அன்புடன் வரவேற்கின்றோம்


you are welcome to our web page

எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்

Please give your GOOD IDEAS FOR DEVELOPING
THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPS

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்

வியாழன், 29 செப்டம்பர், 2011

மக்கள் மையத்தில் இணைய அழைப்பு

ஊட்டி : "நாட்டின் பிரச்னைகளை தட்டிக்கேட்க அனைவரும் மக்கள் மையத்தில் இணைய வேண்டும்,' என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய-மக்கள் மைய தலைவர் சிவசுப்ரமணி வெளியிட்டுள்ள அறிக்கை:


தேர்தலில் எதற்காக ஓட்டளிக்கிறோம் என்பது குறித்து அறியாதது; பிரச்னைகள், தவறுகளை தட்டி கேட்காமல் இருப்பது போன்றவற்றின் விளைவாகவே நாட்டிற்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சுற்றுச்சூழலும், சுகாதாரமும் மனிதனுக்கு முழுமையாக கிடைத்ததா என்பது கேள்விக்குறியாக உள்ளது.அரசு சுகாதார நிலையம், அரசு துறை, பள்ளிகளில் குறைந்தபட்ச கனிவான கண்ணியமான வரவேற்பு கூட கிடைப்பதில்லை. மன்னர் ஆட்சியில் நடக்கும் தவறுகளுக்கு மன்னர்களே பொறுப்பேற்றனர். மக்களாட்சியில் அத்தனை தவறுகளுக்கும் மக்கள் தான் பொறுப்பேற்க வேண்டும்.
இனி மின்சார அலுவலகம், கூட்டுறவு வங்கிகள், கூட்டுறவு கடைகள், சுகாதார நிலையங்கள், பள்ளிகளை அனைவரும் கண்காணிக்க வேண்டும்; இது உரிமை மட்டுமின்றி கடமையும் ஆகும். இதற்காக அனைவரும் மக்கள் மையத்தில் இணைந்து செயலாற்ற வேண்டும்.தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் 250க்கும் மேற்பட்ட மக்கள் மையங்கள் செயல்படுகின்றன. மக்களுடைய தேவை எதுவாக இருந்தாலும், ஆலோசனைகளையும், ஆதரவுகளையும் நமக்கு நாமே தேடிக்கொள்ளலாம். 
மக்கள் மனுதாரர்கள் என்பதை மாற்றி மன்னர்கள் என்பதை அரசுக்கு புரிய வைப்போம். ஓட்டங்கள் நிறைந்த சட்டங்களை திருத்தவும் சாதனை புரியும் அனைவரும் ஒன்று சேருவோம். 


நீலகிரி மாவட்டத்தில் மக்கள் மையத்தில் சேர, 9488520 800, 9345398085 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்


கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்
பந்தலூர் : பந்தலூர் அருகே நாயக்கன்சோலை கிராமத்தில் இன்று இலவச கண் சிகிச்சை முகாம் நடக்கிறது. தமிழ்நாடு அறக்கட்டளை, நீலகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம்-மக்கள் மையம், ஷாலோம் சாரிட்டபிள் டிரஸ்ட் ஆகியவை இணைந்து நாயக்கன் சோலை நடுநிலைப்பள்ளி வளாகத்தில் இலவச கண் சிகிச்சை முகாமினை நடத்துகின்றன. "மே தினத்தை முன்னிட்டு நடத்தப்படும் இம்முகாமில் பொதுமக்கள் பங்கேற்று பயன்பெற வேண்டும்,' என நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் சிவசுப்ரமணியம் தெரிவித்தார்.
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

"ரத்த தானத்தால் உயிரை காப்பாற்றிய மன நிறைவு' : நுகர்வோர் முகாமில் உணர்வு பூர்வமான தகவல்

பந்தலூர் : "ரத்த தானம் செய்வதன் மூலம் உயிரை காப்பாற்றிய மனநிறைவு ஏற்படும்,' என தெரிவிக்கப்பட்டது. கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம்-மக்கள் மையத்தின் சார்பில் ரத்த தான விழிப்புணர்வு முகாம் நடந்தது. சித்தா டாக்டர். கணேசன் பேசுகையில்,""ரத்த தானம் வழங்குவது சிறப்பான சேவையாகும். அந்த சேவையில் பெண்களும் தங்களை ஈடுபடுத்தி கொள்ள முன்வரவேண்டும்,'' என்றார். சுகாதார ஆய்வாளர் கனயேந்திரன் பேசுகையில், ""ரத்த தானம் வழங்குவதால் எந்த பின்விளைவுகளும் ஏற்படாது. மாறாக ரத்தம் சுத்திகரிக்கப்படுகிறது. ரத்த வங்கிகள் உள்ளதால் ஒரு நபருக்கு தேவையான ரத்தவகை குறிப்பிட்ட நபர்களிடம் கிடைக்காவிட்டாலும் அவர்களிடமுள்ள ரத்தவகையை பெற்று ரத்த வங்கியில் கொடுத்து அதற்கு மாற்றாக ரத்தம் பெற்றுக்கொள்ளலாம். எனவே அவசர தேவைகளின்போது ரத்த தானம் செய்வதற்கு அனைவரும் முன்வரவேண்டும்,'' என்றார்.சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற கொளப்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் கதிரவன் சான்றிதழ்களை வழங்கி பேசுகையில், ""ரத்த தானம் செய்வது என்பது அரிதாக காணப்பட்ட நிலையில், நுகர்வோர் அமைப்பு மூலம் ரத்த தான குழுமம் துவக்கப்பட்டு ரத்த கொடையாளர்களாக நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்களை வெளியுலகிற்கு காட்டியுள்ளது பாராட்டுக்குரியது. ரத்த தானம் அளிப்பதன் மூலம் தன் மூலம் ஒரு உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது என்ற மன நிறைவு ஏற்படும்,'' என்றார். நிகழ்ச்சியில், டாக்டர். ரம்யா பெண்களின் பல்வேறு சந்தேகங்களுக்கு விளக்கமளித்தார். பந்தலூர் அரசு மருத்துவமனை டாக்டர். விவேகானந்த், மகளிர் குழு நிர்வாகி இந்திராணி, மைய நிர்வாகி தனிஸ்லாஸ், 108 ஆம்புலன்ஸ் உதவியாளர் தேசிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மைய தலைவர் சிவசுப்ரமணியம் வரவேற்றார். மைய செயலாளர் கணேசன் நன்றி கூறினார்.

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

நீலகிரி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான பராமரிப்புதொகை கடந்த 6 மாதங்களாக வழங்கப்படாததால் பாதிப்பு ஏற்பட்டுள்ளஇடுகைத் தலைப்பு

பந்தலூர் :நீலகிரி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான பராமரிப்புதொகை கடந்த 6 மாதங்களாக வழங்கப்படாததால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.


நீலகிரி மாவட்ட மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வு மைய அலுவலகத்தின் வாயிலாக அரசு மூலம் மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. 


கடந்த மே, ஜூன், ஜூலை மாதங்களில் மாதந்தோறும் தலா 500ரூபாயும், 
ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் அரசு அறிவித்த ஆயிரம் ரூபாயும் வழங்க வேண்டும். 
ஆனால், கடந்த 6 மாதங்களாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கவேண்டிய பராமரிப்பு வழங்கவில்லை. மாதந்தோறும் தங்களுக்குரிய தொகை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் போஸ்ட்மேனை எதிர்பார்த்து காத்திருக்கும் மாற்றுத் திறனாளிகள் மனதளவில் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. 


எனவே, மாற்றுத் திறனாளிகளுக்கான பராமரிப்பு தொகையை வழங்கிட மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.என கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம் தலைவர் சிவசுப்ரமணியம் வலியுறுத்தியுள்ளார் 

இலவச கண் சிகிச்சை முகாமில் 180 பேர்

பந்தலூர் : 19 செப்  .2011

பந்தலூர் அருகே மேங்கோரேஞ்சில் நடந்த இலவச கண் சிகிச்சை முகாமில் 180 பேர் பங்கேற்றனர்.

தமிழ்நாடு அறக்கட்டளை, நீலகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம்,மக்கள் மையம், மேங்கோரேஞ்ச் மருத்துவமனை இணைந்து இலவச கண் சிகிச்சை முகாமினை நடத்தின. 

மருத்துவமனை மருந்தாளுனர் செல்லமுத்து வரவேற்றார். 

நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்ரமணியம் தலைமை வகித்தார். 

மருத்துவமனை டாக்டர் ரமாபிரதாப் முன்னிலை வகித்தார்.

எம்.எல்.ஏ. திராவிடமணி முகாமினை துவக்கி வைத்தார். 

180 பேர் பங்கேற்றனர்.

ஊட்டி அரசு மருத்துவமனை கண் மருத்துவர் அமராவதிராஜன் தலைமையிலான மருத்துவ குழுவினர் சிகிச்சையளித்தனர். 

பொன்னானி ஜி.டி.ஆர். பள்ளி தலைமையாசிரியர் சமுத்திரபாண்டியன், நிர்வாகிகள் கணேசன், கதிரேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.


கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

காற்றை காப்போம்...

காற்று மாசுபடுதல் என்பது, வளி மண்டலத்தில் ஏற்படும் சீர்குலைவின் ஆரம்பம். இன்றைய யுகத்தில் வாகனங்கள், தொழிற்சாலைகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. ஆண்டு தோறும் காற்று மாசுபடுதல் தொடர்பான ஆய்வறிக்கை வெளியாகிறது. ஆனால், அதை தடுக்கும் வகையிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. காற்று மாசுபடுதலை தவிர்க்க முடியாவிட்டாலும், அதை கட்டுப்படுத்தலாம். காற்றில் கலந்திருக்கும் வாயுக்கள்; அவற்றால் ஏற்படும் பாதிப்புகள்:

* தூசி (எஸ்.பி.எம்., - சஸ்பெண்டட் பர்டிகுலேட் மேட்டர்)

இது காற்றில் அதிகமாக பரவும். காற்றை மாசுபடுத்துவதில் முதலிடம் வகிக்கிறது. அளவில் 10 மைக்ரானை விட சிறியவை. பாதிப்புகள்: சிறிதாக இருப்பதால் நேரடியாக நுரையீரலுக்கு சென்று பாதிப்பை ஏற்படுத்தும். தும்மல், ஆஸ்துமா, தலைவலி ஏற்படும். புற்றுநோய், மாரடைப்பு உள்பட நீண்ட கால விளைவையும் ஏற்படுத்தும்.

* சல்பர் டை ஆக்சைடு: மின் உற்பத்தி நிலையங்களில் அதிகம் வெளிப்படுகிறது. தொழிற்சாலைகளில் தாதுக்களிலிருந்து உலோகங்களை பிரித்தெடுக்கும் போதும், சல்பர் காற்றில் கலக்கிறது. பாதிப்புகள்: இந்த வாயுவை சுவாசிக்கும் போது, ஆஸ்துமா, சுவாசப்பை நோய், இதயம் தொடர்பான நோய்கள் ஏற்படுகின்றன.

* அம்மோனியா: நிறமற்ற வாயுவான அம்மோனியா, உரம் தயாரிப்பு, பதப்படுத்தும் நிறுவனங்களிலிருந்து அதிம் வெளிப்படுகிறது. சுவாசிக்கும் போது மூச்சுத்திணறல் ஏற்படுத்தும். பாதிப்புகள்: நீரில் எளிதாக கரையும் தன்மை கொண்டது. இவை உடலில் எரிச்சலை உண்டாக்குவதோடு புண்களை ஏற்படுத்தும். குறைந்த செறிவுடைய வாயுவையை வெளிப்படுத்தும் போது இருமல், மூக்கு மற்றும் தொண்டையில் எரிச்சலை உண்டாக்கும். இந்நிலை நீடித்தால் கண்கள், நுரையீரல் பாதிக்கப்பட்டு மரணத்தில் முடியும்.

* நிக்கல்: பொதுவாக சுற்றுச்சூழலில், குறைந்த அளவிலேயே காணப்படுகிறது. எண்ணெய் பொருட்கள், நிலக்கரி ஆகியவற்றை எரிக்கும் போதும், நிக்கல் மெட்டல்களை மெருகேற்றுதல், கழிவுப்பொருட்களை எரிக்கும் போதும் நிக்கல் காற்றில் அதிகம் கலக்கிறது. பாதிப்புகள்: நிக்கலை தொடர்ச்சியாக உள்ளிழுக்கும் போது, சுவாசம் தொடர்பான நோய்கள், ஆஸ்துமா ஆகியவை ஏற்படுகின்றன.

* ஹைட்ரோ கார்பன்: எண்ணெய், மரம், ரப்பர் ஆகிய பொருட்கள் தயாரிப்பின் போது, முழுமையாக எரிபடாமல் இருந்தால் இந்த வாயு வெளிப்படும். பாதிப்புகள்: ஓசோன் மற்றும் பனிப்புகை உருவாக்கத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. இருமல், மூச்சுத்திணறல், நெஞ்சுவலி, தலைவலி, ஆஸ்துமா ஆகிய நோய்களை ஏற்படுத்தும். சுவாச மண்டலத்தை முழுமையாக பாதித்து, நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து பாதிப்பை உண்டாக்கும்.

* நைட்ரஜன் ஆக்சைடு: டீசல், பெட்ரோல், பயோ-டீசல், புரோபேன், எத்தனால் மற்றும் நிலக்கரி தயாரிப்பின் போது ஏற்படும் அதிகமான வெப்பம் மற்றும் அழுத்தம் காரணமாக வெளிப்படுகிறது. பாதிப்புகள்: நுரையீரல், திசுக்களை முற்றிலுமாக அழிப்பதுடன் மோசமான இதய நோய்களை உண்டாக்கும். தவிர, ஆஸ்துமா, மூச்சுக்குழல் கோளாறு ஆகியவை ஏற்படும்.

* ஈயம்: இயற்கையாகவே உலோகங்கள் மற்றும் சில பொருட்களில் காணப்படுகிறது. வாகனங்களிலிருந்தும், கழிவுப் பொருட்களை எரிக்கும் தொழிற்சாலைகளிலிருந்தும் வெளிப்பட்டு காற்றில் கலக்கின்றன. பாதிப்புகள்: உள்ளுறுப்புகள், மூளை மற்றும் நரம்பு மண்டலங்கள் பாதிப்படைகின்றன. தொடர்ச்சியாக இதை சுவாசிக்கும் போது, குழந்தை பிறப்புக் குறைபாடு, இனப்பெருக்க மண்டலத்தில் கோளாறு, எலும்புருக்கி நோய்கள் ஏற்படுகின்றன.

* குரோமியம்: இயற்கையாக உருவாகும் தனிமங்களான, இவை வாயுக்களில் அதிக அளவில் காணப்படுகிறது. பாதிப்புகள்: மூக்கில் எரிச்சல், மூக்கில் நீர் ஒழுகுதல், மூக்கில் ரத்தம் வடிதல், அல்சர் ஆகிய நோய்களை உண்டாக்கும். அதிக அளவிலான குரோமியத்தை சுவாசிக்கும் போது, வயிற்று வலி, வலிப்பு நோய், கல்லீரல், சிறுநீரகம் பாதிப்பு ஏற்படும்.

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

காசநோய் விழிப்புணர்வு முகாம் எருமாடு

காசநோய் விழிப்புணர்வு முகாம்
பந்தலூர்,செப்.25:2011

எருமாடு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் காசநோய் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமினை நீலகிரி வயநாடு ஆதிவாசிகள் நல சங்கம், கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம், சேரன் அறக்கட்டளை ஆகியவை இணைந்து நடத்தினர்.

 நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவ சுப்பிரமணியன் தலைமை வகித்தார். 

ஆதிவாசி நல சங்க ஒருங்கிணைப்பாளர் சோமன்,காச நோய் பரவும் விதம், அறிகுறிகள், காச நோயின் பாதிப்புகள், கண்டறியும் விதம், சிகிச்சை முறைகள் குறித்து பேசினார். 

சேரன் அறக்கட்டளை அறங்காவலர் தங்கராஜா, தரமான உணவு வகைகள், பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து பேசினார். 

மகளிர் சுய உதவி குழு பிரதிநிதி இந்திராணி உள்ளிட்ட மகளிர் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 

முன்னதாக ஞானசேகர் வரவேற்றார். 

நீலகிரி ஆதிவாசி நல சங்க உதவியாளர் தேவ் நன்றி கூறினார்.


















கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்