அரசு ஒதுக்கீட்டின் படி ரேஷன் கடைகளுக்கு பொருட்கள் ஒதுக்கீடு
கூடலூர்,
: கூடலூர் வருவாய் கோட்ட நுகர்வோர் பாதுகாப்பு கூட்டம் கூடலூர் ஆர்டிஓ
ஆதிமூலம் தலைமையில் ஆர்டிஓ அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
வட்ட வழங்கல் அலுவலர்கள் ராஜேந்திரன், ஜான் மனோகரன் ஆகியோர் பங்கேற்றனர்.
நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்ரமணியம், செயலாளர் பொன் கணேசன்,
எரிவாயு நிறுவன நிர்வாகிகள் உதயகுமார், மிசாத் அலி, அப்துல் ரசீது உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
நுகர்வோர்
சார்பில் நியாய விலை கடைகளில் மாதத்திற்கு 10 லிட்டர் மண்ªண்ணெய் பெற்று
வழங்க வேண்டும். உரிய நேரத்தில் கடை திறக்கப்பட வேண்டும்.
இருப்பு பட்டியல் முறையாக பராமரிக்கப்பட வேண்டும்.
காஸ்
ஏஜன்சி வாகனங்களுக்கு தனி அடையாளம், ஊழியர்கள் சீருடை அணிந்து அனைத்து
பகுதிக்கும் முறைப்படி சிலிண்டர்களை வினியோகம் செய்ய வேண்டும்.
கூடலூர்
கிளையில் இருந்து உரிய காலத்தில் பஸ்கள் இயக்கப்பட வேண்டும். அரசு
மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்காமல் தனியார் மருத்துவமனைக்கு
பரிந்துரைப்பதை தவிர்க்க வேண்டும்.
நகராட்சியில் சுகாதார நடவடிக்கையை விரைவு படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டது.
ஆர்டிஓ ஆதிமூலம் கூறியதாவது:
அரசு
ஒதுக்கீட்டிற்கு ஏற்ப ரேஷன் கடைகளுக்கு 100 சதவீதம் ரேஷன் பொருட்கள்
வழங்கப்பட்டு வருகிறது. உரிய முறையில் நுகர்வோருக்கு கிடைக்க நடவடிக்கை
எடுக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
எரிவாயு ஏஜன்சிகள் குறித்த காலத்தில் நுகர்வோருக்கு சிலிண்டர்களை வழங்க வேண்டும்.
கிராமப்புற பகுதிக்கு நேரடியாக எடுத்து சென்று சிலிண்டர் சப்ளை செய்யும் நாள், நேரம் குறித்து வட்ட வழங்கல் அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளுக்கு வட்ட வழங்கல் அலுவலர் மூலம் சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளுக்கு தகவல் தெரிவித்து முன் பதிவு செய்துள்ளவர்களுக்கு உரிய காலத்தில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

பிற
துறைகளில் உள்ள குறைபாடுகள் குறித்து சம்பந்தப்பட்ட துறைகளுக்கு
தெரிவித்து அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.