ஊட்டி: "உலகளவில் பயன்படுத்தப்படும், நீலகிரி தேயிலை கலப்படமின்றி கிடைப்பது அரிதாகிவிட்டது' என, ஊட்டியில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் வருத்தம் தெரிவிக்கப்பட்டது.
ஊட்டி பெத்லகேம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் குடிமக்கள் நுகர்வோர் மன்ற கூட்டம் நுகர்வோர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
பள்ளி தலைமையாசிரியர் புஷ்பா தலைமை வகித்தார். மன்ற ஒருங்கிணைப்பாளர் குணசீலி முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில், நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்ரமணியம் பேசுகையில், ""நம் நாட்டில் இந்தியாவில் 85 சதவீதம் பேர் பல்வேறு வகைகளில் ஏமாற்றப்படுகின்றனர். இதனை தவிர்க்க அனைத்து பள்ளிகளிலும் குடிமக்கள் நுகர்வோர் மன்றங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது,'' என்றார்.
நெஸ்ட் அறக்கட்டளை அறங்காவலர் சிவதாஸ் பேசுகையில், ""தூய்மையான குடிநீர், உணவு இருப்பிடம், காற்று இவைகளை மாசுபடுத்தும் சூழல் அதிகரித்துள்ளது. இதனை தவிர்த்து, அனைவரும் மாசில்லாத சூழலுடன் வாழும் உரிமையை நிலைநாட்ட அனைவரும் பாடுபட வேண்டும். உலக அளவில் பயன்படுத்தப்படும், தேயிலை தூள், கலப்படமின்றி கிடைப்பது அரிதாகி விட்டது. பெரும்பான்மையான பகுதிகளில் சாயம் கலந்த தேனீர், தேயிலை தூள் விற்பனை செய்யப்படுவது அதிகரித்து வருகிறது. இவற்றை தவிர்க்க வேண்டும்.' இவ்வாறு சிவதாஸ் பேசினார்.
சாம்ராஜ் மேல்நிலைப்பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் முருகன், குடிமக்கள் நுகர்வோர் மன்ற தலைவர் ரிதிகா, துணைத் தலைவர் ஷாலினி, செயலாளர் அக்ஷயா, துணை செயலாளர் ரம்யா, பொருளாளர் ஹரிணி உட்பட பலர் பங்கேற்றனர். ரம்யா நன்றி கூறினார்.
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்
மக்கள் மையம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக