பந்தலூர்:"பந்தலூர் அரசு மருத்துவமனையை நவீன மயமாக்க வேண்டும்,' என வலியுறுத்தப்பட்டுள்ளது.கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்ரமணியம், சுகாதாரத்துறை இயக்குனருக்கு அனுப்பியுள்ள மனு:பந்தலூர் தாலுகா தலைமை அரசு மருத்துவமனை தற்போதும் புறநோயாளிகள் மட்டும் பயன்பெறும் வகையில் செயல்படுகிறது. இதனால் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 30 கி.மீ., தூரமுள்ள கூடலூர் அரசு மருத்துவமனை அல்லது பத்தேரி தனியார் மருத்துவமனைகளை நாட வேண்டியுள்ளது. தற்போது மருத்துவமனையில் 5 டாக்டர்கள் உள்ளனர். எனினும், போதிய உதவியாளர்கள்,செவிலியர்கள், லேப்டெக்னீசியன் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.இங்கு ரத்த பரிசோதனை மையம் அமைக்கவும், அவசர சிகிச்சைக்கு வருவோருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கவும், பழுதடைந்துள்ள எக்ஸ்- ரே இயந்திரத்தை சீரமைக்கவும் நடவடிக்கை எடுத்து, இந்த மருத்துவ மனையை நவீன மயமாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு சிவசுப்ரமணியம் கூறியுள்ளார்.
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக