தத்தித் தத்தி நடப்பாயே சிட்டுக்குருவிநீ
தரணி விட்டுப் போனதென்ன சிட்டுக்குருவி
சுத்திச் சுத்தி வருவாயே சிட்டுக்குருவிநீ
சூனியமாய் ஆனதென்ன சிட்டுக்குருவி
குழுகுழுவாய் இருப்பாயே சிட்டுக்குருவிஉன்
குடும்பங்கள் மறைந்ததென்ன சிட்டுக்குருவி
புழுபூச்சி கிடைக்கலையோ சிட்டுக்குருவிஉன்
பிள்ளைகள் மடிந்தனவோ சிட்டுக்குருவி
சூழல்கள் கெடலாச்சோ சிட்டுக்குருவிஉன்
சுதந்திரந்தான் பறிபோச்சோ சிட்டுக்குருவி
வாழ்வுதனை முன்னோக்கி சிட்டுக்குருவிநீ
வேறிடம் தேடினாயோ சிட்டுக்குருவி
நோயொன்று வந்ததுவோ சிட்டுக்குருவிஉனை
நீக்கிவிட்டுப் போனதுவோ சிட்டுக்குருவி
பேயொன்று வந்ததுவோ சிட்டுக்குருவிஉனை
பதம் பார்த்துப் போனதுவோ சிட்டுக்குருவி
மானிடர்கள் சதியாலே சிட்டுக்குருவிநீ
மாற்றலாகிப் போனாயோ சிட்டுக்குருவிஅவர்
தானியங்கள் போடலையோ சிட்டுக்குருவிஓர்
தகவில்லாமல் போனாரோ சிட்டுக்குருவி
நகரங்கள் வந்ததனால் சிட்டுக்குருவிநீ
நரகங்கள் கண்டாயோ சிட்டுக்குருவி
சிகரங்கள் கட்டுவதால் சிட்டுக்குருவிமென்
சிறகடித்துப் பறந்தாயோ சிட்டுக்குருவி
கூடொன்று கட்டுதற்கு சிட்டுக்குருவிஓடு
வீடொன்று தேர்வாயே சிட்டுக்குருவிஓடு
வீடின்று மறைந்ததனால் சிட்டுக்குருவிநீ
நாடு விட்டேகினாயோ சிட்டுக்குருவி
அங்கங்கு இருப்பாயே சிட்டுக்குருவிஎங்கள்
அங்கமாய்த் திகழ்ந்தாயே சிட்டுக்குருவி
எங்கென்று தேடுவேன் சிட்டுக்குருவிகொடும்
ஏக்கங்கள் தாராதே சிட்டுக்குருவி
தாயின்றி சேயில்லை சிட்டுக்குருவிஇந்த
உண்மையினை அறிவாயோ சிட்டுக்குருவி
நீயின்றி வாழ்வேது சிட்டுக்குருவிஎம்முள்
நீக்கமற நிறைந்தாயே சிட்டுக்குருவி
காட்டினில் இருந்தாலும் சிட்டுக்குருவிநீ
கிராமத்தில் இருந்தாலும் சிட்டுக்குருவி 
நாடுவிட்டுப் போனாலும் சிட்டுக்குருவிஉனை
நான் போக விடமாட்டேன் சிட்டுக்குருவி
மன்பதையை மறவாதே சிட்டுக்குருவிஎமை
மன்னித்து ஏற்றுக்கொள் சிட்டுக்குருவி
உன் பதம் சரணடைந்தோம் சிட்டுக்குருவி