சிட்டுக்குருவி
தத்தித் தத்தி நடப்பாயே சிட்டுக்குருவி – நீ
தரணி விட்டுப் போனதென்ன சிட்டுக்குருவி
சுத்திச் சுத்தி வருவாயே சிட்டுக்குருவி – நீ
சூனியமாய் ஆனதென்ன சிட்டுக்குருவி
குழுகுழுவாய் இருப்பாயே சிட்டுக்குருவி – உன்
குடும்பங்கள் மறைந்ததென்ன சிட்டுக்குருவி
புழுபூச்சி கிடைக்கலையோ சிட்டுக்குருவி – உன்
பிள்ளைகள் மடிந்தனவோ சிட்டுக்குருவி
சூழல்கள் கெடலாச்சோ சிட்டுக்குருவி – உன்
சுதந்திரந்தான் பறிபோச்சோ சிட்டுக்குருவி
வாழ்வுதனை முன்னோக்கி சிட்டுக்குருவி – நீ
வேறிடம் தேடினாயோ சிட்டுக்குருவி
நோயொன்று வந்ததுவோ சிட்டுக்குருவி – உனை
நீக்கிவிட்டுப் போனதுவோ சிட்டுக்குருவி
பேயொன்று வந்ததுவோ சிட்டுக்குருவி – உனை
பதம் பார்த்துப் போனதுவோ சிட்டுக்குருவி
மானிடர்கள் சதியாலே சிட்டுக்குருவி – நீ
மாற்றலாகிப் போனாயோ சிட்டுக்குருவி – அவர்
தானியங்கள் போடலையோ சிட்டுக்குருவி – ஓர்
தகவில்லாமல் போனாரோ சிட்டுக்குருவி
நகரங்கள் வந்ததனால் சிட்டுக்குருவி – நீ
நரகங்கள் கண்டாயோ சிட்டுக்குருவி
சிகரங்கள் கட்டுவதால் சிட்டுக்குருவி – மென்
சிறகடித்துப் பறந்தாயோ சிட்டுக்குருவி
கூடொன்று கட்டுதற்கு சிட்டுக்குருவி – ஓடு
வீடொன்று தேர்வாயே சிட்டுக்குருவி – ஓடு
வீடின்று மறைந்ததனால் சிட்டுக்குருவி – நீ
நாடு விட்டேகினாயோ சிட்டுக்குருவி
அங்கங்கு இருப்பாயே சிட்டுக்குருவி – எங்கள்
அங்கமாய்த் திகழ்ந்தாயே சிட்டுக்குருவி
எங்கென்று தேடுவேன் சிட்டுக்குருவி – கொடும்
ஏக்கங்கள் தாராதே சிட்டுக்குருவி
தாயின்றி சேயில்லை சிட்டுக்குருவி – இந்த
உண்மையினை அறிவாயோ சிட்டுக்குருவி
நீயின்றி வாழ்வேது சிட்டுக்குருவி – எம்முள்
நீக்கமற நிறைந்தாயே சிட்டுக்குருவி
காட்டினில் இருந்தாலும் சிட்டுக்குருவி – நீ
கிராமத்தில் இருந்தாலும் சிட்டுக்குருவி
நாடுவிட்டுப் போனாலும் சிட்டுக்குருவி – உனை
நான் போக விடமாட்டேன் சிட்டுக்குருவி
மன்பதையை மறவாதே சிட்டுக்குருவி – எமை
மன்னித்து ஏற்றுக்கொள் சிட்டுக்குருவி
உன் பதம் சரணடைந்தோம் சிட்டுக்குருவி

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக