அன்புடன் வரவேற்கின்றோம்

you are welcome to our web page

எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்

Please give your GOOD IDEAS FOR DEVELOPING
THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPS

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்

வெள்ளி, 28 நவம்பர், 2014

நவம்பர் 30-ம் தேதி கலைஞர் தொலைகாட்சி நெஞ்சு பொறுக்குதில்லையே பாருங்கள்

அன்பு நண்பர்களே நலமா? வளமான வாழ்த்துக்கள்.

நான் பங்கேற்ற 
கலைஞர் தொலைகாட்சி நெஞ்சு பொறுக்குதில்லையே
உணவு கலப்படம் 
நிகழ்ச்சி எதிர்வரும் 
நவம்பர் 30-ம் தேதி 
ஞாயிற்று கிழமை 
மதியம் 1.30 மணிக்கு
ஒளிபரப்பாகிறது 
நிகழ்ச்சியை பார்த்து அதற்க்கான 
நிறை குறைகளை எனக்கு தெரிவியுங்கள் 
நன்றி 
Dear friends
How are you?
30.nov 2014
Sunday

1.30-PM telecast I attend 
Kalainger TV
Nenju porukku thillaiye prrogramme

Kind watch

S.SIVASUBRAMANIAM, President
CENTER FOR CONSUMER HUMAN RESOURCE AND
ENVIRONMENT PROTECTION - CITIZEN CENTER (CCHEP_NLG)
PANDALUR, PANDALUR (Po & Tk)   THE NILGIRIS  643 233.
94 88 520 800 - 94 898 60 250  -  944 29 740 75  - 948 639 34 06

செவ்வாய், 25 நவம்பர், 2014

இயற்கை பாதுகாப்பு தினம்

அத்திக்குன்னா அரசு உயர் நிலை பள்ளியில்
இயற்கை பாதுகாப்பு தினம் கடைபிடிக்க பட்டது.

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்றம், தேசிய பசுமை படை ஆகியன சார்பில் அத்திக்குன்னா அரசு உயர்நிலை பள்ளியில் இயற்கை பாதுகாப்பு தினம் அனுசரிக்கபட்டது.  பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் தாமோதர சுந்தரம்  தலைமை தாங்கினார்.
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம் இயற்கை பாதுகாப்பின் அவசியங்கள் குறித்து பேசும்போது நமக்கு உணவு, உடை, நீர், காற்று என அனைத்தும் இயற்கையே தருகிறது.  நமது செயல்களால் இயற்கை பதிப்புகள் அதிகரிக்கிறது.  இயற்கையில் ஏற்படும் மாற்றங்களினால் ஏற்படும் விளைவுகள் நமக்கே பாதிப்பாக அமைகிறது.  நமது தேவைகளை குறைத்து கொண்டு இயற்கையோடு இணைந்த வாழ்வை மேற்கொள்வதால் இயற்கை அழிவை தடுக்க முடியும்.  இயற்கைக்கு பாதிப்பு விளைவிக்கும் பொருட்களை பயன்படுத்த கூடாது.   நமது சந்ததியினர் நலமாக வாழ நாம் இயற்கையை பாதுகாக்க வேண்டும் என்றார்.
தொடர்ந்து பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் இணைந்து இயற்கை பாதுகாப்பு உறுதிமொழி எடுத்துகொன்டனர்.

நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பள்ளி ஆசிரியர் பிரதீப் வரவேற்றார்.  முடிவில் ஆசிரியர் ரகுபதி நன்றி கூறினார்.

ஞாயிறு, 23 நவம்பர், 2014

மழவன்சேரம்பாடியில்  இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், நீலகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், ஷாலோம் சேரிட்டபிள் டிரஸ்ட்,  மலையரசன் விளையாட்டு குழு சூப்பர் பாய்ஸ் மழவன்சேரம்பாடி  ஆகியன இணைந்து  இலவச கண் சிகிச்சை முகாமினை மழவன்சேரம்பாடி ஊராட்சி ஒன்றிய  துவக்க பள்ளியில் நடத்தின.
முகாமிற்கு சுகாதார ஆய்வாளர் கணையேந்திரன் தலைமை  தாங்கினார். கூடலூர் நுகர்வோர் மைய  தலைவர் சிவசுப்பிரமணியம்,  ஊர் பிரமுகர்கள் குமார், ராஜகோபால், பாய்குமார், மணி, ஷாலோம் சேரிட்டபிள் டிரஸ்ட் செயலாளர் சுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமில் உதகை அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர்  அமராவதி  தலைமையிலான மருத்துவ குழுவினர் கண் நோயினால் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளித்தனர். முகாமில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.  இதில் 15 பேர் கண் புரை அறுவை சிகிச்சைக்கு உதகை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
முகாமில் கொளப்பள்ளி வியாபாரிகள் சங்க செயலாளர் செல்வகுமார், கண் தொழில் நுட்புனர் முத்துராஜ், பார்வை இழப்பு தடுப்பு சங்க ஒருங்கிணைப்பாளர் மங்கை, ஸ்ரீதர், கூடலூர் நுகர்வோர் மைய ஒருங்கிணைப்பாளர்  தனிஸ்லாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக மலையரசன் விளையாட்டு குழு தலைவர் இளங்கோவன்  வரவேற்றார்.  முடிவில் மலையரசன் விளையாட்டு குழு செயலாளர் மூர்த்தி நன்றி கூறினார்.

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

மின்சார சிக்கனம் விழிப்புணர்வு நிகழ்ச்சி

மின்சார சிக்கனம் விழிப்புணர்வு நிகழ்ச்சி
பந்தலூர் புனித சேவியர் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் மின்சார சிக்கனம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது. பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்றம். கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் ஆகியன இணைந்து நடத்திய இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் சகோ செலின் தலைமை தாங்கினார்.  தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக செயற்பொறியாளர் சிவராஜ், கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம், மகாத்மா காந்தி பொது சேவை மைய தலைவர் நவுசாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக மேற்பார்வை பொறியாளர் ஆல்தொரை பேசும்போது தற்போது மின்சாரத்தின் தேவை அதிகரித்து வருகின்றது. மின் உற்பத்தி மேற்க்கொள்ள கூடுதல் செலவுகள் மற்றும் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை உள்ளது.   தமிழகத்தினை விட மற்ற மாநிலங்கள் குறிப்பாக அரியானா மேற்குவங்காளம் மத்தியபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மின்சார தட்டுபாடு அதிகமாக உள்ளது. மின்தட்டுபாடுகளை போக்க மின்சாரத்தினை சிக்கனமாக செலவிடுவது அவசியமாகிறது. குண்டுபல்புகளை மாற்றி சி.எப்.எல் அல்லது எல்.இ.டி பல்புகளை பயன்படுத்துவது. மின் சாதன பொருட்களை சுவர்களின் ஓரத்தில் வைக்காமல் இடைவெளி விட்டு வைப்பது தேவையற்ற நேரங்களில் மின்சார உபயோக பொருட்களை பயன்படுத்தாமல் இருப்பது பல்புகள் நமக்கு தேவைக்கேற்ப தாழ்வாக அமைத்துக்கொள்ளல் போன்றவை மின்சாரத்தினை சிக்கனப்படுத்த எளிய வழிகள் ஆகும். மின்சார சிக்கனத்தின் மூலம் மாதந்திர மின்செலவும் குறையும். அரசும் தற்போது 500 யூனிட் வரை வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்துவதற்கு மட்டுமே மானியம் வழங்குகிறது. தற்போது 35க்கும் மேற்பட்ட பல்கலைகழகங்களில்  சோலார் மூலம் மின்உற்பத்தி செய்து பயன்படுத்த மாநில அரசு முடிவு செய்து நடைமுறைபடுத்தி வருகின்றது.  மேலும் பல்வேறு அரசு நிறுவனங்களிலும் சோலார் மின்சக்தி பயன்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது. வீடுகளில் சோலார் மூலம் மின்தேவைகளை அமைத்துகொண்டால ரீதொழிற்சாலைகளுக்கு மின்சாரம் பயன்படுத்த முடியும். தற்போதைய சூழலில் வினாக பயன்படுத்தும் மின்சாரத்தினை சேமித்தாலே மின்தட்டுபாட்டினை பெருமளவு குறைக்க முடியும். அனைவரும் மின்சாரத்தினை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் 600க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருஙங்கிணைப்பாளர் மார்ட்டின் வரவேற்றார். முடிவில் மாணவி      நன்றி கூறினார்.

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

சனி, 22 நவம்பர், 2014

டிசம்பர் 7ம் தேதி கலைஞர் தொலைகாட்சி

அன்பு நண்பர்களே நலமா? வளமான வாழ்த்துக்கள்.
நான் பங்கேற்ற
கலைஞர் தொலைகாட்சி  நெஞ்சு பொறுக்குதில்லையே
நிகழ்ச்சி எதிர்வரும்
டிசம்பர் 7ம் தேதி
ஞாயிற்று கிழமை மதியம் 1.30 மணிக்கு
ஒளிபரப்பாகிறது
நிகழ்ச்சியை பார்த்து அதற்க்கான
நிறை குறைகளை எனக்கு தெரிவியுங்கள்
நன்றி

Dear friends   How are you?
7th Dec 2014 Sunday
1.30-PM telecast I attend
Kalainger TV
Nenju porukku thillaiye prrogramme
Kind watch
Don't  miss it
Thanks with regards

S.SIVASUBRAMANIAM, President
CENTER FOR CONSUMER HUMAN RESOURCE AND
ENVIRONMENT PROTECTION - CITIZEN CENTER (CCHEP_NLG)
PANDALUR, PANDALUR (Po & Tk)   THE NILGIRIS  643 233.
E.MAIL: cchepnlg@gmail.com    cchep.siva@gmail.com
94 88 520 800 - 94 898 60 250  -  944 29 740 75  - 948 639 34 06