அன்புடன் வரவேற்கின்றோம்


you are welcome to our web page

எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்

Please give your GOOD IDEAS FOR DEVELOPING
THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPS

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்

செவ்வாய், 28 ஆகஸ்ட், 2012

நுகர்வோர் உரிமைகளை மாணவர்கள் அறிய வேண்டும்

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்


நுகர்வோர்  உரிமைகளை  மாணவர்கள் அறிய வேண்டும் 

வாகன காப்பீடு, ஆய்வு விவரம்:

ஊட்டி: நீலகிரியில், 80 சதவீதத்தினருக்கு காப்பீடு புதுப்பிப்பதற்கான தகவல் கிடைக்கப் பெறுவதில்லை எனவும்; 30 சதவீத இரு சக்கர வாகன உரிமையாளர்கள், தங்களின் வாகனக் காப்பீட்டை புதுப்பிப்பதில்லை எனவும், "கான்சர்ட்' அமைப்பு நடத்திய கள ஆய்வில் தெரிய வந்துள்ளது.

சென்னையில் உள்ள நுகர்வோர் கல்வி ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் (கான்சர்ட்), வாகன காப்பீடு நிறுவனங்கள், நுகர்வோருக்கு முறையாக சேவையை வழங்கி வருகிறதா என்பது குறித்து, மாநிலம் தழுவிய ஆய்வு மேற்கொண்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில், கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், மக்கள் மையம் ஆகியவற்றுடன் இணைந்து, "கான்சர்ட்' நிறுவனம்,கள ஆய்வு நடத்தியது.



ஆய்வு விவரம்: இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகன உரிமையாளர்களில் பெரும்பான்மையானோர், அரசின் வாகன பதிவின்போது அதன் பயனையோ, அவசியத்தையோ பெரிதாக கருத்தில் கொள்வதில்லை. வாகன காப்பீடு, 95 சதவீதத்தினர் நேரடியாக இன்சூரன்ஸ் நிறுவனத்தை நாடி எடுத்துக் கொள்கின்றனர். அங்கு வழங்கும் படிவங்களை படிக்காமல் கையெழுத்திட்டு விண்ணப்பங்களை அவர்களே நிரப்பி விடுகின்றனர்.80 சதவீதத்தினர், காப்பீடு புதுப்பிப்பதற்கான தகவல் கிடைக்கப் பெறுவதில்லை. 30 சதவீதத்தினர் இரு சக்கர வாகனங்களுக்கு காப்பீடு புதுப்பித்து கொள்வதில்லை. பதிவை புதுப்பிக்க வேண்டிய சூழலில் மட்டுமே, வாகன காப்பீட்டை எடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.காப்பீடு செய்தோரில் 45 சதவீதத்தினர் மட்டுமே, வாகன விபத்து அல்லது வாகனம் காணாமல் போனால், காப்பீட்டு நிறுவன இலவச தொலைபேசி வாயிலாக 48 மணி நேரத்திற்குள் தகவல் தெரிவிப்பதை அறிந்து வைத்துள்ளனர்.



பெரும்பாலும் வாகன காப்பீடு எடுப்போர், அதனால் பயன் கிடைக்கும் என்பதை விட, வாகன பதிவை செய்ய காப்பீடு அவசியம் என்று கருதியே, காப்பீடு பெறுகின்றனர்.
10 சதவீதத்தினர் வாகனம் வாங்கி கொடுக்கும் இடைதரகர்களே அனைத்து வேலைகளையும் முடித்து கொடுப்பதால், எந்த நிறுவனத்தில் காப்பீடு எடுத்துள்ளோம் என்பதை அறியாமல் உள்ளனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. காப்பீடு நிறுவனங்கள் நுகர்வோருக்கு முழுமையான தகவல்களை தெரிவிக்க வேண்டியதன் அவசியம் குறித்து, கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையத் தலைவர் சிவசுப்ரமணியம் விளக்கினார்.

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

சனி, 25 ஆகஸ்ட், 2012

அனைத்து பள்ளிகளிலும் குடிமக்கள் நுகர்வோர் மன்றங்கள் அமைக்க வலியுறுத்தல்


ஊட்டி, ஆக. 24:
நுகர்வோர் விழிப்புணர்வை மக்களிடையே அதிகரிக்க அனைத்து பள்ளிகளிலும் குடிமக்கள் நுகர்வோர் மன்றங்கள் அமைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
மாணவர்களிடையே நுகர்வோர் கல்வியை பரப்பும் வண்ணம் கடந்த 2005ம் ஆண்டு முதல் பள்ளிகளில் நுகர்வோர் மன்றங்கள் ஆரம்பிக்கப்பட்டன. தற்போது இதனை குடிமக்கள் நுகர்வோர் மன்றம் என்ற பெயரில் அனைத்து பள்ளிகளிலும் துவங்கி செயல்படுத்திட அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவர்களிடையே நுகர் வோர் கல்வியை பரப்பிடும் வண்ணம் கடந்த 2005ம் ஆண்டு முதல் பள்ளிகளில் நுகர்வோர் மன்றங்கள் ஆரம்பிக்கப்பட்டன.
தற்போது இதனை குடிமக்கள் நுகர்வோர் மன்றம் என்ற பெயரில் அனைத்து பள்ளிகளிலும் துவங்கி செயல்படுத்த அரசு அறிவுறுத்தி உள்ளது.
இதற்காக கடந்த 13ம் தேதி அன்று முதன்மை கல்வி அலுவலர் தலைமை யில் அனைத்து பள்ளி ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது. இன்னும் சில பள்ளிகள் குடிமக்கள் நுகர்வோர் மன்றம் துவங்க எந்தவித விண்ணப்பமும் வழங்காமல் உள்ளனர்.
இதுவரை குடிமக்கள் நுகர்வோர் மன்றம் துவங்காத பள்ளிகள் விரைவில் துவங்க வேண்டும். பல பள்ளிகளில் துவங்கப்பட்டும் பல பள்ளிகள் முறையான கூட்டங்கள் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தாமல் உள்ளனர். தொடர்ந்து மாணவர்கள் மத்தியில் நுகர்வோர் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அனைத்து பள்ளிகளிலும் குடிமக்கள் நுகர்வோர் மன்றங்களை செயல்படுத்த வேண்டும்.
குடிமக்கள் நுகர்வோர் மன்றங்களை ஏற்படுத்துதல், கூட்டங்கள் நடத்துதல் போன்ற ஆலோசனைகளை பெற 9489860250 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம் கூறியுள்ளார்.

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

கூடலூர் வனக்கோட்டத்தில் 11 ஆயிரத்து 200 ஏக்கர் சேர்ப்பு : தனி வனச்சரகமாகிறது ஓவேலி வனப்பகுதி

கூடலூர் : கூடலூர் வனக்கோட்டத்துக்கு கூடுதலாக 11 ஆயிரத்து 200 ஏக்கர் பரப்பிலான வனப்பகுதி ஒப்படைக்கப்பட்டதை தொடர்ந்து, ஓவேலி பகுதியை தனி வனச் சரகமாக மாற்றும் பணியை வனத்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.நீலகிரி மாவட்டம் கூடலூர் வனக் கோட்டம் என்பது, கூடலூர், தேவாலா, சேரம்பாடி, பிதர்காடு மற்றும் ஜீன்பூல் தாவர மையம் ஆகிய வனச் சரகங்களை கொண்டுள்ளது. இங்குள்ள வன நிலங்கள் பல வகை பிரிவுகளில் அழைக்கப்படுகிறது. இதில் பிரச்னை தீர்க்கப்படாத செக்ஷன்-17 நிலங்கள் அதிகளவில் உள்ளன.கூடலூரில் நிலம்பூர் கோவிலகத்தின் வசம் 80 ஆயிரத்து 88 ஏக்கர் ஜென்மம் நிலங்கள் இருந்தன. 1969ம் ஆண்டு மாநில அரசு "கூடலூர் ஜென்மம் ஒழிப்பு' சட்டத்தை கொண்டு வந்து, 1974ம் ஆண்டு நவம்பர் மாதம் 27ம் தேதி நிலம்பூர் ஜென்மம் நிலங்களை கையகப்படுத்தியது.இதில், 9,272 ஏக்கருக்கு பட்டாவும், 5,886 ஏக்கர் அரசு "அனாதினம்' வகையிலும், 12 ஆயிரத்து 928 ஏக்கரை வனமாகவும் மாற்றியது. குத்தகைதாரர் வசமிருந்த மீதமுள்ள 52 ஆயிரம் ஏக்கர் நிலத்தை செக்ஷன்-17 நிலமாக அறிவித்தது. இந்த நிலம் தொடர்பான பிரச்னை நிலுவையில் உள்ளது.செக்ஷன்-17 நிலத்திலுள்ள சிறு விவசாயிகள் பாதிக்காத வகையில்,நிலப்பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், இதுவரை இறுதி முடிவு எடுக்கப்பட வில்லை. இதனிடையே மத்திய அதிகார குழுவினர் பரிந்துரையின் படி, வருவாய் துறையினர் செக்ஷன்-17 நிலத்தில் வனப்பகுதி நிலங்களை கள ஆய்வு செய்து, ஓவேலி பகுதியில் 11 ஆயிரத்து 200 ஏக்கர் நிலங்களை பிரிவு-53 ஆக மாற்றி, கூடலூர் வனக் கோட்டத்தில் ஒப்படைத்துள்ளனர்.வன கோட்டத்துக்கு கூடுதல் வனப் பகுதி ஒப்படைக்கப்பட்டதை தொடர்ந்து, கூடலூர் வனச் சரகத்தை இரண்டாக பிரித்து, ஓவேலியை தனி வனச் சரகமாக மாற்ற வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.ஓவேலி பகுதியிலுள்ள சூண்டி, பார்வுட், எல்லமலை, பாரம் ஆகிய நான்கு காவல் பகுதிகளை ஓவேலி வனச் சரகத்துக்குள் கொண்டு வந்துள்ளனர். இதில், எல்லமலை, பாரம் காவல் பகுதிகளை இரண்டாக பிரித்து 6 காவல் பகுதிகளை கொண்டு வரைப்படம் உருவாக்கி, வனச் சரகர், வனவர், வனக்காப்பாளர்கள், வன காவலர்கள் பணியிடங்களை ஏற்படுத்தியுள்ளனர். இதன் விபரங்களை கோவை மண்டல வன பாதுகாப்பாளருக்கு அனுப்பியுள்ளனர். இதற்கான அறிவிப்பு விரைவில் வர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. "கூடலூர் வன கோட்டத்துக்கு ஓவேலி பகுதியில் 11 ஆயிரத்து 200 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டதை தொடர்ந்து வன பாதுகாப்பை பலப்படுத்தவே "ஓவேலி வனச் சரகம்' அமைக்கும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம்,' என வனத்துறையினர் தெரிவித்தனர். இப்பகுதியில் உள்ள வன விலங்குகளின் எண்ணிக்கை கணக்கெடுத்து வருவதுடன், வன காவல் பகுதியை பலப்படுத்த துல்லியமாக நில அளவை செய்வதற்கான நடவடிக்கையும் வனத்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

ஏ.டி.சி., பகுதியை சுத்தப்படுத்த போராட்டம்

ஊட்டி, ஆக. 25:
ஊட்டி நகரின் மையப்பகுதியான ஏ.டி.சி., பகுதியை தூய்மைப்பகுதியாக அறிவிக்க கோரியும், எட்டின்ஸ் சாலையையொட்டி அமைந்துள்ள கழிவுநீர் கால்வாயில் குவிந்து கிடக்கும் கோழிக்கழிவுகள், பிளாஸ்டிக் பாட்டில்கள், காதித குப்பைகளை அகற்றி தூய்மைப்படுத்தாத நகராட்சியை கண்டித்தும், பொதுமக்கள் அதிகம் கூடும் ஏ.டி.சி., பகுதியை போர்கால அடிப்படையில் தூய்மைபடுத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தயும் கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம் ஊட்டி நகர மக்கள் விழிப்புணர்வு சங்கம் சார்பில் சுவரொட்டி வைக்கும் நூதன போராட்டம் நேற்று நடந்தது.

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட விழிப்புணர்வு சங்கத்தினர் கூறுகையில், ஏற்கனவே எங்கள் அமைப்பு சார்பில் உலக சுகாதார தினத்தன்று இது தொடர்பாக கவனஈர்ப்பு ஆர்பாட்டம் நடத்தியும் நகராட்சி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே அப்பகுதியில் கழிவுநீர் மற்றும் மழைநீர் செல்லும் வகையில் குழாய்ககள் அமைக்க வேண்டும். அங்கு சுகாதார சீர்கேடுகளை உருவாக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை மற்றும் அபராதம் விதிக்க வேண்டும். இப்பிரச்சனை தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்காதபட்சத்தில் ஏன் நீதிமன்ற நடவடிக்கை எடுக்க கூடாது என்பதும் பொதுமக்கள் கேள்வியாக உள்ளது என்றனர். 

போராட்டத்தில் கூடலூர் நுகர்வோர் சுற்றுசூழல் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரணியம், நீலகிரி மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு மைய செயலாளர் வீரபாண்டியன், விழிப்புணர்வு சங்க தலைவர் ஜனார்த்தனன், மலைச்சாரல் கவிமன்ற தலைவர் சோலூர் கணேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

திங்கள், 20 ஆகஸ்ட், 2012

உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் பயிற்சி

ஊட்டி, ஆக. 18:
உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் குறித்து கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுசூழல் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்ரமணியம் கூறியிருப்பதாவது:
இந்திய அரசு கடந்த ஆண்டு அமல்படுத்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் நுகர்வோர் நலனில் அக்கறை கொண்டு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இச்சட்டம் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுசூழல் பாதுகாப்பு மையம் தீர்மானித்துள்ளது. இச்சட்டம் குறித்து சிறப்பு பயிற்சி வழங்க உள்ளோம். இச்சட்டத்தின் சிறப்புகள் குறித்து சிறப்பு பயிற்சி வழங்க உள்ளோம். இந்த சட்டத்தின் நோக்கம் நுகர்வோருக்கான உரிமைகள், உணவு கலப்படம் தர நிர்ணயங்களின் தன்மைகள், பாதிக்கப்பட்டால் எடுக்க வேண்டிய நடவடிக்கை, நுகர்வோர் கடமைகள் குறித்து விளக்கமளிக்கப்பட உள்ளது.
இப்பயிற்சியில் தன்னார்வத்துடன் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த விரும்பும் தன்னார்வ அமைப்பினர், சமூக நல அமைப்புகள், தன்னார்வலர்கள் பங்கேற்கலாம். பங்கேற்க விரும்புபவர்கள் தங்கள் பெயர் மற்றும் முகவரி மற்றும் சமூக செயல்பாடுகள் குறித்த விவரங்களை 
�கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுசூழல் பாதுகாப்பு மையம் & மக்கள் மையம் பந்தலூர், நீலகிரி� என்ற முகவரிக்கு அனுப்பலாம். 
பயிற்சி குறித்த இடம், நாள் பின்னர் அறிவிக்கப்படும். 
இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு 94885 20800 94898 60250 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

பஸ்களை உரிய காலத்தில் இயக்க உத்தரவு போக்குவரத்து கழக அதிகாரி தகவல்

ஊட்டி, ஆக. 20:
உரிய காலத்தில், தேவையான அனைத்து அடிப்படை வசதிகளுடன் பஸ்சை இயக்க உத்தரவிடப்பட்டு இருப்பதாக அரசு போக்குவரத்து கழக கோட்ட மேலாளர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் துறை ரீதியான நுகர்வோர் பாதுகாப்பு குழு கூட்டம் ஊட்டி கோட்ட மேலாளர் அலுவலகத்தில் நடந்தது. 
கூட்டத்திற்கு அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் பீட்டர் ஸ்டீபன் தலைமை வகித்தார். 
கூட லூர் நுகர்வோர் மனிதவள சுற்றுசூழல் பாதுகாப்பு மையத்தின் தலைவர் சிவசுப்பிரமணியம் கலந்து கொண்டு பேசுகையில், 
அமைப்பின் கோரிக்கையை ஏற்று கூடலூர் & ஊட்டி இடையிலான வழித்தட பேருந்துகள் சிலவற்றை சாதாரண பேருந்துகளாக மாற்றி கட்டணத்தை குறைத்ததும், 
ஊட்டி & கைகாட்டி வழித்தடத்தில் சில பேருந்துகளில் ரூ.1 அதிகமாக வசூலிக்கப்பட்ட கட்டணத்தை குறைத்து அனைத்து பேருந்திற்கும் ஒரே மாதிரியான கட்டணம் நிர்ணயித்ததும் பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

தற்போது பல பஸ்கள் உரிய நேரத்தில் இயக்கப்படுவதில்லை. இதனால் பயணிகளுக்கு சிரமத்தையும், போக்குவரத்து கழகத்திற்கு வருவாய் இழப்பையும் ஏற்படுத்துகின்றது. இதனை சரி செய்ய வேண்டும். 
பல பஸ்களில் ஜன்னல் கண்ணாடிகள் இல்லாமல் உள்ளதால் மழை காலங்களில் பயணிக்கும் பயணி கள் சிரமமடைந்து வருகின்றனர். கிளை மேலாளர் உரிய ஆய்வு செய்து கண்ணாடி இல்லாத பஸ்களில் கண்ணாடிகள் பொருத்த வேண்டும். 
மழை காலங்களில் பஸ்கள் ஒழுகாமல் இருக்க அமைப்பின் வலியுறுத்தலுக்கு பின் தார் சீட்டுகள் ஒட்டப்பட்டா லும், கூரையின் பக்கவாட்டு பகுதிகளில் இருந்து மழை நீர் ஒழுகும் நிலை உள்ளது. அவற்றை சரி செய்ய வேண் டும்.
 பல பஸ்களில் முதலு தவி பெட்டிகள் உரிய முறைப்படி இல்லாமல் உள்ளது.
மேலும் பஸ்களில் போக்குவரத்து கிளை அலுவலக தொலைபேசி எண்ணை எழுதி வைக்க வேண்டும். 
மாவட்டத்தில் உள்ள அனைத்து கிளைகளிலும் பஸ்கள் குறித்து தகவல்கள் அறிய தொலைபேசி இணைப்பு ஏற்படுத்த வேண்டும் என்றார்.
கோட்ட மேலாளர் சண்முக வேலாயுதம் பேசியதாவது,
அனைத்து பஸ்களும் நுகர்வோர்ள் நலன் கருதி இயக்கப்படுகிறது. 
உரிய காலங்களில் பஸ்கள் இயக்க அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகின்றது. 
விரைவில் புதிய பஸ்கள் இயக்கப்பட உள்ளது. கண்ணாடி இல்லாத பஸ்களில் கண்ணாடிகள் பொருத்தப்பட்டு வருகிறது. 
ஒழுகும் பஸ்களில் கூரையில் தார் சீட்டுகள் ஒட்டப்பட்டு வருகின்றது.
கழிப்பிடத்தில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பான புகாரின் பேரில் கூடலூர் கிளையில் உள்ள கழிப்பிட டெண்டர் ரத்து செய்யபட்டுள்ளது. புதிய டெண்டர் 22ம் தேதி விடப்படுகிறது. 
பஸ்களில் முதலுதவி பெட்டிகள் உரிய முறையில் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும். புதிய பஸ்கள் இயக்கப்படும் போது விரைவு பஸ்கள் அனைத்தும் விரைவாக இயக்கப்படும் என்றார்.
கூட்டத்தில் ஊட்டி கோட்டத்திற்குட்பட்ட கிளை மேலாளர்கள், தன்னார்வ நுகர்வோர் அமைப்புகள் சார்பில் ராஜன், பசவராஜ், ஊட்டி வட்டார பொறுப்பாளர் மாரிமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை பொது மேலாளரின் உதவியாளர் செய்திருந்தார்.
அனைத்து அடிப்படை வசதிகளுடன்
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

குடிமக்கள் நுகர்வோர் மன்ற துவக்க விழா

ஊட்டி:ஊட்டி ஆக்ஸ்போர்டு ஆசிரியர் பயிற்சி மையத்தில், அரசு உணவுப்பொருள் வழங்கல் நுகர்வோர் பாதுகாப்பு துறை, கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் ஆகியவை சார்பில், குடிமக்கள் நுகர்வோர் மன்ற துவக்க விழா நடந்தது.
நிகழ்ச்சிக்கு பயிற்சி நிலைய முதலவர் ராமசந்திரன் தலைமை வகித்தார். கூடலூர் நுகர்வோர் மனிதவள பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்ரமணியம் முன்னிலை வகித்தார் 

குடிமக்கள் நுகர்வோர் மன்ற மண்டல ஒருங்கிணைப்பாளர் சொக்கலிங்கம்,

நுகர்வோர் ஏமாற்றங்களை தவிர்க்க விழிப்புணர்வு அவசியமாவதால், விளம்பரங்களை தவிர்த்து தரமான பொருட்களை மட்டும் வாங்கி பயன்படுத்த வேண்டும்

ஊட்டி நகர மக்கள் விழிப்புணர்வு சங்க தலைவர் ஜனார்த்தனன் பங்கேற்று பேசினர். நிகழ்ச்சியில், "பால் தற்@பாது பல்வேறு தனியார் நிறுவனங்களின் மூலம் வினியோகிக்கப்படுகிறது. இவை பெரும்பாலும் ரசாயன பாலாக உள்ளது. எனவே, இவற்றை தவிர்க்க தரமான பாலை மட்டும் பயன்படுத்த வேண்டும்; ,' என கேட்டுக்கொள்ளப்பட்டது. 

 ஆசிரியர் பயிற்சி மைய மாணவ, மாணவியர், ஆசிரியர் பயிற்றுனர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

மழைநீர் ஒழுகும் அரசு பஸ்களை சரிசெய்ய வேண்டும் என, நுகர்வோர் அமைப்பு கோரியுள்ளது.

ஊட்டி: 

மழைநீர் ஒழுகும் அரசு பஸ்களை சரிசெய்ய வேண்டும் என, நுகர்வோர் அமைப்பு கோரியுள்ளது.

அரசு போக்குவரத்து கழகத்தின் துறை ரீதியான நுகர்வோர் பாதுகாப்பு குழு கூட்டம், ஊட்டியில் நடைபெற்றது. 

அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் பீட்டர்ஸ்டீபன் தலைமை வகித்தார். 

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்ரமணியம், பேசியதாவது:
அமைப்பின் கோரிக்கையை ஏற்று, கூடலூர் - ஊட்டி வழித்தட பஸ்களை, சாதாரண பஸ்களாக மாற்றி, கட்டணத்தை குறைத்ததை வரவேற்கிறோம். 

ஆனால், பல பஸ்கள் உரிய நேரத்தில் இயக்கப்படுவதில்லை. இதனால், பயணிகள் சிரமப்படுவதுடன், போக்குவரத்து கழகத்துக்கும் வருவாய் இழப்பு ஏற்படுத்துகிறது. 

பஸ்களின் ஜன்னல்கள், கண்ணாடி இல்லாமல் உள்ளதால், மழைக்காலங்களில் பயணம் செய்ய முடிவதில்லை. அனைத்து பஸ்களையும் ஆய்வு செய்து, கண்ணாடிகளை பொருத்த வேண்டும்.


சில அரசு பஸ்களில், மேற்கூரையில் தார் சீட்டுகள் ஒட்டப்பட்டும் இரு பக்கவாட்டுகளிலும் மழைநீர் ஒழுகுகிறது. இதை சரி செய்ய வேண்டும்; 

முதலுதவி பெட்டி இருக்க வேண்டும். கிளையின் தொலைபேசி எண் எழுதி வைக்கப்படவில்லை. 

வசூலிக்கும் கட்டணத்துக்கு ஏற்ப வசதிகளை ஏற்படுத்தித்தர வேண்டும்; 

கழகம் சார்பில் நடத்தப்படும் கட்டண கழிப்பிடங்களில், விதிமுறைகளுக்கு புறம்பாக அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது குறித்து புகார் தெரிவித்தும், நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. இதை தவிர்க்க, போக்குவரத்து மூலம் தற்காலிக ஊழியரை நியமித்து, கழிப்பிடங்களை பராமரிக்க வேண்டும்.

ஊட்டி - கைகாட்டி வழித்தடத்தில் காலை 8 முதல் 10 மணி வரை இயக்கப்படும் பஸ்களை, சரியான நேரத்தில் இயக்க வேண்டும்; 

பல பஸ்களில் வழித்தட அறிவிப்பு பலகைகள், உரிய முறையில் வைப்பது கிடையாது. இரவில், அறிவிப்பு பலகைகளுக்கு விளக்கு இல்லாததால், எந்த ஊர் செல்லும் பஸ் வருகிறது என்பதை அறிய, பயணிகள் சிரமப்படுகின்றனர். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கோட்ட மேலாளர் சண்முகம் பேசுகையில், "அனைத்து பஸ்களும் நுகர்வோரின் பயன் கருதி இயக்கப்படுகிறது. உரிய நேரத்தில் இயக்க அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது. புதிய பஸ்கள் அரசிடம் இருந்து பெறப்பட்டு இயக்கப்படும். பஸ்சில் மழைநீர் ஒழுகும் பட்சத்தில் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். கூடுதல் கட்டணம் வசூலித்த புகாரின் பேரில், கூடலூர் கிளை கழக கழிப்பிடம் டெண்டர் ரத்து செய்யப்பட்டு, புதிய டெண்டர் வரும் 22ம் தேதி விடப்படுகிறது'' என்றார்.

ஊட்டி கோட்டத்துக்கு உட்பட்ட கிளை நிர்வாகிகள், தன்னார்வ நுகர்வோர் அமைப்பின் சார்பில் ராஜன், பசுவராஜ், மாரிமுத்து உட்பட பலர் பங்கேற்றனர்.


கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

சனி, 18 ஆகஸ்ட், 2012

தாழ்த்தப்பட்டவர் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்புச்) சட்டம்.

தாழ்த்தப்பட்டவர் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்புச்) சட்டம்.

தாழ்த்தப்பட்டவர் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்புச்) சட்டம். 1989. மற்றும் விதிகள்.1995.
1955ல் இயற்றப்பட்ட குடியுரிமை பாதுகாப்பு சட்ட விதிகள், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் மீது நிகழ்த்தப்படும் வன்கொடுமைகளை குறிப்பிட்டு விவாதிக்க வில்லை. எனவே, 1989ம் ஆண்டு வன்கொடுமைகளை தடுப்பதற்கென்று மற்றொரு முக்கிய சட்டத்தினை பாராளுமன்றம் நிறைவேற்றியது. இச்சட்டம், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம். 1989என்று அழைக்கப்படுகிறது இச்சட்டம் 30.1.1990 லிருந்து நடைமுறையிலிருக்கிறது.இச்சட்டத்தை தொடர்ந்து நடைமுறைப்படுத்துவதற்க இந்திய அரசு சட்ட விதிகளை பிரகடனம் செய்தது. அவை, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி யினர் விதிகள் 1995 என அழைக்கப்படுகின்றன.இவ்விதிகள் மார்ச். 31. 1995 அன்று நடைமுறைப்படுத்தப்பட்டது.
3.13.1. தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைத் தடுப்புச்) சட்டம் 1989
சட்ட எண் 33/1989
11. செப்டம்பர் 1989
முகப்புரை
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு எதிராக வன்கொடுமைகள் புரிவதை தடுப்பதற்கும்,இவ்வகை குற்றங்கள் மீதான வழக்கு விசாரணைக்கு சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க வழி செய்வதற்கும், இக்குற்றங்களால் பாதிக்கப்படுபவர்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வு கிடைக்கச் செய்வதற்கும், தொடர்புள்ள சட்டம்.
இந்தியக் குடியரசின் 40 ஆண்டில் பாராளுமன்றம் இயற்றும் சட்டமானது.
இயல் 1. முன்னுரை
1. சுருக்கமான தலைப்பு, அளவுஎல்லை, தொடக்கம்.
(1) தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் (வன்கொடு மைகள் தடுப்புச் சட்டம்) 1989 என
இச்சட்டத்தை அழைக்கலாம்.
2. ஜம்மு, காஷ்மீர் மாநிலம் தவிர இந்தியா முழுமைக்கும் இச்சட்டம் பொருந்தும்.
3. மைய அரசு அதிகாரபூர்வ அரசிதழில் அறிவிப்பு செய்வ தன் மூலம், குறிப்பிடப்படும் தேதியில் இச்சட்டம் நடைமுறைக்கு வரும்.
2. விளக்கங்கள்
1. இச்சட்டத்தில் சூழல் கருதி வேறு பொருள் கொள்ள நேரிட்டால் அன்றி.
அ. ”வன்கொடுமை” என்ற சொல் பிரிவு 3ன் படி தண்டனைக்குரிய குற்றத்தை குறிக்கும்.
ஆ. ”விசாரணை முறை சட்டம்” என்பது 1973ம் ஆண்டு நடைமுறைக்கு வந்த குற்றவியல் விசாரணை   முறை (2/1974) சட்டத்தைக் குறிக்கும்.
இ. “தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர்” என்பது அரசியலமைப்பு சட்ட விதி 366ல் பிரிவு(24),
(25)ன்படி யாரை குறிப்பிடுகிறதோ அவர்களையே இங்கும் குறிப்பிடுகிறது.
(ஈ) ”சிறப்பு நீதிமன்றம்” என்பது பிரிவு. 14ல் சிறப்பு நீதிமன்றம் என குறிக்கப்படும் அமர்வு
நீதிமன்றத்தை குறிப்பிடும்.
உ. “சிறப்பு அரசு வழக்குரைஞர்’ என்பது பிரிவு. 15ல் சிறப்பு வழக்கறிஞர் எனக் குறிக்கப்படும்.அரசு
வழக்குரைஞர் அல்லது                 வேறொரு வழக்குரைஞரை குறிக்கும்.
ஊ. இச்சட்டத்தில் பயன்படுத்தப்பட்டிருந்தாலும் சில சொற்கள், தொடர்களுக்குமான இலக்கண விளக்கங்கள் இங்கு இடம்         பெறவில்லை, இவற்றுக்கான இலக்கணங்கள் குற்றவியல் விசாரணை முறை சட்டத்திலோ, இந்திய தண்டனை சட்டத்திலோ              காணப்படுகின்றன.அப்பகுதியில் இவை என்னப் பொருளில் கையாளப்பட்டிருக்கிறதோ அதே பொருளிலேயே இங்கும்       குறிப்பிடப்பட்டுள்ளன.
2. இச்சட்டம் குறிப்பிடுகின்ற ஒரு சட்டமோ, விதியோ குறிப்பிட்ட ஒரு பகுதியில் அமலில் இல்லாமல், அதைப் போன்று வேறொரு சட்டம் அமலில் இருக்கிறதென்றால், அந்த வேறு சட்டத்தையே குறிப்பிடுவதாக கொள்ளப்படும்.
இயல்.2. வன்கொடுமை குற்றங்கள்
3. வன்கொடுமைகளுக்கான தண்டனைகள்
1. தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினரை சார்ந்திராத ஒருவர்.
1.    உண்ணத்தகாத பொருளையோ, அருவருப்பான ஒன்றையோ, குடிக்குமாறு அல்லது சாப்பிடுமாறு தாழ்த்தப் பட்ட அல்லது பழங்குடியினரை கட்டாயப்படுத்தினால்.
2.   தாழ்த்தப்பட்ட அல்லது பழங்குடியினர் ஒருவரின் வீட்டு வளாகத்திலோ அல்லது அருகாமையிலோ மலம், கழிவுப்பொருள், விலங்கு பிணங்கள் அல்லது வேறு அருவறுப் பான பொருளைக் கொண்டு வந்து, அவருக்கு வேண்டு மென்றே தீங்கோ,அவமதிப்போ, எரிச்சலோ உண்டு பண்ணு மாறு செய்வாரெனில்.
3.   தாழ்த்தப்பட்ட அல்லது பழங்குடியினர் ஒருவரின் ஆடைகளை பலவந்தமாக அவிழ்த்தால் அல்லது அவரை நிர்வாணப்படுத்தியோ, கரும்புள்ளி செம்புள்ளி குத்தப்பட்டு ஊர்வலம் விட்டால் அல்லது மனித கண்ணியத்திற்கு இழுக்கான முறையில் இதுபோல் வேறு ஏதேனும் செய்வாரானால்.
4.   தாழ்த்தப்பட்ட அல்லது பழங்குடியினர் ஒருவருக்கு சொந்தமான நிலத்தையோ,அவருக்கு ஒதுக்கப்படும் தகுதி வாய்ந்த ஏதேனும் ஒரு அதிகார அமைப்பால் அறிவிப்பு செயயப்பட்ட நிலத்தையோ வலுக்கட்டாயமாக ஆக்கிரமிப்பு செய்தால் அல்லது அந்நிலத்தில் சாகுபடி செய்தால், அல்லது வேறொருவருக்கு மாற்றம் செய்தால்.
5.   தாழ்த்தப்பட்ட அல்லது பழங்குடியினர் ஒருவரிடமுள்ள நிலத்தையோ, வீட்டையோ,நேர்மையற்று பரிப்பா ரெனில் அல்லது நிலம், வீடு, நீர் இவற்றில் தமக்குள்ள உரிமை களை அனுபவிப்பதில் குறுக்கிடுவாரெனில்.
6. தாழ்த்தப்பட்ட அல்லது பழங்குடியினரை ”பேகார்’ முறையிலோ,பொதுநோக்கங்களுக்காக அரசாங்கம் விதித் துள்ள கட்டாய பணியில்லாத,பலவந்தமாக வேலை சுமத்தும் அல்லது கொத்தடிமை வேலைக்கு ஆட்படுத்தும் இவை போன்ற பிற முறைகளில் செய்ய கட்டாயப்படுத்தினால் அல்லது ஆசை காட்டி கவர்ந்திழுத்தால்.
7.  தாழ்த்தப்பட்ட அல்லது பழங்குடியின நபரை, குறிப்பிட்ட வேட்பாளருக்கு வாக்களிக்குமாறு அல்லது வாக்களிக்காதமாறு அல்லது சட்டத்தில் வகை செய்யப் பட்டுள்ள வாறு அல்லாமல் பிற முறைகளில் வாக்களிக்குமாறு கட்டாயப் படுத்தினால் அல்லது மிரட்டினால்.
8.   தாழ்த்தப்பட்ட அல்லது பழங்குடியினருக்கு எதிராக, பொய்யான, தீயநோக்குடைய,அல்லது தொந்தரவு தரும் படியான உரிமையியல் அல்லது குற்றவியல் அல்லது பிற சட்டமுறை நடவடிக்கைளை தொடுத்தால்.
9.  பொது ஊழியர் எவரிடமும் பொய்யான அல்லது அற்பமான தகவல் எதனையும் கொடுத்து தாழ்த்தப்பட்ட அல்லது பழங்குடியின நபருக்கு தீங்கு அல்லது தொல்லை கொடுக்கும் வகையில், அந்த பொது ஊழியர் தன் சட்ட முறை யான அதி காரத்தை பயன்படுத்துமாறு செய்தால்.
10.  தாழ்த்தப்பட்ட அல்லிலது பழங்குடியினரை பொது இடத்தில் இழிவுபடுதும் கருத்துடன் வேண்டுமென்றே அவ மானப் படுத்தினால் அல்லது அச்சுறுத்தினால்.
11.  தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின பெண்ணை மானக்கேடு அல்லது அவமதிக்கும் நோக்குடன் அவரை தாக்க முயன்றால் அல்லது தாக்கினால்.
12.  தான் வகிக்கும் பதவி, பொறுப்பு ஆகியவற்றால் தாழ்த்தப் பட்ட அல்லது பழங்குடியின பெண்ணை ஆதிக்கம் செய்து அதனடிப்படையில் அப்பெண்ணை பாலியல் ரீதியாக அடிமைப்படுத்தினால் அல்லது பயன்படுத்தினால்.
13. தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்கள் வழக்கமாக பயன்படுத்தும் நீருற்று,நீர்தேக்கம் அல்லது வேறு எந்த நீர் ஆதாரங்களின் நீரை, அதன் வழக்கமாக பயன்படுதும் நோக்கத் திறகு ஏற்றதாக அல்லாமல் கெடுத்தால் அல்லது மாசுபடுத்தினால்.
14.  தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் ஒருவர் பொது மக்கள் கூடும் இடத்திற்கு செல்லும் பாதையை பயன்படுத்து வதற்கான வழக்க உரிமையை மறுத்தால் அல்லது பிற பொது மக்களோ, அவர்களில் ஒரு பிரிவினரோ உரிமையுடன் பயன்படுத்தும் அல்லது சென்ற வரும் பொதுமக்கள் கூடும் இடத்தை அவர் பயன்படுத்துவதையோ அந்த இடத்திற்கு சென்று வருவதையோ தடை செய்யும் வகையில் அவரை தடுத்து நிறுத்தி வைப்பதோ.
15.  தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் ஒருவரை அவரது வீடு, ஊர் அல்லது குடியிருக்கும் இடத்தை விட்டு வெளியேறுமாறு கட்டாயப்படுத்தினால் அல்லது அவ்வாறு வெளியேற தூண்டினால். அவர் 6 மாதத்திற்கு குறையாத, 5 ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படும் கால அளவிற்கு சிறை தண்டனையும் அபராதமும் விதித்து தண்டிக்கப்படுவார்.
2. தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினரை சார்ந்திராத ஒருவர்…
1.    தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் எவரையும் நடப்ப சட்டத்தின்படி மரண தண்டனைக்குரிய குற்றச் செயலுக்காக குற்ற தீர்ப்புக்குள்ளாகும் கருத்துடனோ, அவர் அத்தகைய தீர்ப்புக்கு உள்ளாவார் எனத் தெரிந்தும் பொய் சாட்சி அளித்தால் அல்லது புனைந்தால் அவர் ஆயுள் தண்டனையும், அபராதமும் விதித்து தண்டிக்கப்படுவார் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் ஒருவர் குற்றமற்ற வராயிருந்து அத்தகைய பொய்சான்று, புனைசான்று அளிக்கப்பட்டதன் விளைவாக குற்றதீர்ப்புக்கு ஆளாக்கப் பட்டு,தூக்கிலிடப்படுவராயின் அந்த பொய்சான்று சொன்ன நபர் மரணதண்டனை விதித்து தண்டிக்கப்படுவார்.
2.   தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் எவரையும் மரண தண்டனையில்லாத ஆனால் ஓராண்டிற்கு அதற்கு மேற்பட்ட கால அளவிற்கு சிறை தண்டனை விதித்து தண்டிக்கப்படுவதற்கு குற்ற செயல் ஒன்றை இழைத்ததாக குற்ற தீர்ப்புக்கு உள்ளாகும் கருத்துடனோ, அவர் அத்தகைய குற்ற தீர்ப்புக்கு உள்ளாகக்கூடும் எனத் தெரிந்தோ,பொய் சான்று அளித்தால் அவர் 6 மாத காலத்திற்கு குறையாமல், 7 ஆண்டு அல்லது அதற்கு மேற்பட்டு நீட்டிக்கலாகும் கால அளவிற்கு சிறை தண்டனையும் அபராதமும் விதித்து தண்டிக்கப்படுவார்.
3. தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர்
ஒருவருக்கு சொந்தமான சொத்து எதற்கும் தீ அல்லது வெடிபொருள் எதனாலும் சேதம் விளைவிக்கும் கருத்து டனோ அவ்வாறு சேதம் விளைவிக்கும் என தெரிந்தே சொத் தழிப்பு செய்தால் அவர் 6 மாதத்திற்கு குறையாததாய் ஓராண்டு வரை நீட்டிக்கப்படும் கால அளவிற்கு சிறை தண்டனையும் அபராதமும் விதித்து தண்டிக்கப்படுவார்.
4. தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினரால் வழிபாட்டி டமாகவோ, வாழுமிடமாகவோ உடைமை காப்பிடமாகவோ, வழக்கமாக பயன்படுத்துகின்ற கட்டிடம் எதற்கும் தீயினால் அல்லது வெடிபொருள் எதனாலும் அழிவு எற்படுத்தும் கருத்துடன் அல்லது அழிவு ஏற்படக்கூடும் என தெரிந்தே சொத்தழிப்பு செய்தால் அவர் ஆயுள் தண்டனையும், அபராதமும் விதித்து தண்டிக்கப்படுவார்.
5. தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் ஒருவருக்கு அல்லது அவருடைய சொத்திற்கு,அச்சொத்து தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு சொந்தமானது என்பதற்காக இந்திய தண்டனை தொகுப்பு சட்டத்தின்படி 10 ஆண்டு அதற்கு மேற் பட்ட கால அளவிற்கு சிறை தண்டனை விதித்து தண்டிக்கப் படதக்க குற்றச் செயல் எதனையும் இழைத்தால் அவர் ஆயுள் தண்டனையும், அபராதமும் விதித்து தண்டிக்கப்படுவார்.
6. இந்த அத்தியாயத்தின் கீழ்வரும் குற்றச் செயல் ஒன்று இழைக்கப்பட்டுள்ளது என்பதை தெரிந்தோ, அவ்வாறு இழைக்கப்பட்டுள்ளது என நம்புவதற்கு காரணம் கொண்டிருக்கும் நிலையிலோ சட்டப்படியான தண்டனையி லிருந்து குற்றவாளியை காப்பதற்கான கருத்துடன் அக்குற்றச் செயல் இழைக்கப்பட்டதற் கான சான்றை மறைக்கச் செய்தால், அல்லது அத்தகைய கருத்துடன், அக்குற்றச் செயல் பொறுத்த தகவல் பொய்யானது என்பதை தெரிந்தோ, பொய்யானது என நம்பியோ அத்தகவலை கொடுத்தால் அவர் அந்தக் குற்றச் செயலுக்கான தண்டனை விதித்து தண்டிக்கப்படுவார்.
7. அரசு ஊழியராக இருந்து இப்பிரிவின்படி குற்றமாகிய ஒன்றை செய்வாரானால், அவர் ஓராண்டிற்கு குறையாகதாய் அக் குற்றச் செயலுக்கான தண்டனையின் அளவிற்கு நீட்டிக்கப்படும் கால அளவிற்கு சிறை தண்டனை விதித்து தண்டிக்கப்படுவார்.
4. கடமைகளை புறக்கணித்தால் அளிக்கப்படும் தண்டனை
அரசு ஊழியர் ஒருவர் தாழ்த்தப்பட்ட அல்லது பழங்குடியினரு�ய் இல்லாமல் இருந்து,இச்சட்டத்தின்படி தான் ஆற்ற வேண்டிய கடமைகளை வேண்டுமென்றே புறக்கணிப்பாரானால் அவருக்கு 6 மாதத்திற்கு குறையாத, ஓராண்டு வரையிலான சிறைத் தண்டனை விதிக்கலாம்.
5. தொடர் குற்றங்களுக்கு கூடுதல் தண்டனை
இந்த அத்தியாயத்தின் படி, குற்றம் புரிந்ததற்காக ஏற்கனவே தண்டிக்கப்பட்ட ஒருவர் இரண்டாவது முறையோ அதற்கு பிறகு மீண்டும் இவ்வகை குற்றம் புரிந்ததாக தண்டிக்கப்படுவாரெனில் அவருக்கு ஓராண்டிற்கு குறையாத, அக்குற்றத்துக்கென குறிக்கப் பட்டுள்ள தண்டனை காலம் வரையிலான சிறைத் தண்டனை விதிக்கலாம்.
6. இந்திய தண்டனை சட்ட விதிகள் சிலவற்றின் பொருந்துகை.
இச்சட்டத்தின் ஏனைய விதிகளுக்கு உட்பட்டு இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு. 34.அம்ததியாயம் (3), அத்தியாம்(4), அத்தியாம் (5), அத்தியாம் (6)ஆ பிரிவு. 149. மற்றும் இந்திய தண்டனை சட்டம் (45/1800)ன் அத்தியாயம் (23) ஆகியவற்றின் விதிகள் இந்திய தண்டனை சட்டத்தின் நோக்கங்களுக்கு பொருந்தும்.
7. குறிப்பிட்ட நபர்களுடைய உடைமைகள் பறிமுதல்
1. இச்சட்டத்தின், இந்த அத்தியாயத்தின் படி குற்றமாகிய ஒன்றை செய்ததற்காக ஒருவர் தண்டிக்கப்படும் போது சிறப்பு நீதிமன்றம் தண்டனை விதிப்பதுடன், அக் குற்றத்தை புரிவதற்கு பயன்படுத்தப்பட்டுள்ள அவரது உடைமை, அசையும், அசையாச் சொத்து இவையிரண்டில் எதுவானாலும் அல்லது இரண்டுமே பறிமுதல் செய்யப்பட்டு அரசிடம் சேர்க்கப்படுமாறு எழுத்து மூலம் ஆணையிடலாம்.
2. இந்த அத்தியாயத்தின் படி குற்றம் செய்ததற்காக ஒருவர் குற்றச்சாட்டிற்கு ஆளாகும்போது,அவரது வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றமானது அவரது உடைமைகள் யாவற்றையும் அல்லது அசையும், அசையா சொத்து இவையிரண்டில் எதுவானாலும் அல்லது இரண்டுமே விசாரணை முடியும்வரை கைப்பற்றி வைத்திருக்கும்படி ஆணையிடலாம். இந்த விசாரணையில் குற்றசாட்டு நிருபணமாகி குற்றவாளி தண்டிக்கப்படுவாரானால், மேற்கூறியபடி கைப்பற்றப்பட்ட உடைமையானது இந்த அத்தியாயப்படி விதிக்கப்படக்கூடிய அபராதத்தை வசூலிக்க தேவையான பறிமுதலுக்குரியதாகும்.
8. குற்றங்கள் தொடர்பான அனுமானம்
இந்த அத்தியாயத்தின் படி குற்றத்துக்காக தொடரப்படும் வழக்கில்.
அ. எதிரியானவர் இந்த அத்தியாயத்தின்படி குற்றம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள அல்லது நியாயமாக சந்தேகப்படுகிற ஒருவருக்கு நிதியுதவி ஏதும் செய்தார் என்று நிரூபிக்கப்படுமானால் அவர் குற்றத்துக்கு உடந்தையானவர் - அப்படியில்லை என்று நிரூபிக்கப்படாத வரை சிறப்பு நீதிமன்றம் அனுமானம் செய்து கொள்ளும்.
ஆ. சிலர் ஒரு குழுவாக சேர்ந்து குற்றம் செய்தது இந்த அத்தியாயப்படி நிரூபிக்கப்படுமானால்,மேலும் நிலம் தொடர்பாகவோ வேறு விஷயம் தொடர்பாகவோ இருந்து வந்ததகராற்றின் தொடர்ச்சியா கஅக்குற்றம் செய்யப்ட்டது என்பது நிரூபிக்கபடுமானால் பொ நோகக்த்தை நிறைவேற்றி கொள்வதற்காக அல்லது பொதுக் குறிக்கோளை அடைவதற்காக அக்குற்றம் புரியப்பட்டதாக அனுமானம் செய்து கொள்ளப்படும்.
9. அதிகாரம் அளித்தல்
1.இச்சட்டத்தின் இதர விதிகளில், குற்ற விசாரணை முறை சட்டத்தில் என்ன கூறப்பட்டிருந்தாலும், மாநில அரசானது அவசியம் அல்லது தகுதியானது எனக் கருதினால்.
அ. இச்சட்டத்தின்படி குற்றமாகிய ஒன்றை தடுப்பற்காகவோ சமாளிப்பதற்காகவோ அல்லது
ஆ. இச்சட்டத்தின்படியான ஒரு வழக்கிற்காகவோ, வழக்குகளின் ஒருவகை அல்லது அல்லது தொகுதிக்காகவோ, இரு மாவட்டம் அல்லது மாவட்டத்தின்பகுதியில் மாநில அரசின் எந்தவொரு அதிகாரிக்கும் அந்தமாவட்டம் அல்லது மாவட்டத்தின் பகுதியில் குற்ற விசாரணை முறை சட்டத்தின் படி காவல்துறை அதிகாரிக்குரியவையான அதிகாரங்களை அதிகாரப்பூர்வ அரசிதழில் அறிவிப்பு செய்வதன் மூலம் வழங்கலாம். மேலும் குறிப்பிட்ட வழக்கிற்கெனவோ வழக்குக ளின் வகை அல்லது தொகுதிககெனவோ வழங்கலாம். குறிப் பாக, கைது செய்வதற்கும், புலன் விசாரணை செய்வதற்கும், வழக்கு தொடுப்பதற்குமான அதிகாரங்களை வழங்கலாம்.
2. இச்சட்டத்தின் வழிவகைகளையும், இதன்படி வகுக்கப்படும் விதி, திட்டம் அல்லது ஆணைகளையும் செயலாக்குவதில் காவல்துறை அதிகாரிகள் யாவரும் ஏனைய அரசு அதிகாரிகள் யாவரும் உட்பிரிவு (1) ல் குறிப்பிட்ட அதிகாரிக்கு உதவுவார்கள்.
3. குற்ற நடைமுறை சட்டத்தின் விதிகள் ஒரு அதிகாரி உட்பிரிவு (1)ன்படி அதிகாரங்கள் செலுத்துவதற்கு உரியவாறு பொருந்தும்.
இயல் : 3. வெளியேற்றம்
10. குற்றம் புரியக்கூடும் என ஒருவரை வெளியேற்றுதல் :
1. அரசியலமைப்பு விதி 244ல் குறிப்பிடப்பட்டுள்ளபடி தாழ்த்தப்பட்டோர் அல்லது பழங்குடியினர் வாழிடங்கள் என்பவற்றில் அடங்கும் ஒரு பகுதியில் ஒருவர் இச்சட்டத்தின் அத்தியாயம் 2ன்படி குற்றம் ஒன்றை செய்யக்கூடும் என புகார் வாயிலாகவோ காவல் துறை அறிக்கை வாயிலாகவோ அறிந்து, தனி நீதி மன்றமும் (சிறப்பு மன்றமும்) அவ்வாறு கருதினால், அவரை அப்பகுதியின் எல்லைக்கு அப்பால் போகும்படி எழுத்து வடிவிலான ஆணை மூலம் அந்நீதிமன்றம் கட்டளையிடலாம், அவர் எந்த வழியாக வெளியேற வேண்டும் என்பதும் எச்சமயத்திற்குள்�விளயேற வேண்டும் என்பதும் அந்த ஆணையில் குறிக்கப்படும். குறிப்பிட்ட காலத்திற்கு அவர் அப்பகுதிக்கு திரும்ப வராமலிருக்க வேண்டும் என்பதும் சிறப்பு நீதிமன்றம் கட்டளையிடலாம்.எவ்வளவு காலத்திற்கு என்பது ஆணையில் குறிக்கப்படும். ஆனால் இக்கால அளவு இரண்டாண்டுகளுக்கு மேல் இருக்ககூடாது.
2. உட்பிரிவு (1)ன்படி ஆணை பிறப்பிக்கும் போதே தனி நீதிமன்றமானது அந்த உட்பிரிவின்படி வெளியேறுமாறு கட்டளையிடப் பெற்றவருக்கு இவ்விதம் ஆணையிட்டதற் கான குறிப்புகளை வெளிப்படுத்தும்.
3. யாருக்கு எதிராக உட்பிரிவு (1)ன் படி ஆணை பிறப்பிக்கப்பட்டள்ளதோ, அவரோ அல்லது அவர் சார்பில் வேறு ஒருவரோ ஆணையிடப்பட்ட தேதியிலிருந்து அப்பகுதியிலிருந்து வெளியே அனுப்பி வைப்பதற்கு ஆவணஞ் செய்யலாம். எவ்விடத்துக்கு என்பது அந்நீதிமன்றத்தால் குறிக்கப்படும். சிறப்பு நீதிமன்றம் அந்த ஆணையை நீக்கவோ திருத்தவோ செய்யலாம். இப்படி செய்வதற்கான காரணங் களை ஏட்டில் பதிவு செய்யவேண்டும். ஆணை பிறப்பிக்கப் பட்ட தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் இவற்றை செய்ய வேண்டும்.
11. பகுதியை விட்டு வெளியேறாமல் இருத்தல், வெளியேறிய பிறகு அப்பகுதியில் நுழைதல் தொடர்பான சட்டமுறைகள்.
1. ஒரு பகுதியை விட்டு வெளியேறுமாறு கட்டளையிடப் பெற்றுள்ள ஒருவர் :
அ. கட்டளையை ஏற்று வெளியேறத் தவறினால் அல்லது
ஆ. வெளியேறியப் பிறகு ஆணையில் குறிக்கப்பட்ட காலத்திற்குள் அப்பகுதியில் நுழைந்தால்(உட்பிரிவு 2) ன்படி சிறப்பு நீதிமன்றத்திடம் எழுத்து மூலமாக அனுமதி பெறாமலே இப்படி செய்தால், சிறப்பு நீதிமன்றமானது அவரை கைது செய்து காவலில் வைக்கலாம்.
2. ஒரு பகுதியை விட்டு வெளியேறுமாறு பிரிவு 10ன்படி கட்டளையிடப்பட்ட ஒருவர் தற்காலிகமாகவும், நிபந்தனைக் குட்பட்டும் குறிப்பிட்ட காலத்திற்கு அப்பகுதிக்கு திரும்பி வருவதற்கு சிறப்பு நீதிமன்றமானது எழுத்து வடிவிலான ஆணைமூலம் அனுமதி வழங்கலாம் எவ்வளவு காலத்திற்கு என்பதும், எந்த நிபந்தனைக்கு உட்பட்டு என்பதும் அந்த ஆணையில் குறிக்கப்படும். விதிக்கப்படும் நிபந்தனைகளை, தகுந்தவாறு கடைப்பிடிகக் அவர் பிணையத்துடனோ, பிணையம் இன்றியோ பத்திரத்தில் ஒப்பமிட வைக்க வேண்டும் என சிறப்பு நீதிமன்றம் கோரலாம்.
3. இவ்வாறான அனுமதியை சிறப்பு நீதிமன்றம் எப்போது வேண்டுமானாலும் விலக்கி கொள்ளலாம்.
4. ஒரு பகுதியிலிருந்து வெளியேறுமாறு கட்டளையிட்ட ஒருவர் மேற்குறிப்பிட்டபடி அனுமதி பெற்று அப்பகுதிக்கு திரும்புவாரெனில் விதிக்கப்பட்ட நிபந்தனைகளை அவர் அனுசரித்தல் வேண்டும். தற்காலிகமாக திரும்பி வந்ததற்கு அனுமதி காலம் முடிந்தவுடன் அப்பகுதியை விட்டு வெளியேற வேண்டும். பிரிவு-10ன் படி குறிக்கப்பெற்ற காலத்தில் எஞ்சிய பகுதி முடிவதற்குள் புதிய அனுமதி பெறாமல் அப்பகுதிக்கு செல்லக் கூடாது.
5. ஒருவர் தமக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளை அனுசரிக்க தவறினாலோ, நிபந்தனையின்படி வெளியேறத் தவறினாலோ, வெளியேறியபின் புதிய அனுமதி பெறாமல் அப்பகுதிக்குள் நுழைந்தாலோ அங்கு திரும்பி வந்தாலோ சிறப்பு நீதிமன்றமானது அவரை கைது செய்து காவல் துறையின் பொறுப்பில் அப்பகுதிக்கு வெளியே ஓரிடத்திற்கு அனுப்பி வைப்பதற்கு ஆவணஞ் செய்யலாம். எவ்விடம் என்பது அந்நீதிமன்றத்தால் குறிக்கப்படும்.
12. பிரிவு. 10ன் படி கட்டளையிட பெற்றவர்களை புகைப்பட மெடுத்தல், அளவெடுத்தல்,மற்றும் பிற.
1. பிரிவ 10ன் படி ஒரு பகுதியை விட்டு வெளியேறுமாறு கட்டளையிடப்பட்ட ஒவ்வொர நபரும்,சிறப்பு நீதிமன்றம் வேண்டினால் ஒரு காவல்துறை அதிகாரி அளவெடுக்கவும், புகைப்படம் எடுக்கவும் அனுமதிக்க வேண்டும்.
2. உட்பிரிவு (1)ல் குறிப்பிடப்படுவோரில் யாரேனும் அளவெடுக்கவோ, புகைப்படம் எடுக்கவோ அனுமதிக்குமாறு கோருகையில், அளவெடுக்கவோ, புகைப்படம் எடுக்கவோ எதிர்ப்பு காட்டினால் அல்லது அனுமதிக்க மறுத்தால், அவரை அளவெடுக்கவும், புகைப்படம் எடுக்கவும் செய்யப்படும் எல்லா வழிமுறைகளும் சட்டபூர்வமானதே ஆகும்.
3. உட்பிரிவு (2)ன் படி அளவெடுக்கவோ, புகைப்படம் எடுக்கவோ எதிர்ப்பு காட்டுதல் அல்லது அனுமதிக்க மறுத்தல் என்பது இந்திய தண்டனைச் சட்டம் (45/1860) பிரிவு 186ன்படி குற்றமாக கருதப்படும்.
4. பிரிவு 10ன்படி பிறப்பிக்கப்பட்ட ஓர் ஆணையை நீக்கப்படும்போது உட்பிரிவு (2)ன்படி எடுத்த அளவுகள், புகைப்படங்கள் (மறுநிலைபடிவங்கள் (சங்ஞ்ஹற்ண்ஸ்ங்ள்) உட்பட எல்லாம் அழிக்கப்படும் அல்லது அந்த நபரிடம் ஒப்படைக்கப் படும்.
13. பிரிவு 10ன்படி பிறப்பிக்கப்பட்ட ஆணையை ஏற்று நடக்காவிடில் வழங்கப்படும் தண்டனை.
பிரிவு-10ன் படி சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த ஆணையை எவராவது மீறினால் அவருக்கு ஓராண்டு வரையிலான சிறைத் தண்டனையும் அத்துடன் அபராதமும் வதிக்கலாம்.
இயல். 4. சிறப்பு நீதிமன்றங்கள்
14. சிறப்பு நீதிமன்றங்கள்
விரைவான வழக்கு விசாரணைக்கு வகை செய்வதற்காக மைய அரசு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் இசைவைப் பெற்று ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு அமர்வு நீதிமன்றத்தை,இச்சட்டம் குறிப்பிடும் குற்றங்களை விசாரிப்பதற்கான சிறப்பு நீதிமன்றமாக, அதிகாரபூர்வ அரசிதழில் அறிவிப்பு செய்வதன் மூலம் குறிப்பிடலாம்.
15. சிறப்பு அரசு வழக்குரைஞர்.
ஒவ்வொரு சிறப்பு நீதிமன்றத்திற்கும், மாநில அரசு அந்நீதிமன்றத்தில் வழக்குகளை நடத்துவதற்காக (தனி) சிறப்பு அரசு வழக்குரைஞராக ஒரு அரசு வழக்குரைஞரை குறிப்பிடலாம்.அல்லது 7 ஆண்டுகளுக்கு குறையாமல் வழக்கறிஞராக பணியாற்றி வரும் வழக்கறிஞர் ஒருவரை அவ்வாறு நியமனம் செய்யலாம்.
இயல் 5. மற்றவைகள்
16. கூட்டு அபராதம் விதிக்க மாநில அரசுக்கு அதிகாரம்.
இச்சட்டத்தின்படி கூட்டு அபராதம் விதிக்கவும், வசூலிக்கவும், மற்றவைகளுக்கும் 1955, ஆண்டின் குடியுரிமை கள் பாதுகாப்பு சட்டத்தின் வழிவகைகள் உரியவாறு பொருந்தும்.
17. சட்டம் ஒழுங்கு இயந்திரம் எடுக்க வேண்டிய முன்னெச்ரிக்கை நடவடிக்கைகள்
1. மாவட்ட நிதிபதி அல்லது உட்கோட்ட நீதிபதி அல்லது வேறு ஒரு நிரவாக பணியாளர் அல்லது காவல்துறை கண்காணிப்பாளரின் தகுதிக்கு குறயை�த ஒரு காவல்துறை அதிகாரிக்கு தன்னுடைய வட்டார எல்லைக்குட்பட்ட ஏதேனும் ஒரு இடத்தில் வாழுகின்ற அல்லது அவ்விடத்துக்கு அடிக்கடி வந்து போகின்ற தாழ்த்தப்பட்ட அல்லது பழங்குடியினத்தை சேராத ஒருவர் அல்லது வேறு சிலர் இச்சட்டத்தின்படி குற்றம் செய்யக்கூடும் என்றோ அல்லது அவ்வாறு குற்றம் செய்யப்போவதாய் அச்சுறுத்தியிருப்பதாக தகவல் கிடைக்கும்போது அந்த அதிகாரி தாம் அவசியமென கருதக்கூடிய முறையில் விசாரணை செய்தபிறகு, இத் தகவலை நம்புவதற்கு காரணமிருப்பதாக தீர்மானிப்பாரெனில், மேல் நடவடிக்கை எடுப்பதற்கு தகுந்தகாரணம் இருப்பதாகவும் கருதுவாரெனில், அப்பகுதியை வன்கொடுமைகள் நடை பெறும் பகுதியாக அறிவித்து அமைதியையும், நன்டத்தையும் பேணுவதற்கும், பொது ஒழுங்கையும் அமைதியையும் காப்பதற்கும் அவசியமான நடவடிக்கை எடுக்கலாம்.
2. குற்றவியல் விசாரணை முறை சட்டத்தின் அத்தியாயங்கள் 8,9,11 ஆகியவற்றின் வழிவகைகள் உட்பிரிவு (1)ன் நோக்கங்களுக்கும் உரியவாறு பொருந்தும்.
3. உட்பிரிவு (1)ல் குறிப்பிடப்படும் அதிகாரிகள் வன்கொடுமைகளை தடுப்பதற்கும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர்களுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு எவ்விதமான நடவடிக்கைகளை எடுக்கலாம் என்பதைக் குறிப்பிட்டு, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட திட்டங்களை மாநில அரசு அதிகாரபூர்வ அரசிதழில் அறிவிப்பு செய்வதன் மூலம் வகுத்தளிக்கலாம்.
18. இச்சட்டத்தின் படி குற்றம் செய்தவர்களுக்கு குற்றவியல் விசாரணை முறை சட்டத்தின் 438வது பிரிவு பொருந்தாமை.
இச்சட்டத்தின் படி குற்றம் செய்த யாரேனும் ஒருவர் கைது செய்யப்பட்டது தொடர்பான எந்த வழக்கிற்கும் குற்றவியல் விசாரணைமுறை சட்டத்தின் பிரிவு 438ல் கூறியுள்ள எதுவும் பொருந்தாது.
19. இச்சட்டத்தின்படி, குற்றம் செய்து குற்றவாளி என்று தீர்ப்பளிக்கபட்டவர்களுக்கு குற்றவியல் விசாரணை முறை சட்டத்தின் 360 பிரிவும், குற்றவாளிகள் நன்னடத்தை சட்டமும் பொருந்தாமை.
இச்சட்டத்தின்படி, குற்றம் செய்து குற்றவாளி என்று தீர்ப்பளிக்கபடுகிற ஒருவர் 18 வயதுக்கு மேற்பட்டவராக இருந்தால், குற்றவியல் விசாரணைமுறை சட்டம் பிரிவு 360ன் வழிவகைகளும்1958ம் ஆண்டின் குற்றவாளிகள் நன்னடத்தை சட்டத்தின் வழிவகைகளும் பொருந்தாது.
20. இச்சட்டம் இதர சட்டங்களுக்கு கட்டுப்படாமை
இச்சட்டம் வேறுவிதமாக வகை செய்யப்பட்டாலன்றி இச்சட்டத்தின் வழிவகைகள் அச்சமயம் அமலில் இருக்கிற போது எந்தச் சட்டத்திலும் இடம் பெற்றுள்ள வழிவகைகள் எதற்காவது அல்லது ஒப்பந்தம் எதற்காவது முரணாய் இருந்தாலும் இவையே (இச்சட்டத்தின் செயல்களாகும்.
21. இச்சட்டத்தை பயனுள்ள முறையில் நடைமுறைப்படுத்துவது அரசின் கடமை.
1. இச்சட்டத்தை பயனுள்ள முறையில் நடைமுறைப் படுத்துவதற்கு மாநில அரசு, இதற்காக மத்திய அரசு வகுக்கக் கூடிய விதிகளுக்கு உட்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளும்.
2. மேற்சொன்ன வழிமுறைகளில் பொது தன்மைக்கு பங்கம் ஏற்படாமல், குறிப்பாக பின்வரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம்.
அ. வன்கொடுமைகளுக்கு ஆளானவர்களுக்கு நியாயம் கிடைப்பதற்காக, அவர்களுக்கு சட்ட உதவி உள்ளிட்ட போதுமான வசதிகள் கிடைக்க வழி செய்தல்.
ஆ. இச்சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றங்கள் தொடர்பான புலன் விசாரணையின் போதும்,வழக்கு விசாரணையின் போதும் வன்கொடுமைகளால் பாதிக்கப் பட்டவர்கள் உள்ளிட்ட சாட்சிகளுக்கு பயணச் செலவும், பராமரிப்பு செலவும் கிடைக்க வகை செய்தல்.
இ. வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்டோரின் பொருளாதார சமூக மறுவாழ்விற்கு வழி செய்தல்.
17. இச்சட்டத்தின் விதிமுறைகளை மீறியதற்காக வழக்கு தொடுப்பதற்கு அல்லுது இவ்வகை வழக்குகளை மேற்பார் வையிடுவதற்கு அதிகாரிகளை நியமித்தல்.
உ. இந்நடவடிக்கைகளை உருவாக்கவோ அல்லது நடைமுறைப்படுத்தவோ மாநில அரசுக்கு உதவும் பொருட்டு பொருத்தமான நிலைகளில் குழுக்கள் அமைத்தல்.
ஊ. இச்சட்டத்தின் விதிமுறைகளை இன்னும் சிறந்த முறையில் செயலாக்குவதற்கு ஆலோசனை செய்வதை நோக்கமாகக் கொண்டு, இந்த விதிமுறைகள் இயங்கும் விதம் குறித்து குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை ஆய்வு செய்ய வகை செய்தல்.
எ. தாழ்த்தப்பட்டவர் மற்றும் பழங்குடியினர் வன் கொடுமைகளுக்கு ஆளாகக் கூடிய பகுதிகளை இனங்கண்டு அவர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.
3. உட்பிரிவு (1)ன் படி மாநில அரசுகள் எடுக்கும் நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்கு அவசியமாகக் கருதுவதை மைய அரசு செய்யும்.
4. மைய அரசும், மாநில அரசுகளும் இப்பிரிவின் விதிமுறைகளுக்கு ஏற்ப எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆண்டுதோறும் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் அறிக்கை சமர்பிக்கும்.
22. நல்லெண்ணத்துடன் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பாதுகாப்பு.
இச்சட்டத்தின் படி நல்லெண்ணத்தோடு செய்யப்படு கின்ற அல்லது செய்ய நினைக்கின்ற எந்த ஒரு நடவடிக்கைகக் காகவும், மைய அரசுக்கு எதிராகவோ அல்லது மாநில அரசுக்கு எதிராகவோ அரசாங்க அதிகாரி அல்லது அதிகார அமைப்புக்கு எதிராகவோ உரிமையியல் வழக்கு, உரிமைகள் வழக்கு அல்லது வேறு எந்த சட்ட நடவடிக்கைகளும் தொடர முடியாது.
23. விதிகள் வகுக்கும் அதிகாரம்.
1. மைய அரசு அதிகாரபூர்வ அரசிதழில் அறிவிப்பு செய்வதன் மூலம் இச்சட்டத்தின் நோக்கங்களை நிறைவேற்று வதற்கான விதிகளை வகுக்கலாம்.
2. இச்சட்டத்தின்படி வகுக்கப்படும் ஒவ்வொரு விதியையும் அதன் தொடர்ச்சியாக, எவ்வளவு விரைவில் இயலுமோ அவ்வளவு விரைவில் பாராளுமன்ற அவைகள் ஒவ்வொன்றிலும் சமர்பிக்கப்பட வேண்டும். பாராளுமன்றம் மொத்தம் 30 நாட்கள் அமர்வில் இருக்கும் போது இது நடைபெறும். இந்த 30 நாட்களும் ஒரே கூட்டத் தொடரில் முடிவதாய் இருக்கலாம். இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அடுத்தடுத்த கூட்டத் தொடர்களில் முடிவுறுவதாகவும் இருக்கலாம்.ஒரு விதி இவ்வாறு சமர்ப்பிக்கப்படுகின்ற கூட்டத்தொடருக்கு அல்லது அடுத்தடுத்தக் கூட்டத் தொடர் களுக்கு உடனே அடுத்து வரும் கூட்டத்தொடர் காலாவதி ஆவதற்கு முன்னால் இரு அவைகளும் அவ்விதியில் ஏதேனும் திருத்தம் செய்வதில் உடன்பட்டால் அதன்பிறகு அவ்விதம் திருத்திய வடிவில் செயலுக்கு வரும். இரு அவைகளுக்கும் அவ்விதியே கூடாது என்று உடன்பட்டால் அது செயலுக்கு வராது. ஆனால் இந்த திருத்தமோ நீக்கமோ அதற்கு முன்னால் அவ்விதியின் படி நடைபெற்றவற்றின் செல்லுபடி தன்மையை பாதிக்காது.
3.13.2. தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர்
(வன்கொடுமைகள் தடுப்பு) விதிகள். 1995
(அறிவிப்பு, நலவாழ்வுத்துறை அமைச்சகம், புதுடில்லி, 31.3.1995) ஏ.ந.த. 316 (ஊ) தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமை தடுப்புச்) சட்டம் 1989. (33/1989) பிரிவு 23ன் உட்பிரிவு(1)ல் அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தை அடிப்படை யாக கொண்டு மைய அரசு கீழ்காணும் விதிகளை உருவாக்கி யுள்ளது அவை பின்வருமாறு.
1. குறுந்தலைப்பு மற்றும் தொடக்கம்.
அ. இவ்விதிகளை தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி யினர் வன்கொடுமை தடுப்பு விதிகள் 1995என்று அழைக்கலாம்.
ஆ. அதிகாரபூர்வ அரசிதழில் வெளியிடப்படும் தேதியன்று செயலாற்றல் பெறும்.
2. விளக்கங்கள்
இவ்விதிகளின், சூழலின் தேவை வேறு வகையில் இருந்தால் அன்றி.
அ. “சட்டம்” என்பது தாழ்த்தப்பட்டவர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989 (33/1989) என்று பொருள்படும்.
ஆ. “சார்ந்திருப்பவர்கள்” என்பவர்கள், உறவுரீதியாக வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களின் மனைவி, குழந்தைகள், திருமணமானவர்கள், திருமண மாகாதவர்கள், சார்ந்திருப் பவர்களின் பெற்றோர், விதவை தமக்கையர் வன்கொடுமையில் இறந்தவர்களின் குழந்தைகள் என்று பொருள்படும்.
இ. அடையாளம் காணப்பட்ட பகுதி என்பது மாநில அரசு குறிப்பிட்ட பகுதிகளில் வன்கொடுமை நிகழ வாய்ப்புள்ளது என்று நம்புவதற்குரிய காரணங்கள் அல்லது இச்சட்டத்தின் கீழ் மீண்டும் குற்றம் நிகழும் என்று சந்தேகப்படுதல் இருந்தால் அப்பகுதி வன்கொடுமை நிகழும் பகுதி என்று பொருள்படும்.
17. “அரசு சாரா அமைப்பு” என்பது (21/1866)ம் ஆண்டு சங்கங்களின் பதிவு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு தாழ்த் தப்பட்ட மற்றும் பழங்குடியினரின் நலவாழ்வு செயல்பாடுக ளின் ஈடுபட்டுள்ள தொண்டு நிறுவனங்கள் அல்லது வேறு சட்டங்களின் மூலம் பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள் அல்லது குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் அமலில் உள்ள அமைப்புகள் என்று பொருள்படும்.
உ. ”அட்டவணை” என்பது இந்த விதிமுறைகளில் இணைக்கப்பட்டள்ள அட்டவணை என்று பொருள்படும்.
ஊ. ”பிரிவு” என்பது சட்டத்தின் பிரிவு என்று பொருள்படும்.
எ. மாநில அரசு என்பது யூனியன் பிரதேசத்திற்கு அரசமைப்பின் உறுப்பு 239ன் கீழ் குடியரசு தலைவர் நியமனம் செய்த நிர்வாகி என்று பொருள்படும்.
ஏ. இச்சட்டத்தில் பயன்படுத்தப்பட்டவை என்றாலும் சில சொற்களும், தொடர்களுக்குமான இலக்கண விளக்கங் கள் இங்கு தரப்படவில்லை. ஆனால் இச்சட்டத்தில் என்ன பொருளில் கையாளப்பட்டதோ அதே பொருளிலேயே இங்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
3. முன்னெச்சரிக்கை மற்றும் முன் தடுப்பு நடவடிக்கைகள்
1. தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் மீதான வன் கொடுமைகளை தடுக்கும் நோக்கில், மாநில அரசு கீழ்கண்ட வற்றை பின்பற்ற வேண்டும்.
அ. வன்கொடுமைகள் நிகழும் என நம்பும் இடங்களையும் அல்லது இச்சட்டத்தின் வன்கொடுமைகள் மீண்டும் நிகழும் என சந்தேகப்படும் இடங்களையும் அடை யாளம் காணுதல்.
ஆ. அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் சட்டம் ஒழுங்கு நிலையை ஆராய மாவட்ட குற்றவியல் நடுவர் அல்லது காவல்துறை கண்காணிப்பாளர் அல்லது வேறு அலுவலர்களை அந்த பகுதிக்கு சென்று பார்வையிட ஆணை யிடுதல்.
இ. அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் தேவை என்று கருதினால் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் அல்லாதவர்கள் அவர்களின் உறவினர்கள், வேலையாட்கள் அல்லது பணியாளர்கள் மற்றும் குடும்ப நண்பர்கள் வைத்திருக்கும் துப்பாக்கி உரிமங்களை தற்காலிகமாக நிறுத்தி வைப்பது அத்தகைய ஆயுதங்களை பெற்று அரசின் ஆயுதக் கிடங்கில் ஒப்படைத்தல்.
ஈ. எல்லா வெடிகளையும் பறிமுதல் செய்தல், வெடி பொருள் உற்பத்தியை தடை செய்தல்.
உ. தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பை அளிக்க அவசியம் ஏற்பட்டால் அவர்களுக்கும் துப்பாக்கி வைத்துக் கொள்ளும் உரிமைகளை வழங்குவது.
ஊ. இச்சட்டத்தின் விதிகளை நடைமுறைப்படுத்த அரசுக்கு உதவிட அவசியம்என்று கருதினால் மாநில அளவில் உயர்மட்டக் குழு, மாவட்ட மற்றும் கோட்ட அளவிலான குழுக்கள்அல்லது இதுபோனற் பல குழுக்களை அமைத்தல்.
எ. இச்சட்டத்தின் விதிமுறைகளை திறம்பட அமலாக்கம் செய்வதற்கு வேண்டிய ஆலோசனைகளை வழங்க கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வு குழுக்களை அமைத்தல்.
ஏ. அடையாளம் காணப்பட்ட பகுதிகளில், விழிப்பு ணர்வு மையங்களை அமைத்தல், மற்றும் பயிற்சி பட்டறை களை நடத்துதல், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களுக்கு மத்திய மாநில அரசுகளின் சட்டம், விதிகள், நடைமுறைகள், மற்றும் திட்டங்கள் மூலம் அளிக்கப்படும் உரிமைகள் பாதுகாப்பு குறித்து விளக்குதல்.
ஐ. விழிப்புணர்வு மையங்களை அமைத்தும், நிர்வகித்தும், பயிற்சி பட்டறைகளை நடத்தி வரும் அரசு சாரா அமைப்பு களுக்கு தேவையான நிதி மற்றும் இதர உதவிகளை அளித்து ஊக்குவித்தல்.
ஒ. அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் சிறப்பு காவல்படையை அமைத்தல்.
ஓ. ஒவ்வொரு காலாண்டு இறுதியின் போது சட்டம் ஒழுங்கு, பல்வேறு குழுக்களின் நடவடிக்கைகள், இச்சட்டத் தின் விதிகளை அமலாக்குவதற்கு பொறுப்புள்ள சிறப்பு அரசு குற்றவியல் வழக்குரைஞர், புலனாய்வு அதிகாரிகள் ஆகியோரின் நடவடிக்கைகளை இச்சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் ஆகியவற்றை மறு பரிசீலனை செய்தல்.
4. விசாரணை, கண்காணிப்பு மற்றும் அறிக்கை சமர்பித்தல்
அ. மாவட்டங்களின் குற்றவியல் நடுவர் அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையில் மாநில அரசு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் உயர்மட்ட வழக்கறிஞர்களை கொண்ட குழுவை அமைக்கும். சிறப்பு நீதிமன்றங்களில் இந்த வழக்குகளை நடத்துவதற்கு அவர்கள் 7 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இந்த வழக்கிற்கு பொறுப்புள்ள விசாரணை இயக்குனரின் ஆலோசனை பேரில் அரசு குற்றவியல் வழக்குரைஞர் குழு ஒன்று அமைக்கப்படும் மேற்கண்ட இரண்டு குழுக்களின் விபரம் குறித்து மாநில அரசிதழில் வெளியிடப்பட வேண்டும். இக்குழுக்கள் 3 ஆண்டுகளுக்கு இப்பொறுப்பை கவனிக்கும்.
ஆ. மாவட்ட குற்றவியல் நடுவர் மற்றும் விசாரணை இயக்குனர் ஆகியோர் வருடத்திற்கு இரண்டு முறை அதாவது சனவரி, சூலை மாதங்களில் வழக்குகள் குறித்து மறுபரிசீலனை செய்யவேண்டும் அரசு குற்றவயில் வழக்குரைஞர்களின் செயல்பாடுகள் குறித்து மாநில அரசு அறிக்கை ஒன்று சமர்பிக்க வேண்டும்.
இ. இவ்வழக்கை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட அரசு குற்றவியல் சிறப்பு வழக்குரைஞர், தன் திறனுக்கு ஏற்ப வழக்கை நடத்தாமலோ, கவனமின்றி இருந்தாலோ இது குறித்து மாநில அரசுக்கு தெரிய வந்தால் அல்லது அரசு அவ்வாறு கருதினால் அவரது பெயர் குழு பட்டியலில் இருந்து நீக்கப்படும்.
ஈ. இச்சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை மாவட்ட குற்றவியல் நடுவர் மற்றும் மாவட்ட அளவில் இவ்வழக்கிற்கு பொறுப்பு வகிக்கும் அதிகாரி ஒவ்வொரு மாதமும் 20ம் தேதி அன்றோ அல்லது அதற்கு முன்போமாநில அரசுக்கும் விசாரணை இயக்குனருக்கும் அறிக்கை ஒன்றை சமர்பிக்க வேண்டும். ஒவ்வொரு வழக்கிலும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், குறித்து அந்த அறிக்கையில் குறிப்பிட வேண்டும்.
உ. வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர் விரும்பினால் அல்லது அவசியம் என்று கருதினால் சிறப்பு வழக்குகளை விசாரிக்க திறமையான மூத்த வழக்குரைகளை அமர்த்திக் கொள்ளலாம் அதற்கான கட்டணத்தை அவரே செலுத்த வேண்டும்.
ஊ. அரசு குற்றவியல் சிறப்பு வழக்குரைஞர்களுக்கான கட்டணத்தை மாநில அரசே நிர்ணயம் செய்யும், மாநிலத்தின் இதர குழுக்களில் உள்ள வழக்குரைஞர்களின் கட்டணத்தை விட இது கூடுதலாகவே இருக்கும்.
5. காவல்நிலைய பொறுப்பு அதிகாரிக்கான தகவல்
அ. இச்சட்டத்தின் மூலம் ஒருவர் புகார் கொடுக்க வரும்போது அவர் வாய்மொழியாக தரும் தகவலை காவல் நிலைய பொறுப்பு அதிகாரி எழுத வேண்டும். அல்லது அவரது ஆணையின் அடிப்படையில் மற்றவர் இப்புகாரை எழுதி புகார் கொடுத்தவரிடம் படித்து காண்பித்து கையெழுத்து வாங்க வேண்டும். காவல்நிலையத்தில் உள்ள அதற்குரி யபுத்தகத்தில் இந்த புகாரை பதிவு செய்யவேண்டும்.
ஆ. துணைவிதி (1)ன் படி பதிவு செய்யப்பட்ட புகாரின் நகல் ஒன்றை புகார் கொடுத்தவரிடம் இலவசமாக கொடுக்க வேண்டும்.
இ. துணைவிதி (1)ன் படி ஒரு புகாரை சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரி எடுத்துக் கொள்ள மறுக்கும் போது அப்புகாரை எழுதி பதிவு தபாலில் காவல்துறை கண்காணிப்பாளருக்கு அனுப்ப வேண்டும். அவர் அல்லது காவல்துறை கண்காணிப் பாளர் பதவிக்கு குறையாத ஒருவர் இந்த புகாரை விசாரித்து சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரியை காவல் நிலைய புத்தகத் தில் புகாரை பதிவு செய்ய எழுத்து மூலம் ஆணை பிறப்பிக்கலாம்.
6. அதிகாரிகள் நேரடியாக சோதனையிடுதல்
1. மாவட்டக் குற்றவியல் நடுவர் அல்லது துணைக் கோட்ட நடுவர் அல்லது பிற ஆட்சித்துறை குற்றவியல் நடுவர் அல்லது காவல்துறை கண்காணிப்பாளர் பதவிக்கு குறையாத ஒருவர் ஆகியோரின் எல்லைக்குட்பட்ட பகுதியில் தாழ்த்தப் பட்ட மற்றும் பழங்குடியினர் மீது வன்கொடுமை நடந்தால் அது பற்றி புகார் கூறினாலோ அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரியின் கவனத்திற்கு தெரிய வந்தாலோ வன்கொடுமை நடந்த பகுதியை அவர் உடனடியாக நேரில் பார்வையிட்டு கலவரத்தின் பாதிப்பு, உயிர் இழந்தவர்களின் விபரம், சொத்துக்களுக்கு ஏற்பட்ட தேசம் குறித்து அரசுக்கு அறிக்கை தரவேண்டும்.
2. வன்கொடுமை நடந்த பகுதியை பார்வையிடும் மாவட்ட குற்றவியல் நடுவர் அல்லது உட்கோட்ட குற்றவியல் நடுவர் அல்லது பிற ஆட்சித்துறை குற்றவியல் நடுவர் அல்லது காவல்துறை கண்காணிப்பாளர், காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் அரசுக்கு கீழ்கண்ட விபரங்களை உடனடியாக தெரிவிக்க வேண்டும்.
அ. வன்கொடுமையால் உயிரிழந்தவர்கள் பட்டியல் நிவாரண உதவி பெற தகுதியுள்ள குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சார்ந்திருப்பவர் பற்றிய விபரம்.
ஆ. வன்கொடுமை பரவியுள் பகுதியில் உயிரிழந்தவர் களின் சொத்துக்களுக்கு ஏற்பட்டுள்ள சேதம் பற்றிய விபரம் குறித்த விரிவான அறிக்கை.
இ. வன்கொடுமை பரவியுள்ள பகுதிகளில் தீவிர காவல் சோதனைக்கு ஆணையிடல்.
ஈ. உயிரிழந்தவர்களின் அனுதாபிகள் மற்றும் சாட்சிகளுக்கு போதிய பாதுகாப்பு அளிப்பதற்கு எடுக்கப் பட்டுள்ள நடவடிக்கைகள் பற்றிய விபரம்.
உ. (உயிரிழந்தவர்களின்) பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு உடனடி நிவாரண உதவி.
7. புலனாய்வு அதிகாரிகள்
1. வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடந்துள்ள ஒரு குற்றத்தை காவல்துறை கண்காணிப்பாளர் பதவிக்கு குறையாத ஒருவரைக் கொண்டு புலனாய்வு செய்ய வேண்டும். இவரின் கடந்த கால அனுபவம், பணியில் அவருக்குள்ள கடமை உணர்வு ஆகியனவற்றைக் கருத்தில் கொண்டு இந்த புல னாய்வு அதிகாரியை மாநில அரசு, காவல்துறை தலைமை இயக்குனர், காவல்துறை கண்காணிப்பாளர் மூலம் நியமனம் செய்யப்படுவார். குறுகிய காலத்திற்குள் அவர் விசாரணையை சரியான வழியில் மேற்கொள்வார்.
2. நியமனம் செய்யப்படும் புனலாய்வு அதிகாரி உட்பிரிவு (1)ன் படி 30 நாட்களுக்குள் தன் புலனாய்வை முடித்து அறிக்கையை கண்காணிப்பாளருக்கு அளிக்க வேண்டும், அவர் அந்த அறிக்கையை மாநில காவல்துறை இயக்குனருக்கு அனுப்பி வைப்பார்.
3. புலனாய்வு அதிகாரி மேற்கொண்டுள்ள அனைத்து புலனாய்வு நடவடிக்கைகள் குறித்து ஒவ்வொரு காலாண்டு இறுதியின் போது மாநில உள்துறை செயலர், சமூக நலச் செயலர்,விசாரணை இயக்குனர், விசாரணை பொறுப்பு காவல்துறை தலைமை இயக்குனர் பரிசீலனை செய்ய வேண்டும்.
8. தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்கள் பாதுகாப்புக் குழு அமைத்தல்
1. மாநில அரசு தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்கள் பாதுகாப்பு குழுவை மாநில தலைநகரத்தில் அமைக்க வேண்டும். காவல் துறை தலைமை ஆய்வாளர் இக்குழுவிற்கு பொறுப்பு வகிப்பார். இக்குழு கீ�கண்ட பணிகளுக்கு பொறுப்பேற்கும்.
அ. கலவரம் நடக்கும் என்று அடையாளம் காணப் பட்ட பகுதியில் ஆய்வு நடத்துதல்.
ஆ. அடையாளம் காணப்பட்ட பகுதியில் பொது அமைதியை நிலைநாட்டுதல்.
இ. அடையாளம் காணப்பட்ட பகுதியில் சிறப்பு காவல் படையை நிறுத்த அல்லது சிறப்பு காவல் சாவடியை அமைக்க அரசுக்கு பரிந்துரை செய்தல்.
ஈ. கலவரத்திற்கான சரியான காரணம் குறித்து புலனாய்வு செய்தல்.
உ. தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களக்கு பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தல்.
ஊ. அடையாளம் காணப்பட்ட பகுதியில் சட்டம் ஒழுங்கு குறித்து தலைமை அதிகாரி அல்லது சிறப்பு அதிகாரிக்கு தகவல் தருதல்.
எ. பல்வேறு அதிகாரிகளால் புலனாய்வை பற்றி விசாரிக்கவும், கலவரம் நடந்த இடத்தை பார்வையிடவும் செய்தல்.
ஏ. சட்டவிதி (5) துணை விதி(3)ன் கீழ் காவல் நிலையத்திலள்ள குறிப்பேட்டில் குற்றம் குறித்து காவல் நிலைய அதிகாரி பதிவு செய்ய மறுத்தால் இந்த வழக்கு குறித்து காவல்துறை கண்காணிப்பாளர் எடுத்தள்ள நடவடிக்கைகள் குறித்து விசாரணை செய்தல்.
ஐ. அரசு ஊழியர் ஒருவர் இவ்வழக்கு குறித்து அலட்சியமாக இருந்தால் அது பற்றிய விசாரணை
ஒ. இச்சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் நிலவரம் பற்றிய மறுபரிசீலனை.
ஓ. வழக்கு குறித்து எடுக்கப்ட்ட நடவடிக்ககைள், எடுக்கப்பட உள்ள நடவடிக்கைகள் குறித்த விபரத்தினை ஒவ் வொரு மாதமும் 20ம் தேதி அன்றோ அல்லது அதற்கு முன் போ மாநில அரசுக்கு அறிக்கை சமர்பித்தல்.
9. உயர்அதிகாரி / தலைமை அதிகாரி நியமனம்
இச்சட்டத்தின் விதிமுறைகளை நடைமுறைப்படுத்தும் பொறுப்பில் உள்ள மாவட்ட குற்றவியல் நடுவர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் அல்லது புலனாய்வு அதிகாரிகள் மற்றும் இதர அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதற் காக மாநில அரசின் செயலர் பதவிக்கு இணையான உயர் அதிகாரி களை மாநில அரசு நியமிக்க வேண்டும். அவர் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினராக இருக்க வேண்டும். ஒவ்வொரு காலாண்டு இறுதியின் போதும் அவர் கீழ்காணும் விபரங்கள் குறித்து மறுபரிசீலனை செய்யவேண்டும்.
அ. விதி 8ன் பிரிவு (xi) விதி 6, விதி 4ன் துணை விதிகளான (2)ன் கீழ் மாநில அரசு பெறும் அறிக்கைகளை பரிசீலித்தல்.
ஆ. இச்சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் நிலவரம் குறித்து பரிசீலனை செய்தல்.
இ. அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் சட்டம் ஒழுங்கு நிலவரம்.
ஈ. வன்கொடு�மாயல் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர்களுக்கு உடனடி நிவாரணமாக பணம் அல்லது இதர உதவிகளை அளிப்பது பற்றிய விபரம்.
உ. வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவரை சார்ந்தவர்களுக்கும் தேவையான உணவு பொருட்கள், உடை, தங்கும் வசதி, சட்ட உதவி பயணப்படி, தினசரிப்படி போக்குவரத்து வசதி போன்ற வசதிகளை போதிய அளவு அளித்தல்.
ஊ. அரசு சாரா அமைப்புகள் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங் குடி மக்கள் பாதுகாப்புக் குழு, பல்வேறு குழுக்கள், இச்சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரம் உள்ள அரசு ஊ�யர் ஆகியோரின் செயல்பாடு.
10. சிறப்பு அதிகாரி நியமனம்
மாவட்ட குற்றவியல் நடுவர், காவல்துறை கண்காணிப் பாளர், பல்வேறு குழுக்கள், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்கள் குழுக்கள் ஆகியவற்றுடன் இணைந்து செயல்படு வதற்காக கூடுதல் மாவட்ட குற்றவியல் நடுவர் பதவிக்கு குறையாத ஒருவரை சிறப்பு அதிகாரியாக அடையாளம் காணப்பட்ட பகுதியில் நியமனம் செய்யவேண்டும்.
சிறப்பு அதிகாரி கீழ்கண்டவற்றிற்கு பொறுப்பேற்க வேண்டும்
அ. வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரணம் மற்றும் இதர வசரிதகள் இந்த வன்கொடுமை மறுபடியும் நிகழாமல் இருக்க தேவையான நடவடிக்கைகள் எடுத்தல்.
ஆ. மாநில மற்றும் மத்திய அரசு சட்டங்கள் மற்றும் திட்டங்களின் மூலம் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களுக்கு கிடைக்கும் பாதுகாப்பு உரிமைகள் மற்றும் இதர உதவிகள் குறித்து அவர்களுக்கு பயிற்சி பட்டறைகள் மூலம் விளக்க, அடையாளம் காணப்பட்ட பகுதி அல்லது மாவட்ட தலைமை யகங்களில் விழிப்புணர்வு மையங்களை அமைத்தல்.
இ. இம்மையங்களை நிர்வகிப்பது அல்லது பணியரங்குகளை நடத்துவதற்காக அரசு சாரா அமைப்பு களுக்கு தேவையான நிதி மற்றும் இதர உதவிகளை அளித்தல்.
11. வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள், சாட்சிகள் மற்றும் சார்ந்திருப்பவர்களுக்கு பயணப்படி, தினசரிப்படி நிர்வாகச் செலவு, மற்றும் போக்குவரத்து வசதிகள் :
1. இச்சட்டத்தின் கீழ் செய்யப்படும் குற்றத்தை விசாரிக்கும் அல்லது புலனாய்வு செய்யும் இடத்திற்கு வந்து போகும் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டோர், அவரை சார்ந்தவர்கள் மற்றும் சாட்சிகள், தாங்கள் தங்கியிருக்கும் அல்லது வசிக்கும் இடத்திலிருந்து வந்து போக அதி விரைவு வண்டி, விரைவு வண்டி, அல்லது சாதாரண தொடர் வண்டியில் இரண்டாம் வகுப்பு கட்டணம் அல்லது பேரந்து கட்டணம் அளிக்கவேண்டும்.
2. புலனாய்வு அதிகாரிகள், காவல்துறை கண்காணிப் பாளர், காவல்துறை துணை கண்காணிப்பாளர், மாவட்ட குற்றவியல் நடுவர் அல்லது பிற ஆட்சித்துறை குற்றவியல் நடுவர் ஆகியோர்களை வன்முறையால் பாதிக்கப்ட்டவர்கள் மற்றும் சாட்சிகள் சென்று பார்ப்பதற்க தேவையான போக்குவரத்து வசதி அல்லது போக்குவரத்த செலவை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
3. வன்கொடுமை வழக்கு குறித்து விசாரணைக்கு வரும் பெண் சாட்சிகள் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள் அல்லது அவரை சார்ந்திருப்போர் அல்லது சிறுவர்கள் 60 வயதுக்கு மேற்பட்ட முதிய��ர், 40% சதவீத உடல் ஊனமுற்றோர் ஆகியோர் தங்களுடன் ஒரு உதவியாளரை அழைத்துச் செல்வதற்கு அனுமதிக்கப்படுவர். வன்கொடுமை குறித்த விசாரணை,புலனாய்வு ஆகியவற்றிற்கு செல்லும் சாட்சிகள் மற்றும் பாதிக்கப்பட்ட வர்கள் ஆகியோருக்கு அளிக்கப்படும் பயணப்படி மற்றும் பராமரிப்பு செலவு ஆகியவை உதவியாளர்களுக்கும் வழங்கப்படும்.
4. வன்கொடுமை குறித்த விசாரணைக்கு வரும் சாட்சிகள் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது அவரை சார்ந்தவர்கள் மற்றும் உதவியாளர்கள், வழக்கு குறித்த வீட்டை விட்டு வெளியே இருக்கும் நாட்களில் பராமரிப்பு செலவை அளிக்க வேண்டும். மாநில வேளாண் கூலித் தொழிலாளர்களுக்கு அளிக்கப்படும் தினசரி கூலியை அளிக்க வேண்டும்.
5. சாட்சிகள், வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களை சார்ந்தவர்கள், உதவியாளர்கள் ஆகியோருக்கு தினசரி பராமரிப்பு செலவுத் தொகையுடன் உணவுக்கான தொகையையும் வழங்கவேண்டும் மாறிவரும் சூழலுக்கு ஏற்ப மாநில அரசு வழங்க வேண்டும்.
6. வன்கொடுமை வழக்கு தொடர்பாக, புலனாய்வு அதிகாரிகள், அல்லது காவல் நிலைய பொறுப்பு அதிகாரி, அல்லது மருத்துவமனை நிர்வாகி அல்லது காவல்துறை கண்காணிப்பாளர், துணைக் கண்காணிப்பாளர், மாவட்ட குற்றவியல் நடுவர் அல்லது பிற ஆட்சித்துறை அதிகாரிகள் ஆகி யோரை சென்று பார்க்கும் வன்கொடுமையால் பாதிக்கப் பட்டவர்கள், அவரை சார்ந்தவர்கள்,உதவியாளர்கள் மற்றும் சாட்சிகளுக்கு பயணப்படி, பராமரிப்பு செலவு, போக்கு வரத்துச் செலவு,தொகையை திருப்புதல் ஆகியவற்றை 3 தினங்களுக்குள் திருப்பி அளிப்பதற்கான நடவடிக்கையை உடனடியாக மாவட்ட குற்றவியல் நடுவர், உட்கோட்ட குற்றவியல் நடுவர் அல்லது பிற ஆட்சித்துறை குற்றவியல் நடுவர் மேற்கொள்ள வேண்டும்.
7. இச்சட்டத்தின் பிரிவு-3ன் படி குற்றம் புரிந்தால் மாவட்ட குற்றவியல் நடுவர் அல்லது பிற ஆட்சித்துறை குற்றவியல் நடுவர், பாதிக்கப்பட்டோருக்கு மருத்துவச் செலவு, சிறப்பு மருத்துவ ஆலோசனை, ரத்தம் செலுத்துதல், அவசியமான உடைகளை மாற்றுதல், உணவு மற்றும் பழங்கள் அளித்தல் ஆகியவற்றிற்கான பணத்தை திருப்பி செலுத்தல் வேண்டும்.
12. மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்
1. வன்கொடுமை நடந்த இடத்தை மாவட்ட குற்றவியல் நடுவர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோர் பார்வையிட்டு சேதம் பற்றிய விபரம், நிவாரணம் பெறத் தகுதி யுள்ள குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவரைச் சார்ந்தவர்கள் பற்றிய பட்டியலை தயாரிக்க வேண்டும்.
2. சம்பந்தப்பட்ட காவல்நிலையத்தில் முதல் தகவல் அறிக்கையில் வன்கொடுமை பதிவு செய்யப்பட்டள்ளதா என்பதை காவல்துறை கண்காணிப்பாளர் உறுதி செய்ய வேண்டும்.கலவரத்திற்கு காரணமானவர்களை பிடிப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
3. வன்செயல் நடந்த இடத்தை பார்வையிடும் காவல்துறை கண்காணிப்பாளர் உடனடியாக புலனாய்வு அதிகாரியை நியமனம் செய்ய வேண்டும். இது தவிர கலவரம் நடந்த இடத்தில் காவல்படை ஒன்றை வைப்பதோடு, அவசியமானால் இதர தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளலாம்.
4. வன்செயலால் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவரை சார்ந்தவர்களுக்கு நிவாரண உதவியை பணமாகவோ அல்லது வேறு வகையாகவோ (இச் சட்டத்தின்கீழ், இதில் இணைக்கப்பட்டுள்ள அட்டவணையில் குறிப்பிட்டுள்ளபடி) வழங்குவதற்குரிய ஏற்பாடுகளை மாவட்ட குற்றவியல் நடுவர் அல்லது உட்கோட்ட குற்றவியல் நடுவர் அல்லது பிற ஆட்சித்துறை குற்றவியல் நடுவர் செய்ய வேண்டும். இந்த உடனடி நிவாரண உதவியில் உணவு,குடிநீர், உடை, தங்கு மிடம், மருத்துவவசதி, போக்குவரத்து வசதி மற்றும் மனிதர் களுக்கு தேவைப்படும் அத்தியாவசிய பொருட்கள் இடம் பெற் றிருக்க வேண்டும்.
5. துணைவிதி - 4ல் குறிப்பிட்டபடி வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள், அவரை சார்ந்தவர்கள், இறந்தவர்கள், காயம்பட்டவர்கள், பொருட்களை இழந்தவர்கள் ஆகியோருக்கு வழங்கப்படும் நிவாரண உதவியை தவிர நடைமுறையில் உள்ள சட்டத்தின் கீழ் இதர நஷ்டஈட்டையும் பெற அவர்களுக்கு உரிமை உண்டு.
6. துணைவிதி - 4ல் குறிப்பிட்டுள்ளபடி நிவாரணம் மற்றும் மறுவாழ்வு வசதிகளை மாவட்ட குற்றவியல் நடுவர் அல்லது பிற குற்றவியல் நடுவர் அல்லது வேறு ஆட்சித்துறை அலுவலர்கள் அளிக்க வேண்டும். இச்சட்டத்தில் இணைக்கப் பட்டள்ள அட்டவணையின்படி இந்த உதவியை அளிக்க வேண்டும்.
7. வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணம் மற்றும் மறுவாழ்வு குறித்த அறிக்கையை மாவட்ட குற்றவியல் நடுவர் அல்லது உட் கோட்ட குற்றவியல் நடுவர் அல்லது பிற ஆட்சித்துறை குற்றவியல் நடுவர் அல்லது காவல்துறை கண்காணிப்பாளர் சிறப்பு நீதிமன்றத்திற்க அனுப்ப வேண்டும். குறித்த நேரத்திற் குள் நிவாரண உதவி அல்லது நஷ்டுஈடு பாதிக்கப்பட்ட வர்களை அல்லது அவரை சார்ந்தவர்களை சென்று அடைய வில்லை அல்லது நிவாரண உதவி போதுமானதாக இல்லை அல்லது நிவாரண தொகையில் ஒரு பகுதி மட்டுமே வழங்கப் பட்டது என்று நீதிமன்றத்திற்கு தெரிய வந்தால் அல்லது திருப்தியடைந்தால் உதவியை முழுமையாக செலுத்தவதற்கு உத்தரவிடலாம்.
13. வன்கொடுமை குறித்த பணியை முடிப்பதற்கு அதிகாரிகள் மற்றும் இதர பணியாளர்களை தேர்ந்தெடுத்தல்.
1. வன்கொடுமை நிகழ வாய்ப்புள்ள இடங்களில் நியமிக்கப்பட்ட நிர்வாக அதிகாரிகள், இதர பணியாளர்கள் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களின் பிரச்சினை களை புரிந்துகொள்ளக் கூடிய திறமை உள்ளவராக இருக்க வேடு மென்பதை மாநில அரசு உறுதி செய்ய வேண்டும்.
2. நிர்வாகம், மற்றும் காவல்துறையின் எல்லா நிலைகளிலும் குறிப்பாக காவல் நிலையம்,காவல் சாவடி ஆகியவற்றில் தாழ்த்தப்பட்டமற்றும் பழங்குடியின மக்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கொடுக்கப்பட்டுள்ளதை மாநில அரசு உறுதி செய்யவேண்டும்.
14. மாநில அரசுக்கான குறிப்பிட்ட பொறுப்பு:
வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவார ணம் மற்றும் மறுவாழ்வு வசதிகளுக்காக மாநில அரசு தனது ஆண்டு வரவு செலவு திட்டத்தில் தேவையான ஒதுக்கீட்டைச் செய்யவேண்டும். இச்சட்டத்தின் பிரிவு 15ன் கீழ் நியமனம் செய்யப்பட்ட சிறப்பு அரசு வழக்குரைஞரின் செயல்பாடு குறித்தும், பெறப்பட்ட பல்வேறு அறிக்கைகளை குறித்தும், மாவட்ட குற்றவியல் நடுவர், உட்கோட்ட குற்றவியல் நடுவர், காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோர் மேற்கொண்ட புலனாய்வு விபரம் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் பாதிக்கப் பட்டவர்களுக்கு அளிக்கப்பட்ட நிவாரணம் மற் றும் மறுவாழ்வு வசதிகள் குறித்தும் குறிப்பிட்ட அதிகாரிகள் மீது கூறப்பட்ட புகார்கள் குறித்தும் மாநில அரசு ஆண்டுக்கு இரண்டு முறை அதாவது சனவரி, சூலை மாதங்களில் மறுபரி சீலனை செய்யவேண்டும்.
15. பின்வரும் நிகழ்வு பற்றிய மாநில அரசின் திட்டம்.
இச்சட்டத்தின் விதிமுறைகளை அமலாக்குவதற்கும், இதனை மாநில அரசின் அரசிதழில் வெளியிடுவதற்காகவும் மாதிரி செலவின திட்டமொன்றைமாநில அரசு தயாரிக்க வேண்டும்.பல்வேறு துறைகள் மற்றும் அதன் அதிகாரிகளின் பொறுப்பு மற்றும் பங்கு குறித்தும் அரசு சாரா அமைப்புகள் கிராம / நகர உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றின் பங்கு மற்றும் பொறுப்பு குறித்தும் மாநில அரசு குறிப்பிட வேண்டும்.
இத்திட்டம் கீழ்கண்ட நிவாரண நடவடிக்கைகளை கொண்டிருக்க வேண்டும்.
அ. உடனடி நிவாரணமாக பணம் அல்லது வேறு உதவி குறித்ததிட்டம் அல்லது இவை இரண்டுமோ
ஆ. வேளாண் நிலம் மற்றும் குடியிருப்பு ஒதுக்கீடு
இ. மறுவாழ்வு நடவடிக்கைகள்.
ஈ. பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தை சேர்ந்தவர் அல்லது அக் குடும்பத்தை சார்ந்திருப்பவர் ஒருவருக்கு அசு அல்லது அரசின் கீழுள்ள துறைகளில் வேலை அளிப்பதற்கான திட்டம்.
உ. வன்முறையால் பாதிக்கப்பட்ட விதவைகள், உயிரிழந்தவர்களின் குழந்தைகள், உடல் ஊனமுற்றோர், அல்லது வயதானோர் ஆகியோருக்கான ஓய்வூதிய திட்டம்.
ஊ. பாதிக்கப்பட்டவர்களுக்கான கட்டாய நஷ்ட ஈடு.
எ. பாதிக்கப்பட்டவர்களுக்கான சமூக பொருளாதார திட்டம்
ஏ. பாதிக்கப்பட்டவர்களுக்கு செங்கல், கருங்கல்லால் கட்டப்பட்ட வீட்டு வசதியை ஏற்படுத்தி தருதல்.
ஐ. தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் சுகாதாரம், அத்தியாவசியப் பொருட்கள் வழங்குதல், மின்சாரம் போதிய குடிநீர்வசதி, மயானபாதை மற்றும் சாலை வசதிகள் போன்றவற்றை ஏற்படுத்தி தருதல்.
2. எதிர்பாராத செலவினம் குறித்த திட்டம் அல்லது அதன் சுருக்கம் குறித்த பிரதியை மாநில அரசு, மத்திய அரசின் நலவாழ்வு அமைச்சகத்திற்கும், மாவட்ட குற்றவியல் நடுவர் உட்கோட்ட குற்றவியல் நடுவர், காவல்துறை தலைவர், காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோருக்கு அனுப்ப வேண்டும்.
16. மாநில அளவில் கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வுக் குழுக்களை அமைத்தல் :
1.25 பேர் கொண்ட உயர்மட்டஅளவிலான கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வு குழு ஒன்றை மாநில அரசு அமைக்க வேண்டும். கீழ்காண்பவர்கள் அக்குழுவில் இடம் பெற்றிருக்க வேண்டும்.
அ. முதல்வர், நிர்வாகி - தலைவர் (குடியரசு தலைவர் ஆட்சியுள்ள மாநிலங்களுக்கு ஆளுநர் தலைவராக இருப்பார்)
ஆ. உள்துறை அமைச்சர் மற்றும் நலவாழ்வு அமைச்சர் உறுப்பினர்கள் (குடியரசு தலைவர் ஆட்சியுள்ள மாநிலங்களுக்கு ஆலோசகர்கள் உறுப்பினர்களாக இருப்பார்கள்)
இ. தாழ்த்தப்பட்டமற்றும் பழங்குடியினத்தை சார்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற சட்டமன்ற மேல்சபை சேர்ந்தவர்கள் உறுப்பினர்கள்.
ஈ. தலைமைச் செயலர், உள்துறை செயலர், காவல்துறை தலைமை இயக்குனர் தாழ்த்தப்பட்டமற்றும் பழங்குடியின ருக்கான தேசிய ஆணையத்தின் இயக்குனர், துணை இயக்குனர் - உறுப்பினர்கள்.
உ. தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் மேம்பாடு மற்றும் நலவாழ்வு பொறுப்புக்கான செயலர் ஒருங்கிணைப்பாளர்.
2. இச்சட்டத்தின் விதிமுறைளை நடைமுறைப் படுத்துவதையும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்பட்ட மறுவாழ்வு மற்றும் நிவாரண வசதி மற்றும் இது தொடர்பான விஷயங்கள இச்சட்டத்தின் கீழ் நடைபெறும் வழக்குகள், விதிமுறைகள், அமலாக்க அதிகாரிகளுக்கு உள்ள பொறுப்பு கள், மாநில அரசு பெறும் பல்வேறு அதிகாரிகள் குறித்த இக் கண்காணிப்புக் குழு ஆண்டுக்கு இரண்டு முறை அதாவது சனவரி, சூலை மாதங்களில் இது குறித்து மறுபரிசீலனை செய்யவேண்டும்.
17. மாவட்ட அளவில் கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வு குழுக்களை அமைத்தல் :
1. மாநிலத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள குற்றவியல் நடுவர் கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வு குழுக்களை அமைக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர்(வன்கொடுமை தடுப்பு) சட்டத்தின் விதிமுறை கள் அமலாக்கத்தை பரிசீலனை செய்யுவம்,வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு வழங்கப்பட்ட நிவாரண மற்றும் வசதிகள் குறித்தும், இது தொடர்பான செயற்பாடுகள் குறித்தும், இச்சட்டத்தின் கீழ் விசாரணையில் உள்ள வழக்குகள் குறித்தும், இச்சட்ட விதிமுறைகளை அமலாக்கத் திற்கு பொறுப்புள்ள பல்வேறு அதிகாரிகள் பொறுப்புகள் குறித்தும், மாவட்ட நிர்வாகம் பெறும் அறிக்கைகள் குறித்தும் இக்குழு பரிசீலனை செய்யும்.
2. நாடாளுமன்ற, சட்டமன்ற மற்றும் மேலவை உறுப்பினர்கள் காவல்துறை கண்காணிப்பாளர்,தாழ்த்தப் பட்ட மற்றும் பழங்குடியின சமூகத்தை சார்ந்த மாநில அரசின் மூன்று ”குரூப் ஆ’அதிகாரிகள் / அரசிதழில் பதிவு பெற்ற அதிகாரிகள், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த 5 அரசு சாரா அமைப்பை சேர்ந்த உறுப்பினர்கள், அரசு சாரா அமைப்புகளுடன் தொடரபுள்ள தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின வகுப்பை சாரா 3 உறுப்பினர்கள் ஆகியோர் மாவட்ட அளவிலான விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழுவில் உறுப்பினர்களாக இருக்க வேண்டும். மாவட்ட குற்றவியல் நடுவர் தலைவராகவும், மாவட்ட சமூக நல அதிகாரி உறுப்பினர், செயலராகவும் இருப்பார்கள்.
3. மாவட்ட அளவிலான குழு குறைந்தபட்சம் 3 மாதங் களுக்கு ஒரு முறை கூடும்.
18. ஆண்டு அறிக்கை
மாநில அரசு ஆண்டுதோறும் மார்சு 31ம் தேதிக்குமுன் விதிமுறைகளை அமலாக்க எடுத்துக் கொண்ட நடவடிக் கைகள் முந்தைய ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு திட்டங்கள் குறித்த விபரங்களை மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும்.
3.13.3. தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்) சட்ட விதிகள். 1995 இணைப்பு பட்டியல் 1. நிவாரணப் பணிகளுக்கான நடைமுறைகள்.
இணைப்பு -1
(பார்க்க. விதி. 12(4)
குற்றச்செயல்
1. அருவருப்பான அல்லது உண்ணத்தகாத பொருளை குடிக்குமாறு அல்லது உண்ணுமாறு கட்டாயப்படுத்துதல் பிரிவு 3(1) (i)
2. உடல்கூறு அவமதிப்பு அல்லது தொல்லை விளைவித்தல். பிரிவு 3(1) ii
3. இழிவுபடுத்தும் செயல். பிரிவு. 3(1) iii
4. நிலம், இருப்பிடம் இவற்றை ஆக்கிரமிப்பு செய்தால் பிரிவு. 3(1) iv
5. நிலம், இருப்பிடம், நீர்வசதி தொடர்பானவை. பிரிவு 3(1) v
6.”பேகார்’ முறையிலோ அல்லது வலுக்கட்டாய மாகவோ அல்லது கொத்தடிமைகளாகவே வேலைக்கு கட்டாயப் படுத்தினால். பிரிவு. 3(1) (vi)
7. குறிப்பிட்ட வேட்பாளருக்கு வாக்களிக்க அல்லது வாக்களிக்காதிருத்தல் தொடர்பாக. பிரிவு. 3 (1) (vii)
8. பொய்யான, தீய நோக்குடைய, அல்லது வெறுப் பூட்டக்கூடிய சட்ட நடவடிக்கைகளை செய்தால் பிரிவு 3(1) viii
9. தவறான அல்லது அற்பமான தகவல்கள் 3(1) ix
10. அவமானம், பயமுறுத்துதல், இழிவுபடுத்துதல். பிரிவு-3 (1) x
11. பெண்ணை மானபங்கப்படுத்துதல் பிரிவு -3 (1) (xi)
12. பெண்ணை பாலியல் சுருண்டலுக்கு உட்படுத்துதல். பிரிவு -3 (1) xii
13. நீர் ஆதாரங்களை மாசுபடுத்தினால் பிரிவு -3 (1) xiii)
14. வழக்கமான பாதையில் சென்று வருவதற்கான உரிமைகள் மறுக்கப்பட்டால் பிரிவு -3 (1) (xiv)
15. குடியிருக்கும் இடத்தை விட்டு அகலுமாறு வற்புறுத்தினால், பிரிவு -3 (1) (xv)
16. பொய்சாட்சி அளித்தல் பிரிவு - 3 (2) (i), (ii)
17. இந்திய தண்டனை சட்டப்படி 10 ஆண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கால அளவிற்கு சிறை தண்டனை விதித்து தண்டிக்கப்படத்தக்க குற்ற செயல் ஏதேனும் செய்தால் பிரிவு - 3 (2) i
18. அரசு ஊழியரால் பாதிக்கப்பட்டிருந்தால். பிரிவு - 3 (2) v
19. உடல் ஊனம்
அ. 100% உடல் ஊனமான ஒருவர்
(ண்) குடும்பத்தில் வருவாய் ஈட்டாத நபருக்கு ஏற்படுத்தினால்
(ண்) வருவாய் ஈட்டும் நபரை ஊனப்படுத்தினால்
ஆ. உடல் ஊனம் 100% த்திற்கு குறைவாகயிருந்தால்
20. கொலை / இறப்பு
அ. வருவாய் ஈட்டாத குடும்பத்தை சேர்ந்தவர்
ஆ. வருவாய் ஈட்டும் குடும்பத்தை சேர்ந்தவர்.
21. கொலை, இறப்பு, படுகொலை, பாலியல் வல்லுறவு, பலர் சேர்ந்து பாலியல் வல்லுறவில் ஈடுபடுதல், நிரந்தர ஊனம், கொள்ளை
22. குடியிருப்பை முற்றிலும் சேதாரமாக்கினால் / எரித்து விட்டால்
குறைந்த பட்ச நிவாரணத்தொகை நிவாரண தொ�க்கான நடைமுறைகள்
குற்றச் செயலின் இயல்பு மற்றும் முக்கியத்துவத்தை பொறுத்தும், உடற்கூறு, அவமதிப்பு,தரக்குறைவு ஆகிய வற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஈடு செய்யும் வகையில் ரூ. 25,000அல்லது அதற்கு அதிகமாக நஷ்டஈடு வழங்கவேண்டும். கீழ்கண்ட வாறு இந் நஷ்ட ஈட்டை வழங்க வேண்டும்.
1. குற்றபத்திரிக்கை நீதிமன்றத்திற்கு அனுப்பும்போது 25% மும்,
2. குற்றம் சாட்டப்பட்டவர் குற்றவாளி என நீதிமன்றம் முடிவு செய்யும்போது 75%மும் செலுத்த வேண்டும்.
குற்றச் செயலின் இயல்பு மற்றும் முக்கியத்துவத்தை பொறுத்து குறைந்தது ரூ. 25,000/- அல்லது அதற்கு அதிகமாக நஷ்டுஈடு வழங்க �ண்டும் நிலம், இருப்பிடம், நீர்வசதி ஆகியவை அரசு செலவில் செய்து தர வேண்டும். நீதிமன்றத் திறகு குற்றப் பத்திரிக்கையை அனுப்பும்போது எல்லாத் தொகையும் தர வேண்டும்.
பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் குறைந்தது ரூ. 25,000/- வழங்க வேண்டும். முதல் தகவல் அறிக்கை பெற்ற நிலையில் 25% மும், கீழ் நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்க பட்டால் 75% வழங்க வேண்டும்.
குற்றச் செயல், அதன் இயல்பு, மற்றும் முக்கியத்துவத்தை பொறுத்து ரூ. 20,000/- வரை பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவார ணம்.
ரூ. 25,00/- அல்லது வழக்குச் செலவு அல்லது சேதம் இதில் எது குறைவோ அத்தொகையை குற்றவாளியின் விசாரணை முடிந்த பின் பாதிக்கப்பட்டவருக்கு வழங்க வேண்டும்.
குற்றச் செயல் மற்றும் அதன் இயல்பை பொறுத்து ரூ. 25,000/- வரை பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் நஷ்டஈடு வழங்க வேண்டும். 25% தொகையை குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யும்போதும், மீதத் தொகையை குற்றம் நிரூபிக்கப்பட்ட பின் வழங்க வேண்டும்.
குற்றச் செயலில் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் ரூ. 50,000/- வழங்கவேண்டும். 50%மருத்துவ பரிசோதனை முடிந்த பின்பும், மீதமுள்ள 50% விசாரணைக்கு பிறகு வழங்க வேண்டும்.
ஒரு லட்ச ரூபாய் வரை அபராதமும் அல்லது பழைய நிலைக்கு நீர் ஆதாரத்தை உருவாக்குவதற்கு உரிய செலவுகளை மாவட்ட நிர்வாகம் கோரும் போது பணத்தை செலுத்த வேண்டும்.
ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் அல்லது பாதையில் செல்வதற்கான உரிமையை நிலைநாட்டுவதற்கு ஆகும் செலவு மற்றும் ஏதாவது இழப்பு ஏற்பட்டால் அதற்கான நஷ்டஈடு 50%,மும், குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யும்போது 50%மும் கீழ் நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் செலுத்த வேண்டும்.
மறுபடியும் குடியிருப்பதற்கான வீட்டை கட்டித் தருதல், குடியிருக்கும் உரிமை நஷ்ட ஈடாக ரூ. 25,000/-பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் வழங்க வேண்டும். குடியிருப்பு சேதமடைந் தால் அரசு செலவில் திரும்ப கட்ட வேண்டும்.
கீழ் நீதிமன்றத்திற்கு குற்றபத்திரிக்கை அனுப்பினால் முழுத்தொகையை அளிக்க வேண்டும்.
ஒரு லட்சம் ரூபாய் அபராதம் அல்லது பாதிக்கப்பட்ட வருக்கு முழு ஈட்டுத்தொகை வழங்கவேண்டும். 50% தொகை, குற்றப் பத்திரிக்கையை நீதிமன்றத்திற்கு அனுப்பும் போதும்,மீதமுள்ள 50% கீழ் நீதிமன்றத்தில் குற்றம் நிரூபணம் ஆகும்போது வழங்க வேண்டும்.
குற்றச் செயலின் இயல்பு மற்றும் அதன் முக்கியத்து வத்தை பொறுத்து ரூ. 50,000/-பாதிக்கப்பட்டவருக்கு அல்லது அவரை சார்ந்தவருக்கு நஷ்ட ஈடாக அளிக்க வேண்டும்.
ஏற்பட்ட இழப்பிற்கு முழுமையான நஷ்டஈடு 50%மும், குற்றப்பத்திரிக்கை நீதிமன்றத்திற்கு அனுப்பும்போதும் கீழ் நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 50% செலுத்த வேண்டும்.
வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கும், ஒரு லட்ச ரூபாய் நஷ்டஈடு வழங்க வேண்டும். 50% முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்யும் போதும், 25% குற்ற பத்திரிக்கையின்போதும்25% கீழ் நீதிமன்றத்தில் குற்றம் நிருபணம் செய்யப்படும் போதும் வழங்கவேண்டும்.
பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் 2 லட்ச ரூபாய் வழங்கவேண்டும். 50% முதல் தகவல் அறிக்கை, மருத்துவ அறிக்கை தாக்கல் செய்யும் போதும் 25% குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யும் போதும் 25% குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யும் போதும், 25% குற்றம் நிரூபிக்கப்படும் போதும் வழங்க வேண்டும்.
உடல் ஊனத்திற்கு ஏற்றவாறு மேற்கண்ட (i) மற்றும் (ii) ல் குறிப்பிட்ட தொகையை விட குறைவாக வழங்கவேண்டும். நஷ்டஈடு வழங்கும் முறையும் மேற்கண்டவாறு இருக்கவேண்டும்.இருந்தபோதிலும் வருவாய் ஈட்டாத நபருக்கு ரூ. 15,000/- மும், வருவாய் ஈட்டும் நபருக்கு30,000/- மும் குறைந்தபட்சம் வழங்கவேண்டும்.
ஒவ்வொருவருக்கும் ஒரு லட்ச ரூபாய் வழங்கவேண்டும், 75% பிரேதப் பரிசோதனை முடிந்த பின்னும் 25% கீழ் நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டதும் வழங்கவேண்டும் / குறைந்தது ரூ. 2லட்சம் ஒவ்வொருவருக்கும் வழங்க வேண்டும். 75% உடல் பரிசோதனை முடிந்த பின்பும் 25%குற்றம் நிரூபிக்கப்பட்டதும் வழங்கவேண்டும்.
மேற்கண்டவாறு நிவாரணம் அளிப்பது தவிர கீழ்கண்ட நிவாரணத்தை 3 மாதங்களில் அளிக்க வேண்டும்.
(i) பாதிக்கப்பட்டவரை சார்ந்தவர் அல்லது விதவை ஒவ்வொருவருக்கும் மாதம் ரூ. 1000/-ஓய்வூதியம் அல்லது பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு வேலை வாய்ப்பு அல்லது வேளாண் நிலம் மற்றும் வீடு கொடுக்க வேண்டும்.
(ii) பாதிக்கப்பட்டவரின்குழந்தை பராமரிப்பு, மற்றும் கல்விச் செலவு, குழந்தைகள் ஆசிரமப்பள்ளி அல்லது உடனுறைப்பள்ளி ஆகியவற்றில் சேர்க்க வேண்டும்.
(iii) பாத்திரங்கள், அரிசி, கோதுமை, பருப்பு ஆகியவற்றை 3 மாதங்களுக்கு வழங்க வேண்டும்.
அரசாங்க செலவிலேயே செங்கல் / கருங்கல் வீட்டை எரிந்து போன இடத்தில் / சேதமான இடத்தில் கட்டிதர வேண் டும்.
3.13.4 தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமை தடுப்பு) விதிகள் 1995.இணைப்பு II அறிக்கை
எண். 4-2 / 83. HW 3.
இந்திய அரசாங்கம்
நலவாழ்வுத்துறை அமைச்சகம்.
புதுடெல்லி - 6 - ஆகஸ்ட் - 1986
பொருள் : உடல் ஊனமுற்றோருக்குரிய சட்ட வரையறைகள்.
1. மாநில அரசு மற்றும் மைய அரசின் திட்டங்களிலும் செயல்பாடுகளிலும் ஊனமுற்றோர்கள் பல்வேறு வகை யினராக பொருள் விளக்கம் சொல்லப்பட்டுள்ளது. நிலை யான பொருள் வரையறையை ஊனமுற்றவர்களுக்கு அளிப்பதற்கு அதிகாரம் பெற்ற சான்றிதழ் தரும் அதிகாரி கள்,இந்திய அசின் நலவாழ்வு அமைச்சகம், மருத்துவ சேவைத் துறையின் தலைமை இயக்குனரின் தலைமைப் பொறுப்பில் இப்பிரிவினரை மூவகையாக பிரிக்கின்றனர். அவை,கண்பார்வையற்றர்கள், பேச, கேட்க இயலாதவர்கள், உடல் ஊனமுற்றவர்கள் மற்றும் மனநிலை பாதிக்கப்பட்டவர் களுக்கென்று தனி குழுவையும் ஏற்படுத்தி யுள்ளது.
2. மாநில அரசு / மப - யின் ஒப்புதலு டன்இக்குழுக்களின் அறிக்கைகளை பரிசீலத்ததற்கு பிறகு ஊனமுற்றோருக்கான குறிப்பிட்ட அமைச்சகங்களும், அரசு துறைகளும் கையொப்ப மிட்டதற்கு பிறகு குடியரசு தலைவரின் ஒப்புதலைபெறுவதற்காக உடல்ஊனமுற்றோரின் கீழ்காணும் பிரிவினங்களில் அறிவிப்பு செய்யப்படும்.
1. கண்பார்வையற்றவர்கள்.
2. நடக்க இயலாதவர்கள்
3. பேச / கேட்க இயலாதவர்கள்
4. மனநிலை பாதிக்கப்பட்டவர்கள்
இணைப்பில் குறிப்பிட்டபடி குழுவின் அறிக்கை
3. ஒவ்வொரு பிரிவில் உள்ள உடல் ஊனமுற்றவர்களும் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளனர். அதாவது மிதமான அளவுள்ள, ஆழமிக்க, கடுமையான, முழுவதும் எனும் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளனர். ஆனால் எதிர் காலத்தில் கிடைக்கக்கூடிய பலன்களும்,சலுகைகளும் மிதமான, உடல் ஊனமுற்றோருக்கு கிடைக்காமல் சாதாரண, கடுமையான,ஆழமிக்க, மொத்தக் குழுக்களுக்கே கிடைக்கப் போகின்றன. பலன்களையும், சலுகைகளையும் பெறுவதற்கு குறைந்த பட்சம் 40% உடல் ஊனமுற்றவராக இரக்க வேண்டும்.
4. உடல் ஊனமுற்வரை சோதனை செய்து சான்றிதழ் வழங்கும் அதிகாரபூர்வமிக்க அதிகாரிகள் மாவட்ட அளவில் உள்ள மருத்துவ கழகமாக இருக்கவேண்டும் என்பது முடிவு செய்யப்பட்டதாகும். இம்மருத்துவ கழகத்தில் தலைமை மருத்துவ அதிகாரி, துணை கோட்ட மருத்தவ அதிகாரி மற்றும் துறைசார்ந்த புலமை பெற்ற கண் மருத்துவர்கள் கண்பார்வையில்லாதவர்கள் இருந்தால், அல்லது காது, மூக்கு, தொண்டை மருத்துவர், காது கேட்காத பேச இயலாதவர் களுக்காக ஒலி மருத்தவர், உடலியல் மருத்துவர், உடலியல் அறுவை சிகிச்சை நிபுணர், நடக்க இயலாத ஊனமுற்றவர் களுக்காகவும், உள்நோய் மருத்துவரும் அல்லது உளவியல் மருத்துவரும் அல்லது மனகுன்றியவர்களுக்கான சிறப்பு பயிற்சி பெற்ற ஒரு ஆசிரியரும் இருப்பார்கள்.
5. சான்றிதழ் அளிக்கப்படுவதற்கு முன்பாக, பின்னிணைப்பில் குறிப்பிடப்பட்டபடி மருத்துவ கழகத்தால் சோதனைகள் நடத்தப்பட்டு பதிவு செய்யப்பட வேண்டும்.
6. இச்சான்றிதழ் 3 வருடங்களுக்கு மதிப்புள்ளதாக இருக்கும்.
7. மாநில அரசும் / UT நிர்வாகமும் 4வது பத்தியில் சொல்லப்பட்டுள்ளதைப் போன்று மருத்துவ கழகத்தில் உடனடியாக இடம் பெற்ருக்க வேண்டும்.
ஆணை : மேற்குறிப்பிடப்பட்டள்ள அறிவிப்பு இந்திய அரசிதழில்பொதுவான செய்திக்காக வெளியிடப்பட்டிருக்க வேண்டும். தேவையான செயல்பாட்டிற்கும், செய்திக்கும் இந்த அரசிதழின் பிரதி ஒன்று எல்லா அமைச்சர்களுக்கும் / மைய அரசின் எல்லாத் துறைகளுக்கும் / எல்லா மாநில அரசிற்கும் / UT நிர்வாகம், பிரதமரின் செயலர் / பிரதம அலுவலகம், மேலவை, கீழவை செயலகங்களுக்கும் அனுப்பப்பட வேண்டும்.
M.C நரசிம்மன்
இந்திய அரசின் துணைச் செயலர்
தகவல்:http://ambedkar.in/ambedkar/main.php?main_id=1&sub_id=2


கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்