அன்புடன் வரவேற்கின்றோம்


you are welcome to our web page

எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்

Please give your GOOD IDEAS FOR DEVELOPING
THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPS

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்

திங்கள், 18 நவம்பர், 2013

நுகர்வோர்கள் குறைகளை தெரிவிக்க வேண்டிய வழிமுறை



 

மக்கள் தாங்கள் வாங்கும் பொருட்களில் ஏதேனும் குறைபாடு இருந்தால் அந்தக் குறைபாட்டை சலிப்புடன் சகித்துக் கொண்டே அப்பொருளைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். மக்களின் இந்த சகிப்புத் தன்மையை சாதகமாகப் பயன்படுத்தி பெரும்பாலான வணிகப் பொருள்- உணவுப் பொருள்கள் தயாரிக்கும் நிறுவனங்கள், தாங்கள் தயாரிக்கும் பொருட்களில் கலப்படங்கள் கலந்து தயாரித்து விற்பனை செய்து கொள்ளை லாபம் பார்க்கிறார்கள். இவை தெரிந்தும் நம் அன்றாட வாழ்வில் எத்தனையோ கலப்படப் பொருள்களைப் பயன்படுத்துகிறோம்.
பொருளில் குறை இருப்பது தெரிந்தாலும் விற்பனை செய்பவரிடம் போய் குறையை சுட்டிக் காட்டுவதில்லை. ஒரு மளிகைக் கடையில் சலவை சோப்பு வாங்கி அதில் குறை இருந்தால் விற்றவரிடம் கேட்போம். அவர் மொத்த விற்பனையாளரைக் கை காட்டுவார். மொத்த விற்பனையாளர் தயாரிப்பு நிறுவனத்தைக் கை காட்டுவார். இந்த அடுத்தவரை கை காட்டும் அவலத்தால், பெரும்பாலான மக்கள் குறைகள் உள்ள பொருட்களை பயன்படுத்தியே பழகிவிட்டார்கள்.
நுகர்வோர் குறைகள் தீர்க்க பல அரசு அமைப்புகள், தனியார் தொண்டு நிறுவனங்கள் உள்ளன. ஆனாலும் மக்கள் அவைகளை நாடுவதில்லை. காரணம் நேரம் காலம் வீணாகும் என்ற சோம்பல் கலந்த நினைப்பு. ஆனால் பணம் செலுத்தி பொருள் வாங்குபவர் தெரிவிக்கும் எல்லா குறைகளுக்கும் இழப்பீடு தரவேண்டியது விற்பவர்களின் கடமை என்பதை மறந்து நாம் அமைதியாக இருந்து விடுகிறோம்.  அதனால் மக்கள் தங்கள் உரிமைகளை விட்டுக் கொடுக்காமல் நுகர்வோருக்கான உரிய அமைப்புகளை அணுகி தங்கள் குறைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம். நம் வாசகர்களுக்காக வழக்கறிஞர்கள் தந்த- நுகர்வோர்கள் தங்கள் குறைகளை தெரிவிக்க வேண்டிய வழிமுறைகளைக் கொடுத்துள்ளோம்.

பொதுமக்கள், தாங்கள் வாங்கும் பொருட்களில், தரம் மற்றும் சேவை குறைபாடு இருந்தால்,  நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 1986- ன்படி, நுகர்வோர் குறைதீர் மன்றங்களில் புகார் செய்து, நிவாரணம் பெறலாம். புகார் மனுவில், புகார்தாரரின் பெயர், முழு முகவரி, எதிர் மனுதாரரின் பெயர் மற்றும் முகவரி, பொருள் அல்லது சேவையை பயன்படுத்திய விவரங்கள், புகாரின் தன்மை, ரசீதின் நகல் மற்றும் விவரம், இழப்பீட்டின் விவரம் ஆகியவை தெளிவாகக் குறிப்பிடப்பட வேண்டும்.

உதாரணமாக ஒரு தனி நபர் நீங்கள் ஒரு தொலைக்காட்சிப் பெட்டி வாங்குகிறீர்கள். உத்திரவாத காலத்திற்குள் தொலைக்காட்சிப் பெட்டி பழுதடைந்து விடுகிறது. நீங்கள் உடனே விரைவுப் பதிவு அஞ்சல் மூலம் பழுது குறித்து தெரிவித்து நீங்கள் பொருள் வாங்கிய கடைக்கோ நிறுவனத்துக்கோ அனுப்புங்கள். இரண்டுவாரம் வரை சரியான பதில் கிடைக்கவில்லை என்றால் மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்துக்குச் சென்று நீங்கள் அனுப்பிய எழுத்துபூர்வ கடித நகலையும் பதிவு அஞ்சல் நகலையும் இணைத்து எழுத்துபூர்வமாக புகார் கொடுக்கலாம். குறைதீர் மன்றம் உங்கள் புகார் ஏற்கக் கூடியதுதானா என ஆராய்ந்து ஏற்கக் கூடியதாய் இருந்தால் ஏற்றுக் கொண்டு உங்களை அழைப்பார்கள்.

பாதிக்கப்பட்டவர் வழக்கறிஞர் மூலமும் கொடுகை அறிவிப்பு (claim notice) அனுப்பலாம். இதற்கு சரியான பதில் கிடைக்கவில்லை என்றால் நுகர்வோர் நீதி மன்றத்தையும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் தொண்டு நிறுவனங்களையும் அணுகலாம்.  புகார் பதிவிற்கான கட்டணத்தை வங்கி விரைவுக் காசோலையாகவோ  அல்லது தபால் அலுவலகம் மூலம் பணம் செலுத்த வேண்டும். பொருட்களை விற்பனை செய்பவர்கள் அனைவரும் வழக்குக்கு உட்பட்டவரே. இதில் தனியார், அரசு நிறுவனம் என்ற பாகுபாடு கிடையாது.
உதாரணம்: மளிகைக் கடை, பல்பொருள் அங்காடி, உணவுப் பொருள் தயாரித்து விற்பனை செய்யும் கடைகள், (உதாரணம்: பேக்கரி, இன்னபிற) மிதிவண்டி, – மோட்டார் சைக்கிள் – கார் – லாரி விற்பனையார், மருந்துக் கடைகள் , நியாயவிலைக் கடை போன்றவை.
பணம் வாங்கிக்கொண்டு வழங்கப்படும் சேவைகள், தனியார் மற்றும் அரசு துறை நிறுவனங்கள் அனைத்துமே இதில் அடங்கும்.
உதாரணம் : மின்சார வாரியம், குடிதண்ணீர் விநியோகம், ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் , வங்கிகள், மருத்துவமனைகள், எரிபொருள் நிறுவனங்கள் , துணைப் பதிவாளர் அலுவலகம் போன்றவைகள்.
விலை சம்பந்தப்பட்ட பிரச்சனை என்றால், விலை அச்சடிக்கப்பட்ட மேல் உறையை பத்திரமாக வைத்திருக்க வேண்டும். தரம் சம்பந்தப்பட்ட பிரச்சனை என்றால், அதே மேல் உறையுடன் பொருளை உறையில் இட்டு வைத்திருக்க வேண்டும். எடை சம்பந்தப்பட்ட பிரச்சனை என்றால், நீங்கள் உறையைப் பிரிப்பதற்கு முன்பே எடை குறைவு என்பதை உறுதிப் படுத்திக் கொண்டு  உறையைப் பிரிக்காமல் வைத்திருக்க வேண்டும். ஒருவேளை பிரித்துவிட்ட பின்பு தான் எடை குறைவை கண்டுபிடித்தீர்கள் என்றால், பிரிக்கப்பட்ட உறையை ஆதாரமாக வைத்து வழக்கு தொடர முடியாது. எனவே மறுபடியும் அதே கடைக்கு போய், அதே பொருளை, ரசீது போட்டு வாங்கிக்கொள்ளுங்கள். சேவை சம்பந்தப்பட்ட பிரச்சனை என்றால், சேவைக்கான ரசீது இருக்கவேண்டும்.
புகார் செய்வதற்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது, ஒரு லட்ச ரூபாய் வரை, புகார் கட்டணம் செலுத்தத் தேவை இல்லை. ஏனைய புகார்தாரர்கள், தாங்கள் வாங்கிய பொருட்கள் மற்றும் சேவை மதிப்பின் அடிப்படையில், புகார் பதிவு கட்டணம் செலுத்த வேண்டும். 20 லட்சம் ரூபாய் வரை இழப்பீடு கோரும் வழக்குகளை, மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தில்தான் பதிவு செய்ய வேண்டும். நீதிமன்றக் கட்டணம் எதுவும் செலுத்தவேண்டியது கிடையாது. இதனால் வழக்கு தொடருவதற்கு தகுதியே இல்லாத பிரச்சனைக்கெல்லாம் வழக்கு தொடர ஆரம்பித்தனர். இதில் எதிர் தரப்பினரை  மிரட்டுபவர்களும் அடங்கும். இதனால் வழக்கு தள்ளுபடியாகும் நிலை ஏற்பட்டது. இதனால் தவறே செய்யாத எதிர் தரப்பினர்களுக்கு கால விரயம் மற்றும் செலவு ஏற்படுவதையும், நீதிமன்றத்தின் நேரம் வீணாவதையும் கருத்தில் கொண்டு 2006 ஆம் ஆண்டில் கீழ்க்கண்டவாறு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
1லட்சத்திற்கு மேல் 5 லட்சம் வரை = 200 /-
5 லட்சத்திற்கு மேல் 10 லட்சம் வரை = 400 /-
10 லட்சத்திற்கு மேல் 20 லட்சம் வரை = 500 /- போன்ற கட்டண வரையறை செய்யப்பட்டது.
வழக்கு தொடருபவர்  நுகர்வோராக இருக்கவேண்டும். வழக்கு அவர் சம்பந்தப் பட்டதாக இருக்கவேண்டும். நுகர்வோர், எந்த நுகர்வோர் குறைதீர் மன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட எல்லைக்குள் ( Jurisdiction) இருக்கிறாரோ அதில் தான் வழக்கு தொடரவேண்டும்.  ஒவ்வொரு மாவட்டத்திலும் நுகர்வோர் குறைதீர் மன்றங்கள் உள்ளன. சென்னையில் மயிலாப்பூரில் மாநில நுகர்வோர் நீதி மன்றம் உள்ளது. மாவட்ட நுகர்வோர் மன்றத்தில் தீர்வு கிடைக்காவிட்டால் மாநில அளவிலான நீதி மன்றத்தையும் அங்கும் தீர்வு கிட்டாவிட்டால் சென்னை உயர்நீதி மன்றத்தையும் அல்லது உச்ச நீதிமன்றத்தை நுகர்வோர்கள் அணுகி நிவாரணம் பெறலாம். மக்கள் இந்த வழிமுறைகளைப் பின்பற்றி தரமற்ற பொருள்களையும், அக்கறையற்ற சேவைகளையும் நுகோர்வோர்க்கு அளிப்போரை சட்டப்படி அணுகி நம் குறைகளுக்குத் தீர்வு காண்போம். ஒவ்வொரு மாவட்டத்திலும் நுகர்வோர் குறைதீர்வு மன்றங்கள் உள்ளன. அவற்றை மக்கள் அணுகலாம்.

மக்கள் அணுக வேண்டிய நுகர்வோர் குறைதீர் மன்றங்களின் முகவரி:

மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம் 

தலைவர்,
மாநில நுகர்வோர் குறைதீர்
ஆணையம், எண். 212,
இராமகிருஷ்ண மடம் சாலை,
மைலாப்பூர், சென்னை – 600 004
044-24940687, 044- 24618900
மாவட்ட நுகர்வோர் குறை தீர் மன்றங்களின்  முகவரிக்கு 
http://cchepnlg.blogspot.in/2013/11/district-consumer-disputes-redressal.html  வரவும்
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

இயற்கையைச் சீரழிக்கும்

இயற்கையைச் சீரழிக்கும் நெகிழியின் (பிளாஸ்டிக்) தீமையும்-தீர்வும்





 
நாகரீகம், விஞ்ஞான வளர்ச்சி என்ற பெயரில் மனித இனம் பல்வேறு துறைகளில் புதுப்புது வளர்ச்சியை அடைந்து வந்துள்ளது. ஏன் இன்னும் பல அபரிமிதமான வளர்ச்சியையும் சமூகம் காணப்போகிறது. இதில் ஒரு பாதகமான செயல்பாடு எதுவென்றால் ஒவ்வொரு பொருட்களின் கண்டுபிடிப்புகளுக்குப் பின்பும், அப்பொருளின் பயன்பாட்டுக்குப் பின்பும் ஒரு தீய விளைவை மனித இனம் இந்த பூமிக்குக் கொடுத்துக் கொண்டே வந்திருக்கிறது என்றால் அது மிகையாகாது. அந்த வகையில் இன்று நாம் நெகிழி என்று தமிழில் அழைக்கப்படும் பிளாஸ்டிக் இல்லாத தினசரி வாழ்க்கையை மக்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு இதனைப் பயன்படுத்தி வருகிறோம்.
ஆனால் இதனை எதிர்த்து உலகெங்கும் ஒரு எதிர்ப்புக்குரல் ஒலிக்க ஆரம்பித்திருக்கிறது. “பிளாஸ்டிக்கை ஒழிப்போம்” என்று கூட்டம் போட்டுப் பேசுவதும் கொடி பிடித்து போராடுவதும் நூறு சதவீத வெற்றியைத் தருகிறதா? என்றால் அது பெரும் கேள்விக்குறியே. இன்று நாம் எழுதும் பேனா முதல் வானில் பறக்கும் விமானம் வரை நெகிழியின் ஆதிக்கமே தலைத்தோங்கியுள்ளது.
 
இன்று நாம் நெகிழிப் பைகளை ஒருமுறை மட்டுமே பயன்படுத்தித் தூக்கி எறியும் செயலானது படுபாதகச் செயலாகும். ஏனென்றால் பொதுமக்கள் பொருட்களை வாங்கி எடுத்துச் செல்லப் பயன்படுத்தும் நெகிழிப்பைகளின் சராசரி ஆயுட்காலம் வெறும் 12 நிமிடங்கள் மட்டுமே என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதாவது அதனைக் கையில் வாங்குவதற்கும் குப்பையில் எரிவதற்கும் இடையே வெறும் 12 நிமிடங்கள் மட்டுமே நெகிழிப்பை மனிதனுக்குப் பயன்படுகிறது. ஆனால் இந்தப் பை அழிவதற்கு 1000 ஆண்டுகள் ஆகுமாம். இப்பை காலகாலத்திற்கும் அழியாமல் இருந்து சுற்றுச்சூழலைப் பாழ்படுத்தும்.
இன்று ஒருவர் தூக்கி எறியும் நெகிழிப்பை அவரது பிள்ளைகள், பேரன், பேத்திகள் இவர்களின் பிள்ளைகள் எனப் பல தலைமுறையினருக்கும் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும்.
உற்பத்தி:
 

இந்த நெகிழி என்பது பெட்ரோலிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளில் சுத்திகரிக்கும் போது பாலி எத்திலின் என்ற துணை பொருளாகக் கிடைக்கிறது. நெகிழிப் பையைத் தயாரிக்க ஆகும் எரிபொருளை விட 4 மடங்கு அதிக எரிபொருள் காகிதப்பையை உருவாக்கப் பயன்படுகிறது. ஆகையால் நாம் முடிந்தளவு இருவிதமான பைகளையும் பயன்படுத்துவதை தவிர்த்து முடிந்த வரை துணிப்பைகளைப் பயன்படுத்துவதே இயற்கைக்கும், எதிர்கால சந்ததியினருக்கும் நாம் செய்யும் பெருந்தொண்டாகும்.
மக்கள் பயன்பாட்டில் நெகிழியின் பங்கு:
ஏதோ ஒரு விதத்தில் தினமும் நெகிழியின் பயன்பாடு அல்லாது நாம் இருக்க முடியாது, என்ற நிலை இங்கு உருவாகிவிட்டது. இதில் சூடான திரவ உணவு வகைகளான காபி, பால், சாதம், சாம்பார், குருமா ஆகியவற்றைப் பாலித்தீன் பைகள் அல்லது மெல்லிய பிளாஸ்டிக் டப்பாக்களில் சேமித்தால் நச்சுப் பொருட்கள் இந்த உணவில் ஊடுருவும் திரவ உணவுப் பொருட்களைச் சேமித்தால் படிம நச்சாக மெது, மெதுவாக உணவில் சேருகிறது. தவிர உப்பட்ட பொருட்களான ஊறுகாய்கள், புளிச்சத்து நிறைந்த பழச்சாறு இவற்றில் பிளாஸ்டிக் கலக்கிறது.
பிஸ்கட், மிக்சர், காராச்சேவு, முறுக்கு போன்ற உலர்ந்த உணவுப் பொருட்கள் போன்றவற்றில் இந்த பாலித்தீனின் நச்சு ஊடுறுவல் குறைவு, நீர் உணவைச் சேமிக்கப் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பாட்டில்கள், டப்பாக்கள், பாலித்தீன் பைகள் போன்றவை உணவுத்தரம் உள்ளவையா? என்று தெரிந்து கொண்டுதான் பயன்படுத்த வேண்டும். நம் நாட்டில் நெடுந்தொலைவில் பேருந்து, புகைவண்டிப் பயணமோ? அல்லது அதிக நேரம் நடைப்பயணமோ? மேற்கொள்ளும் போது நீர் குடுவைகள், குளிர்பான (ஜுஸ்) குடுவைகள் போன்றவற்றை வாங்கி உபயோகப்படுத்துவதோடு மட்டுமில்லாமல் காலியான அந்தப் பாட்டில்களைக் கொண்டு வந்து வீட்டில் மண்ணென்ணெய் வாங்கவும், சமையல் எண்ணெய் ஊற்றி வைக்கவும் இன்றி பிற பயன்பாட்டுக்கும் உபயோகப்படுத்துகிறோம். இந்தப் பயணத்தில் காலிப் பாட்டிலை லேசாக அமுக்கிப் பார்ப்போம். அது நசுங்கினால் தூக்கிப் போட்டு விடுவோம். கெட்டியாக இருந்தால் அதைப் பாதுகாத்து மறுபடியும் பயன்படுத்தும் பழக்கம் இங்கே தலை விரித்தாடுகிறது.
நெகிழி உறைகள் சுற்றப்பட்டு வரும் உணவுப்பொருட்களான சாக்லேட்டு, பால்கோவா போன்றவற்றில் நெகிழி வேதிப்பொருட்களான, பென்சீன் வினைல் குளோரைடு கலந்து விடுகிறது. இதனால் புற்றுநோய் ஏற்படக் காரணமாகிறது. மேலும் இயற்கையாக வாழை இலை போட்டு உணவருந்தி வந்த மக்கள் தற்போது “கம்ப்யூட்டர் வாழை இலை” என்ற பெயரில் பிளாஸ்டிக் வாழை இலைகளை, பல உணவு விடுதிகளும், வீட்டு விசேசங்களுக்கும் மக்கள் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். இந்த இலையின் மேல் சூடான திட, திரவ உணவுப் பொருட்களை வைக்கும்போது,  வைத்த  அந்த இடத்தில் உள்ள நெகிழியானது இளகி, இதில் உள்ள நச்சுப்பொருட்கள்  உணவுப்பொருட்களோடு கலந்து, உண்பவருக்கு பல பக்கவிளைவுகளை ஏற்படுத்துகிறது.
நெகிழியின் தீமைகள்:
 
1. நாம் நெகிழியைப் பயன்படுத்தி விட்டு வீதியில் எரியப்படும் நெகிழிக்குப்பைகள் பெருமழை பெய்து நீரால் அடித்து ஆற்றில் கலக்கிறது. ஆறுகள் அதைக்கொண்டு வந்து கடலில் சேர்ப்பதால் இந்த நெகிழிப்பைகளை உட்கொண்டு ஒரு ஆண்டுக்கு பல லட்சம் திமிங்கலங்களும், சீல் போன்ற கடல்வாழ் உயிரினங்களும் 10 லட்சம் பறவைகளும் இறப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
2.குளங்கள், ஏரிகள், ஆறுகள், நிலத்தடி நீர் என எல்லா நீர் வளமும் இந்த நெகிழிப்பையால் கடுமையாக மாசடைந்துள்ளதால் இந்நீரில் உள்ள நீர்வாழ் உயிரினங்களும், மனிதர்களும் கடும் பாதிப்பிற்கு உள்ளாகிறார்கள்.
3.நெகிழிப்பை, சாக்கடையை அடைப்பதால் சாக்கடைகள் தெருவழியே பிதுங்கி வழிந்து சாலையில் ஓடும்போது, அதன்மீது நடக்கும் போதும், அதிலிருந்து வரும் காற்றை சுவாசிக்கும் போதும் பல தோற்று நோய்களைத் தோற்றுவிக்கிறது.
4. சாலை ஓரங்களில் தேங்கிக்கிடக்கும் நெகிழிக் குப்பைகள் அசுத்தத்தை ஏற்படுத்தி டெங்கு, மலேரியா என பற்பல நோய்கள் தோன்றக் காரணமாகிறது. இதனால் மழைக்காலத்தில் சாலைகள் வெள்ளக்காடாக மாறுவதற்கு இந்த நெகிழிக்குப்பையே முதற்காரணம்.
5. இந்த நெகிழிக் குப்பையை எரிப்பதால் இதிலிருந்து டையாக்சின் வாயு வெளியேறுகிறது. இது காலத்திற்கும் அழியாமல் இருந்து புற்றுநோயை ஏற்படுத்தும் வாயுவாகும்.
6.மனிதர்கள் உண்டபின் கீழே போகும் நெகிழிப் பொட்டலங்களைத் தின்னும் விலங்குகளின் உணவுக்குழாய்கள் பாதிக்கப்பட்டு அவைகள் இறக்க நேரிடுகிறது.
7. மக்காத நெகிழிப் பொருட்கள் வேளாண் நிலங்களில் தங்கி அதன் வளத்தைக் குறைத்து நஞ்சாக்குகிறது. மேலும் பயிர்வளர்ச்சியையும் பாதிக்கிறது.
8.நெகிழிப் பொருட்கள் செய்யும் தொழிற்சாலைகளில் மறுசுழற்சி செய்யும் போதும், உருகும் போதும் வெளியேறும் வாயுக்கள் நச்சுத்தன்மை உடையதால் ஊழியர்கள், அருகில் வசிக்கும் மக்கள் ஆகியோர் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதனால் தோல்நோய் முதல் புற்றுநோய் வரை பல நோய்கள் வரக் காரணமாகிறது.
சிலருக்குத் தொட்டால் கூட ஒவ்வாமை என்ற நோய் ஏற்படுகிறது. மேலும் மூச்சுக்குழல் பாதிப்பு, குடல் புண், செரிமானமின்மை, நரம்புத்தளர்ச்சி, ரத்தச் சிறுநீரகச் செயல்பாடு குறைபாடு, நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைவு போன்றவை ஏற்படக்கூடும் என ஆய்வுகள் கூறுகின்றன.
நாம் செய்ய வேண்டியவை:
 
● மறுபயன்பாட்டுக்கு உரிய தரமான துணிப்பைகளைப் பயன்படுத்தலாம், இதன் மூலம் ஆயிரக்கணக்கான நெகிழிப்பைகளின் பயன்பாட்டைத் தடுக்கலாம்.
● எப்பொழுதெல்லாம் கடைக்குச் செல்கிறீர்களோ அப்பொழுதெல்லாம் மறக்காமல் கையில் துணிப்பைகளை எடுத்துச் செல்ல வேண்டும். குறைந்த பட்சம் நம்மிடம் உள்ள நெகிழிப்பைகளையாவது கடைக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.
● பிளாஸ்டிக் குடுவைகள், டப்பாக்களில் குடிநீர், சாறு, நீர் பை போன்ற அடைத்து வைத்த உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும். இந்தப் பாட்டில்களின் அடியில் உள்ள எண்ணைக் கவனித்து அன்றாட வீட்டு உபயோகத்திற்கு பாலி எதிலின் டெபலோட், அடல் பாலி எதிலின், பாரிஸ் லடரின் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். பாலி கார்பனேட் பிசி(7) வகை பிளாஸ்டிக்குகள் ஓரளவு பாதுகாப்பானவை.
● பிளாஸ்டிக் பைகள் மக்குவதற்கு ஆகும் காலம் 1000 ஆண்டுகள். இதில் பிளாஸ்டிக் குடுவை எக்காலத்திலும் அழியாது. எனவே பிளாஸ்டிக் பை, பிளாஸ்டிக் குடுவைகள் போன்றவற்றை வாங்கக் கூடாது. ஏனென்றால் இந்தக் குப்பையை எந்த வகையிலும் உருமாற்றவோ, அழிக்கவோ முடியாது. அதனால் இன்னும் 10, 20 ஆண்டுகளில் உலகம் கழிவு பிளாஸ்டிக்கால் நிரம்பி வழியும் என்று நம்பப்படுகிறது.
● நெகிழிப்பைகளைக் கட்டுப்படுத்தும் விதிமுறைகள் ஏற்கனவே இந்திய அரசால் அரசாணையாக வெளியிடப்பட்டுள்ளன. இந்தச் சட்டப்பூர்வமான விதிமுறைகளைத் தமிழ்நாடு அரசும், மாநகராட்சிகளும், நகராட்சிகளும் முழுமையாக நிறைவேற்ற வேண்டும். இதற்கு பொதுமக்களாகிய நாம் ஒத்துழைப்பும் தர வேண்டும்.
இப்படியாக ஒருமுறை பயன்படுத்தித் தூக்கி எறியும் நெகிழிப்பைகள் மிகப்பெரும் கேடாகி விட்டதை குறிப்பிடும் வகையில் “நெகிழிப்பைகள் அணுகுண்டை விட ஆபத்தானவை” என்று இந்திய உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதனால் நம் நலத்தையம், எதிர்கால சந்ததியினர் நலத்தையும் கருத்தில் கொண்டு இனியாவது குப்பைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து வளமான, நலமான நோயற்ற சமூகம் நாம் செயல்பட வேண்டும்.
 
thanks சித்திர சேனன்
 
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்
 சிந்தித்து பாருங்கள்... சிறகடிக்கும் சுகாதாரம்...!
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் புழக்கம், நீலகிரியில் அதிகரித்து விட்டது; அதிகாரிகளின் நடவடிக்கை, மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே கட்டுப்படுத்த முடியும்.

சுற்றுலா ஸ்தலங்களுக்கு தேசிய அளவில் பெயர் பெற்றது நீலகிரி மாவட்டம்; இதை மெய்ப்பிக்கும் வகையில், மாவட்டத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. நடப்பாண்டு, மே 1ம் தேதி உட்பட கண்காட்சி நாட்களில், நெரிசலில் சிக்கியது நகரம். கூட்டம் அதிகரித்து வரும் நிலையில், நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழலை பாதுகாக்க, பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. துவக்கத்தில் மேற்கொண்ட நடவடிக்கையால், இப்பொருட்களின் விற்பனை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. காலப்போக்கில், அலட்சியம் செய்த அதிகாரிகளால், பிளாஸ்டிக் பொருட்களின் புழக்கம் அதிகரித்துள்ளது. "பிளாஸ்டிக் தடை செய்யப்பட்ட மாவட்டம்' என, அறிவிப்பு பலகைகளில் மட்டுமே வெளிப்படுகிறது. மாவட்டத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பலர், வனப்பகுதிகளில் சமைத்து, உணவு மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை விட்டுச் செல்வதால், வன விலங்குகள் பாதிக்கப்படுகின்றன; பிளாஸ்டிக் பொருட்களை உட்கொண்டு பல விலங்குகள் இறந்த சம்பவமும் நடந்துள்ளன. இதைத் தடுக்கவும், விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மாவட்ட நுழைவு வாயிலில், பிளாஸ்டிக் பொருட்களின் அபாயம் குறித்து "கண் திறக்க' வைத்த நடவடிக்கையும் தற்போது இல்லை; இதனால், சுற்றுலா ஸ்தலங்களிலும், வனப்பகுதிகளிலும் பிளாஸ்டிக் கழிவு குவிந்து கிடக்கிறது.
புழங்கும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் மெத்தனப் போக்கு தான் காரணம்; "கவனிப்பில்' மயங்கும் அதிகாரிகள் சிலரால் தான் அதிகரித்து விட்டது என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். சுற்றுச்சூழல் மற்றும் வனப்பாதுகாப்பு குறித்து, மேடைகளில் முழங்கும் மத்திய, மாநில அமைச்சர்கள், பிளாஸ்டிக் புழக்கம் குறித்து வாய் திறப்பதில்லை; பல இடங்களில் பிளாஸ்டிக் கழிவுகள் மக்களை வரவேற்கின்றன. இதேநிலை தொடரும் பட்சத்தில், பிளாஸ்டிக் தடை செய்யப்பட்ட மாவட்டம், அதிகளவில் பிளாஸ்டிக் உற்பத்தி செய்யும் மாவட்டமாக மாறிவிடும் அபாயம் உள்ளது. இதைத் தடுக்க, நீலகிரி மாவட்ட நிர்வாகம் களமிறங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களும் யோசிக்கணும்: பிளாஸ்டிக் பொருட்களை ஒழிக்க, பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும். பொருட்களை வாங்கும் போது பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து, காகிதம் மற்றும் துணியால் தயாரிக்கப்பட்ட பையில் வாங்க வேண்டும்; இதுபோன்ற நடைமுறையை தொடர்ந்து கடைபிடித்தால், கடையில் மேற்கொள்ளப்படும் விற்பனையும் கட்டுக்குள் வரும். நீலகிரியில் சுற்றுச்சூழல் மாசுபட்டு வருகிறது என்பதை,சுட்டெரிக்கும் வெயில், நிலச்சரிவு உட்பட சம்பவங்கள் அடிக்கடி நினைவுப்படுத்தி வருகின்றன. எனவே, மாவட்டத்தை பாதுகாக்க வேண்டும் என்றால், வனப் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து, பிளாஸ்டிக் பொருட்களுக்கு எதிராக செயல்பட வேண்டும்.

அன்புடன் சிவகிருஷ்ணா  

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

தையல் பயிற்சி பெற்ற 20 பெண்களுக்கு

கூடலூர் : கூடலூர் இரண்டாவது மைல் பகுதியில் தையல் பயிற்சி பெற்ற 20 பெண்களுக்கு நேரு யுவகேந்திரா சார்பில் சான்றிதழ் வழங்கப்பட்டது.கூடலூர் இரண்டாவது மைல் பகுதியில் உள்ள, "லிட்ரசி மெஷின்' தையல் பயிற்சி மையத்தில் நேரு யுவகேந்திரா சார்பில் பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி வழங்கப்பட்டது. பயிற்சி பெற்ற பெண்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்சி பயிற்சி மையத்தில் நடந்தது. இதற்கு மைய மேற்பார்வையாளர் எபினேசர் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில், கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின் தலைவர் சிவசுப்ரமணியம் , ஆலோசகர் சுந்தரலிங்கம் ஆகியோர் பங்கேற்று சான்றிதழ்களை வழங்கினர். நிகழ்ச்சியில், தையல் பயிற்சி மூலம் வருவாயை பெருக்கும் வழிமுறைகள், அரசு உதவி பெரும் வழிகள் மற்றும் பெண்கள் மேம்பாட்டு குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. பயிற்சி ஆசிரியர் சூரியகுமார் நன்றி கூறினார்.


கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

செவ்வாய், 5 நவம்பர், 2013

District Consumer Disputes Redressal Forums

What are the addresses of the District Consumer Disputes Redressal Forums functioning in the State of Tamil Nadu
SL. NO:
District Consumer Disputes Redressal Forum / COMMISSION
Telephone numbers
1
The President,
State Consumer Disputes Redressal Commission,
No: 212, R.K. Mutt Road, Mylapore, Chennai – 600 004
044-24940687
044-24618900
2
The President,
District Consumer Disputes Redressal Forum (Chennai – South)
No: 212, R.K. Mutt Road, Mylapore, Chennai – 600 004
044-24938697
3
The President,
District Consumer Disputes Redressal Forum (Chennai – North)
No: 212, R.K. Mutt Road, Mylapore, Chennai – 600 004
044-24952458
4
The President,
District Consumer Disputes Redressal Forum,
Sub-Collector Office Campus,
GST Salai, Melamaiyur Village, Chengalpattu, Kancheepuram District
044-27428832
5
The President,
District Consumer Disputes Redressal Forum,
No: 1, D.C.V. Naidu Road, 1st Cross Street,
Tiruvallur – 602 001
04116-27664823
6
The President,
District Consumer Disputes Redressal Forum,
District Court Buildings Campus
Saththuvachcheri, Vellore – 632 009
0416-2254780
7
The President,
District Consumer Disputes Redressal Forum,
58/D, Anna Salai, Adhidravida Welfare Office (Ground Floor)
Dindivanam, Tiruvannamalai – 606 601

8
The President,
District Consumer Disputes Redressal Forum,
No: 58, Chennai Trunk Salai,Villupuram, Villupuram District

9
The President,
District Consumer Disputes Redressal Forum,
102, Pudhupalayam Main Road, Cuddalore – 2
04142-295926
10
Dharmapuri -- @ Krishnagiri

11
The President,
District Consumer Disputes Redressal Forum,
Yercard MainRoad, Hasthampatty,
Salem – 636 007
0427-2213279
12
The President,
District Consumer Disputes Redressal Forum,
3-152-D, Jeeva Complex Tiruchi Main Road, Namakkal – 637 001
04286-224716
13
The President,
District Consumer Disputes Redressal Forum,
Erode Commercial Complex
Surampatti Naal Road, Erode – 638 009
0424-2250022
14
The President,
District Consumer Disputes Redressal Forum,
District Collector’s Office campus, Coimbatore – 641 018
0422 - 2300152
15
The President,
District Consumer Disputes Redressal Forum,
N.G.M.S.Campus, Udhagamandalam – 643 001
04232 - 2451500
16
The President,
District Consumer Disputes Redressal Forum,
Municipal Buildings, Azad Salai, Karur – 639 002
04324 - 260193
17
The President,
District Consumer Disputes Redressal Forum,
Lakshmi Illam, 345, Rower Nagar, First Floor
Ellampaloor Salai, Perambalur, Perambalur District – 621 212
04328-276700
18
The President,
District Consumer Disputes Redressal Forum,
St. Mary’s Campus, First Floor,
Bharathidasan Road, Tiruchirapalli – 620 001
0431-2461481
19
The President,
District Consumer Disputes Redressal Forum,
Ilango Commercial Complex. Court Road, Neethi Nagar,
Thanjavur – 613 002
04362-272507
20
The President,
District Consumer Disputes Redressal Forum,
52, Kumaran Koil Salai, Tiruvarur, Tiruvarur District – 610 001
04366-224353
21
The President,
District Consumer Disputes Redressal Forum,
543, Public l Office Road, Vellipalayam, Nagapattinam – 611 001
04365-247668
22
The President,
District Consumer Disputes Redressal Forum,
District Court Buildings Campus, Pudukottai, Pudukottai District

23
The President,
District Consumer Disputes Redressal Forum,
No: 95 & 96, Pensioners’ Street,
Near Arya Bhavan, Dindigul, Dindigul District
0451 - 2433055
24
The President,
District Consumer Disputes Redressal Forum,
1st Floor, Combined Court Building, Lakshmipuram,
Periakulam Road, Theni – 625 523
04546-269801
25
The President,
District Consumer Disputes Redressal Forum,
District Court Buildings Campus, Madurai, Madurai District
0452-253304
26
The President,
District Consumer Disputes Redressal Forum,
10 / 25, Thirupattur Road, Sivaganga – 630 561
04575-241591
27
The President,
District Consumer Disputes Redressal Forum,
District Court Complex, Srivilliputtur, Virudhunagar – 626 125
04563-260380
28
The President,
District Consumer Disputes Redressal Forum,
District Collecrate Campus, Ramanathapuram – 623 501

29
The President,
District Consumer Disputes Redressal Forum,
2/ 263, 10th Street, "Valli Illam" , P & T Colony,
Thoothukudi – 628 008

30
The President,
District Consumer Disputes Redressal Forum,
No: 4/993, 2nd Street, Shanthi Nagar,
Bell Ambrose Colony, Palayamkottai, Tirunelveli – 627 002
0462-2572134
31
The President,
District Consumer Disputes Redressal Forum,
New No: 55, Old No: 36/1, First Floor, President Sivadhanu Salai,
S.L.B. Higher Secondary School (South), Nagarcoil,
Kanniyakumari – 629 001
04652-229683
32
The President,
District Consumer Disputes Redressal Forum,
No: 46, M.V.K. Mansion, West Links Colony,
Krishnagiri – 635 001

 கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

சனி, 2 நவம்பர், 2013

லஞ்சத்தினை ஒழிக்க இளம் சமுதாயத்தினர் முன்வர வேண்டும்

ஊட்டி, : லஞ்சத்தினை ஒழிக்க இளம் சமுதாயத்தினர் முன்வர வேண்டும் என விழிப்புணர்வு நிகழ்ச்சியில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
நேரு யுவகேந்திரா, கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்கம், மகாத்மா காந்தி பொது சேவை மையம், பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்றம் ஆகியவை சார்பில் உப்ப ட்டி எம்.எம்.எஸ்.பள்ளியில் லஞ்சம் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய செயலாளர் கணே சன், ஆசிரியர் சூசன் ஜே ஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பள்ளி முதல்வர் கவிதா தலைமை தாங்கி பேசு கையில், ‘லஞ்சம் இல்லாத இடம் இல்லை எனும் நிலை உருவாகி விட்டது. எல்லே ரும் லஞ்சம் வாங்குவதில்லை. பலர் லஞ்சம் வாங்க மாட் டாம் என்ற உறுதியுடன் உள்ளனர். லஞ்சம் ஒரு புற்றுநோய் போல பரவி விட்டது. இதனை தடுக்க இளைஞர்கள் முன்வர வேண்டும்’ என்றார்.
மைய தலைவர் சிவசுப்ரமணியம் பேசு கையில், லஞ்சம் அதிக ரிக்க மக்க ள முதல் காரணம். மக்கள் தகுதி யை மறைத்து அரசு சலுகைகளை பெற நினை ப்பதாலேயே லஞ்சம் அதிகரித்து வருகிறது. முன்பு கட மயை செய்த பின்னர் லஞ்சம் கேட் டனர். ஆன ல் தற் பாது லஞ்சம் கொடுங்கள் கடமையை செய்கிறோம் என்ற நிலை உள்ளது. லஞ்சம் அதிகரிப்பதால் நாட்டின் வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்படுகின்றது. தற்போதைய நிலையில் கோடிக்கணக்க ன ஏழைகள் தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு அரசு வழங்கும் சலுகைகளை வேறு தகுதியில்லாதவர்கள் லஞ்சம் கொடுத்து பெற்று செல்கின்றனர். லஞ்சத்தினை ஒழிக்க இளம் சமுதாயத்தினர் முன்வர வேண்டும். லஞ்சம் வாங்க மாட்டே ம் என்று உறுதி மொழி எடுக்க வேண்டும். பொது சேவை உரிமை சட்டத்தினை நடைமுறைப்படுத்தினால் லஞ்சம் ஒழியும் என்றார்.
தொடர்ந்து லஞ்சம் ஒழிப்பு தொடர்பான கட்டுரை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. இதில் குடிமக்கள் நுகர் வோர் மன்ற பொ றுப்பாளர் ராஜாங்கம், ஆசிரி யர் பரிமளாதேவி மற்றும் மாணவ மாணவிகள் உட் பட பலர் கலந்து கெ ண்டனர்.
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்