கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதி
அரசு கேபிள் டிவி ஆபரேட்டர்கள், வாடிக்கையாளர்களிடம் ரூ.100 வசூலிப்பதாக,
கூடலூர் நுகர்வோர் மனித வள பாதுகாப்பு மையம் புகார் தெரிவித்துள்ளது.
நுகர்வோர் பாதுகாப்பு மையத் தலைவர் சு. சிவசுப்பிரமணியம், மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள புகார் மனுவில் கூறியிருப்பது:
குறைந்த கட்டணத்தில் சேவை வழங்க கேபிள் டிவியை அரசு ஆரம்பித்தது. இந் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டபோதே உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்களை அழைத்து விதிமுறைகளை அறிவித்தது. இந்த நடைமுறைகளுக்கு கட்டுப்பட்டவர்களை மட்டுமே அரசு கேபிள் டிவி நிறுவனத்தில் இணைத்துக் கொண்டது.
மாதந்தோறும் வாடிக்கையாளர்களிடமிருந்து ரூ.70 வசூலிக்க வேண்டும் என்றும், அதில் ரூ.20-ஐ அரசுக்குச் செலுத்த வேண்டும் என்றும் அறிவித்திருந்தது. இதற்கு ஒப்புக்கொண்ட ஆபரேட்டர்கள், இப்போது பல பகுதியிலும் ரூ.100 வசூலிக்கின்றனர்.
கூடுதல் பணம் தர மறுப்பவர்களின் இணைப்புகள் துண்டிக்கப்படுவதாகப் புகார்கள் வந்துள்ளன.
மேலும், அரசு நிபந்தனைக்கு மாறாக 40 முதல் 50 சேனல்கள் மட்டுமே ஒளிபரப்பப்படுகின்றன. அதிலும், பெரும்பாலான சேனல்கள் தெளிவாகத் தெரிவதில்லை.
ஆபரேட்டர்கள் வசூலிக்கும் தொகைக்கு அரசு கேபிள் டிவி கார்பரேஷன் சார்பில் ரசீது வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்
மக்கள் மையம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக