அன்புடன் வரவேற்கின்றோம்


you are welcome to our web page

எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்

Please give your GOOD IDEAS FOR DEVELOPING
THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPS

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்

புதன், 24 ஆகஸ்ட், 2011















கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

கொளப்பள்ளியில் கண் பரிசோதனை முகாம்

கொளப்பள்ளியில் கண் பரிசோதனை முகாம்


ஆக.7 2011: பந்தலூர் அடுத்த கொளப்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், இலவச கண் பரிசோதனை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 


நிலகிரி  மாவட்ட பார்வை இழப்பு சங்கம், கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில் நடைபெற்ற முகாமிற்கு 


கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவ சுப்பிரமணியம் தலைமை வகித்தார். 


சேரங்கோடு ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஜி.ஈ. தங்கவேலு முகாமை துவக்கி வைத்துப் பேசினார்.
வட்டார மருத்துவ அலுவலர் கதிரவன் முன்னிலை வகித்தார்.



டாக்டர் அமராவதி ராஜன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் பரிசோதனை செய்தனர்.

முகாமில் 160 பேர் கலந்து கொண்டதில், 
13 பேர் அறுவைச் சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டனர்.

மலைப் பகுதி மேம்பாட்டுத் திட்ட சமுதாய ஓருங்கிணைப்பாளர் தேவதாஸ் கொளப்பள்ளி சுகாதார ஆய்வாளர் கணையேந்திரன் சுகாதார செவிலியர்கள் மற்றும் தன்னார்வ செவிலியர்கள்  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

ரத்த தானம் செய்வதன் மூலம் உயிரை காப்பாற்றிய மனநிறைவு

பந்தலூர் : "ரத்த தானம் செய்வதன் மூலம் உயிரை காப்பாற்றிய மனநிறைவு ஏற்படும்,' என தெரிவிக்கப்பட்டது. கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம்-மக்கள் மையத்தின் சார்பில் ரத்த தான விழிப்புணர்வு முகாம் நடந்தது. 
 கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள்மைய தலைவர் சிவசுப்ரமணியம் வரவேற்றார்

சித்தா டாக்டர். கணேசன் பேசுகையில்,""ரத்த தானம் வழங்குவது சிறப்பான சேவையாகும். அந்த சேவையில் பெண்களும் தங்களை ஈடுபடுத்தி கொள்ள முன்வரவேண்டும்,'' என்றார். 

சுகாதார ஆய்வாளர் கனயேந்திரன் பேசுகையில், ""ரத்த தானம் வழங்குவதால் எந்த பின்விளைவுகளும் ஏற்படாது. மாறாக ரத்தம் சுத்திகரிக்கப்படுகிறது. ரத்த வங்கிகள் உள்ளதால் ஒரு நபருக்கு தேவையான ரத்தவகை குறிப்பிட்ட நபர்களிடம் கிடைக்காவிட்டாலும் அவர்களிடமுள்ள ரத்தவகையை பெற்று ரத்த வங்கியில் கொடுத்து அதற்கு மாற்றாக ரத்தம் பெற்றுக்கொள்ளலாம். எனவே அவசர தேவைகளின்போது ரத்த தானம் செய்வதற்கு அனைவரும் முன்வரவேண்டும்,'' என்றார்.
 
சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற கொளப்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் கதிரவன் சான்றிதழ்களை வழங்கி பேசுகையில், ""ரத்த தானம் செய்வது என்பது அரிதாக காணப்பட்ட நிலையில், நுகர்வோர் அமைப்பு மூலம் ரத்த தான குழுமம் துவக்கப்பட்டு ரத்த கொடையாளர்களாக நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்களை வெளியுலகிற்கு காட்டியுள்ளது பாராட்டுக்குரியது. ரத்த தானம் அளிப்பதன் மூலம் தன் மூலம் ஒரு உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது என்ற மன நிறைவு ஏற்படும்,'' என்றார். நிகழ்ச்சியில், 

டாக்டர். ரம்யா பெண்களின் பல்வேறு சந்தேகங்களுக்கு விளக்கமளித்தார். 

பந்தலூர் அரசு மருத்துவமனை டாக்டர். விவேகானந்த், 

மகளிர் குழு நிர்வாகி இந்திராணி, மைய நிர்வாகி தனிஸ்லாஸ், 108 ஆம்புலன்ஸ் உதவியாளர் தேசிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

. மைய செயலாளர் கணேசன் நன்றி கூறினார். கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

பந்தலூரில் தெருமுனை பிரசாரம்

பந்தலூரில் தெருமுனை பிரசாரம்
 

பந்தலூர்:எய்ட்ஸ் கட்டுப்பாடு, மகளிர் நலன் பேணுதல் குறித்த தெருமுனை பிரசாரம் பந்தலூர் பகுதியில் நடந்து வருகிறது.

தமிழக எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம், நீலகிரி எய்ட்ஸ் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம், கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் இணைந்து நடத்தும் இந்நிகழ்ச்சியை 

பந்தலூரில் டாக்டர் அறிவழகனும், மேங்கோரேஞ்ச் பகுதியில் டாக்டர் ரமாபிரதாப் துவக்கி வைத்தனர். 

பிரசாரம் பந்தலூர், மேங்கோரேஞ்ச், அத்திக்குன்னா, உப்பட்டி, அய்யன்கொல்லி, எருமாடு, சேரம்பாடி, சேரங்கோடு, நெலாக்கோட்டை, பிதர்காடு, பாட்டவயல் பகுதிகளில் நடத்தப்பட்டு வருகிறது. 

கலைக்குழு மூலம் எய்ட்ஸ் வராமல் தடுக்கும் முறைகள், தாய்சேய் நலன் பாதுகாத்தல், மகளிர் நலன் பேணுதல், இரத்த  தானம், ஆணுறை பயன்பாடு குறித்து ஆடல், பாடல் மூலம் மக்கள் மத்தியில் தெரிவிக்கின்றனர். 

நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்ரமணியம்.  நம்பிக்கை மைய ஆலோசகர்கள் அழகுராஜா, விஜய்சாரதி,ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ்,  மற்றும் குழுவினர் பங்கேற்றனர்.
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

மேங்கோரேஞ்ச் மருத்துவமனையில் காசநோய்

 பந்தலூர் அடுத்துள்ள மேங்கோரேஞ்ச் மருத்துவமனையில் காசநோய் மற்றும் எய்ட்ஸ் விழிப்புணர்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையமும், அம்பலமூலா பகுதி நீலகிரி-வயநாடு ஆதிவாசிகள் நலச் சங்கமும் இணைந்து நடத்திய முகாமிற்கு டாக்டர் ரமாபிரகாஷ் தலைமை வகித்தார்.

நுகர்வோர் பாதுகாப்பு மையத் தலைவர் சிவசுப்பிரமணி, நீலகிரி-வயநாடு ஆதிவாசிகள் நலச் சங்க திட்ட மேலாளர் ரொனால்டு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பந்தலூர் அரசு மருத்துவமனை மருத்துவர் விவேகானந்தன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு விழிப்புணர்வின் அவசியம் குறித்து விளக்கமளித்தார்.

ஆதிவாசிகள் நலச் சங்க ஓருங்கிணைப்பாளர் சோமன், காசநோய் தொடர்பான அறிவுரைகள் வழங்கினார்.அரசு மருத்துவமனை காசநோய் மேற்பாற்வையாளர் யசோதன், நம்பிக்கை மையத்தின் கவிதா ஆகியோர் விளக்கமளித்தனர்.

தோட்டத் தொழிலாளர்கள் பொதுமக்கள், மருத்துவமனை பணியாளர்கள் கலந்து கொண்டனர். மருந்தாளுநர் கந்தசாமி வரவேற்றார். 

தனிஸ்லாஸ் நன்றி கூறினார். 


கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

வியாழன், 11 ஆகஸ்ட், 2011

pandalur st fracis xavior ccc inaguration photos





கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

வெள்ளி, 5 ஆகஸ்ட், 2011

ஊட்டி:உலக புற்றுநோய் தினத் தையொட்டி, கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் மக்கள் மையம் சார் பில், ஊட்டி நகரில் புற்றுநோய் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.ஊட்டி நகர மக்கள் விழிப்புணர்வு சங்க செயலாளர் ஜனார்தனன் நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசுகையில், ""இன்றைய இளைஞர்கள் பலர் புகையிலை, பான்மசாலா மற்றும் பிற போதை வஸ்துகளுக்கு அடிமை ஆகிவிட்டனர். இதனால், பல நிலைகளில் அவர்கள் புற்று நோயால் பாதிக்கப்படுகின்றனர். அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் புற்றுநோய் ஆலோசனை, சிகிச்சை மையங்களை உருவாக்க வேண்டும்,'' என்றார்.கூடலூர் நுகர்வோர் மைய தலைவர் சிவசுப்ரமணியம் பேசுகையில், ""புற்றுநோயை பரப்புவதில் புகையிலை பெரும் பங்கு வகிக்கிறது. பீடி, சிகரெட் போன்றவற்றின் புகையை மற்றவர்கள் சுவாசிக்கும் போதும் புற்றுநோய் பரவுகிறது. சுற்றுச்சூழல் பாதிப்பு, நாம் பயன்படுத்தும் ரசாயனங்கள் போன்றவையும் புற்றுநோயை உருவாக்குகிறது,'' என்றார். நிகழ்ச்சியில் விழிப்புணர்வு குறித்த துண்டுபிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டன. காத்தாடிமட்டம் அரசு மேல்நிலைபள்ளி என்.எஸ்.எஸ்., மாணவர்களின் சார்பில் நடத்தப்பட்ட ஒருநாள் சிறப்பு முகாமில் புற்றுநோய் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் சிவராஜ் சிவபுத்ரா வரவேற்றார். தென்றல் நகர் ஊர் தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார். தலைமையாசிரியர் செவனன் பேசினர்.

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

நுகர்வோர் மன்ற கலந்தாய்வு கூட்டம்

ஊட்டி : நீலகிரி மாவட்ட நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு, கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில் கிராம நுகர்வோர் மன்றங்கள் கலந்தாய்வு கூட்டம் ஊட்டியில் நடந்தது. இதில், 

கூட்டமைப்பு பொது செயலாளர் வீரபாண்டியன் பேசுகையில், "நுகர்வோர் அமைப்புகள் மக்களின் குறைகளை அறிந்து உரிய துறைகளுக்கு புகார் தெரிவிக்க வேண்டும். விழாக்காலங்களில் நுகர்வோர்களை ஏமாற்ற கையாளும் நேர்மையற்ற வணிக நடைமுறைகளை கண்டுபிடித்து அருகிலுள்ள காவல் நிலையங்கள் அல்லது மாவட்ட கலெக்டருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.' என்றார். 

கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்ரமணியம் பேசுகையில், "நுகர்வோர் விழிப்புணர்வு பெரும்பான்மை மக்களிடையே இல்லாத சூழல் நிலவுகிறது. சிந்தனை செய்யாமல் தேவையற்ற பொருட்களை வாங்கும் அவலம் தொடர்கிறது. தேவையற்ற செலவு தேவையற்ற கடன்சுமை, மன உளைச்சல்கள் இதனாலேயே ஏற்படுகிறது. நுகர்வோர் விழிப்புணர்வுக்கு கிராம நுகர்வோர் மன்றங்கள் செயல்பட வேண்டும்' என்றார். மன்ற அமைப்பாளர்கள் கடந்த கால செயல்பாடுகள் குறித்து பேசினர்.

நுகர்வோர் விழிப்புணர்வு கையேடு மன்றங்களுக்கு வழங்கப்பட்டது. கூட்டத்திற்கு மாவட்ட கூட்டமைப்பு தலைவர் கிருஷ்ணசாமி தலைமை வகித்தார். கிராம நுகர்வோர் மன்ற அமைப்பாளர்கள் செல்வராஜ், மாரிமுத்து, ஜெயராஜ், ஜெயபிரகாஷ், மோகன், மஞ்சுளா, சிவா, செல்வபழனி, சாந்தி, ரமேஷ், உட்பட பலர் பங்கேற்றனர்.


கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

குறுக்கு வழிகள் தவறுகளுக்கான காரணிகள் :தேயிலை வாரிய செயல் இயக்குனர் கருத்து

குறுக்கு வழிகள் தவறுகளுக்கான காரணிகள் :தேயிலை வாரிய செயல் இயக்குனர் கருத்து
Bookmark and Share Share  
ஊட்டி:"குறுக்கு வழிகளை கையாளுவதே பல தவறுகளுக்கும் வழிவகை செய்கிறது.' என தெரிவிக்கப்பட்டது.கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மக்கள் மையம், ஊட்டி நகர மக்கள் விழிப்புணர்வு சங்கம் இணைந்து, ஊட்டி ஆக்ஸ்போர்ட் ஆசிரியர் பயிற்சி நிலையத்தில் நேதாஜியின் 115வது பிறந்த தினம் மற்றும் முதலாவது தேசிய வாக்காளர் தின கருத்தரங்கை நடத்தின. இதில், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற தேயிலை வாரிய தென் மண்டல செயல் இயக்குனர் அம்பலவாணன் பேசியதாவது:தற்போது வாக்காளர்கள் பெரும்பாலும் ஓட்டளிக்க விரும்புவதில்லை. மக்கள் ஓட்டுச்சாவடி சென்று ஓட்டு போட தயங்குகின்றனர். இதனால், ஒரு நல்ல நபரை தேர்வு செய்ய இயலாத நிலை உருவாகிறது. தேர்தலில் படித்த, நேர்மையான, தகுதிவாய்ந்த, திறமையான நபரை அடையாளங்கண்டு தேர்வு செய்ய வேண்டும்.தேர்தலில் பணம் புழங்குவது அதிகரித்து வருகிறது. இதனை மக்கள் தவிர்க்க வேண்டும்; இதனால், பல சமூக அக்கறை கொண்ட நபர்கள் தேர்தலில் போட்டியிட இயலாத நிலை உருவாகிறது. இந்தியாவில் உள்ளதை போல சுதந்திரம் எங்குமில்லை. ஆனால், நாம் அதனை தவறாக பயன்படுத்துகிறோம். சட்டம், விதிமுறைகளை பின்பற்றுவதில்லை. குறுக்கு வழிகளை கையாளுகிறோம். இதுவே பல தவறுகளுக்கும் வழிவகை செய்கிறது.அரசியல் என்றால் இளைஞர்கள் ஒதுங்குவதை தவிர்க்க வேண்டும். அரசியலில் தொண்டர்களாக பங்கேற்பதை தவிர்த்து குடிமக்களாக செயல்பட வேண்டும். நல்லவராகவும், சமூக சிந்தனை உடைய அக்கறை கொண்டவரையே தேர்வு செய்யும் நிலைக்கு வாக்காளர்கள் அனைவரும் முன்னேற வேண்டும். இளைஞர்களின் பங்கு தேர்தலில் அவசியம் அதிகரிக்க வேண்டும். இதன்மூலம் நல்ல மாற்றம் உண்டாகும். இவ்வாறு, அம்பலவாணன் பேசினார்.குன்னூர் தாசில்தார் ஜாபர்அலி பேசுகையில், ""18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா என ஆய்வு செய்து சரிபடுத்தி கொள்ள வேண்டும். வாக்காளர் அடையாள அட்டை மிகவும் முக்கியமானது. இந்திய குடிமகன் என்பதற்கு இதுவே மிக முக்கிய அடையாளமாகும். கடைசி நேரத்தில் அவதிப்படாமல் எப்போதும் வாக்காளர்பட்டியல் திருத்தங்களை கவனத்தில் கொண்டு பயன்பெற வேண்டும்,'' என்றார்.ஊட்டி நகர மக்கள் விழிப்புணர்வு சங்க செயலாளர் ஜனார்தனன் பேசுகையில், ""ஓட்டுக்களை சரிவர பயன்படுத்தாமல் வாக்காளிக்காமல் இருப்பவர்கள் முகவரி அற்றவர்கள். இதனால், அரசியலில் தவறு செய்பவர்கள் சுரண்டல்வாதிகள் மீண்டும் பதவிக்கு வரும் சூழல் உருவாகிறது. 100 சதவீத ஓட்டுப்பதிவு நேர்மையான ஆட்சிக்கு உதவும்,'' என்றார்.நெஸ்ட் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் சிவதாஸ் பேசுகையில், ""தேச விடுதலைக்கு பாடுபட்ட பல தலைவர்களின் வரிசையில் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் பங்கு மகத்தானது. ஜனநாயகம் காக்க வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும். மற்றவர்களை வாக்களிக்க உந்துதல் சக்தியாக இளைஞர்கள் பாதுபட வேண்டும்,''என்றார்.கூடலூர் நுகர்வோர் மைய தலைவர் பேசுகையில், "நல்லவர்களை தேர்வு செல்வது நமது கடமை. நமது உரிமையை முறைப்படி செய்ய வேண்டும். இலவசத்திற்கும் கவர்ச்சி திட்டத்திற்கும் ஆசைபட்டால் வளர்ச்சிக்கு வழி வகை இருக்காது. நல்லவர்கள் தேர்தலில் போட்டியிடவில்லை என்றால் 49(0)க்கு ஓட்டுப்பதிவுகளை செய்து கள்ள ஓட்டுகளை தவிர்க்க வேண்டும்,'' என்றார்.நிகழ்ச்சியில், ஆசிரியர் பயிற்சி பள்ளி ஆசிரியர் மூர்த்தி வரவேற்றார். பள்ளி முதல்வர் ராமசந்திரன் தலைமை வகித்தார். பயிற்சி நிலைய மாணவர்கள், சிறப்பு விருந்தினர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். ஆசிரியர் குமார் நன்றி கூறினார்.
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

cherangode tree plandin 5.08.11








கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்