இந்தி கட்டுரை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
கூடலூர் ராமகிருஷ்ணா உயர்நிலை பள்ளியில் கட்டுரை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ்க ளும் வழங்க பட்டது. இந்திய அரசு நேரு யுவகேந்திரா நீலகிரி சார்பில் சுவாமி விவேகானந்தா வாழ்க்கை குறித்து கட்டுரை போட்டி இந்தியில் நடத்த பட்டது இதில் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்று கட்டுரைகளை இந்தியில் எழுதினர்கள். இதில் முதல் பரிசு சாபிரா இரண்டாம் பரிசு வித்யா முன்றாம் பரிசு ஆர் அகிலா ஆகியோர் பெற்றனர். இவர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி கூடலூர் ராமகிருஷ்ணா உயர்நிலை பள்ளியில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் தலைமை தாங்கினார். கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம் முன்னிலை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மின்சார வாரிய உதவி மின் கோட்ட பொறியாளர் முரளிதரன் பேசும்போது ஹிந்தி இந்தியாவில் முக்கிய மொழியாகும். மத்திய அரசு பணிகளுக்கு இந்தி தெரிந்து இருப்பது அவசியம். வெளி மாநிலங்களுக்கு செல்லும் போது மொழி தெரியாமல் தவிக்கும் நிலையில் இன்று நாம் சிக்கிக் கொண்டுள்ளோம் என்பது குறிப்பிட தக்கது. எந்த மொழியையும் யாரிடமும் திணிக்க முடியாது விருப்பட்டு கற்றுக் கொள்வதை தடுக்கவும் முடியாது. தாய் மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்து கற்று கொண்டு மற்ற மொழிகளும் கற்று கொள்வது நம்மை முன்னேற்றி கொள்வதற்கு பெரும் உதவியாக அமையும் என்றார்.
தொடர்ந்து கட்டுரை போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.
நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் பாலகிருஷ்ணன், திவ்யா தட்டச்சு பள்ளி ஆசிரியர் கதிரவன் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள். முன்னதாக நுகர்வோர் மைய செயலாளர் கணேசன் வரவேற்றார் முடிவில் பள்ளி தலைமை ஆசிரியர் லில்லி நன்றி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக