அன்புடன் வரவேற்கின்றோம்


you are welcome to our web page

எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்

Please give your GOOD IDEAS FOR DEVELOPING
THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPS

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்

சனி, 28 ஜூன், 2014

consumer information protection centers

http://ncdrc.nic.in/images/logo4.gif

http://www.consumercourt.in/

http://www.core.nic.in/

http://www.cccindia.co/

http://www.corecentre.org/

http://www.consumersforum.info/

pls visit our webs http://cchepnlg.blogspot.in/ http://cchepeye.blogspot.in/ http://consumernlg.blogspot.in/

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்



  

ஞாயிறு, 22 ஜூன், 2014

நுகர்வோர் விழிப்புணர்வு தெரு பிரச்சாரம்

உதகை கந்தல் பெனடிக் பகுதியில் நுகர்வோர் விழிப்புணர்வு தெரு பிரச்சாரம் மேற்கொள்ள பட்டது.  தமிழ்நாடு அரசு உணவு பொருள் வழங்கள் நுகர்வோர் பாதுகப்பு துறை மாவட்ட நிர்வாகம் சார்பில் நுகர்வோர் விழிப்புணர்வு தெரு முனை பிரச்சரம் மேற்கொள்ள பட்டது உதகை தனி வட்டாச்சியர் பால்ராஜ் வரவேற்றார். நிகழ்ச்சிக்கு மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர்பாதுகாப்பு அலுவலர் நல்ல சாமி தலைமை தங்கினார்  மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர்  முன்னிலை வகித்தார்.

மாவட்ட வருவாய் அலுவலர் பாஸ்கர பாண்டியன் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.   

உதகை பெத்தலகேம் பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்றத்தினர் தெரு நாடகம் மூலம் மக்கள் மத்தியில் நுகர்வோர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர் 

நிகழ்ச்சியில்  கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம் புளுமௌண்டன் நுகர்வோர் பாதுகாப்பு குழு செயலாளர் ராஜன் கோத்தகிரி நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் நாகேந்திரன் குன்னூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் மனோகரன் செயலர் சபாபதி உதகை நுகர்வோர் பதுகப்பு சங்க செயலாளர் தருமலிங்கம்  பெத்தலகேம் பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஆசிரியர் குணசீலி ஆகியோர் ஆகியோர் கலந்து கொண்டனர் முடிவில் உதகை வட்ட வழங்கள் அலுவலர் பால்ராஜ் நன்றி கூறினார்.
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

சனி, 14 ஜூன், 2014

நித்தம் உயிர்காக்கும் ரத்தம்: இன்று உலக ரத்த தானம் செய்வோர் தினம்


ரத்ததானம் அளிப்பதன் மூலம், யாரோ ஒருவருடைய உயிர் காப்பற்றப்படுகிறது. மற்றொருவர் ரத்த தானம் செய்வதற்கும் வழிகாட்டியாக அமைகிறது. இன்று நீங்கள் ரத்த தானம் செய்தால், அது நாளை உங்களுக்கு கூட பயன்படலாம். பாதுகாப்பாக ரத்ததானம் செய்வது பற்றி போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஜூன் 14ம் தேதி, உலக ரத்ததானம் செய்வோர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. "தாய்மார்களை காப்பற்ற, பாதுகாப்பாக ரத்தம் அளித்தல்' இந்த ஆண்டு இத்தினத்தின் மையக்கருத்தாக உள்ளது.


ரத்தம் அளிக்கும் முறை:

நல்ல உடல்நலத்துடன், எடை 45 கிலோவுக்கு மேல் உள்ள, 18 முதல் 60 வயது உள்ள எவரும் ரத்ததானம் செய்யலாம். ரத்த அழுத்தம், நாடித்துடிப்பு, ஹீமோகுளோபின் ஆகியவற்றை சோதனை செய்த பின், ரத்ததானம் செய்ய வேண்டும். உடலின் வெப்பநிலை 37.50 டிகிரி செல்சியசுக்கு மிகாமல் இருக்க வேண்டும். சராசரியாக நமது உடலில் 5 லிட்டர் ரத்தம் இருக்கும். தானத்தின் போது, 350 மி.லி., ரத்தம் மட்டுமே எடுத்துக்கொள்ளப்படுகிறது. 2 நாட்களில் இழந்த ரத்தத்தை உடல் மீட்டு விடுகிறது. 2 மாதங்களில், சிவப்பணுக்களின் எண்ணிக்கை, சரியான அளவுக்கு வந்து விடுகிறது. மூன்று மாதத்துக்கு ஒரு முறை ரத்ததானம் வழங்கலாம்.


ரத்தம் அளிப்பதால் ஏற்படும் நன்மை:

ரத்தம் வழங்குவதால், மற்றவர் பயன்பெற்றாலும், தானம் செய்பவர்களுக்கும் இது பலன் அளிக்கிறது. புதிதாக ரத்தத்தை உருவாக்கும் முயற்சியாகவும் இதை கருதலாம். ரத்தத்தில் உள்ள இரும்புச்சத்தை சரியான அளவில் வைத்துக் கொள்ள ரத்ததானம் செய்வது உதவுகிறது. ரத்தத்தில் அதிகப்படியாக உள்ள கொழுப்பு, தானம் செய்யும் போது சீரடைகிறது. ஒரு யூனிட் ரத்தத்தை மூன்று பகுதியாக பிரித்து, தேவைப்படுபவர்களுக்கு ரத்த சிவப்பணுக்கள், பிளாஸ்மா, பிளேட்ளட்கள் என பயன்படுத்த முடியும். இதனால் மூன்று பேர் உயிரை, ஒருவரால் காப்பாற்ற முடிகிறது. தினந்தோறும் நூற்றுக்கணக்கான பேருக்கு ஏதாவது ஒரு விதத்தில் ரத்தம் தேவைப்படுகிறது. ஒவ்வொருவரும் தானாக முன்வந்து தானம் செய்தால் மட்டுமே, தேவைப்படும் ரத்தத்தை பெற முடியும். இதுவரை மனித ரத்தத்துக்கு மாற்றாக எதுவும் கண்டறியப்படவில்லை.


S.SIVASUBRAMANIAM, President
CENTER FOR CONSUMER HUMAN RESOURCE AND
ENVIRONMENT PROTECTION - CITIZEN CENTER (CCHEP_NLG)
PANDALUR, PANDALUR (Po & Tk)   THE NILGIRIS  643 233.
94 88 520 800-94 898 60 250,   944 29 740 75,  948 639 34 06

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்