அன்புடன் வரவேற்கின்றோம்


you are welcome to our web page

எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்

Please give your GOOD IDEAS FOR DEVELOPING
THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPS

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்

வியாழன், 27 அக்டோபர், 2011

மூங்கில்

மூங்கில்




கியோத்தோ யப்பானிலுள்ள மூங்கில் காடு

உயிரியல் வகைப்பாடு

திணை:

(இராச்சியம்) நிலைத்திணை



பிரிவு: பூக்கும் நிலைத்திணை



வகுப்பு Liliopsida



வரிசை: Poales



குடும்பம்: Poaceae



துணைக்குடும்பம்: Bambusoideae



Supertribe: Bambusodae



Tribe: Bambuseae

Kunth ex Dumort.



பல்வகைமை

Around 92 genera and 1,000 species

Subtribes

Arthrostylidiinae

Arundinariinae

Bambusinae

Chusqueinae

Guaduinae

Melocanninae

Nastinae

Racemobambodinae

Shibataeinae

See the full Taxonomy of the Bambuseae.



மூங்கில் புல் வகையைச் சேர்ந்த ஒரு தாவரமாகும். புல் வகையிலேயே மிகவும் பெரிதாக வளரக்கூடியது மூங்கிலேயாகும். சில மரங்கள் ஒரு நாளில் ஒரு மீட்டர் உயரம் வரை வளர்கின்றன. இவற்றில் ஏறத்தாழ 1000 சிற்றினங்கள் உள்ளன. உலகம் முழுவதும் 1200க்கும் மேற்பட்ட இனவகை மூங்கில்கள் வளர்க்கப்படுகின்றன. உண்மையில் மூங்கில் புல் வகையைச் சேர்ந்த ஒரு மரம் தான். மூங்கில் மரம் 40 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. இதன் அதிக அளவு பருமன் 1 சென்ட்டிமீட்டரிலிருந்து 30 சென்ட்டிமீட்டர் வரை இருக்கும். மூங்கில் மிகவும் வேகமாக வளரக்கூடிய ஒரு மரம். ஒரு மூங்கில் மரத்தின் வயது 60 ஆண்டுகள். ஆனால், அது 60 அடி உயரம் வரை வளரும் காலமே 59 நாட்கள்தான். கடல் மட்டத்திற்கு மேல் 4000 மீட்டர் உயரம் உள்ள பிரதேசங்களில்தான் மூங்கில் நன்றாக வளரும். எனவே மலைச்சரிவுகளும், மிக வறண்ட பகுதிகளும் மூங்கில் வளர்வதற்கு ஏற்ற இடங்கள்.சீனா, இந்தியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா,நேபாளம்,பங்களாதேசு, கோஸ்டிரிக்கா, கென்யா ஆகிய நாடுகள் மூங்கில் உற்பத்தியில் முன்னணி நாடுகளாக இருக்கின்றன.



இந்தியாவில் 156 வகை மூங்கில் இனங்கள் பயிரிடப்படுகின்றன. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள், மேற்கு வங்காளம், ஒரிசா, ஆந்திரப்பிரதேசம், மகாராஷ்டிரா மாநிலங்கள் முதலிடம் பெற்று நிற்பவை. மூங்கிலின் வேர் நிலத்தை ஒரு அடிக்கு மேல் பற்றிக் கொண்டிருக்கும். மூங்கில் ஒன்றோடொன்று இணைந்து வளரும் தொகுப்பு 6 கியூபிக் மீட்டர் வரை இருக்கும்.



பொருளடக்கம்

1 பயன்கள்

1.1 காட்சியகம்

1.2 விலங்குகளின் உணவு

2 இவற்றையும் பார்க்கவும்





[தொகு] பயன்கள்

மூங்கில் குடிசை வீடுகள் கட்டுவதில் மரமாகவும், கட்டிடம் கட்டும் தொழிலிலும் (சாரம் கட்ட), கைவினைப் பொருட்கள் செய்யவும், சிறு தொழில் மற்றும் குடிசைத் தொழில்கள் உள்ளிட்ட ஏராளமான தொழில்களிலும் மிக முக்கிய பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. கிட்டத்தட்ட 1500 பயன்களுக்கு மேல் தரக்கூடிய மூங்கில் மரத்திலிருந்து இன்றும் கூட பலப் பயன்களைப் பெற முடியும் என்று வேளாண் ஆய்வுகள் கூறுகின்றன. இந்தியாவில் வளர்க்கப்படும் மூங்கிலில் 40 சதவீதம் மரக்கூழ் செய்யவும், காகிதத் தொழிற்சாலைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. மற்றவை ஒன்று சேர்க்கப்படாத பகுதிகளில் பயன்படுத்தப்படுகின்றன.



[தொகு] காட்சியகம்



அகப்பைகள்



கூடைகள்



ஏணி

[தொகு] விலங்குகளின் உணவு

இளம் மூங்கில் குருத்துகள், இலைகள் ஆகியன பாண்டா, சிவப்பு பாண்டா, மூங்கில் லெமூர் விலங்குகளின் முதன்மையான உணவாகும். எலிகளும் இவற்றின் பழங்களை உண்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

பச்சைத் தங்கம் மூங்கில்


மார்ச் 2, 2011 by Pandian கருத்துத் தெரிவிக்கவும்



இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் மூங்கில் பன்னெடுங் காலமாக பயிரிடப்படுகிறது.



இந்தியக் காடுகளின் பரப்பளவில் மூங்கில் 12.8 சதவீதம் காகித ஆலைகள், ரேயான் தொழிற்சாலைகளிலும் மூலப்பொருளாக, பெருமளவுக்குப் பயன்படுத்தப்படுகிறது.



வலுவாகவும், நீண்டகாலம் கெடாமலும் இருப்பதால், வீடு கட்டவும், கால்நடைத் தீவனங்கள் தயாரிக்கவும், விவசாயத் தொழில்களுக்கும், மேஜை, நாற்காலிகள், கலைப் பொருள்கள் தயாரிக்கவும் பயன்படுகிறது.உலகச் சந்தையில் மூங்கில் பொருள்களின் மதிப்பு ஆண்டுக்கு 10 மில்லியன் டாலராக உள்ளது. 2015-ம் ஆண்டில் 20 மில்லியன் டாலராக உயரும் என்கிறார்கள். இந்தியாவில் மூங்கில் உற்பத்திப் பொருள்களின் மதிப்பு ரூ.6,505 கோடி. மூங்கில் தேவை பெருமளவுக்கு அதிகரித்து வருகிறது.



எனவே மூங்கிலை, தமிழ்நாட்டில் வணிக ரீதியாக சாகுபடி செய்ய தோட்டக்கலைத் துறை நடவடிக்கை எடுத்து வருவது விவசாயிகளிடம் நல்ல வரவேற்பைப் பெற்று இருக்கிறது. மூங்கில் உற்பத்தியைப் பெருக்கி, விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதே இத்திட்டத்தின் நோக்கம்.



விவசாய வேலைகளுக்கு ஆள்கள் கிடைப்பது இல்லை. தண்ணீர் பற்றாக்குறை, மின்சாரத்தில் நிலையற்ற தன்மை காரணமாக விவசாயம் உபதொழிலாக மாற்றப்படுவதால், பலர் தங்கள் நிலங்களில் சவுக்கு மற்றும் தைல மரங்களை பயிரிடுவது அதிகரித்து வருகிறது. சவுக்கு, தைல மரங்களைவிட மூங்கில் அதிக வருவாய் தரக்கூடிய பயிராகவும், 3 மடங்கு வளர்ச்சி விகிதம் அதிகமாகவும் உள்ளது.வடகிழக்கு மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட முள் இல்லாத மூங்கில் வகைகளை, பல்வேறு தட்பவெப்ப நிலங்களில் விஞ்ஞானிகள் ஆய்வு செய்து, 4 ரகங்களை தமிழ்நாட்டில் பயிரிட ஏற்ற மூங்கில்களாக அறிவித்துள்ளனர். அவை



பேம்பூஸ் நியூட்டன்ஸ்

பேம்பூஸ் பலகுவா

வேம்பூஸ் வல்காரிஸ்

பேம்பூஸ் டுல்டா ரகங்கள்.

தமிழ்நாட்டில் வறண்ட பகுதிகளில் கல் மூங்கில், ஈரச் செழிப்பான பகுதிகளில் பொந்து மூங்கில் அதிகம் பயிரிடப்படுகிறது.



மூங்கிலை நடவு செய்ய, நாற்றுவிட்டு நடுவது, மூங்கில் கிழங்கை வெட்டி எடுத்து நடவு செய்தல், மூங்கில் கழிகளை கிழங்குடன் வெட்டி எடுத்து நடுதல், திசு வளர்ப்பு முறை, மூங்கில் கழிகள் மற்றும் பக்கக் கிளைகளை முளைக்க வைத்து நடுதல் எனப் பல வழிமுறைகள் உள்ளன. நாற்றுவிட்டு நடவு செய்தல் சிறந்த முறையாகக் கருதப்படுகிறது. கோடைகாலங்களில் 10 நாள்களுக்கு ஒருமுறை பாத்திக்கு 25 முதல் 50 லிட்டர் வரை நீர ஊற்றினால் நல்ல பலன் கிடைக்கும். மூங்கிலை 200 வகையான பூச்சிகள் சேதப்படுத்தும். என்றாலும் 10-க்கும் குறைவானவைகளே முக்கியமானவை. எனவே ஒருங்கிணைந்த பூச்சி, நோய்க் கட்டுப்பாடு முறைகள் தேவை.



பராமரிப்புக்கு ஏற்ப நட்ட 4-ம் ஆண்டு முதல் மூங்கில் கழிகளை வெட்டி அறுவடை செய்யலாம். கல் மூங்கில் ஹெக்டேருக்கு 2,400 கழிகளும், பொந்து மூங்கில் ஹெக்டேருக்கு 1,662 கழிகளும் கிடைக்கும். மூங்கில் சாகுபடி மூலம் ஏக்கருக்கு 6-ம் ஆண்டு ரூ. 25,500 ம், 7-ம் ஆண்டு ரூ. 30,800ம், 8-ம் ஆண்டு ரூ. 36,200ம், 9 முதல் 15-ம் ஆண்டு வரை ரூ. 39,600 வருவாய் கிடைக்கும் என்று வேளாண் துறை தெரிவிக்கிறது. 5 ஆண்டுகளுக்கு மொத்தச் செலவு ஏக்கருக்கு ரூ. 10 ஆயிரம்.



இதுகுறித்து கடலூரை அடுத்த தியாகவல்லி விவசாயி சாமி கச்சிராயர் கூறுகையில், மூங்கில் விவசாயத்துக்கு ஹெக்டேருக்கு 2 ஆண்டுகளுக்கு மொத்தம் ரூ. 8 ஆயிரம் அரசு மானியம் வழங்கப்படுகிறது. தியாகவல்லி, திருச்சோபுரம் பகுதிகளில் 5 ஏக்கரில் கல் மூங்கில் பயிரிட்டுள்ளேன். சவுக்கு மற்றும் தைல மரச் சாகுபடியைவிட மூங்கில் லாபகரமானது. விரைவில் வளரும். 4 ஆண்டுகள் வரை மணிலா, அவரை, முள்ளங்கி, தர்ப்பூசனி போன்றவற்றை ஊடு பயிராகச் சாகுபடி செய்யலாம். 5 ஆண்டுகளுக்குப் பின் ஏக்கருக்கு ரூ. 60 ஆயிரம் வரை லாபம் கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன் என்றார்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக