளால் 883.7 மில்லியன் மெட்ரிக் டன்கள் அளவு CO2 சேகரிக்கப்படுகின்றது. இது கிட்டத்தட்ட ஐக்கிய அமெரிக்காவின் வெளியீட்டில் 12.5 சதவீதம் ஈடு செய்கின்றது. இதனில் 84 சதவிகிதம் நிகர சேமிப்பு காடுகளில் அமைகின்றது. 1990 முதல் 2006 ஆம் ஆண்டிற்குள் காடுகளின் கார்பன் சேமிப்பு மரங்களில் மேல் மற்றும் கீழாக சேமிக்கப்பட்டவை 20 சதவீதம் உயர்ந்துள்ளது. இதற்கு நேர்மாறாக வேளாண் செயல்களாலும் பசுமைக்குடில் வாயுக்களின் வெளியீடு ஏற்படுகின்றது (EPA 2008) 2006 ஆம் வருடம் வேளாண் செயல்களால் வெளியிடப்பட்ட பசுமைக்குடில் வாயுக்களின் மீத்தேன் (CH4) மற்றும் நைட்ரஜன் டை ஆக்சைடு (N2O) முதன்மை வகிக்கின்றது. நொதித்தல் மற்றும் உர மேலாண்மையின் மீத்தேன் வெளியீடு 23 சதவீதமாகவும் மனித செயல்களின் மூலம் மீத்தேன் வெளியீடு 7 சதவீதமாகவும் உள்ளது.
    தென்கிழக்கு ஐக்கிய அமெரிக்கா பிராந்தியங்களில் CO2 வெளியிடும் பெட்ரோலிய பொருட்களுக்கு மாற்றாக உயிர் பொருட்கள் மற்றும் உயிரி எரிபொருள் உபயோகிக்கும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளது (EPA 2005). இன்னும் பத்து ஆண்டுகளில் ப்ளோரிடா வளவியல் மற்றும் வேளாண் செயல்களின் எதிர்பார்க்கப்படும் வெளியீடு ஈடு செய்யப்பட்டு கணிசமாக குறைந்து விடும். 1945 முதல் 2002 ம் வருடத்திற்குள் ப்ளோரிடாவின் காடுகள் பரப்பளவு 36% குறைந்ததுடன் புல்வெளியின் பரப்பளவு 22% உயர்ந்துள்ளது. (USDA / ERS, 2006). காடுகள் மற்றும் வேளாண் நிலங்களின் காடுகள் மற்றும் வேளாண் நிலங்களின் மேம்பட்ட மேலாண்மை முறைகள் வாயுமண்டலத்தின் பசுமைக்குடில் வாயுக்களை கட்டுப்படுத்தும் ஒரு கருவியாகும்.
    வேளாண் நிலங்கள் மற்றும் காடுகளின் கார்பன் சேமிப்பு தளங்கள் யாவை ?
    காடுகள் சூழிலடத்தில் கார்பன் சேகரிப்பு நான்கு பாகங்களில் ஏற்படுகின்றது. மண், மரங்கள், காடுகளின் நிலப்பரப்பு மற்றும் தாவரங்களுக்கு கீழ் பகுதியில். ஒவ்வோர் பாகங்களின் சேமிப்பு அந்தந்த இடம், காடுகளில் உள்ள மரங்களின் வகை மற்றும் வயது, நிலத்தின் தரம் மற்றும் முன்பு நில உபயோக முறைகள் கொண்டு வேறுபடும். சராசரியாக மணல் மற்றும் மரங்களின் மேல் புற பாகங்கள் அதிகளவு சேமிப்பை கொண்டிருக்கும், 60 சதவிகிதம் - காட்டின் குப்பைகள், 1 சாவிகிதம் - மரத்தின் கீழ் புறம் என சேமிக்கப்படும் (பெர்ட்ஸி, 1992).
    ஐபிசிசி (2000) ன் படி கார்பன் சேமிப்பு திறனை வேளாண் நிலங்கள் மற்றும் காடுகளில் அதிகப்படுத்த (1) மேம்படுத்திய மேலாண்மை முறைகளில் நில உபயோகம் (2) நிலங்களை அதிக கார்பன் உபயோகிக்கும் முறைக்கு மாற்றுதல் (3) அறுவடையாகும் பொருட்களில் கார்பன் சேமிப்பினை அதிகப்படுத்துதல். இத்தகைய முறைகள் புதிய நில உபயோகிப்பு மற்றும் மேலாண்மை முறைகள், நிகர பசுமைக்குடில் வாயுக்கள் வெளியீடும் அதோடு தெர்டர்புடைய மேலாண்மை செயல்பாடுகள் மற்றும் நில உபயோக கொள்ளைகள் ஆகியவற்றை கொண்டு வேறுபடும். கார்பன் சேமிப்பினை அதிகப்படுத்தும் வேறுபட்ட முறைகள் பற்றிய அறிவியல் கூற்றுகள் மிகவும் குறைவே ஆகும். இது போன்ற கார்பன் சேமிப்பினை அதிகப்படுத்தும் விலாவாரியான செயல்பாடுகள் கீழ்காணும் அட்டவணையில் விவரிக்கப்பட்டுள்ளது. அதில் 2010 ல் ஏற்படவுள்ள செயல்பாடுகளினால் நிகழும் கார்பன் சேமிப்பு மாறுதல்கள் பற்றிய விவரங்கள் மற்றும் தகவல்கள் உள்ளன. கார்பன் சேமிப்பின் அதிகபட்ச திறன். நில உபயோகம் நிலையான வேளாண்மையை கொண்டும், விளை நிலங்கள் வேளாண் காடுகளாக மாறும் நிலையிலேயே அமையும் (அட்டவணை 1) ஒருமித்த வேளாண் உற்பத்தி முறைகளான முல்லைப்புல் பரப்பு வேளாண் வளவியல் திட்டங்கள் மூலம் மரங்கள் புல்வெளி மற்றும் கால்நடைகள் ஆகியவை ஒன்றுமயமாக்கப்படுவதால் நிகர கார்பன் சேமிப்பு அதிகப்படுத்தப்படுகின்றது. மரம் மற்றும் புற்கள் ஒரு சேர்த்து நன்கு மேலாண்மை செய்யப்படுவதால் அவையே தனியே வளர்ந்து சேமிக்கும் கார்பன் அளவினை காட்டிலும் இங்கு அதிகப்படுத்தப்படுகின்றது.
    ஷாராவ் மற்றும் இஸ்மாயில் (2004) ஆகியோரின் ஆராய்ச்சிபடி ஓரிகான் மாகானத்தில் வனவியல் முல்லைப்புல் பரப்பு முறையில் ஒரு வருடத்தில் ஏக்கருக்கு 299 கிலோ கார்பன் வனங்களை காட்டிலும் அதிகமாகவும் 210 கிலோ கார்பன் புல்வெளியை காட்டிலும் அதிகமாகவும் சேமிக்கப்படுகின்றது. இது 11 வயது கொண்ட டக்ளஸ்ஃபிர் மரம், பல்லாண்டு கால ரை புல் மற்றும் சீமை மசால் ஆகிய மூன்றையும் சேர்த்து வளர்க்கபட்ட வேளாண் வனவியல் முலலைப்புல் பரப்பு திட்டமாகும். முல்லைப்புல் பரப்பு மற்றும் மரங்கள் சேர்ந்து 214 கிலோ / ஏக்டர் என்ற அளவில் அதிக நைட்ரஜன் மற்றும் முல்லைப்புல் பரப்பு தாவரங்கள் மட்டும் 486 கிலோ நைட்ரஜன் / ஏக்டர் காடுகளின் தரை மேல் பாகங்களில் சேகரிக்கப்பட்டது. மரங்கள் மற்றும் முல்லைப்புல் தாவரங்களுக்கு இடையே ஏற்படும் திறனான பங்கீட்டினாலும் தேவையான சுற்றுச்சூழல் ஏற்படுவதாலும் உற்பத்தி செய்யப்படும் நிகர உயிர் தொகுப்பு அளவு அதிகரிக்கின்றது (அட்டவணை 2)
    அட்டவணை 1
    மேம்படுத்தப்பட்ட நில உபயோகம் மற்றும் நில உபயோக செயல்பாடுகளில் ஏற்பட்ட மாற்றத்தினால் உலக அளவில் கார்பன் சேமிப்பில் ஏற்பட்ட நிகர மாற்ற திறன்.

    கூடுதல் செயல்பாடுகள்
    மொத்த பரப்பளவு (106 ஏக்கர்) செயல்பாட்டின் கீழ் உள்ள பரப்பளவு (a) நிகர ஆண்டு மாற்றம் (CO2 - மெட்ரிக் டன் / ஏக்கர் / வருடம்) 2010 ல் நிகர மாற்ற மதிப்பீடு (CO2 - 106 மெட்ரிக் டன் / வருடம்)
    நில உபயோகத்துடன் மேம்படுத்தப்பட்ட மேலாண்மை
    பயிர் நிலம் (b) 3212 30 0.4 385
    நிலம் (c) 10008 10 0.6 600
    தீவன நிலம் (d) 8401 10 1 840
    வேளாண் வனவியல் பரப்பளவு (e) 988 20 0.4 79
    நகர் புற நிலம் (f) 247 5 0.4 5
    நில உபயோக மாற்றம்
    வேளாண் வனவியல் (g) 1557 20 4.6 1432
    புல்வெளி (h) 3707 3 1.2 133
    பாசன நிலம் புணர்வித்தல் (i) 568 5 0.6 17
    அட்டவணை 2:
    ஓரிகாண் மாகாணத்தில் பல்வேறு நில உபயோக திட்டங்களின் கீழ் சேகரிக்கப்பட்ட கார்பன் மதிப்பீடு

    பங்கீடுகள்
    CO2 / ஏக்கர் (மெட்ரிக் டன்கள்) முல்லைப்புல் பரப்பு வேளாண் வனவியல் பண்ணைகள்
    மரம் 0 18 10
    மரத்தின் கீ் 1 2 3
    மண் (0-45 செ மீ) 152 142 137
    மொத்தம் 154 162 150
    கார்பன் சேகரிப்பை மேம்படுத்தும் செயல்திட்டங்கள் வனவியல் செயல்பாடுகள்
    விளைநிலங்களின் மற்றும் புல்வெளி ஓரங்களில் மர வளர்ப்பு
    முன்னர் வேறு பயன்பாட்டிற்கு உட்பட்ட நிலங்களில் மரங்களை வளர்ப்பது உயிர்பொருள்கள் மற்றும் மண்ணின் கார்பன் சேமிப்பினை அதிகப்படுத்தும். மதிப்பீடுகள் கூறுவது என்னவெனில் காடுவளர்ப்பு நிலங்கள் ஆண்டு கார்பன் சேமிப்பினை 120 வருடங்களுக்கு 2.2 - 9.5 மெட்ரிக் டன்கள் CO2 / ஏக்கர் என்ற அளவில் சேமிக்கின்றன (பெர்ட்ஸி 1996) இதனைக் காட்டிலும் காடுகள் வளர்க்க ஒதுக்கப்பட்ட நிலங்கள் (நெருப்பினால் அழிந்தவை) மூலம் கார்பன் சேகரிப்பு குறைபாகவே இருக்கும். (4-28 மெட்ரிக் டன்கள் CO2 சேகரிப்பு அதே காலகட்டத்திற்கு)

    மேம்படுத்தப்பட்ட வனவியல் மேலாண்மை
    மரம் வளர்க்கும் முறைகளை மாற்றியமைத்து கார்பன் சேமிப்பை மேம்படுத்தலாம். இந்த முறைகள் கார்பன் சேகரிப்பு அல்லாத மற்ற பயன்பாடுகளுக்காக ஏற்படுததப்படுவதால் இவற்றின் மாற்றங்கள் மூலம் மேம்படும் கார்பன் சேகரிப்பின் அளவினை கணக்கிடுதல் மிகவும் கடினமாகும். உதாரணமாக வெட்டு மரத்தின் வளர்ச்சியை அதிகப்படுத்துவதால் உயிர்பொருள் மற்றும் மண்ணின் கார்பன் சேமிப்பு அதிகப்படுவதில்லை. அத்தகைய மதிப்பீடுகளில் ஏற்படும் அதிகரிப்பு 2.1 - 3.1 மெட்ரிக் டன்கள் CO2 / ஏக்கர் / வருடம் என்ற அளவில் இருக்கும். 20-45 சதவிகிதம் வரையில் கார்பன் விற்கப்படும் பொருள்களில் சேகரிக்கப்பட்டு பின்னர் அவற்றின் வாழ்நாள் கழிந்து நிலங்களில் சேமிக்கப்படும் (கார்டி, 2007) ஆதலால் வெட்டுமரம் மேலாண்மையிலிருந்து கிடைக்கும் கார்பன் அதிகரிப்பிற்கு ஒரு நிலையான காலம் கிடையாது.
    காட்டு நிலங்களை காடல்லாத உபயோகத்திற்கு பயன்படுத்த கூடாது (மரங்கள் வெட்டு வதை தவிர்க்க வேண்டும்)
    காடுகளை அழிப்பது நிரந்தரமாக உயிர் பொருள்கள் இழப்பது மற்றும் மண்ணின் அங்கக பொருள்கள் குறைவதும் போன்ற இழப்புகள் ஏற்படும். அறுவடை செய்யப்பட்ட உயிர் பொருள்களில் மரத்தில் கார்பன் சேகரிக்கப்படும். கார்பன் சேகரிக்காத பாகங்களை எரிக்கும் பொழுது CO2 மற்றும் பசுமைக் குடில் வாயுக்கள் வெளியாகும். காடுகளை காப்பது மற்றும் அழிவிலிருந்து தடுப்பது கார்பன் சேமிப்பினை அதிகப்படுத்தும். மரக்கட்டை மற்றும் பேப்பர் பொருள்களில் சேகரிக்கப்படும் கார்பன் அவற்றிலிருந்து செய்யப்படும் பொருளின் உபயோகம் மற்றும் உள்ள பயன்பாடுகளை கொண்டு அமையும். பொருள்களில் சேகரிக்கப்படும். கார்பனை அதிகரிக்க சுத்திகரிப்பு முறைகளில் மாற்றம் உபயோகப்படும் பொருள்களில் மாற்றம் இறுதி பயன்பாடு அதிகமாக்குதல் மற்றும் நிலத்தில் மக்கி சேகரிக்கப்படுவது போன்ற மேலாண்மை முறைகள் பயன்படும். காடு வாழ் சூழிடம் மற்றும் அது சார்ந்த பொருட்களின் உபயோகம் ஆகியவற்றை கொண்டு காடுகள் மற்றும் அது சார்ந்த பொருள்களில் கார்பன் சேகரிப்பை அதிகரிக்கலாம்.

    வேளாண் மற்றும் புல்வெளி செயல்பாடுகள்
    காடுகளை ஒப்பிடுகையில் வேளாண் மற்றும் புல்வெளி சூழிலடங்களின் மண்ணில் மேல்பகுதியில் உள்ள உயிர்பொருள்கள் சேமிப்பு குறைவே ஆகும். (15 மெட்ரிக் டன் CO2 / ஏக்கர் என்ற அளவிற்கும் குறைவாக) வேளாண் மற்றும் புல்வெளி சூழிலிடங்களில் கார்பன் சேகரிப்பிற்கான வாய்ப்புகள் அதிகமாக மண்ணை சார்ந்தே இருக்கும். இந்நிலையில் கார்பன் சேகரிப்பை அதிகரிக்க அவை மண்ணில் சேர்வது மற்றும் தங்கி இருப்பது போன்றவற்றை கொண்டு அமையும். இவற்றில் உள்ள கார்பனை சேகரிப்பது முதன்மை வேளாண் நிலங்கள் நில பாதுகாப்பு மற்றும் புணர்விப்பு போன்ற செயல்பாடுகள் மூலம் அமையும். இச்செயல்பாடுகள் நில உபயோக பயன்பாடுகள் பல்வேறு வகைகளில் அமைவது கொண்டும் நில உரிமையாளர்கள் கையாளும் மேலாண்மை முறைகளை கொண்டும் இருக்கும்.
    புல்வெளியில் கார்பன் சேகரிப்பு என்பது பின்வரும் வாய்ப்புகளை உள்ளடக்கியது (1) மேய்ச்சல் அளவினை சமன்படுத்துவது ஏனெனில் அதிகமாக மேய்ச்சலுக்கு பயன்படும் நிலங்பகள் மற்றும் மேய்ச்சல் இல்லாத நிலங்களை காட்டிலும் சமனான மேய்ச்சல் நிலங்களில் கார்பன் சேகரிப்பு அதிகமாக இருக்கும். (லீபிக் மற்றும் குழு 2005); (2) புல்லின் வளர்ச்சியை உரங்கள் மற்றும் மண்ணின் வளங்களை அதிகரித்து மேம்படுத்துதல் மற்றும் (3) அதிக உற்பத்தி திறன் (அ) வேரில் அதிகமாக கார்பன் பங்கீடு வைத்துக் கொள்ளும் புல் வகைகளை வளரச்செய்யுதல்.
    பயிர் நிலங்களில் கார்பன் சேகரிப்பு என்பது (i) மேம்படுத்தப்பட்ட வேளாண் முறைகளின் மூலம் அதிக மகசூல் மற்றும் அதிக பயிர் கழிவுகள் உருவாக்குதல் மற்றும் (ii) மேம்படுத்திய உழவு மற்றும் கழிவு மேலாண்மை முறைகளான குறைவான உழவு (அ) உழவு இல்லாத முறைகள் மூலம் மண்ணை தொந்தரவு செய்யாமல் இருத்தல் இதனால் அதிகமான மக்குதல் மற்றும் மண் அரிப்பு மூலம் ஏற்படும். கார்பன் இழப்பை தடுக்கலாம். லால் மற்றும் குழு (1999) ம் வருடம் கூறுகையில் இம்முறைகளை பின்பற்றி ஐக்கிய அமெரிக்காவின் விளைநிலங்களில் ஒரு வருடத்திற்கு 32-763 மில்லியன் மெட்ரிக் டன் கார்பன் டை ஆக்சைடு என்ற அளவில் கார்பன் சேகரிப்பை அதிகரிக்கலாம் என்று தெரிவித்தனர். இம்முறையில் 50 சதவிகிதம் பாதுகாப்பான உழவு மற்றும் கழிவு மேலாண்மை 6 சதவிகிதம் கூடுதல் நீர் பாய்ச்சுதல் மற்றும் நீர் அளவு மேலாண்மை மற்றும் 25 சதவிகிதம் பயிர் வளர்ச்சி முறைகள் ஆகியவை அடங்கும்.
    இம்முறைகளை ப்ஃளோரிடா வேளாண் மற்றும் வனவியல் துறைகள் பின்பற்றினால் அங்கு கார்பன் சேகரிப்பு திறன் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. ஆயினும் வேளாண் மற்றும் வன நிலங்களில் கார்பன் சேகரிப்பின் அளவை அதிகரிக்கும் சிக்கனமான முறைகளை கண்டறிதல் வேண்டும். மேலும் கார்பன் சேகரிப்பை அதிகப்படுத்தும் செயல்திட்டங்களுக்கு சலுகைகள் வழங்கும் மேலாண்மை முறைகளை கண்டறிதல் வனவியல் துறைகளின் அதிகபட்ச பங்களிப்பினாலும் சுற்றுச்சூழலில் ஏற்படும் தேவையற்ற மாற்றம் நிச்சயம் குறையும்.
  • கார்பன் டிரேடிங்

    கார்பன் வணிகம் / கார்பன் ட்ரேடிங்
    கார்பன் வணிகம் என்பது க்யோட்டோ வரைமுறைக்கு பதிலாக ஏற்படுத்தப்பட்ட ஓர் கருத்தாகும். இது இரு நாடுகளுக்கு இடையே பசுமைக்குடில் வாயுக்களின் உரிமையை பரிமாற்றிக்கொள்ளும் ஒரு திட்டமாகும். உதாரணமாக பசுமைக்குடில் வாயுக்களின் வெளியீடு அளவினை மீறிய ஒரு நாடு பசுமைக்குடில் வாயுக்களை வெளியீடு அளவினை மீறாத ஒரு நாட்டிடம் அதன் உரிமையை நிதி ஒப்பந்த அடிப்படையில் பெற்றுக்கொள்வதே கார்பன் வணிகமாகும்.
    க்யோட்டோ வரைமுறையானது உலக நாடுகளுக்கு பசுமைக்குடில் வாயுக்களின் அளவினை குறைத்து கார்பன் அளவினை சேமித்து வைக்கும்படி பரிந்துரைக்கின்றது. பசுமைக்குடில் வாயுக்களின் வெளியீட்டினை குறைக்க இயலாத ஒரு நாடு மற்றொரு நாட்டிற்கு ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்தி அதன் பசுமைக்குடில் வாயு வெளியீட்டினை குறைக்கின்றது. க்யோட்டோ வரைமுறையை நிறைவேற்றும் ஒரு திட்டமே இந்த கார்பன் வணிகம். 1997 ம் வருடம் டிசம்பர் மாதம் ஜப்பான் நாட்டின் க்யோட்டோ நகரில் 180 நாடுகள் இந்த க்யோட்டோ வரைமுறையில் கையெழுத்திட்டனர். இதன் மூலம் 38 தொழில்துறை வளர்ந்த நாடுகள் 2008-2012 ம் வருடத்திற்குள் தங்களது பசுமைக்குடில் வாயுக்களின் வெளியீட்டினை 5.2 சதவிகிதம் குறைக்கவேண்டும் என அழைப்பு விடுக்கிறது.
    “கார்பன்” என்பது தொல்லுயிர் எரிபொருள்களான நிலக்கரி மற்றும் எண்ணெய்யில் சேமிக்கப்படும் ஒரு தனிமமாகும் இந்த எரிபொருள்கள் எரிக்கும்பொழுது கார்பன் டை ஆக்சைடு வாயு வெளியிடப்படுகின்றது. இதுவே பசுமைக்குடில் வாயு என்றழைக்கப்படுகின்றது.
    கார்பன் வணிகம் என்பதன் எண்ணம் சந்தையில் பாதுகாப்பு பத்திரம் மற்றும் பொருட்கள் வணிகம் செய்யப்படும் முறையினை ஒத்ததாகும். இதன் மூலம் கார்பனிற்கு ஒரு பொருளாதார மதிப்பு கொடுக்கப்பட்டு அதனால் மக்கள் தொழில்துறைகள் மற்றும் நாடுகள் அதன் வணிகத்தில் ஈடுபடும் முறை கொண்டுவரப்படுகின்றது. ஒரு நாடு கார்பன் வாங்கும் பொழுது இதனை எரிக்கும் உரிமையை பெறுகின்றது. அதேபோல் கார்பனை விற்கும் நாடு அதனை எரிக்கும் உரிமையை இழக்கின்றது. கார்பன் சேமித்து வைத்துள்ள அளவினை பொருத்து அதன் உரிம நாட்டிற்கு தொகை செலுத்தப்படும். எந்த அளவிற்கு சேமிக்கப்பட்டுள்ள்தோ அந்த அளவிற்கு தொகை செலுத்தப்படும்.
    பசுமைக்குடில் வாயுக்களின் வெளியீட்டு உரிமத்தை விற்கவும். பெறவும் ஒரு சந்தை ஏற்படுத்தப்படும். தொழில் வளர்ச்சி பெற்ற நாடுகளுக்கு இவ்வாயுக்களின் வெளியீட்டினை குறைப்பது என்பது மிகவும் கடினமான செயலாகும். ஆதலால் தொழிற்சாலைகள் குறைந்த பசுமைக்குடில் வாயுக்கள் வெளியேற்றம் குறைவாக உள்ள நாடுகளிடம் இருந்து அந்த உரிமத்தை பெற்றுக்கொள்ளும் பசுமைக்குடில் வாயுக்களின் வெளியீட்டினை குறைப்பது என்பது க்யோட்டோ வரைமுறையின்படி ஒரு ஒருங்கிணைந்த செயல்பாடு என்பதால் இப்படிப்பட்ட சந்தை சாத்தியமானதே ஆகும்.
    கார்பன் வணிகம் வெற்றி பெரும் திட்டமாகும்: அதாவது பசுமைக்குடில் வாயுக்களின் வெளியீடு குறைவதுடன் சில நாடுகளுக்கு பொருளாதார பலனும் கிட்டுகிறது. ஆயினும் இதற்கு எதிரான கருத்துகள் கூறுவது யாதெனில் சில நாடுகள் இவ்வணிக முறையை தவறாக உபயோகித்து சாதகமில்லாத முடிவுகள் உருவாகும் என்பதுதான். கார்பன் வணிகம் சில நற்பலன்களை கொண்டிருந்தாலும் இதன் சந்தை முறையை பற்றிய விவாதம் தவிர்க்க முடியாததாகும் ஏனெனில் அது லாபம் சமத்துவம் மற்றும் சூழிடம் ஆகியவற்றிற்கு ஒரு சமரசம் ஏற்படும் முறையை கண்டறிவது ஆகும்.
    க்யோட்டோ வரைமுறையின் செயல்பாடு எப்படி ?
    கீழ்காணும் நான்கு செயல்பாடுகளின் மூலம் க்யோட்டோ வரைமுறை அதன் இலக்கினை பூர்த்தி செய்கின்றது.
    1. சர்வதேச வெளியீட்டு வணிகம்
    இத்திட்டததில் பசுமைக்குடில் வெளியீடு அளவு இலக்கை பூர்த்தி செய்யமுடியாத நாடுகள் கூடுதல் கடனாக (நிர்ணயிக்கப்பட்ட அளவு புள்ளிகள்) அதனை பூர்த்தி செய்யும் நாடுகளிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம். இத்திட்டத்தினை செயல்படுத்தும் வணிக முறைகள் நாடுகளுக்கிடையே தோன்றியுள்ளது, அதனில் அதிகபட்சமானது ஐரோப்பிய வெளியீட்டு வணிகமுறை இம்முறை ஜனவரி 1, 2005 ம் ஆண்டு இரு நிலைகளாக தொடங்கப்பட்டது. முதல் நிலை டிசம்பர், 31, 2007 ம் ஆண்டுக்குள் முடிவடைந்துவிட்டது. இதன் உறுப்பினர்களுக்கு அதிக கடன் கொடுத்த காரணத்தால் இந்நிலையில் நீக்கங்கள் செய்யப்பட்டது. இரண்டாம் நிலை 2008-2012 வரையில் கடன் வழங்கும் முறையில் புதிய பஙங்கீடுகளுடனும் கடுமையான வெளியீட்டு தடைகளும் கொண்டு அழுல்படுத்தப்பட்டுள்ளது.
    2. உள்நாட்டு வெளியீட்டு வணிகம்
    பல நாடுகள் தங்கள் நாட்டினுள் உள்ள வெளியீட்டினை கட்டுப்படுத்த மண்டல அளவில் இத்திட்டத்தினை அழுல்படுத்தியோ (அ) செயல்படுத்தும் முடிவுடன் உள்ளன. இம்முறையில் ஒரு நாட்டின் வெளியீட்டு அளவினை கட்டுப்படுத்தும் இலக்கினை அடைவதற்காக மாநில் அளவில் மண்டல அளவில் மற்றும் நாட்டின் வணிகத்திற்கு உட்பட்டு இத்திட்டம் செயல்படுகின்றது. இதன் முக்கிய சிக்கல் யாதெனில் அந்தந்த நாடுகள் தங்களுக்கென கடன் எல்லைகளும் அதற்கு வரைமுறைகளும் விதித்து கொள்கின்றன. ஆதலால் சர்வதேச முறைக்கும் உள்நாட்டு முறைக்கும் ஒரு சிறிய ஒற்றுமையே உள்ளது. கார்டனின் அளவு புள்ளிகள் ஒரு நிலையானதாக இருக்கவேண்டும். க்யோட்டோ வரைமுறையை வெற்றிகரமாக செயல்படுத்துவதற்கு ஒரு அகில உலக வணிக முறை கொண்டு வரப்படவேண்டும்.
    3. தூய்மை மேலாண்மை முறை
    பசுமைக்குடில் வாயுக்களின் உருவாக்கம் பற்றி முக்கியத்துவம் இல்லாமல் அவற்றின் வெளியீட்டினை குறைப்பதே முக்கிய இலக்காகும். இதனை அடிப்படையாக கொண்டே க்யோட்டோ வரைமுறையானது வளர்ந்த நாடுகள் தங்களது வெளியீட்டு அளவினை குறைக்க வளர்ந்துவரும் நாடுகளும் நிதி திறன் வாய்ந்த திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியது. வளர்ந்து வரும் நாடுகளுடன் இவ்வணிக முறையில் வெளியீட்டினை குறைப்பதுடன் சில நாடுகள் இந்நாடுகளில் தூய்மை மேலாண்மை முறைகள் கொண்ட திட்டங்களுக்கு நிதியுதவி அளிக்கின்றது. இத்திட்டங்கள் தரமான வெளியீடு குறைக்கும் திட்டங்களாக அங்கீகாரம் பெறுவதற்கு கடினமான மற்றும் விலை மதிப்பான முறைகளை கடக்க வேண்டியுள்ளது. தற்போது இதுபோன்ற தூய்மை மேலாண்மை முறை திட்டங்கள் நூற்றுக்கணக்கில் 55 நாடுகளில் நடைபெறுகின்றது.
    4. ஒருங்கிணைந்த செயல்பாடு
    தூய்மை மேலாண்மை முறையை போன்ற இத்திட்டம் அதனுடன் இணைக்கப்படுகின்றது. இரண்டிற்கும் உள்ள வேறுபாடு யாதெனில் கிழக்கு பகுதியில் உள்ள நாடுகளில் தான் இந்த திட்டம் செயல்வடிவம் பெற்றது. தூய்மை மேலாண்மை முறையை காட்டிலும் இதனில் பங்கு பெரும் நாடுகள் அனைத்தும் வளர்ச்சி பெற்றவை ஆகும்.
    இத்திட்டம் வெற்றிபெற்றதா?
    க்யோட்டோ வரைமுறையை பற்றிய விவாதங்கள் பலவாறாக உள்ளது. அதனை பற்றிய பல சர்ச்சைகள் கிளம்பியுள்ளது. அதனில் முதன்மையானது யாதெனில் ஐரோப்பிய வணிக முறைகள் கடன் அளவினை அதிகரித்து வாயுக்களின் அளவினை குறைக்கவில்ல என்பதுதான் இதனோடு க்யோட்டோ வரைமுறை 2012 ம் ஆண்டு வரையில் மட்டுமே அமுல்படுத்த உள்ளது என்பதால் இக்காலகடடததினுள் சுற்றுப்புற சூழலில் மாற்றததினை கொண்டுவர இயலாது என்பதும் மற்றொரு சர்ச்சையாகும். இறுதியாக பல நாடுகள் தங்களுக்கு விதிக்கப்பட்ட வெளியீட்டு அளவினை 2008-2012 ம் வருட காலத்தினுள் நிறைவேற்ற இயலாது என நம்பப்படுகின்றது. க்யோட்டோ வரைமுறையினை தீர்மானித்த மலரும் இக்கருத்தினை ஆமோதித்தாலும் சர்வதேச வணிக முறையில் இது ஒரு வெற்றிப்படிகட்டு என்றே கருதுகின்றனர்.
    இத்திட்டம் சரியான பாதையில் தான் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதுவரையில் செயல்படுத்தப்பட்ட வணிகமுறையில் க்யோட்டோ வரைமுறை மிகவும் பெரிய அளவாக இருப்பதுடன் தற்போது ஆரம்ப நிலையிலேயே உள்ளது. இத்திட்டம் 2012 ம் ஆண்டிற்கு பின்னரும் தொடர்ந்து இதனில் பங்கு பெற்றுள்ள நாடுகள் கார்பன் விலையினை நிலைப்படுத்தி இத்திட்டத்தினை நன்கு செயல்படுத்தி பசுமைக்குடில் வாயுக்களின் வெளியேற்றத்தினை குறைக்க வேண்டும். ஆயினும் ஐக்கிய அமெரிக்கா கையெமுத்திடாமலும் பிற நாடுகளின் வெளியீட்டினை குறைக்கும் தடைகள் உள்ளதாலும் சுற்றுச்சூழல் மாற்றத்திற்கு தீர்வு காணும் முறையென க்யோட்டோ வரைமுறையினை கருத இயலாது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக