ஊட்டி:
"நுகர்வோர் விழிப்புணர்வு குறித்து, நுகர்வோர் சம்மேளனம் சமீபத்தில் நடத்திய ஆய்வில், 18 சதவீதத்தினர் மட்டுமே விழிப்புணர்வு பெற்றுள்ளனர்' என தெரிவிக்கப் பட்டுள்ளது
நீலகிரி மாவட்ட நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு, கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் - மக்கள் ஆலோசனை மையம் சார்பில், ஊட்டியில், மக்கள் ஆலோசனை மையம் துவக்கப்பட்டது. மன்ற நிர்வாகி மஞ்சுளா வரவேற்றார்.கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு, மக்கள் மைய மற்றும் மாவட்ட கூட்டமைப்பு தலைவர் சிவசுப்ரமணியம் பேசியதாவது:
நுகர்வோர் விழிப்புணர்வு என்பது பெயரளவில் மட்டுமே உள்ளது; சிலரால் மட்டுமே நுகர்வோர் குறித்து பேசப்படுகிறது. நுகர்வோர் விழிப்புணர்வு குறித்து, நுகர்வோர் சம்மேளனம் சமீபத்தில் நடத்திய ஆய்வில், 18 சதவீதத்தினர் மட்டுமே விழிப்புணர்வு பெற்றுள்ளனர்; 12 சதவீதத்தினர் மட்டுமே நுகர்வோர் குறை தீர்மன்றத்தை அணுகுகின்றனர் என ஆய்வு தெரிவிக்கிறது.
நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தில் பல சிறப்பம்சம் இருந்தும், அதை பயன்படுத்த இயலா மல், அறியாமல் உள்ளனர். இந்நிலை மாறி விழிப்புணர்வு பிரசாரம், கருத்தரங்கு, பயிற்சி முகாம்கள் நடத்தினாலும் முழுமையாக சென்றடைவதில்லை. மக்கள் பாதிக்கப்படும் போது மட்டுமே சிந்திக்கின்றனர். ஏமாறும் மக்கள், நிவாரணம் பெறவும், புகார் செய்யவும் வழி தெரியாமல் உள்ளனர். இவற்றை தெளிவுபடுத்தவும், பாதிப்புக்கு நிவாரணம் பெறவும் உதவ, ஆலோசனை மையம் துவக்கப்பட்டுள்ளது.
மையத்தை அணுகி தொடர்பு கொண்டால், நுகர்வோருக்கான ஆலோசனை மற்றும் வழிமுறை தெளிவுபடுத்தப்படும். 94885-20800, 93453-98085, 94880-94501, 96265-85301 என்ற எண்களில், காலை 8.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம். இவ்வாறு, சிவசுப்ரமணியம் கூறினார்.மாவட்ட கூட்டமைப்பு பெருந்தலைவர் கிருஷ்ணசாமி தலைமை வகித்தார். அரியலூர் மாவட்ட நுகர்வோர் செயல்பாட்டு இயக்க செயலர் வக்கீல் ஆனந்தம், நீலகிரி மாவட்ட கூட்டமைப்பு பொதுச் செயலர் வீரபாண்டியன் உட்பட பலர் பங்கேற்றனர். மக்கள் மைய ஒருங்கிணைப்பாளர் மாரிமுத்து நன்றி கூறினார்.
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக