அன்புடன் வரவேற்கின்றோம்


you are welcome to our web page

எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்

Please give your GOOD IDEAS FOR DEVELOPING
THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPS

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்

திங்கள், 25 ஜூன், 2012

NEWS 06.2012

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

ரத்தம், கண் தானம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு

ரத்தம், கண் தானம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு
பந்தலூர், ஜூன் 24:
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், மக்கள் மையம், பள்ளி குடி மக்கள் நுகர்வோர் மன்றம், சாலோம் சாரிடபிள் டிரஸ்ட் இணைந்து பந்தலூர் அரசு மேல்நிலை பள்ளியில் ரத்த தானம், கண் தானம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு பிரசாரம் நடந்தது.
பள்ளி தலைமை ஆசிரியர் சித்தானந்த் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக வட்டார மருத்துவ அலுவலர் கதிரவன் கலந்து கொண்டு பேசியதாவது: ரத்த தானம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு குறைவாக உள்ளது. ரத்தம் தேவைப்படும் போது மட்டும் அதன் அவசியத்தை உணரும் நாம் எப்போதும் ரத்த தானத்தின் அவசியத்தை உணர வேண்டும் என்றார்.
18 வயதுக்கும் மேற்பட்டோர் ரத்த தானம் செய்யலாம். 45 கிலோ எடைக்கு மேல் உள்ளவர்கள் ரத்த தானம் செய்யலாம். உடலில் 350 மில்லி ரத்தம் மட்டுமே தானமாக எடுக்கப்படும். ரத்தத்தில் பரவும் நோய் இருப்பவர்கள், மது போதை வஸ்துகள் பயன்படுத்துவோர் ரத்த தானம் செய்வதற்கு தகுதியற்றவர்கள். மாணவர்கள் தங்களை தயார் படுத்தி கொள்ளவேண்டும். நல்ல பழக்கங்களுடன் மாணவர்கள் இருக்க வேண்டும். தங்களை ரத்த தானம் செய்ய தயார் படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.
சுகாதார ஆய்வாளர் கனயேந்திரன், நுகர்வோர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய தலைவர் சிவ சுப்பிரமணியம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை நுகர்வோர் மைய நிர்வாகிகள் தணீஸ்லாஸ்,பிரகாஷ் ஆகியோர் செய்திருந்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஆசிரியர் தண்டபாணி வரவேற்றார். மாணவி முத்துமாரி நன்றி கூறினார். 
 
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

மக்கள் மையங்கள் அமைக்க, விண்ணப்பங்கள்

ஊட்டி:மக்கள் மையங்கள் அமைக்க, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் மற்றும் மக்கள் மையம் தலைவர் சிவசுப்ரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில், உந்துனர் அறக்கட்டளை சார்பில் 400க்கும் மேற்பட்ட மக்கள் மையங்கள் செயல்படுகின்றன. மக்களாட்சியில் மக்களை மையப்படுத்தவும், குடிமக்கள் அறிவும், துணிவும், பரிவும் கொண்டவர்களாக மாற்ற வேண்டும் என்ற நோக்கிலும் செயல்படுகிறது.
மையங்கள், பல அரசு நலத்திட்டங்கள் மக்களுக்கு சென்றடைய செயல்படுத்தப்படுகிறது. மக்கள் நலனுக்கு இயற்றப்படும் பல சட்டங்களும், திட்டங்களும் கடைசி தர மக்களுக்கு சென்றடைவது இல்லை.

அரசின் திட்டங்களை அணுகி பெறவும், சட்டங்களை அறிந்துக் கொள்ளவும், விழிப்புணர்வு பெற்றவர்களாக மாற்றவும், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களால் பாதிக்கப்படும்போது நிவாரணம் பெறும் நடைமுறைகளையும், சுய முன்னேற்றத்துக்கு வழிகாட்டுதல்களையும் வழங்குகிறது. அரசு திட்டங்கள், பாதிப்புக்கு நிவாரணம் பெறும் வழிமுறைகள் மக்களுக்கு தேவையானவற்றை பெற உதவும் வழிகாட்டும் மையமாக உள்ளது. மக்கள் மையங்கள், அரசுக்கும், மக்களுக்கும் பாலமாக இணைந்து செயல்பட வழி வகுக்கிறது.

நடப்பாண்டு, கல்வி உரிமை சட்டம், நீர் வளம், மின் சிக்கனம், பொது விநியோகம், உள்ளாட்சி உட்பட வகைகளில் கவனம் செலுத்தி, முக்கியத்துவம் அளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்று செயல்பட விரும்பும் தன்னார்வ அமைப்புகள், மக்கள் மையம் அமைக்க, "மக்கள் மையம், கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், வணிக வளாகம், பந்தலூர் அல்லது மக்கள் மையம், வசம்பள்ளம், ஓட்டுப்பட்டறை, குன்னூர்' அல்லது, மக்கள் மையம், ஜெயா காம்ளக்ஸ், நொண்டி மேடு, ஊட்டி' முகவரியிலோ விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிப்போர், தங்களது அமைப்பின் பெயர், முகவரி, செயல்பாடுகள் குறித்த விபரங்களோடு, வரும் 30ம் தேதிக்குள் (நாளை) விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்கள், மக்கள் மையங்களின் மக்கள் மைய திட்ட அலுவலரால் பரிசீலிக்கப்பட்டு, மாவட்ட குழு நேரடி ஆய்வுக்கு பின், மக்கள் மையம் அமைக்க பரிந்துரைக்கப்படும். விபரங்களுக்கு, 94898-60250, 94429-74075 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.


கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

இயற்கை விவசாயத்தில் விளைந்த பொருள்களை உண்பதன் மூலம் மருத்துவ செலவு குறையும்

கூடலூர் : "இயற்கை விவசாயத்தில் விளைந்த பொருள்களை உண்பதன் மூலம் மருத்துவ செலவு குறையும்' என கூடலூரில் நடந்த இயற்கை விவசாய பயிற்சி முகாமில் தெரிவிக்கப்பட்டது.
சென்னை "ரீப் மினிஸ்டரி', கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம், நடுவட்டம் "கிரேஷ் ஆர்வேஸ்' அமைப்பு ஆகியவை சார்பில் இயற்கை விவசாய குறித்த பயிற்சி முகம், கூடலூரில் நடந்தது. சூரியபிரகாஷ் வரவேற்றார்.
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு குழு தலைவர் சிவசுப்ரமணி தலைமை வகித்தார். சென்னை ரீப் மினிஸ்டரி அமைப்பின் தலைவர் ஜோதிபிரகாஷ் பேசுகையில்,""இன்றைய கால கட்டத்தில் விவசாயத்தில் அதிகளவில் ரசாயன உரங்கள் பயன்படுத்தப்படுகிறது.
இதிலிருந்து கிடைக்கும் உணவு பொருட்களை உண்பதன் மூலம் மக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றனர்.
இதில் மாற்றம் காண விவசாயிகள் இயற்கை விவசாயத்தில் ஈடுபட வேண்டும்.
இயற்கை விவசாயத்தில் நல்ல விலை கிடைக்க வாய்ப்புள்ளது,'' என்றார். பயிற்சி நிறுவன முதல்வர் மாணிக்கசாமி உட்பட பங்கேற்றனர். முருகன் நன்றி கூறினார்.
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்
பந்தலூர் :பந்தலூரில் நடந்த கண் சிகிச்சை இலவச முகாமில், 100க்கும் மேற்பட்டோர் பயன் பெற்றனர்.
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் மக்கள் மையம், தமிழ்நாடு அறக்கட்டளை, மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், ஷாலோம் சாரிட்டபிள் டிரஸ்ட், மகாத்மாகாந்தி பொது சேவை மையம் சார்பில், பந்தலூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், முகாம் நடந்தது.
நெல்லியாளம் நகரமன்றத் தலைவர் அமிர்தலிங்கம் துவக்கி வைத்தார். நுகர்வோர் பாதுகாப்பு சங்கத் தலைவர் சிவசுப்ரமணியம் தலைமை வகித்தார். டிரஸ்ட் இயக்குனர் விஜயன் சாமுவேல், சேவை மைய அமைப்பாளர் நவுசாத் முன்னிலை வகித்தனர். ஊட்டி அரசு மருத்துவமனை கண் மருத்துவர் அமராவதி ராஜன் தலைமையிலான குழுவினர், பங்கேற்ற 100க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சையளித்தனர். 12 பேர் கண் புரை அறுவை சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டனர்.
டாக்டர் கணேசன், உதவி தலைமை ஆசிரியர் தண்டபாணி, நிர்வாகிகள் தனிஸ்லாஸ், சுரேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

ஊட்டி பஸ் ஸ்டாண்டில் சமீபத்தில் அவசர கதியில் நடந்த சீரமைப்பு பணிகள் தரமில்லாமல் நடந்துள்ளது,'

ஊட்டி:"ஊட்டி பஸ் ஸ்டாண்டில் சமீபத்தில் அவசர கதியில் நடந்த சீரமைப்பு பணிகள் தரமில்லாமல் நடந்துள்ளது,' என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஊட்டி சென்ட்ரல் பஸ் ஸ்டாண்டில், பஸ்கள் நிறுத்தும் பகுதி மிகவும் மோசமாக பராமரிப்பிலாமல் இருந்தது. வெயில் காலத்தில் மண் புழுதியும், மழை காலத்தில் சேறும், சகதியுமாக காட்சியளித்த அந்த பகுதியை சீரமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக பயணிகள் கோரிக்கை வைத்தனர். இதனை தொடர்ந்து, மலை பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், குறிப்பிட்ட பகுதிகளை சீரமைக்க நீலகிரி மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாய்க் உத்தரவிட்டார்.

கோடை சீசனுக்கு முன்பாக பணிகள் முடியும் என்ற எதிர்பார்த்த பயணிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. பல்லாயிரக்கணக்கில் சுற்றுலா பயணிகள் வரும் நாட்களான மலர் கண்காட்சி நடந்த 18,19,20 ஆகிய தேதிகளில், பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் சீரமைப்பு பணிகள் நடந்தன. இதனால், அரசு பஸ்களில் பயணம் செய்ய வந்த ஆயிரக்கணக்கான பயணிகள் பெரும் அவதிப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதனை தார் தளம் போடும் பணியை செய்தவர்களோ, போக்குவரத்து கழகமோ கண்டுக்கொள்ளவில்லை.இந்நிலையில்,"அவசர கதியில் நடந்த சீரமைப்பு பணிகள் தரமில்லாமல் நடந்துள்ளது; விசாரணை நடத்த வேண்டும்,' என கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் குற்றம் சாட்டி உள்ளது.

மையத்தின் தலைவர் சிவசுப்ரமணியம் நீலகிரி மாவட்ட கலெக்டருக்கு அனுப்பிய மனுவில் கூறியுள்ளதாவது:ஊட்டி பஸ் ஸ்டாண்டில் நீண்ட காலத்துக்கு பின்பு, மலர் கண்காட்சி நடந்த நாட்களில் சீரமைப்பு பணிகள் வேண்டுமென்றே அவசர கதியில் மேற்கொள்ளப்பட்டன. இப்பகுதியில் தார் போடப்பட்டு சில நாட்களே ஆன நிலையில், தற்போது பஸ் சென்ற போது மீண்டும் குழி ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது.

இதற்கு தரமில்லாத பணியே முக்கிய காரணமாகும். மேலும், மழை காலத்தில் தண்ணீர் செல்ல போதிய வடிகால் அமைப்புகள் இல்லாத காரணத்தால், அடுத்த மாதம் பருவமழை பொழிந்தால், நிச்சயம் குளம் மழை நீர் நிற்கும் அபாயம் உள்ளது. இங்கு மக்களின் வரிபணம் வீணடிக்கப்பட்டுள்ளது. எனவே, நீலகிரி மாவட்ட கலெக்டர் இப்பணிகள் குறித்து விசாரணை நடந்த வேண்டும். இவ்வாறு சிவசுப்ரமணியம் கூறியுள்ளார்.

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

சனி, 23 ஜூன், 2012

உணவு கலப்படம் விழிப்புணர்வு கருத்தரங்கம்


ஊட்டி: கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம் சார்பில் ஊட்டி கனரா வங்கி சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையத்தில் உணவுக் கலப்படம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.

கனரா வங்கி வேலை வாய்ப்பு பயிற்சி நிலைய இயக்குநர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். 

கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்ரமணியம், 
நெஸ்ட் அறக்கட்டளை அறங்காவலர் சிவதாஸ் 
ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

முன்னாள் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் பெள்ளி பேசுகையில்,
 ‘உணவு மனிதர்களின் வாழ்வுக்கு அடிப்படையானது. இன்றைய உலகில் அனைத்து பொருட்களிலும் கலப்படம் வந்து விட்டது. உணவுப் பொருட்களில் கலப்படம் செய்வதன் மூலம் உடலுக்கு தீங்கு ஏற்படுகிறது. கடுகில் ஆர்ஜிமோன் விதைகள், பருப்பு வகையில் கேசரி பருப்பு, மைதாவில் மரவள்ளி கிழங்கு மாவு, தேயிலை தூளில் சாயப் பொடிகள் ஆகியவை கலப்பது பாதிப்பு ஏற்படுத்தும் கலப்படமாகும். இதனை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார். 

ஊட்டி நகர விழிப்புணர்வு சங்க சங்க தலைவர் பேசுகையில், ‘சாலையோர கடைகளில் விற்கப்படும் உணவுகள் உடலுக்கு தீங்கு விளைவிக்கிறது. நாம் வாங்கும் பொருட்களில் உள்ள சேவை குறைபாடுகள் குறித்து புகார்கள் தெரிவிக்க முன் வர வேண்டும்’ என்றார். 

நிகழ்ச்சியில் பயிற்சி மைய பயிற்சியாளர் சதீஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து கலப்படம்   செய்யும் கல் நெஞ்சங்களே என்ற தலைப்பில் கவிதை போட்டி நடத்தப்பட்டதில்  வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.



கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்


ஊட்டி:"கவர்ச்சிகர விளம்பரங்களில் வரும் பொருட்களை கவனமுடன் வாங்க வேண்டும்,' என அறிவுறுத்தப்பட்டது.கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் மற்றும் மக்கள் மையம் சார்பில், ஊட்டி கனரா வங்கி சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையத்தில் உணவு கலப்படம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.பயிற்சி இயக்குனர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். முன்னாள் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் பெள்ளி பேசுகையில், ""உணவில் கலப்படம் அதிகரித்து வருகிறது. கடுகு, பருப்பு, தேயிலை தூள், மைதா மாவு போன்ற அத்தியாவசிய பொருட்களில் செய்யப்படும் கலப்படும் பலவித நோய்கள் ஏற்பட காரணமாகிவிடுகிறது. கவர்ச்சிகர விளம்பரங்கள் மூலம் விற்பனைக்கு வரும் "ஜங்க்புட்' உணவுப் பொருட்கள் உடல் நலத்துக்கு தீங்கு ஏற்படுத்தும். உணவுப் பொருட்களில் கலப்படத்தை கண்டுபிடிக்க பிரத்யேக உபகரணம் உள்ளது; இதில், 20 வகை பரிசோதனை உபகரணங்கள் உள்ளன. 

இதை மக்கள் பயன்படுத்தி, கலப்படத்தை கண்டறிய வேண்டும்,'' என்றார்.ஊட்டி நகர மக்கள் விழிப்புணர்வு சங்க தலைவர் ஜனார்தனன் பேசுகையில், ""சாலையோர தள்ளு வண்டிக் கடைகளில் தயாரிக்கப்படும் உணவுப் பொருட்கள் பெரும்பாலும் தரமற்றவை,'' என்றார். கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவ சுப்ரமணியம், "நெஸ்ட்' அறக்கட்டளை நிர்வாகி சிவதாஸ் முன்னிலை வகித்தனர். பயிற்சி மைய பயிற்சியாளர் சதீஷ், பயிற்சி மைய மாணவர்கள் பங்கேற்றனர். "கலப்படம் செய்யும் கல் நெஞ்சங்களே' என்ற தலைப்பில் நடந்த கவிதைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

வெள்ளி, 22 ஜூன், 2012

முறைகேடு தொடர்பான புகார் வந்தால் ரேஷன் கடை ஊழியர்கள் மீது நடவடிக்கை


முறைகேடு தொடர்பான புகார் வந்தால் ரேஷன் கடை ஊழியர்கள் மீது நடவடிக்கை

கருத்துகள்
பதிவு செய்த நேரம்:2012-06-22 10:38:42
ஊட்டி: ரேஷன் கடைகளில் முறைகேடுகள் நடப்பதாக பொதுமக்களிடம் இருந்து புகார்கள் பெறப்பட்டால் சம்பந்தப்பட்ட கடையில் பணியாற்றும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தனி அலுவலர் எச்சரித்துள்ளார்.  
நீலகிரி மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் அலுவலகத்தில் துறை ரீதியான மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுசூழல் பாதுகாப்பு மையம், மக்கள் மைய தலைவர் சிவசுப்ரமணியம் பேசுகையில், ‘‘ரேஷன் கடைகளில் மின்னணு தராசுகள் பேட்டரி சார்ஜ் நிற்பதில்லை என கூறி பழைய எடைக்கற்கள் தாரசுகளை பயன்படுத்துகின்றனர். புதிய பேட்டரிகள் மாற்றி மின்னணு தராசுகள் சீராக இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சில பங்க்களில் மதியத்திற்கு மேல் மண்ணெண்ணெய் தருவதில்லை. 
சில ரேஷன் கடைகளில் பணியாளர்கள் உரிய நேரத்தில் கடையை திறப்பதில்லை.  
தரமற்ற பொருட்கள் உடனடியாக திரும்பபெற்று தரமான பொருட்களை மட்டுமே விநியோகிக்க வேண்டும். என்.சி.எம்.எஸ் மூலம் கூடலூரில் மட்டும் உரங்கள் விற்பனை செய்யப்படுகிறது. 
பந்தலூரில் உர குடோன் அமைக்க வேண்டும். ஏஜன்டுகள் மூலமாக கிராமபுற பகுதிகளில் கூட்டுறவு மூலம் உர விற்பனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றார். 
தனி அலுவலர் கேசவன் பேசியதாவது:
மின் தட்டுபாடு காரணமாக மின்னணு எடை தராசுகள் பேட்டரி பழுதடைந்திருக்கலாம். புதிய மின்னணு தராசுகள் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முழுநேரமும் மண்ணெண்ணெய் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பணியாளர்கள் வருகை கண்காணிக்கப்படுகிறது. தொடர்ந்து புகார்கள் பெறப்படும் பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். 
சுழற்சி முறை மாற்றம் செய்யப்படும். ரேஷன் கடைகளில் தரமற்ற பொருட்களை திரும்ப பெற நடவடிக்கை எடுக்கப்படும். கலாவதியான பொருட்கள் கடையில் இருப்பு வைக்க கூடாது என விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
பந்தலூரில் என்.சி.எம்.எஸ்., உர குடோன் அமைக்க ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். ஏஜன்ட்டுகள் மூலம் உர விற்பனை செய் வது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். உரம் வேண்டுவோர் என்.சி.எம்.எஸ்ஐ அணுகி உரம் பெற்று கொள்ளலாம். கூட்டுறவு வங்கிகளில் கடன் வழங்க மறுத்தால் இணை பதிவாளர் அல்லது தனி அலுவலரிடம் முறையீடு செய்யலாம். உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அங்கீகரிக்கப்படாத நபர்கள் கடைகளில் இருப்பின் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். 
மண்ணெண்ணெய் அளவு குறித்து அறிவிப்பு பலகைகளில் ஒட்டி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 
அதை ஒட்டாத கடை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பொது விநியோக திட்டத்தில் அத்தியாவசிய பொருட்களின் அளவு குறைந்தே காணப்படுகிறது. அனைவருக்கும் சுழற்சி முறையில் கிடைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கூட்டுறவு மருந்தகங்களில் தரமான மருந்துகள் விற்பனை செய்யப்படுகிறது. இதை பொதுமக்கள் வாங்கி பயன் அடையலாம் என்றார். 

கூட்டத்தில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு நுகர்வோர் அமைப்புகளின் பிரதிநிதிகள், நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

அங்கீகாரம் பெறாமல் இயங்கும் கல்வி நிலையங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

அங்கீகாரம் பெறாமல் இயங்கும் கல்வி நிலையங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்


கருத்துகள்
பதிவு செய்த நேரம்:2012-06-22 10:35:55

ஊட்டி: மாவட்டத்தில் செயல்படும் தனியார் கல்வி நிலையங்கள் உரிய அங்கீகாரத்துடன் செயல்படுகிறதா என ஆய்வு செய்ய வேண்டும். அங்கீகாரம் பெறாமல் இயங்கும் கல்வி நிலையங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் வலியுறுத்தியுள்ளது. 
கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுசூழல் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
 மாவட்டத்தில் அங்கீகாரமற்ற கல்வி நிலையங்கள் மூலமாக பயனற்ற கல்வி வழங்கப்படுகிறது. ஆசிரியர், கணினி, கேட்டரிங், நர்சிங், தொழிற்பயிற்சி என சில பயிற்சி நடத்தும் நிறுவனங்கள் அரசிடம் உரிய முறைப்படி அங்கீகாரம் பெறுவதில்லை. அரசு அங்கீகாரம் பெறாமல் அங்கீகாரம் பெற்றுள்ளதாக ஏமாற்றுகின்றனர். சான்றிதழ் படிப்புகள் மற்றும் பட்டபடிப்புகளுக்கு சான்று வழங்க பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழிற்நுட்ப துறைகளுக்கு மட்டுமே அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்ற படிப்பை நடத்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழில்நுட்பத்துறையால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்கள் மட்டுமே மாணவர்களை தேர்வில் பங்கேற்க வைக்க முடியும். மற்ற அங்கீகாரம் பெறாத கல்வி நிலையங்கள் அரசு தேர்வுக்கு மாணவர்களை பரிந்துரைக்க முடியாது. 
கணினி பயிற்சி, தட்டச்சு பயிற்சி உள்ளிட்ட தொழில்நுட்ப பயிற்சிகள் நடத்த சம்பந்தப்பட்ட பாடங்களில் முதுநிலை ஆசிரியர் பயிற்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும். அதற்கான கட்டுமான வசதிகளும், மாணவர்களுக்கு பயிற்சி வழங்க போதுமான தளவாடங்கள் மற்றும் அடிப்படை வசதிகளை பெற்றிருக்க வேண்டும். ஆனால் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் அங்கீகாரமற்ற கணினி, தட்டச்சு, கேட்டரிங், நர்சிங் பயிற்சிகள் வழங்கும் நிலையங்கள் பெருகி வருகின்றன. இந்நிறுவனங்கள் தரும் கவர்ச்சியான விளம்பரங்களை நம்பி ஏமாறுகின்றனர்.  பயிற்சிகளுக்கு கட்டணமாக 15 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை நிர்ணயிக்கின்றனர். ஏழை மக்களின் அறியாமையை பயன்படுத்தி கொள்ளையடிகின்றனர். இதுபோன்ற பல கல்வி நிறுவனங்கள் மக்களை ஏமாற்றுவதில் இருந்து தடுக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உண்டு. இதன் அடிப்படையில் மாவட்டத்தில் செயல்படும் கல்வி நிலையங்கள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. 

அங்கீகாரம் பெறாத கல்வி நிறுவனங்கள் நடத்த தடை விதிக்க வேண்டும். இவ்வாறு நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம் கூறியுள்ளார்.


கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

புதன், 13 ஜூன், 2012

காஸ் சிலிண்டர் வினியோகத்தில் கூடுதல் : கட்டணம் வசூலித்தால் புகார் செய்யலாம்

ஊட்டி : "காஸ் சிலிண்டர் வினியோகத்தில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நுகர்வோர் பாதுகாப்பு மையத்துக்கு புகார் அளிக்கலாம்,' என அறிவிக்கப்பட்டுள்ளது.

கூடலூர் நுகர்வோர் மனித வளசுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்ரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கை:
காஸ் இணைப்பு பயன்படுத்துவோர் அதிகரித்துள்ள நிலையில், வீடு, வர்த்தக பயன்பாடுகளுக்கு தனித்தனி சிலிண்டர்கள் வினியோகிக்கப்படுகிறது. சிலிண்டர்களை முகவர்கள் மூலம் வினியோகிக்கப்படும் போது, எண்ணெய் மற்றும் காஸ் நிறுவனங்கள் உரிய கமிஷன் தொகையை வழங்குகிறது.

நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தில்,போக்குவரத்து கட்டணத்தை முகவர்களுக்கு எண்ணெய் நிறுவனங்களே வழங்குகிறது. தற்போது சிலிண்டர் ஒன்றை நுகர்வோருக்கு வினியோகிக்க 26 ரூபாய் முகவர்களுக்கு இந்நிறுவனங்கள் வழங்குகிறது. இதனால் முதல் 5 கி.மீ., தூரத்திற்கு முகவர்கள் சிலிண்டர்கள் விநியோகிக்க கூடுதலாக எந்தவித கட்டணமும் வசூலிக்க கூடாது. ஆனால், பல காஸ் சிலிண்டர் வினியோக முகவர்கள் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட 20 முதல் 50 ரூபாய் வரை கூடுதலாக வசூலிக்கின்றனர்.

இதுபோன்ற கூடுதல் கட்டணம் வசூலிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, பொதுமக்கள் தங்களது புகார்களை நீலகிரி மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகத்தில் (0423-2441216) பதிவு செய்யலாம். இவ்வாறு, சிவசுப்ரமணியம் கூறியுள்ளார்.

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

வீடுகளில் குண்டு பல்பு பயன்படுத்துவதால் உலக வெப்பமயமாதல் அதிகரிப்பும், சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்படும்

மின் சிக்கன விழிப்புணர்வு முகாமில் தகவல்

கூடலூர்:"வீடுகளில் குண்டு பல்பு பயன்படுத்துவதால் உலக வெப்பமயமாதல் அதிகரிப்பும், சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்படும்,' என மின் சிக்கன விழிப்பணர்வு முகாமில் தெரிவிக்கப்பட்டது.
       மைய முதல்வர் ஷாஜி தலைமை வகித்தார். புதிய தலைமுறை அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சொரூபானந்தன் முன்னிலை வகித்தார்.
                    கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம், மக்கள் மையம் சார்பில் மின் சிக்கனம் குறித்த விழிப்புணர்வு முகாம் நேற்று முன்தினம் கூடலூர் தோட்ட தொழிலாளர் தொழிற்பயிற்சி மையத்தில் நடந்தது. 

    நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்ரமணியம் பேசுகையில்,""தற்போது நிலவும் மின் பற்றாக்குறையால் மின் சேமிப்பு அவசியமாகும். மின் பற்றாக்குறையை பூர்த்தி செய்ய சோலார் மின்சாரத்தை பயன்படுத்தலாம்.மேலும், வீடுகளில் பயன்படுத்தும் மின்சார பொருட்கள் ஐ.எஸ்.ஐ., முத்திரையுடைய பொருட்களாக பயன்படுத்த வேண்டும். சி.எப்.எல்., விளக்குகள், மின் சிக்கன முத்திரை பதித்த பொருட்களை பயன்படுத்த வேண்டும்.

               குண்டு பல்புகள் ஆயிரம் மணி நேரம் மட்டுமே வெளிச்சம் தரும். இவை பயன்பாட்டின்போது வெளிச்சம் மட்டுமின்றி அதிகம் வெப்பத்தை வெளியேற்றுகிறது. இதுவே உலக வெப்பமயமாதலுக்கு காரணமாவதுடன், சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்படுகிறது. சி.எப்.எல்., பல்புகள் 6 ஆயிரம் மணி நேரம் வெளிச்சம் தருவதுடன், மின்சாரமும் சிக்கனப்படும்,'' என்றார். . 
        தரமான மின்சார பொருட்கள் வாங்குவது குறித்தும்; மின்சாதன பொருட்கள் பராமரிப்பு மற்றும் மின் கசிவை தடுப்பது குறித்து வேலுப்பிள்ளை விளக்கினார். முகாமில், 
         பயிற்சி மைய மாணவர்கள் பங்கேற்றனர். ஆசிரியர் செல்வகுமார் நன்றி கூறினார்.

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

புதன், 6 ஜூன், 2012

http://thaaitamil.com/%E0%AE%90-%E0%AE%A8%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4/

http://thaaitamil.com/%E0%AE%90-%E0%AE%A8%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4/

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

நுகர்வோர்களிடம் வசூல் செய்யும் கேபிள் இணைப்பு கட்டணத்துக்கு அரசு கேபிள்

கூடலூர் :
கூடலூர் :"நுகர்வோர்களிடம் வசூல் செய்யும் கேபிள் இணைப்பு கட்டணத்துக்கு அரசு கேபிள் "டிவி' கார்ப்பரேஷன் சார்பில் ரசீது வழங்க வேண்டும்,' என வலியுறுத்தப்பட்டுள்ளது.
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்ரமணியம் மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக்கிற்கு அனுப்பியுள்ள மனு:
கடந்த ஆண்டு முதல் மாநில அரசு,கேபிள் கார்ப்பரேஷன் துவங்கி குறைந்த கட்டணத்தில் கேபிள் சேவை வழங்கி வருகிறது. "கேபிள் இணைப்புக்கு மாத கட்டணம் 70 ரூபாய் வசூல் செய்து, அதில் 20 ரூபாய் அரசுக்கு செலுத்த வேண்டும்; முதலில் 90 சேனல்கள் ஒளிபரப்ப வேண்டும்,' என தெரிவிக்கப் பட்டது.
தற்போது 120 சேனல்கள் வழங்க அரசு வலியுறுத்தி வருகிறது.

ஆனால், பல பகுதிகளில் குறைந்த சேனல்கள் வழங்குவதுடன், அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்துக்கு பதில் மாதம் 100 ரூபாய் கட்டாய வசூல் செய்யப்படுகிறது.
நீலகிரியில் ஊட்டி, குன்னூர், கூடலூர், கோத்தகிரி உள்ளிட்ட பல பகுதியில் இதே நிலை தொடர்கிறது. இவ்வாறு வசூல் செய்யப்படும் கட்டணத்துக்கு ரசீதும் வழங்குவதில்லை. இது குறித்த புகார்களுக்கும் அரசு கேபிள் கார்ப்பரேஷன் தாசில்தார் நடவடிக் கை எடுப்பதில்லை.
"இவர் கூடுதல் கட்டணம் வசூல் செய்யும் நபர்களுக்கு சாதகமாக செயல்படுகிறார்,' என்ற குற்றச்சாட்டு எழுந்துள்­ளது.
எனவே, நீலகிரியில் செயல்படும் அனைத்து கேபிள் ஆபரேட்டர்கள், அரசு நிர்ணயம் செய்துள்ள கட்டணத்தை மட்டுமே வசூல் செய்து, அதற்கு அரசு கேபிள் "டிவி' கார்ப்பரேஷன் சார்பில் ரசீது வழங்கவும்; அனைத்து சேனல்களையும் முறையாக ஒளிபரப்பவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதே செயல்கள் தொடரும் பட்சத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் பற்றி ஆலோசனை செய்யப் படும். இவ்வாறு சிவசுப்ரமணியம் கூறியுள் ளார்.
வி' கார்ப்பரேஷன் சார்பில் ரசீது வழங்க வேண்டும்,' என வலியுறுத்தப்பட்டுள்ளது.
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்ரமணியம் மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக்கிற்கு அனுப்பியுள்ள மனு:
கடந்த ஆண்டு முதல் மாநில அரசு,கேபிள் கார்ப்பரேஷன் துவங்கி குறைந்த கட்டணத்தில் கேபிள் சேவை வழங்கி வருகிறது. "கேபிள் இணைப்புக்கு மாத கட்டணம் 70 ரூபாய் வசூல் செய்து, அதில் 20 ரூபாய் அரசுக்கு செலுத்த வேண்டும்; முதலில் 90 சேனல்கள் ஒளிபரப்ப வேண்டும்,' என தெரிவிக்கப் பட்டது.
தற்போது 120 சேனல்கள் வழங்க அரசு வலியுறுத்தி வருகிறது.

ஆனால், பல பகுதிகளில் குறைந்த சேனல்கள் வழங்குவதுடன், அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்துக்கு பதில் மாதம் 100 ரூபாய் கட்டாய வசூல் செய்யப்படுகிறது.
நீலகிரியில் ஊட்டி, குன்னூர், கூடலூர், கோத்தகிரி உள்ளிட்ட பல பகுதியில் இதே நிலை தொடர்கிறது. இவ்வாறு வசூல் செய்யப்படும் கட்டணத்துக்கு ரசீதும் வழங்குவதில்லை. இது குறித்த புகார்களுக்கும் அரசு கேபிள் கார்ப்பரேஷன் தாசில்தார் நடவடிக் கை எடுப்பதில்லை.
"இவர் கூடுதல் கட்டணம் வசூல் செய்யும் நபர்களுக்கு சாதகமாக செயல்படுகிறார்,' என்ற குற்றச்சாட்டு எழுந்துள்­ளது.
எனவே, நீலகிரியில் செயல்படும் அனைத்து கேபிள் ஆபரேட்டர்கள், அரசு நிர்ணயம் செய்துள்ள கட்டணத்தை மட்டுமே வசூல் செய்து, அதற்கு அரசு கேபிள் "டிவி' கார்ப்பரேஷன் சார்பில் ரசீது வழங்கவும்; அனைத்து சேனல்களையும் முறையாக ஒளிபரப்பவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதே செயல்கள் தொடரும் பட்சத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் பற்றி ஆலோசனை செய்யப் படும். இவ்வாறு சிவசுப்ரமணியம் கூறியுள் ளார்.
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

அடிப்படை தேவைக்கு மட்டும் மின்சாரத்தை பயன்படுத்த அறிவுரை

அடிப்படை தேவைக்கு மட்டும் மின்சாரத்தை  பயன்படுத்த அறிவுரை



கூடலூர் : "மின்சாரத்தை அடிப்படை தேவைக்கு மட்டும் பயன்படுத்துவதன் மூலம் சேமிக்க முடியும்,' என கூடலூரில் நடந்த மின் சக்தி சேமிப்பு தின விழாவில் வலியுறுத்தப்பட்டது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் நீலகிரி மின் பகிர்மான வட்டம், கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம் சார்பில், மின் சக்தி சேமிப்பு நாள் விழா கூடலூர் ஜானகியம்மாள் திருமண மண்டபத்தில் நடந்தது. செயற்பொறியாளர் ஆல்துரை வரவேற்றார். விழாவுக்கு மேற்பார்வை பொறியாளர் நிர்மலா ஞானபுஸ்பம் தலைமை வகித்து பேசினார். கூடலூர் பாரதியார் பல்கலை கழக கலை அறிவியல் கல்லூரி விரிவுrai யாளர் பிரகாஷ் பேசுகையில்,"" மின்சாரத்தை அடிப்படை தேவைக்கு மட்டும் பயன்படுத்துவதன் மூலம் சேமிக்க இயலும்; இதன் மூலம் பெரும் பயன் ஏற்படும்,'' என்றார். கூடலூர்  நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்ரமணியம் , மின் சேமிப்பில் நுகர்வோரில் பங்கு பற்றி பேசினார். விழாவில், குன்னூர் செயற்பொறியாளர் நடராஜன், உதவி செயற் பொறியாளர்கள் சிவகுமார், பிரேம்குமார், உதவி பொறியாளர்கள் பாலாஜி, பாலகணேசன் உட்பட பலர் பங்கேற்றனர். ஊட்டி செயற் பொறியாளர் சிவராஜ் நன்றி கூறினார்.

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்