கூடலூர் : கூடலூர் இரண்டாவது மைல் பகுதியில் தையல் பயிற்சி பெற்ற 20
பெண்களுக்கு நேரு யுவகேந்திரா சார்பில் சான்றிதழ் வழங்கப்பட்டது.கூடலூர்
இரண்டாவது மைல் பகுதியில் உள்ள, "லிட்ரசி மெஷின்' தையல் பயிற்சி மையத்தில்
நேரு யுவகேந்திரா சார்பில் பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி வழங்கப்பட்டது.
பயிற்சி பெற்ற பெண்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்சி பயிற்சி
மையத்தில் நடந்தது. இதற்கு மைய மேற்பார்வையாளர் எபினேசர் தலைமை வகித்தார்.
நிகழ்ச்சியில், கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின் தலைவர் சிவசுப்ரமணியம் ,
ஆலோசகர் சுந்தரலிங்கம் ஆகியோர் பங்கேற்று சான்றிதழ்களை வழங்கினர்.
நிகழ்ச்சியில்,
தையல் பயிற்சி மூலம் வருவாயை பெருக்கும் வழிமுறைகள், அரசு உதவி பெரும்
வழிகள் மற்றும் பெண்கள் மேம்பாட்டு குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
பயிற்சி ஆசிரியர் சூரியகுமார் நன்றி கூறினார்.
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக