அன்புடன் வரவேற்கின்றோம்


you are welcome to our web page

எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்

Please give your GOOD IDEAS FOR DEVELOPING
THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPS

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்

செவ்வாய், 30 நவம்பர், 2010

சிகரெ‌ட்

தலைப்பைச் சேருங்கள்
நா‌ள் ஒ‌‌ன்று‌க்கு ப‌த்து ‌சிகரெ‌ட் ‌பிடி‌ப்பவ‌ர்க‌ள் பு‌ற்றுநோ‌ய் தா‌க்க‌ம் ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளதா எ‌ன்று சோதனை செ‌ய்து கொ‌‌ள்வது ந‌ல்லது எ‌ன்று‌ம், மேலு‌ம் தொட‌ர்‌ந்து நாளொ‌ன்று‌க்கு 10 ‌சிகரெ‌ட் புகை‌ப்பவ‌ர்க‌‌ளி‌ன் தா‌ம்ப‌த்‌திய உறவு ‌சி‌க்கலாகு‌ம் எ‌ன்று‌ம் அமெ‌ரி‌க்கா‌வி‌ல் நட‌த்‌திய ஆ‌ய்‌வி‌ல் தெ‌ரிய வ‌ந்து‌ள்ளது.

அமெ‌ரி‌க்கா‌வி‌ல் இது‌தொட‌ர்பாக கட‌ந்த இர‌ண்டு ஆ‌ண்டுகளு‌க்கு மு‌ன்பு நட‌த்த‌ப்ப‌ட்ட ஆ‌ய்‌வி‌ல், நா‌ள் ஒ‌ன்று‌க்கு 10 ‌சிகரெ‌ட் புகை‌ப்பவ‌ர்களு‌க்கு தா‌ம்ப‌த்‌திய வா‌ழ்‌க்கை‌யி‌ல் ‌சி‌க்க‌ல் உருவாகு‌ம் எ‌ன்பதை க‌ண்ட‌றி‌ந்து‌ள்ளன‌ர். இவ‌ர்களு‌க்கு தாம்ப‌த்‌திய உற‌வி‌ன் போது ஏ‌ற்படு‌‌ம் ‌விறை‌ப்பு‌த்த‌ன்மை‌யி‌ல் ‌சி‌க்க‌ல் எழு‌ம் எ‌ன்று‌ம் அ‌ந்த ஆ‌ய்‌வி‌ல் க‌ண்ட‌றிய‌ப்ப‌ட்டு உ‌ள்ளது.

இத‌ற்கு காரண‌ம் புகை‌ப் ‌பிடி‌க்கு‌ம் போது நமது உட‌லு‌க்கு‌ள் செ‌ல்லு‌ம் ‌நி‌க்கோ‌ட்டி‌ன் உ‌றி‌‌ஞ்சு‌ம் ‌திசு‌க்களை பா‌தி‌ப்பு‌க்கு உ‌ள்ளா‌க்குவதுட‌ன் அதனை சுரு‌ங்க‌ச் செ‌ய்‌கி‌ன்றன. இது ச‌ம்ம‌ந்த‌ப்ப‌ட்வ‌ரி‌ன் தா‌ம்ப‌த்‌திய வா‌ழ்‌க்கையை பா‌தி‌ப்பு‌க்கு உ‌ள்ளா‌க்கு‌கி‌ன்றது எ‌ன்று ‌சி‌ங்க‌ப்பூரை‌சே‌ர்‌ந்த மரு‌த்துவ வ‌ல்லுந‌ர் அடை‌க்க‌‌‌ண் கூ‌றியு‌ள்ளா‌ர்.

புகை‌ப் ‌பிடி‌ப்பதை‌ப் போ‌ன்று மது அரு‌ந்துவது‌ம் பா‌லிய‌ல் ‌சி‌க்க‌ல்களை உருவா‌க்கவ‌ல்லது எ‌ன்று‌ம் கூ‌றியு‌ள்ளா‌ர். நா‌ட்டி‌ல் உ‌ள்ள 120 கோடி ம‌க்க‌ள் தொகையி‌ல் 20 கோடி ஆ‌ண்க‌ளு‌க்கு ஆ‌ண்மை‌க் குறைபாடு, போதாமை, பா‌லிய‌ல் செய‌ல்படாத த‌ன்மை உ‌ள்‌ளி‌ட்ட குறைபாடுகளா‌ல் அவ‌தி‌ப்ப‌ட்டு வருவதாக ஆகா‌ஷ் கரு வள‌ர்‌ச்‌சி ம‌‌ற்று‌ம் ஆரா‌ய்‌ச்‌சி மைய‌த்‌தி‌ன் மரு‌த்துவ‌ர் டி. காமரா‌ஜ் தெ‌ரி‌வி‌த்து உ‌ள்ளா‌ர்.

ப‌ல்வேறு உறவு ‌சி‌க்கலு‌க்கு‌ம், முர‌ண்பாடான நடவடி‌க்கை ஆ‌கிய ‌பிர‌‌ச்சனைகளு‌க்கு மூல காரணமே தா‌ம்ப‌த்‌திய உற‌வி‌ல் ஏ‌ற்படு‌ம் அ‌திரு‌ப்‌திதா‌ன் எ‌ன்று க‌ண்ட‌றிய‌ப்ப‌ட்டு உ‌ள்ளது. இநத ‌சி‌க்க‌ல்க‌ள் தகவ‌ல் தொ‌ழி‌ல் நு‌ட்ப‌ம், அய‌ல் அலுவலக சேவை குறைக‌ளி‌ல் ப‌ணியா‌ற்றுபவ‌ர்க‌ளிடையே அ‌திக‌ம் காண‌ப்படுவதாகவு‌ம் மரு‌த்துவ‌ர் காமரா‌ஜ் கூ‌றியு‌ள்ளா‌ர்.

இத‌ற்கு காரண‌ம் மே‌ற்‌க‌த்‌திய கலா‌ச்சார‌த்‌தி‌ன் ‌மீதான மோக‌ம், வா‌ழ்‌க்கை முறை‌யி‌ல் மா‌ற்ற‌ம், பரபர‌ப்பான, அழு‌த்த‌த்தை ஏ‌ற்படு‌த்து‌கி‌ன்ற வேலை சூழலு‌ம்தா‌ன் எ‌ன்று‌ம் காமரா‌ஜ் தெ‌ரி‌வி‌த்து உ‌ள்ளா‌ர்.

உலகமயமாத‌ல், க‌ணி‌னிமயமாத‌ல் ஆ‌கியவ‌ற்‌றி‌ன் ‌விளைவு‌ம், பெரு‌கி வரு‌ம் இணைய‌த்தள கலா‌ச்சாரமு‌ம் ம‌க்க‌ளி‌ன் ஒ‌ட்டுமொ‌த்த வா‌ழ்‌க்கை முறையையே மா‌ற்‌றி அமை‌த்து உ‌ள்ளதோடு, ம‌க்களை அ‌திக அழு‌த்த‌த்தையு‌ம், பளுவையு‌ம் கொ‌ண்ட வா‌‌ழ்‌க்கை‌க்கு அழை‌த்து செ‌ல்வதோடு ம‌க்க‌ளி‌ன் தா‌ம்ப‌த்‌திய வா‌ழ்‌க்கையையு‌ம் பா‌தி‌க்‌கி‌ன்றது.

த‌ற்போதைய வேலை கலா‌ச்சார‌ம் பா‌லிய‌ல் தொட‌ர்பான ம‌னித‌ர்க‌ளி‌ன் எ‌ண்ண‌த்தை மா‌ற்றுவதுட‌ன் தர‌ம் தா‌ழ்‌ந்து செ‌ல்லவு‌ம், பா‌லிய‌ல் ‌சீ‌ர்குலைவு‌க்கு‌ம் கார‌ணியாக அமை‌ந்து உ‌ள்ளது எ‌னவு‌ம் மரு‌த்துவ‌ர் காமரா‌ஜ் தெ‌ரி‌வி‌த்து உ‌ள்ளா‌ர். து‌ரித உணவு‌க் கலா‌ச்சார‌ம், பத‌ப்படு‌த்த‌ப்ப‌ட்ட உணவு வகைகளை அ‌திக‌ம் பய‌ன் படு‌த்துபவ‌ர்களு‌க்கு தொ‌ப்பை உ‌ள்‌ளி‌ட்ட உட‌லி‌ன் பல இட‌ங்க‌ளி‌ல் உருவாகு‌ம் ஊளை‌ச் சதையா‌லு‌ம் ஒருவ‌ரி‌ன் தா‌ம்ப‌த்‌திய உறவு பா‌தி‌க்க‌ப்படுவதாகவு‌ம் அவ‌ர் தெ‌ரி‌‌வி‌த்து உ‌ள்ளா‌ர். ‌

திருமணமான த‌ம்ப‌திக‌ளி‌ல் 15 ‌விழு‌க்கா‌ட்டினரே கருவள‌ர்‌ச்‌சி இ‌ன்மை ‌சி‌க்கலு‌க்கு உ‌ள்ளாவதாகவு‌ம், இ‌ந்த ‌பிர‌ச்சனை‌க்கு 35 ‌விழு‌க்காடு பெ‌ண்களு‌ம், 30 ‌விழு‌க்காடு ஆ‌ண்களு‌ம் கார‌ணிகளாக அமை‌கி‌ன்றன‌ர். ‌சில நேர‌ங்க‌ளி‌ல் கரு வள‌ர்‌ச்‌சி‌யி‌ன்மை‌க்கு ஆணு‌ம், பெ‌ண்ணு‌ம் காரணமாக உ‌ள்ளன‌ர்.

இ‌ந்த வகையானவ‌ர்க‌ள் 20 ‌விழு‌க்காடு எ‌ன்று எடு‌த்து‌க் கொ‌ண்டா‌ல், ‌மீதமு‌ள்ள 15 ‌விழு‌க்கா‌ட்டின‌ர் ‌விவாகர‌த்து பெ‌ற்றதா‌ல் எ‌ன்று மரு‌த்துவ‌ர் கூ‌றியு‌ள்ளா‌ர்.

இ‌ந்த‌ப் ‌பிர‌ச்சனைக‌ளி‌ல் உ‌ள்ள உ‌ண்மை ‌நிலை‌த் தொட‌ர்பாகவு‌ம், சமுதாய‌த்‌தி‌ல் உ‌ள்ள தவறான எ‌ண்ண‌த்தையு‌ம், ந‌ம்‌பி‌க்கைக‌ள் தொட‌ர்பாக இ‌த்துறை சா‌ர்‌ந்த வ‌ல்லுந‌ர்க‌ள் இர‌ண்டு நா‌ட்க‌ள் ‌வி‌ரிவான அள‌வி‌ல் ‌விவா‌தி‌க்க உ‌ள்ளதாக தெ‌ரி‌வி‌த்து உ‌ள்ளா‌ர்.

சனி, 27 நவம்பர், 2010

கூடலூர்: "போலி விளம்பரங்களை பார்த்து பொருட்கள் வாங்குவதை தவிர்க்க வேண்டும்' என, நுகர்வோருக்கு அறிவுரை வழங்கப்பட்டது. 

முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காட்டில், வனத்துறை மற்றும் "ஹேமந்திரா கோத்தாடா பவுண்டேசன்' சார்பில் நடந்து வரும் ஆதிவாசி மாணவர்களுக்கான கம்ப்யூட்டர் பயிற்சி மையத்தில், 
 கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில், நுகர்வோர் விழிப்புணர்வு பயிற்சி முகாம், நேற்றுமுன்தினம் நடந்தது. 

பயிற்றுனர் அபுதாகிர் வரவேற்றார். 

ஒருங்கிணைப்பாளர் சசிதரன் தலைமை வகித்தார். 

கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையத் தலைவர் சிவசுப்ரமணி பேசுகையில், ""நுகர்வோர், தங்களுக்கான உரிமைகளை அறியாததால், பல நிலைகளில் ஏமாற்றப்படுகின்றனர். நுகர்வோர் பாதுகாப்பு சட்டம், 1986ம் ஆண்டு உருவாக்கப்பட்டு, 1990ம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது. தரமற்றப் பொருட்கள், போலி பொருட்கள் வாங்குவதிலிருந்து பாதுகாப்பு பெற, பொருட்களின் தகவல் கேட்டு பெறுவது, தேவையான சேவை அல்லது பொருட்களை தேர்வு செய்ய உரிமை உள்ளது. விளம்பரங்கள் பார்த்து பொருட்கள் வாங்கி பயன்படுத்துவதை, சிலர் கவுரவமாக கருதுகின்றனர். நுகர்வோர், போலி விளம்பரங்களை நம்பி ஏமாறக் கூடாது. நிதி நிறுவனம், நில விற்பனை உட்பட அனைத்து தகவல்களையும் தெரிந்துக் கொண்டு விழிப்புடன் இருந்தால், ஏமாற்றப்படுவதை தவிர்க்க முடியும்,'' என்றார். 

நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின் கூடலூர் பொறுப்பாளர் முருகன் பேசுகையில், ""உணவுப் பொருட்களில் கலப்படம் அதிகரித்துள்ளது. கலப்பட உணவுப் பொருட்களை பயன்படுத்துவதால், உடலில் நோய் ஏற்பட காரணமாகிறது. தர முத்திரைகளை கொண்ட தரமான உணவுப் பொருட்களை வாங்கிப் பயன்படுத்த வேண்டும்,'' என்றார். 

 நுகர்வோர் பாதுகாப்பு குறித்து கையேடு வழங்கப்பட்டது. மாணவி கேத்தி நன்றி கூறினார்.

"கல்வி அறிவுடன் சட்ட அறிவும் அவசியம்!'

"எதிர்கால சமுதாயத்தை வழிநடத்தும் மாணவ, மாணவியர், கல்வி அறிவுடன், சட்ட அறிவையும் பெற வேண்டியது அவசியம்' என, அறிவுறுத்தப்பட்டது. 

ஊட்டி நகர மக்கள் விழிப்புணர்வு சங்கம், கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம், பள்ளியின் என்.எஸ்.எஸ்., திட்டம் சார்பில், ஊட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில், இந்திய சட்டம் தினம் நடந்தது. 

என்.எஸ்.எஸ்., அலுவலர் ராமசந்திரன் வரவேற்றார். 

பள்ளி தலைமை ஆசிரியர் மூர்த்தி தலைமை வகித்தார்.  நாட்டு நலப்பணித்திட்ட மாவட்ட அலுவலர் இளமுருகன், கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையத் தலைவர் சிவசுப்ரமணியம் முன்னிலை வகித்தனர்.

தேயிலை வாரிய செயல் இயக்குனர் அம்பலவாணன், சிறப்பு அழைப்பாளராக பேசியதாவது: இந்திய அரசியமைப்பு சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்ட தினம், சட்ட தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த சட்டத்தை பயன்படுத்தியே, மத்திய, மாநில அரசுகள், அலுவலகங்கள் செயல்படுகின்றன.  அனைத்து சட்டங்களையும், ஒவ்வொரு குடிமகனும் அறிந்துக் கொள்ள வேண்டும்; அப்போது தான், அதன் வழியாக நம் செயல்பட முடியும். எதிர்கால சமுதாயத்தை வழி நடத்தும் மாணவ, மாணவியர், கல்வி அறிவுடன், சட்ட அறிவையும் பெற்றுக் கொள்ள வேண்டியது அவசியம். குழந்தைகள் குறித்த பல பிரச்னைகள், சமீபகாலங்களாக அதிகரித்துள்ளதற்கு, சட்டங்களை அறியாததும் முக்கிய காரணம். அனைவருக்கும் சம உரிமை உண்டு என, அரசியலமைப்பு சட்டம் தெரிவிக்கிறது; இதையடைய கல்வியறிவு அவசியம். பொழுது போக்கு அம்சங்களில் அதிகளவில் ஈடுபட்டு, மாணவர் பருவத்தை வீணடிக்காமல், பொறுப்புணர்வுடன் செயல்பட்டு முன்னேற வேண்டும். நமது உரிமைகளை அடுத்தவர் பறிக்காத வகையில் பயன்படுத்த வேண்டும். எதை செய்யக் கூடாது என்பதை அறிந்து, அதன்படி செயல்பட வேண்டும்.இவ்வாறு, அம்பலவாணன் பேசினார். 

வட்டாரப் போக்குவரத்து அலுவலர் வெங்கட்ராமன் பேசுகையில், ""சாலை விதிகளை முறையாக பின்பற்றினால், விபத்துகளை குறைக்கலாம். 1985ம் ஆண்டின் போக்குவரத்து சட்டத்தில், வாகனங்களின் செயல்பாடு குறித்து கூறப்பட்டுள்ளது. 18 வயதுக்கு உட்பட்டவர்கள், வாகனங்களை இயக்குவது தவறு; இந்த வயதினர், வாகனங்களை கட்டுப்படுத்தும் திறனைப் பெறுவதில்லை. வாகனங்களை இயக்கும் போது மொபைல் போன்களை பயன்படுத்துவது, விதிமீறிய செயல்; இதனால் விபத்து ஏற்படும். விதிமுறைகளை உணர்ந்து மாணவர்கள் செயல்பட வேண்டும்,'' 

என்றார். ஊட்டி நகர மக்கள் விழிப்புணர்வு சங்க செயலாளர் ஜனார்தனன் பேசுகையில், ""பள்ளி மாணவர்கள், போலீஸ் ஸ்டேஷன் செயல்பாடுகள், நீதிமன்ற செயல்பாடுகளை அறியும் வகையில், நடவடிக்கை எடுக்க வேண்டும். நம் சட்டங்களை மாணவர்கள் அறிந்தால், தவறான பாதைகளில் செல்வதை தடுக்கலாம். சட்டங்களை அலட்சியப் படுத்தாமல் பின்பற்றினால் பயன் கிடைக்கும்,'' என்றார். 

"கவா' அறக்கட்டளை இயக்குனர் வக்கீல் சுப்ரமணி பேசுகையில், ""கிராமப்புற வளர்ச்சிக்காக,  மத்திய, மாநில அரசுகளால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் முறையாக செயல்படுகிறதா? என்பதை அறிய, தகவல் அறியும் உரிமை சட்டத்தை பயன்படுத்த வேண்டும். ஊழல் மற்றும் முறைகேடுகளை தடுக்க, தகவல் அறியும் உரிமை சட்டம் மிகவும் பயனுள்ளதாக அமைகிறது,'' என்றார். இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் உறுதிமொழிகள் எடுக்கப்பட்டன.

பள்ளி ஆசிரியர் சுரேஷ் நன்றி கூறினார்.

செவ்வாய், 16 நவம்பர், 2010

செல்போன்கள்... ஜாக்கிரதை! ‘எப்போதும்


செல்போனும் கையுமாக இருந்த கல்லூரி மாணவியான தனது மகளை கண்டித்தார் அப்பா. ‘மகளிடமிருந்து செல்போனை பிடுங்கிக் கொண்டார். அவ்வளவுதான், செல்போன் போனதால் சகலமும் போனதாக நினைத்த அந்தப் பெண் தற்கொலை செய்துக் கொண்டார். சில நாட்களுக்கு முன்பு கேரளாவில் நடந்த துயரச் சம்பவம் இது. செல்போனின் தாக்கம் சமூகத்தில் அதிர்ச்சியான சம்பவங்களை ஏற்படுத்தி வருகிறது.
வறுமையோ, வளமையோ நிலைமை எப்படி இருந்தாலும் இந்த காலத்தில் தவிர்க்க முடியாத உபகரணமாக மாறியிருக்கிறது செல்போன். எந்த தகவலையும் இருந்த இடத்தில் இருந்து உடனுக்குடன் பெறவும், தரவும் உள்ள வசதி அசாதாரமானது. பல தேவைகள் உடனுக்குடன் நிறைவேறுவதுடன், சில பிரச்னைகளை தீர்க்கவும் உதவுகிறது.
அதனால் உலகில் 500 கோடி பேர் செல்போன் பயன்படுத்துகின்றனர். இந்தியாவில் 67 கோடியை தாண்டி விட்டது. ஒவ்வொரு மாதமும் சுமார் 1.8 கோடி இணைப்புகள் விற்பனையாகின்றன. நாட்டில் 100க்கு 59 பேரிடம் செல்போன் உள்ளன. செல்போன் சேவை நாட்டில் தொடங்கிய காலத்தில் ஒரு அழைப்புக்கு நிமிடத்திற்கு 24 ரூபாய் கட்டணம். இப்போது 10 காசுகளுக்கு பேசிக் கொள்ளலாம்.
நாளெல்லாம் இலவசமாக பேசிக் கொள்ளும் சேவைகள் பலவும் அறிமுகமாகியுள்ளன. பலன் தரும் செல்போன்களின் பயன்பாடு, இப்போது பாதகமாகவும் மாறியுள்ளது.
செல்போனை கையில் வைத்துக் கொண்டு சும்மா இருக்க முடியாமல் எப்போதும் யாருடனாவது பேசிக் கொண்டே இருக்க வேண்டும் என்று ஏங்குகின்றனர். வருகின்ற அழைப்புகளில் எதிர்முனையில் எதிர் பாலினமாக இருந்தால் மணிக் கணக்கில் பேச ஆரம்பித்து விடுகின்றனர். அது முகம் தெரியாதவர்களாக இருந்தாலும், அவர்கள் பின்னணி என்னவாக இருந்தாலும் யாரும் கவலைப்படுவதில்லை. இப்படி பேசியே காதல் கோட்டை கட்டியவர்களும் இருக்கிறார்கள். கம்பி எண்ணியவர்களும் இருக்கிறார்கள். செல் போதையில் சிக்கி பல குடும்ப உறவுகள் சீரழிந்து இருக்கின்றன. இன்னொரு பக்கம் உடலும் கெடுகிறது. செல்போனில் இருந்து வெளியேறும் மின்காந்த கதிர்களால் உடல் நலம் பாதிப்பதாக பல்வேறு ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன.
புற்றுநோய், கண்புரை, காது கேளாமை, கருச்சிதைவு, மனநோய், மலட்டுத்தன்மை என பாதிப்புகளின் பட்டியல் நீளுகின்றன. செல்போனில் பேசியபடியே வாகனம் ஓட்டுவதால் விபத்துகள் ஏற்படுகின்றன. விஞ்ஞானத்தின் அரிய வளர்ச்சி செல்போன். அதை உடல், உள்ளம், உறவுகளை பாதிக்காமல் பயன்படுத்தும் பக்குவம் அவசியம்.
செல்போனில் பேச்சு; ரகசியம் போச்சு
செல்போனில்
பேசினால் யாருக்கும் தெரியாது என்று சகலத்தையும் செல்போனில் கொட்டுபவர்கள் நிறைய பேர் உள்ளனர். நாம் பேசும் அனைத்தும் டேப் செய்யப்படும். ஒவ்வொரு செல்போன் நிறுவனமும் ஒவ்வொரு மாதமும் இணைப்பு பெறும் வாடிக்கையாளர் விவரங்களையும், எண்ணையும் மத்திய, மாநில உளவு துறைகள் உட்பட 7 நிறுவனங்களுக்கு தனித்தனி குறுந்தகடில் தருவார்கள். அவர்கள் சந்தேகப்படும எண்களை கவனிப்பார்கள்.
யார்
கேட்டாலும் சிலர் தங்கள் மொபைல் எண்களை தந்து விடுகின்றனர். இந்த விஷயத்தில் பெண்கள் கொஞ்சம் அசட்டையாக இருக்கின்றனர். ரயில் சினேகிதர்கள் கூட செல்போன் எண்களை பெற்று விடுகின்றனர். பேச்சு வளர்ந்து பெரும்பாலும் திசை மாறி போய் விடுகிறது. தவிர்க்க முயலும்போது கோபமடைபவர்கள், அதே ரயிலின் கழிவறைகளில் அந்த செல்போன் எண்களை எழுதி வைத்து விடுகின்றனர். இதேபோல் காதலிக்க மறுத்த பெண்களின் எண்களை, பகையுள்ள குடும்பத்தின் பெண்களின் எண்களையும் எழுதி விடுகின்றனர். ரயில் கழிவறைகள் என்றில்லை, பேருந்து நிலையம், மருத்துவமனை என பல இடங்களில் பொது கழிவறைகளிலும் பெண்ணின் பெயருடன் எண்ணை எழுதி வைத்து விடுகின்றனர். பாலியல் தொழில் செய்யும் பெண்களாக சித்தரித்து விடுகின்றனர். இப்படி கண்ட எண்ணில் இருந்து வரும் அழைப்புகளை பார்த்து பெண்கள் மனநோயாளிகள் ஆவதுதான் மிச்சம்.
கழிவறைகளில்...
செல்போன்
வந்து விட்டபிறகு ஸ்டில் கேமரா, வீடியோ கேமரா எல்லாம் கைக்குள் வந்து விட்டன. சிலர் தங்கள் உறவு காட்சிகளை கூட படம் பிடித்துக் கொள்கிறார்கள். ‘த்ரில்’லுக்காக எடுக்கும் தம்பதிகளை விட திருட்டுத்தனமாக எடுத்துக் கொள்ளும் கள்ளக் காதலர்கள் அதிகம். தெரிந்தோ, தெரியாமலோ எடுக்கப்படும் படங்களை நண்பர்களுக்கு பகிர்ந்துக் கொள்ளவும் செய்கின்றனர். அங்கிருந்து பல நூறு பேர்களுக்கு பரவி, இன்டர்நெட் மூலம் மாநிலம், தேசம் கடந்து விடுகிறது. ஒரு சிலர் இதனை இணையதளங்களுக்கு விற்று காசாக்கி விடுகின்றனர். இந்த விஷயம் வீட்டில் தெரியும் போது பிரச்னையாகி விடுகிறது. இப்படி குடும்பங்கள் சீர்குலைவது தொடர்கதையாகி வருகிறது. அதுமட்டுமல்ல நீலப்படம் பார்க்க ஊருக்கு ஒதுக்குபுறமான திரையரங்குகளை தேடிச் செல்வார்கள். செல்போனில் பரவும் செக்ஸ் வீடியோக்களால் இந்த பிட் திரையரங்குகள் நலிந்து விட்டன.
செல்போனில் ‘நீலம்’
காவல்துறை
சொல்வதென்ன?
செல்போனில்
வீடியோ கேமரா, இன்டெர்நெட் வசதி வந்த பிறகு புகார்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. ‘முழு சுகம் வேண்டுமா? தொடர்பு கொள்ளவும்’ என்று பெண்களின் செல்போன் எண்ணை குறிப்பிட்டு எஸ்எம்எஸ் அனுப்பி விடுவார்கள். இதேபோல் ரியல் எஸ்டேட் தரகர் ஒருவர், உரிமையாளர் எண்ணை குறிப்பிட்டு, தொடர்பு கொள்ளவும் நிலம் விற்பனைக்கு உள்ளது என்று பலருக்கு எஸ்எம்எஸ் அனுப்பி விட்டார். உரிமையாளர் ‘விற்பதற்கில்லை’ என்று பதில் சொல்லி சொல்லி ஓய்ந்து விட்டார். அப்புறமென்ன இந்த சம்பவங்கள் குறித்து வந்த புகார்களின் அடிப்படையில் விசாரித்து நடவடிக்கை எடுத்தோம். தொடர்ந்து மிஸ்டு கால் கொடுப்பதும் குற்றம்தான் என்கிறார் மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையர் டி.தங்கராஜ்.
பாலியல் மருத்துவ நிபுணர் டாக்டர்.டி.காமராஜ், ‘‘செல்போனை இடுப்பு பெல்ட்டில் சொருகி வைத்திருப்பதால் விந்தணுக்களின் எண்ணிக்கை குறைந்து குழந்தை பேறு இல்லாமல் போவது குறித்து பல்வேறு ஆய்வுகள் நிரூபித்துள்ளன. அதேபோல் மடிக் கணினிகளை மடியில் வைத்துக் கொண்டு நீண்ட நேரம் பயன்படுத்துவதும் இதே பிரச்னையை ஏற்படுத்துகிறது. செல்போனை வெறுமனே (பேசாத போதும்) சொருகி வைத்திருந்தாலும் இந்த பிரச்னை ஏற்படும். தொடர்ந்து 4 மணி நேரம் செல்போனில் பேசினாலும் பாதிப்புதான். செக்சில் ஆர்வத்தைஏற்படுத்தும் டெஸ்டோடிரான் என்ற ஹார்மோன்களின் எண்ணிக்கை குறைகிறது. இதனால் ஆண்மை குறைகிறது. செல்போன்களை பயன்படுத்துவதால் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து இதுவரை எந்த ஆய்வு முடிவுகளும் வெளியாகவில்லை” என்றார்.
ஆண்மைக்கும் ஆபத்தா...
சென்னை
மருத்துவக் கல்லூரியின் காது மூக்கு தொண்டை மருத்துவப் பிரிவு முன்னாள் தலைவர் கே.பாலகுமார், ‘‘செல்போனில் நீண்ட நேரம் பேசுவதால் செவித்திறன் குறையும். கவனிக்காமல் விட்டால் காது கேட்காது. அதுமட்டுமின்றி காதில், மூளையில் கட்டிகள் ஏற்படும். இது கேன்சர் கட்டியாகவும் இருக்கலாம். சிந்தனைத் திறன் குறையும். நினைவாற்றல் குறையும். நரம்பு மண்டலம் பாதிக்கும். காதில் முதலில் வலி தோன்றுவதுதான் முதல் எச்சரிக்கை. அடுத்து கேட்கிற தன்மை குறையும். பின்னர் காதில் இரைச்சல் கேட்கும். இது இறுதியான எச்சரிக்கை. அதற்கு பிறகும் செல்போனில் பேசுவதை குறைத்து டாக்டரை அணுகாவிட்டால் பிரச்னைதான். யாராக இருந்தாலும் 2 நிமிடங்களுக்கு மேல் செல்போனில் பேசுவதை தவிர்ப்பது நல்லது. அவசியம் என்றால் வீட்டுக்குப் போய் நிதானமாக சாதாரண தொலைபேசியில் பேசிக் கொள்ளலாம். அதை விட்டுவிட்டு பல மணி நேரம் செல்போனில் பேசிக் கொண்டு இருந்தால் காது கேளாதவர்கள் பட்டியலில் சேர வேண்டியதுதான். செல்போனை அப்படியே காதில் வைத்தோ அல்லது புளூடூத் பயன்படுத்தி பேசுவதை விட ஹெட்போன்(ஹாண்ட்ஸ் ஃப்ரீ) பயன்படுத்தி பேசுவது ஓரளவுக்கு பாதுகாப்பானது. அதேபோல் சார்ஜ் செய்துக் கொண்டிருக்கும போது பேசுவதையும் கட்டாயம் தவிர்க்க வேண்டும்’’ என்றார்.
வெறும் 2 நிமிடங்கள்தான்
செல்போன் போதை
வீட்டுக்கு
தெரியாமல் விவகாரங்களில் ஈடுபடுபவர்கள் ஆளுக்கு ஒரு சிம் கார்டு பயன்படுத்துகிறார்கள். வீட்டை விட்டு வெளியில் வந்ததும் வரிசையாக மிஸ்டு கால் கொடுக்க ஆரம்பித்து விடுவார்கள். யார் முதலில் சிக்குகிறார்களோ அவர்களிடம் கல்லூரி, அலுவலகம், தொழிற்சாலை போய் சேரும் வரை பேசிக்கொண்டே இருப்பார்கள். மிஸ்டு கால் கிடைத்த மற்றவர்களுக்கு இணைப்பு கிடைக்காது. இப்படி 24 மணி நேரமும் செல்போன் போதையில் வீழ்ந்துக் கிடப்பவர்களுக்கு மனநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்கிறார் மனநல மருத்துவர் டாக்டர் விஜயகுமார்.
எச்சரிக்கை
அவசியம்
மத்திய
குற்றப்பிரிவு கூடுதல் துணை ஆணையர் டாக்டர் சுதாகர் கூறுகையில், “செல்போன் வாங்கும்போது உத்திரவாத அட்டை, ரசீதுடன் வாங்க வேண்டும். ‘ஐஈஎம்ஐ’ எண்ணை குறித்து வைத்துக் கொள்வது நல்லது. காணாமல் போனால், எண்ணை செயலிழக்கச் செய்வது நல்லது. இல்லாவிட்டால் போனை எடுத்தவர்கள் தவறாக பயன்படுத்தினால், சிக்கலில் மாட்டிக் கொள்வீர்கள். தெரியாத நபர்களிடம் செல்போனை கொடுக்கவே கூடாது. செல்போனை பழுது பார்க்க தரும் போது சிம்கார்டு, மெமரி கார்டுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். செல்போன் குற்றங்களுக்கு இந்திய தண்டனைச் சட்டம் 506(1), 507 ஆகிய பிரிவுகளின் கீழ் 2 ஆண்டுகள் வரை தண்டனை உண்டு. அபராதமும் வசூலிக்கப்படும். பாதிக்கப்படுவது பெண்ணாக இருந்தால் 509 பிரிவு கூடுதலாக சேர்க்கப்படும்’’ என்றார்.
ச.இரகுநாதன்
 
 
 
 
 
 








தகவல் உரிமை சட்டம் குறித்த விழிப்புணர்வு கூட்டம்

21ல் விழிப்புணர்வு கூட்டம்
ஊட்டி, நவ. 16:
தகவல் உரிமை சட்டம் குறித்த விழிப்புணர்வு கூட்டம் வரும் 21ம் தேதி குன்னூரில் நடக்கிறது. 
 
மாவட்ட நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு சார்பில் தகவல் பெறும் உரிமை சட்டம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் குன்னூர் அருகேயுள்ள சி.எஸ்.ஐ. பாதுகாப்பு மையத்தில் வரும் 21ம் தேதி நடக்கவுள்ளது. 
 
இதில் தகவல் பெறும் உரிமை சட்டம் குறித்தும், தகவல் பெறும் வழிமுறைகள், தனி பயன், பொது பயன்களுக்கு தகவல் உரிமை சட்டம் பயன்படுத்தும் முறைகள், தகவல் யாரிடம் பெறுவது, பெற்று தகவலை சமூக மாற்றத்துக்கு எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்தும், தகவல் பெற விண்ணப்பிப்பது, தகவல் தராத போது எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவுள்ளது. 
 
கருத்தரங்கில் பங்கு கொள்ள விருப்பம் உள்ளவர்கள் இதில் கலந்து கொள்ளலாம். பதிவு செய்ய விரும்புவர்கள் சிவசுப்பிரமணியம் 94885&20800, 94880&94501, வீரபாண்டியன் 93453&98085, 96265 &85301 எண்களுக்கு தொடர்பு செய்து பதிவு செய்துக் கொள்ளலாம்.

ராஜா ராஜினாமா ஒரு தீர்வாகுமா?

வெற்றி, வெற்றி என எட்டுத் திக்கும் எக்காளம் கேட்கிறது. வெற்றியைப்பங்கிடுவதில் கடும் போட்டியும் நிலவுகிறது. ஊடகங்கள் ஒரு பக்கம், குற்றம்கண்டுபிடித்தே பெயர் வாங்கும் எதிர்க்கட்சிகள் மறுபக்கம்.ராஜா ராஜினாமா செய்துவிட்டார்!

முடிந்துவிட்டதா எல்லாம்? இந்திய அரசியல்வாதிகளின் மானம்காப்பாற்றப்பட்டுவிட்டதா? இனிமேல் மத்திய அரசு, அப்பழுக்கற்ற அரசாகத்திகழுமா? கழகத்தின் மீது பட்ட கறை நீங்கிவிட்டதா?எதுவுமே இல்லை. இந்த அரசியல்வாதிகளின் மானம் மீண்டும் கப்பலேறும்; மத்தியஅரசு மீது மேலும் பல ஊழல் புகார்கள் எழும்; கழகம் தன் கடமையைச் செய்யும். எதுவுமே நிற்கப்போவதில்லை. அப்புறமும் எதற்கு வெற்றிக் கொண்டாட்டங்கள்?எல்லாம், வெறும் பரபரப்புக்காக மேற்கொள்ளப்படுபவை. மத்தியில் ஒன்றும் ராமராஜ்யம் நடக்கவில்லை; ராஜா மீது குற்றம்சாட்டியவர்களும் உத்தம புத்திரர்கள்இல்லை. எல்லாருமே முதுகில் அழுக்கைச் சுமப்பவர்கள் தான். அடுத்தவர் முதுகுதெரியும்போது ஆர்ப்பாட்டம் போடுவார்கள்; தங்கள் முதுகின் மீது கவனமாகதிரையிடுவார்கள்.

ராஜினாமா மூலம் எந்தப் பிரச்னையும் தீர்ந்ததாகச் சரித்திரம் இல்லை. சிபு சோரன் என ஒரு மத்திய மந்திரி இருந்தார். நினைவிருக்கிறதா? அவர் மீது, ஓட்டு போடுவதற்காகலஞ்சம் வாங்கியதாக ஒரு குற்றச்சாட்டு. தன் உதவியாளரை கொலை செய்ததாக மற்றொரு குற்றச்சாட்டு. நமக்குத் தெரிந்தது இவ்வளவு தான். இன்னும் எவ்வளவுஉண்டோ!அவரும் ஒரு கட்டத்தில் தன் பதவியை ராஜினாமா செய்தார். என்ன ஆயிற்று? லஞ்சமாக வழங்கப்பட்ட பணம் திரும்பப் பெறப்பட்டதா? அவருக்கு லஞ்சம்வழங்கியவர்கள் தண்டிக்கப்பட்டார்களா? இறந்துபோன உதவியாளர் தான் உயிரோடுதிரும்பினாரா? சோரன் ராஜினாமா செய்தார்; அவ்வளவு தான்!

நட்வர் சிங் என ஒரு வெளியுறவுத் துறை அமைச்சர் இருந்தார். எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து அவர் தான் வெளியுறவு மந்திரி. ஈராக்கிலிருந்து எண்ணெய்கொள்முதல் செய்ததில் அவருக்குத் தொடர்பு என்ற புகாரால் ராஜினாமா செய்தார். என்ன ஆயிற்று? எண்ணெய் ஊழலில் நாடு இழந்த பணம் ஈடு கட்டப்பட்டதா?அவரோடு தொடர்பில் இருந்தவர்கள் தண்டிக்கப்பட்டார்களா? அவர் தான்விசாரிக்கப்பட்டாரா? நட்வர் சிங் ராஜினாமா செய்தார்; அவ்வளவு தான்!

ராணுவ மந்திரியாக இருந்த ஜார்ஜ் பென்னாண்டஸ் மீது சவப்பெட்டி ஊழல் புகார் தெரிவிக்கப்பட்டது. ராஜா விவகாரம் மாதிரி தான்; பார்லிமென்டே நடக்கவில்லை. பெர்னாண்டஸ் எழுந்து நின்றாலே, வெளிநடப்பு செய்துவிடுவதை வழக்கமாகக்கொண்டிருந்தது காங்கிரஸ். வேறு வழியில்லாமல் அவரும் ராஜினாமா செய்தார்.கடந்த 2009ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான அரசு இருந்தபோது சி.பி.ஐ., தயாரித்த குற்றப்பத்திரிகையில் பெர்னாண்டஸ் பெயரே இல்லை. அப்போதுகாங்கிரஸ் சுமத்திய குற்றச்சாட்டு என்ன ஆனது? சி.பி.ஐ., பொய்யானகுற்றப்பத்திரிகையைத் தயார் செய்துவிட்டதா? இல்லை, காங்கிரஸ் தான்பெருந்தன்மையாக விட்டுவிட்டதா?

ஆதர்ஷ் அடுக்குமாடி குடியிருப்பு முறைகேட்டில், மகாராஷ்டிரா முதல்வர் அசோக் சவான் ராஜினாமா செய்தார். கார்கில் போரில் இறந்தோரின் ஆத்மா சாந்தியடைந்துவிட்டதா? அதே கட்சியைச் சேர்ந்த இன்னொரு சவான்முதல்வராகிவிட்டார்; அவ்வளவு தான். அடுக்குமாடி குடியிருப்பு ஊழல்முடிந்துவிட்டது.

மீடியாக்களும், எதிர்க்கட்சிகளும் ராஜாவின் பக்கம் பார்வையைத் திருப்பின. எந்தச்சேனலிலும் வேறு செய்தியில்லை; ஒரு நாளும் பார்லிமென்ட் நடக்கவில்லை. விடாமல் குடைச்சல் கொடுத்ததன் எதிரொலியாக, அவரும் ராஜினாமாசெய்துவிட்டார். முடிந்தது ஸ்பெக்ட்ரம் பிரச்னை.அடுத்த விவகாரத்தை நோக்கி கவனத்தைத் திருப்ப வேண்டியது தான். இது தானேநடந்து கொண்டிருக்கிறது இத்தனை நாளாய்? இது தான் நடக்க வேண்டுமா இனியும்?கருணாநிதி, ஜெயலலிதா, மாயாவதி, முலாயம் சிங், எடியூரப்பா, லாலு, சோனியாஎன, குற்றச்சாட்டுக்கு ஆளாகாத அரசியல்வாதியே கிடையாது. அதேசமயம், குற்றம்செய்ததாக தண்டிக்கப்பட்ட அரசியல்வாதியும் கிடையாது. எந்தக் கட்சியாக இருந்தாலும், எந்த ஆட்சியாக இருந்தாலும், பாரபட்சமற்ற விசாரணை என்பதற்குஎந்த உத்தரவாதமும் இல்லை. எல்லாருடைய செயல்பாட்டுக்கு பின்னணியிலும்ஏதோ ஒரு சதி இருக்கிறது. அப்புறம் எப்படி இவர்களிடம் நேர்மையை எதிர்பார்க்கமுடியும்?

ஊழல் வழக்குகளை விரைவாக விசாரிக்க வேண்டும்; ஊழல்வாதிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும்; முறைகேடான சொத்துக்களை மொத்தமாக பறிமுதல் செய்ய வேண்டும். இவையெல்லாம் நடந்தால் மட்டுமே ஊழலின் வீச்சு ஒரு சதவீதமாவது குறையும். இதற்கெல்லாம் முதல் படியாக, உருப்படியான மக்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இல்லையேல், ஒன்றை ஒன்று மிஞ்சும் ஊழல் கதைகளைக்கேள்விப்பட்டு, வாயைப் பிளந்துகொண்டிருக்க வேண்டியது தான்.ஒரு வரியில் சொல்வதானால்...  விரல் நுனியில் இருக்கும் ஆயுதத்தைவீணாக்கிவிட்டு, விதியை நோவதில் அர்த்தமில்லை.