ஊட்டி : "கலப்பட பொருட்களை உட்கொள்வதால் புற்றுநோய் வரை பாதிப்பு ஏற்படுகிறது' என அதிர்ச்சி தெரிவிக்கப்பட்டது.
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், மக்கள் மையம் சார்பில், உதகையில் ரமணா தனியார் பயிற்சி மையத்தில் உணவுக் பாதுகாப்பு மற்றும் கலப்பட உணவுகள் என்ற தலைப்பில்,விழிப்புணர்வு கருத்தரங்கு நடத்தப்பட்டது.
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்ரமணியம் தலைமை வகித்து பேசுகையில்,
"கலப்படம் என்பது இருவகை படும் ஒன்று உணவு பொருட்களில் நன்மை செய்ய கூடிய நல்ல பொருட்களை கலப்பது இன்னொன்று உணவு பொருட்களில் உடலுக்கு தீமை விளைவிக்க கூடிய பொருட்களை கலப்பதாகவும் இந்த தீமை செய்யும் உணவுக் கலப்படத்தால் மக்கள் பாதிக்கின்றனர்; பல உணவுப் பொருட்கள், உடலுக்கு தீங்கு விளைவிப்பதை அறியாமலே பயன்படுத்துகிறோம். அரிசியில் கல், மண், கோதுமையில் எர்காட், ஊமத்தை விதைகள், கேழ்வரகில் மணல், செயற்கை நிறங்கள், ரவை, கோதுமை, அரிசி மாவுகளில் மரவள்ளி மற்றும் கிழங்கு மாவு, பருப்பு வகைகளில் நச்சுசாயம், வனஸ்பதியில் உருளைக் கிழங்கு மாவு, தேயிலை தூளில் முந்திரி மற்றும் புளியங்கொட்டை தூள் மற்றும் சாயங்கள் உட்பட பல பொருட்களில் கலப்படம் செய்யப்படுகிறது. சாலையோரங்களில் விற்கப்படும் பழங்கள் மற்றும் உணவுப் பொருட்களில் வாகனப் புகை, மண்புழுதி படிந்திருக்கும். கலப்பட பொருட்களை பயன்படுத்தும் மக்களுக்கு புற்றுநோய் வரை பாதிப்பு ஏற்படுகிறது,
தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பு கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தமிழ் செல்வன் பேசியதாவது:
தரமாக, சுகாதாரமாக, சரியான விலையில் உணவு கிடைக்க வேண்டும். பாதுகாப்பான தரமான உணவு உண்ணாவிட்டால், நம்மால் சரியாக சிந்திக்கவும், செயல்படவும், அமைதியாகவும் வாழ முடியாது. உணவுக் கல்ப்படத்தினை தடுக்க உணவு கலப்பட தடை சட்டம் 1953 செயல் பட்டது தற்போது கடந்த 2005 ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் 2011 முதல் செயல் பட்டு வருகின்றது இச் சட்டத்தின் படி, கலப்படம் செய்வோருக்கு அளிக்கப்படும் தண்டனையை விட, விற்பவருக்கு கூடுதல் தண்டனை கிடைக்கும்.
இச் சட்டம் நுகர்வோருக்கு கிடைத்த மிக பேடும் ஆயுதம் ஆகும் இச் சட்டம் முறையாக செயல் பட்டால் 90 சதவித உணவு கலப்படம் தரமற்ற உணவுகள் தடை செய்ய படும் நுகர்வோர்கள் உணவுப் பொருட்கள் வாங்கும் போது தரம், தேதி, எடை, காலாவதி, அதில் உள்ள சத்துக்கள் குறித்து அறிந்து வாங்க வேண்டும். கலப்பட பொருட்கள் விற்பது தெரிந்தால், மாவட்ட கலெக்டர், மாவட்ட உணவு தர கட்டுப்பட்டு நியமன அலுவலர், தன்னார்வ நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு நிர்வாகிகளுக்கு புகார் தெரிவிக்கலாம். புகார் உறுதி செய்யப்பட்டால் தகவல் கொடுத்தவர்களுக்கு தக்க சன்மானம் ரூபாய் 1000 முதல் வழங்கப்படும் தகவல் கொடுப்பவர்கள் பெயர் முகவரி ரகசியமாக பாதுகாக்கப்படும் . இவ்வாறு, தமிழ் செல்வன் பேசினார்
இந்நிகழ்ச்சியில் ரமணா தனியார் பயிற்சி மைய மாணவர்கள் பங்கேற்றனர்.
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக