அன்புடன் வரவேற்கின்றோம்


you are welcome to our web page

எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்

Please give your GOOD IDEAS FOR DEVELOPING
THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPS

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்

வியாழன், 29 ஏப்ரல், 2010

கண் பரிசோதனை மையம் பந்தலூரில் துவக்க விழா

9.கண் பரிசோதனை முகாம் பந்தலூரில் துவக்க விழா











பந்தலூர்: பந்தலூரில் கண் பரிசோதனை மையம் துவங்கப்பட்டது.கூடலூர் நுகர்வோர் மனித உரிமை சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், மக்கள் மையம், பந்தலூர் கண் பரிசோதனை மையம் சார்பில், பந்தலூரில் கண் பரிசோதனை மையம் அமைக்கப்பட்டுள்ளது. நெல்லியாளம் நகரமன்றத் தலைவர் காசிலிங்கம், மையத்தை திறந்து வைத்து பேசுகையில், ''ஏழை மக்களின் நலன் கருதி, மாதந்தோறும் இலவச கண் சிகிச்சை முகாம், அவ்வப்போது ரத்த தான முகாம் நடத்தி வருவது பாராட்டுக்குரியது. இந்த சேவையை விரிவுபடுத்த, கண் பரிசோதனை மையம் துவங்கியுள்ளது மேலும் பயனளிக்கும்,'' என்றார்.


சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையத் தலைவர் சிவசுப்ரமணியம் தலைமை வகித்தார். எச்.ஏ.டி.பி., சமுதாய ஒருங்கிணைப்பாளர்கள் பழனிசாமி, தேவதாஸ் முன்னிலை வகித்தனர். இலவச கண் சிகிச்சை முகாமில், 70க்கும் மேற்பட்டோர் பயன் பெற்றனர். மைய நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.






செவ்வாய், 20 ஏப்ரல், 2010

'நிற்கும்'பாரம்பரிய சின்னங்கள்

4.பாதுகாத்தால் மட்டுமே எதிர்காலத்தில் 'நிற்கும்'பாரம்பரிய சின்னங்கள் 'பொக்கிஷம்': உள்ளூர் மக்களுக்கு வேண்டும் விழிப்புணர்வு











ஊட்டி: 'சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு இல்லாததால், பாரம்பரிய சின்னங்கள் அழிவின் பாதையில் செல்கின்றன,' என ஊட்டியில் நடந்த பாரம்பரிய தின நிகழ்ச்சியில் வருத்தம் தெரிவிக்கப்பட்டது. ஊட்டி நகர மக்கள் விழிப்புணர்வு சங்கம் சார்பில், ஊட்டி ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில் நேற்று உலக பாரம்பரிய தினம் கொண்டாடப்பட்டது. ரயில்வே உயர் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுடன் சுற்றுலா பயணிகளுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. ரயில் நிலைய அதிகாரி ரவீந்திரநாத் பேசுகையில், ''கடந்த 2005ம் ஆண்டு நீலகிரி மலை ரயிலுக்கு உலக பாரம்பரிய அந்தஸ்தை யுனெஸ்கோ வழங்கியது. பாரம்பரியமிக்க ரயில் நிலையத்தில் உலக பாரம்பரிய தினம் கொண்டாடப்படுவது சுற்றுலா பயணிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,'' என்றார்.














நீலகிரி சுற்றுச்சூழல் மற்றும் கலாச்சார சேவை அறக்கட்டளை (நெஸ்ட்) நிர்வாக அறங்காவலர் சிவதாஸ் பேசுகையில், ''இந்தியாவில் பாரம்பரியம் என்பது வாழ்க்கையின் ஒரு பாகமாக உள்ளது. குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் ஆதிவாசி மக்களின் பாரம்பரியங்களும், நீலகிரி உயிர்ச்சூழல் காப்பகம், கல்வெட்டுகள், ஆங்கிலேயர் கால கட்டடங்கள் என அனைத்தும் நீலகிரியின் பாரம்பரிய தினம் கொண்டாடுவதில் பொருத்தமாக உள்ளது. சுற்றுச்சூழலால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லாததால் பாரம்பரிய சின்னங்கள் அழிவின் பாதையில் சென்று கொண்டிருக்கிறது,'' என்றார்.














கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்ரமணியம் பேசுகையில், ''நீலகிரி மாவட்டம் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது. இதனின் முக்கியத்துவம் சுற்றுலாத்துறை மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.


தமிழக அரசு மாவட்டத்தை பாரம்பரியமிக்க பகுதியாக அறிவிக்க வேண்டும். நாகரீக வளர்ச்சி பாரம்பரியத்தை புறம்தள்ளிவிட்டது,'' என்றார்.














ஊட்டி நகர விழிப்புணர்வு சங்க செயலர் ஜனார்தனன் பேசுகையில், ''மலை ரயில் வரலாற்று சிறப்பு மிக்கது. இது பல்லாயிரம் ஊழியர்களின் உழைப்பு மற்றும் உயிர் தியாகம், இயற்கை அழிவுகளால் உருவானது. அந்த காலகட்டத்தில் அடிமை தொழிலாளர்கள் வேலைக்கு அமர்த்தி கடுமையான சூழலில் கடுங்குளிர், மழையில் ரயில்பாதை, பாலங்கள் உருவாக்கப்பட்டன. நீலகிரி மாவட்டம் இயற்கை எழில் மட்டுமல்லாமல் வரலாற்று சிறப்புடையது. அவற்றில் பல்வேறு அரண்மனை ஓட்டல்களாக மாற்றப்பட்டுவிட்டது. தேவாலயங்கள், சித்தர்கள் தவம் செய்து உருவான காசி விஸ்வநாதர் கோவில், ஆன்மீக தலைவர்கள் அரவிந்தர், மகாத்மா காந்தி, தத்துவஞானி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் வருகை புரிந்து சொற்பொழிவு நிகழ்த்திய இடங்களை பாரம்பரியமிக்க சுற்றுலா தலங்களாக அறிவிக்க வேண்டும்,'' என்றார்.


ஊட்டி உதவும் கரங்கள் செயலர் சுரேஷ்குமார் பேசுகையில், ''நீலகிரியின் வரலாறு மற்றும் சிறப்பம்சங்களை சுற்றுலா துறை மூலம் மாநில அரசும் எடுத்து செல்ல வேண்டியது அவசியம். இனிவரும் காலங்களில் சுற்றுலாத்துறை பாரம்பரிய தினத்தை மிக சிறப்பாக கொண்டாட வேண்டும்,'' என்றார். சுற்றுலா பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இதில், ஊட்டி நகர விழிப்புணர்வு சங்கம், கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம், ஊட்டி உதவும் கரங்கள் நிர்வாகிகள் பங்கேற்றனர்.


புதன், 7 ஏப்ரல், 2010

போலி நிறுவனங்களை கண்டறிந்தால்... மாணவர்களின் பணம் காலியாகாது

3.போலி நிறுவனங்களை கண்டறிந்தால்... மாணவர்களின் பணம் காலியாகாது

ஊட்டி: 'போலி கல்வி நிறுவனங்களை கண்டறிந்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என வலியுறுத்தப்பட்டுள்ளது.

கூடலூர் நுகர்வோர் மனித உரிமை சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் - மக்கள் மையம் தலைவர் சிவசுப்ரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கை: தற்போது பிளஸ் 2, 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகளும், மற்ற மாணவர்களுக்கு தேர்வுகளும் முடிந்து பள்ளி விடுமுறை காலம் நெருங்கி விட்டது. பல மாணவர்கள் விடுமுறை காலத்தை பயனுள்ளதாக கழிக்க துணை கல்வியாக கம்ப்யூட்டர் பயிற்சி, தட்டச்சு பயிற்சி பெற செல்கின்றனர்.

இதேபோல 10ம் வகுப்பு, பிளஸ் 2 கல்வி முடித்தவர்கள் மேல் கல்விக்காக ஆசிரியர் பயிற்சி, கம்ப்யூட்டர் பயிற்சி, தொழில்நுட்ப பயிற்சி உள்ளிட்ட பல பயிற்சிகளை சேர்கின்றனர். இவர்கள் சேரும் கல்வி நிறுவனங்கள் பல்வேறு கவர்ச்சி கரமான திட்டங்கள், பயிற்சிகள் என அறிவித்து மாணவர்களை கவர்ந்திழுக்கின்றனர். நன்கொடை இல்லை, தரமான கல்வி, பல்கலை கழக சான்று, அரசு அங்கீகாரம் என பல நிலைகளில் விளம்பரப்படுத்துகின்றனர். சில கம்ப்யூட்டர் நிறுவனங்கள் 'ஸ்காலர்ஷிப்' என்ற பெயரிலும் ஏமாற்றுகின்றனர். இதுபோன்ற பயிற்சிகள், மேல்படிப்புகள் சேர விரும்பும் மாணவர்கள், அந்நிறுவனங்கள் அங்கீகரிக்கப்பட்டவையா என அறிவது அவசியம். கம்ப்யூட்டர் பயிற்சி எங்கு வேண்டுமானாலும் பயிலலாம். ஆனால், முறையான சான்றிதழ் வேண்டுமெனில் தொழில்நுட்ப கல்வித்துறை, தமிழ்நாடு அரசு சான்று அல்லது பல்கலை கழக சான்று மட்டுமே பயனளிக்க கூடியதாக அமையும். பல கம்ப்யூட்டர் நிறுவனங்கள் தங்களை சில பல்கலை கழகங்களின் கீழ் செயல்படுவதாக அறிவித்து பயிற்சி அளித்து பின்னர் உரிய கட்டணங்கள் பெற்று பல்கலை கழக சான்று அளிக்காமல் இழுத்தடிப்பு செய்வதாக புகார்கள் வருகின்றன. இதே போல போலி சான்றிதழ்களும் வழங்கியுள்ளனர். மாணவர்கள் தேர்வுக்கு செல்லும் போதுதான் இதன் உண்மை நிலை தெரியும்.

அப்போது ஏமாற்றப்பட்டதை எண்ணி வேதனைப்படுவதும், போராட்டம் நடத்துவதும், வழக்குப்போடுவதும் இழந்ததை மீட்டு தராது. எனவே, கல்வி நிலையம் எந்த பல்கலைக் கழகத்துடன் இணைந்துள்ளது; எந்தெந்த பாட பிரிவுகளுக்கு அனுமதி பெற்றுள்ளது என்பன உள்ளிட்ட தகவல்களை உறுதிபடுத்தி மாணவர்கள் சேர வேண்டும்;

இதுபோன்ற மோசடிகளில் ஈடுபடும் கல்வி நிறுவனங்களை சம்மந்தப்பட்ட துறையினர் ஜூன் மாதம் அல்லது கல்வி துவங்கும் காலத்திற்கு முன்னர் உரிய ஆய்வுகள் மேற்கொண்டு அவர்களை கண்காணிப்பது அவசியம். இதன்மூலம் போலி கல்வி நிறுவனங்கள் துவங்காமல் இருக்கவும் அவை கட்டுப்படுத்த முடியும். இதுபோன்ற நேர்மையற்ற வணிக நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, சிவசுப்ரமணியம் கூறியுள்ளார்.

திங்கள், 5 ஏப்ரல், 2010

Coimbatore Select Date Contents Page Page Size Logout
    Main1 First edition ð£ó£Àñ¡ø õ÷£èˆF™, C¬ôèœ ¬õ‚è ÞQ ÜÂñF A¬ìò£¶ * Hóîñ˜ ñ¡«ñ£è¡Cƒ ܪñK‚è£ «ð£Aø£˜ * ªê¡¬ù A‡®J™ ðòƒèó‹ : ì£‚ì˜ ñ¬ùM ð´ªè£¬ô * ê£Qò£ I˜ê£ F¼ñíˆF™ ¹Fò C‚è™       Updated at:   3:45:38 AM


page1


page2


page3


page4


page5


page6


page7


page8


page9


page10


page11


page12


page13


page14


page15


page16


page17


page18


page19


page20


page21


page22


page23


page24


page25


page26


page27


page28


page29


page30

லஞ்சம் ஒழிய புதிய ‘போர்’ தேவை

லஞ்சம் ஒழிய புதிய ‘போர்’ தேவை 
முன்னாள் மத்திய அரசு செயலர் பேச்சு 
ஊட்டி, ஏப். 5:
லஞ்சத்தை ஒழிக்க மக்கள் புதிய ‘போரை‘ துவக்க வேண்டும் என உலக நுகர்வோர் தினத் தை முன்னிட்டு நடந்த சிறப்பு நுகர்வோர் விழிப்புணர்வு கூட்டத்தில் முன் னாள் மத்திய அரசு செயலர் அம்புரோஸ் கேட்டு கொண்டார்.
மாவட்ட நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு, கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம், மக்கள் மையங்கள், கிராம நுகர்வோர் மன்றங்கள் உலக நுகர்வோர் தினத்தை முன்னி ட்டு சிறப்பு நுகர்வோர் விழிப்புணர்வு முகாமினை நடத்தியது. உதகை மக்கள் மைய ஒருங்கிணைப்பாளர் மாரிமுத்து வரவேற்றார். மாவட்ட நுகர்வோர் கூட்டமைப்பு தலைவர் கிருஷ்ணசாமி தலைமை வகித்தார்.
உந்துனர் அறக்கட்டளை அறங்காவலரும், முன்னாள் மத்திய அரசு செயலாருமான அம்புரோஸ் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசியதாவது:
சமூக நலனில் அக்கரை கொண்டோர் தற்போது 10 முதல் 15 பேர் மட்டுமே உள்ளனர். இதனால் தான் சமூக மாற்றம் என்பது பெரும் கேள்வி குறியாக உள்ளது. இன்று நுகர்வோர் தினம் பல நிலைகளில் அனுசரிக்கப்படுகிறது. ஆடம்பரமற்ற நுகர்வு அவசியத்தை மக்களுக்கு எடுத்து கூற வேண்டும். அதிக ஆசை, பணத்தை பல மடங்காக்கும் திட்டம் என கூறி ஏமாற்றி வருகினறனர். பணத்தை முதலீடு செய்வது என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம். பணத்தை முதலீடு செய்யும் முன் அவை சிறந்த நிறுவனமான என யோசிக்க வேண்டும். அரசு துறைகள், பொதுத்துறை வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், அஞ்சலகங்கள் அளிக்காத வட்டி யை, பாதுகாப்பை, உத்திரவாதத்தை பிற நிறுவனங்கள் அளிக்க இயலாது. விளம்பரத்தில் கூறுவதை எந்த தனியார் நிறுவனமும் செய்திருக்காது. காப்பீடு செய்ய தற்போது பல நிறுவனங்கள் முளைத்துள்ளன. முன்னனி நிறுவனங்கள் பெயரில் சில போலி நிறுவனங்களும் உண்டு. முகவர்களிடம் உறுதிபடுத்தி பணம் செலுத்த வேண்டும். விளம்பரங்களின் உண்மை தன்மைகளை ஆராயும் பொறுப்பு நுகர்வோர்களுக்கு உண்டு. கலப்படம், தேவையற்ற ஊட்டச்சத்து என்ற பெயரில் விற்பனை போன்றவை நுகர்வோர்களை ஏமாற்றும் வழிமுறைகளில் ஒன்றாகும்.
நுகர்வோர்கள் தரமான பொருட்களை வாங்க நுகர்வோர் அமைப்புகள் வழிகாட்டியாக அமைய வேண்டும். தெளிவில்லா நுகர்வோர் சமுதாயம் தெளிவுற செய்யும் பணி நுகர்வோர் அமைப்புக்களுடைதாகும்.அனைத்து துறைகளிம் லஞ்சம் தலை தூக்கியுள்ளது. இதனை ஒழிக்க வேண்டும். லஞ்சத்தை ஒழிக்க மக்கள் புதிய போரை துவங்க வேண்டும் என்றார்.கூட்டத்தில் மாவட்ட கூட்டமைப்பு செயலாளர் வீரபாண்டியன், கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு தலைவர் சிவசுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர். 
thanks dinakaran 5/04/2010









Login
Make this my homepage
Most viewed articles
Blogs
   
 Apr 04 , 2010
 
 
Front Page
 
General News
 
Hello Doctor
 
General Tamilnadu News/Rassi Malar
 
World News/Ads
 
General News/Rassi Malar
 
General News
 
Tea Kadai Bench
 
Second Front Page
 
T.V / Rassi / National News
 
General Nationalfree Ads/Hello Doctor
 
General News
 
Classified Ads
 
Hello Thozhi
 
Book Review/Sports News
 
Last Page
 
Front Page
 
General News
 
Vazhikatti Spl News
 
General Tamilnadu News
 
General National News/Ads
 
District Page
 
General National News/Ads
 
Tea Kaddai Bench
 
Second Front Page
 
General Tamilnadu News
 
General National News
 
General National News
 
General News
 
Vazhikatti Spl News
 
General Tamilnadu News
 
General Tamilnadu News
 
Sports News
 
Last Page
 
Sup Page 1
 
Sup Page 2
 
Sup Page 3
 
Sup Page 4
 
Tirupur 1
 
Tirupur 2
 
Tirupur 3
 
Tirupur 4
 
Nilgiri 1
 
Nilgiri 2
 
 
Copyright and Trade Mark Notice © owned by or licensed to Dinamalar ePaper .