மின்சார சிக்கனம் விழிப்புணர்வு நிகழ்ச்சி
பந்தலூர் புனித சேவியர் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில்
மின்சார சிக்கனம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது. பள்ளி குடிமக்கள் நுகர்வோர்
மன்றம். கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் ஆகியன இணைந்து நடத்திய இந்த நிகழ்ச்சிக்கு
பள்ளி தலைமை ஆசிரியர் சகோ செலின் தலைமை தாங்கினார். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக செயற்பொறியாளர்
சிவராஜ், கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம், மகாத்மா காந்தி
பொது சேவை மைய தலைவர் நவுசாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழ்நாடு மின்
உற்பத்தி மற்றும் பகிர்மான கழக மேற்பார்வை பொறியாளர் ஆல்தொரை பேசும்போது தற்போது மின்சாரத்தின்
தேவை அதிகரித்து வருகின்றது. மின் உற்பத்தி மேற்க்கொள்ள கூடுதல் செலவுகள் மற்றும் பல்வேறு
சிரமங்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை உள்ளது.
தமிழகத்தினை விட மற்ற மாநிலங்கள் குறிப்பாக அரியானா மேற்குவங்காளம் மத்தியபிரதேசம்
உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மின்சார தட்டுபாடு அதிகமாக உள்ளது. மின்தட்டுபாடுகளை
போக்க மின்சாரத்தினை சிக்கனமாக செலவிடுவது அவசியமாகிறது. குண்டுபல்புகளை மாற்றி சி.எப்.எல்
அல்லது எல்.இ.டி பல்புகளை பயன்படுத்துவது. மின் சாதன பொருட்களை சுவர்களின் ஓரத்தில்
வைக்காமல் இடைவெளி விட்டு வைப்பது தேவையற்ற நேரங்களில் மின்சார உபயோக பொருட்களை பயன்படுத்தாமல்
இருப்பது பல்புகள் நமக்கு தேவைக்கேற்ப தாழ்வாக அமைத்துக்கொள்ளல் போன்றவை மின்சாரத்தினை
சிக்கனப்படுத்த எளிய வழிகள் ஆகும். மின்சார சிக்கனத்தின் மூலம் மாதந்திர மின்செலவும்
குறையும். அரசும் தற்போது 500 யூனிட் வரை வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்துவதற்கு மட்டுமே
மானியம் வழங்குகிறது. தற்போது 35க்கும் மேற்பட்ட பல்கலைகழகங்களில் சோலார் மூலம் மின்உற்பத்தி செய்து பயன்படுத்த மாநில
அரசு முடிவு செய்து நடைமுறைபடுத்தி வருகின்றது.
மேலும் பல்வேறு அரசு நிறுவனங்களிலும் சோலார் மின்சக்தி பயன்படுத்த அரசு நடவடிக்கை
எடுத்து வருகின்றது. வீடுகளில் சோலார் மூலம் மின்தேவைகளை அமைத்துகொண்டால ரீதொழிற்சாலைகளுக்கு
மின்சாரம் பயன்படுத்த முடியும். தற்போதைய சூழலில் வினாக பயன்படுத்தும் மின்சாரத்தினை
சேமித்தாலே மின்தட்டுபாட்டினை பெருமளவு குறைக்க முடியும். அனைவரும் மின்சாரத்தினை சிக்கனமாக
பயன்படுத்த வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் 600க்கும் மேற்பட்டோர்
கலந்து கொண்டனர்.
முன்னதாக பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருஙங்கிணைப்பாளர்
மார்ட்டின் வரவேற்றார். முடிவில் மாணவி
நன்றி கூறினார்.கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக