அன்புடன் வரவேற்கின்றோம்


you are welcome to our web page

எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்

Please give your GOOD IDEAS FOR DEVELOPING
THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPS

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்

புதன், 29 ஜனவரி, 2014

கூடலூர் மின்சார சேவை நவீனபடுத்தபடும்


கூடலூர் மின்சார சேவை நவீனபடுத்தபடும் என மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழக உதவி கோட்ட பொறியாளர் முரளிதரன் தெரிவித்தார்

கூடலூர் சக்சஸ் கல்வி நிலையத்தில் நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில் நடைபெற்ற நுகர்வோர்  விழிப்புணர்வு முகாம் நடை பெற்றது.

நிகழ்ச்சிக்கு கல்வி நிலைய முதல்வர் ராஜேஷ் தலைமை தங்கினார். கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம்  கூடலூர் மின்வாரிய உதவி மின் பொறியாளர் பாலாஜி  ஆகியோர் முன்னிலை வகித்தனர்

நுகர்வோர்  விழிப்புணர்வு முகாமில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழக உதவி கோட்ட பொறியாளர் முரளிதரன் பேசும்போது

நாட்டின் மிக பெரிய நுகர்வோர் சேவை நிறுவனங்களில் மின்சார வாரியமும் ஒன்று இன்றைய நிலையில் மின்சாரம் இன்றி எந்த  பணியும் நடக்காது என்ற நிலை ஏற்பட்டுள்ளது.   நுகர்வோர் தேவையை நிறைவு செய்ய போதிய உற்பத்தி இல்லத்தினால் மாநிலத்தின் பல பகுதிகளில் மின் தடை ஏற்பட்டது. மற்ற மாநிலங்களை விட தமிழகம் மின் சேவையில் முன்னணியில் உள்ளது. மின் உற்பத்திக்கு ஏற்ப மின் தடை நீக்கபடுகின்றது.   தற்போது மின்சார பகிர்மான கழகம்  மத்திய அரசு நிதி உதவியுடன் மின் விநியோக சேவையை  நவீன படுத்த உள்ளது. கூடலூர் பகுதியில் மின் தடை ஏற்படாமல் இருக்க கூடுதலாக 90 (25/40 கேவி திறன்) கொண்ட உயர் மின் அழுத்த டிரான்ஸ்பார்மர்கள் அமைக்க பட உள்ளது.  ஏற்கனவே உள்ள 60 டிரான்ஸ்பார்ம்களும்  திறன் மேம்படுத்த படும்.  அனைத்து டிரன்பர்மர்களும் தானாக மின் அழுத்தம்  சமன்படுத்தும் வகையில் நவீன படுத்த பட உள்ளது.  கூடலூர் பகுதியில் அமைக்க பட உள்ள 110 கேவி மின் மாற்றி அமைக்க பட்டால் பொது மக்களுக்கு மின் தடை மற்றும் குறைந்த மின் அழுத்தம் போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்க முடியும். இதனால் இனி வரும் 15 வருடத்திற்கு மின் தடை பிரச்சனை இருக்காது

மின் கட்டணம் குறித்த தகவல் மின் நுகர்வோர் பெறும் வகையில் செல் போன்களுக்கு குறுஞ்செய்தி  மூலம் தகவல் தெரிவிக்க செல்போன் எங்களை பதிவு செய்து கொள்ள அறிவுத்தியும் இன்னும் 70 சதவித மக்கள் பதிவு செய்ய வில்லை. விரைவில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

மின்சார வாரியம் சார்பில் மின் வாரிய குறைகள் தீர்க்க வசதியாக நுகர்வோர் உதவி மையம் அமைக்க பட உள்ளது இதன்மூலம் மின் சம்பந்தமான அனைத்து விதமான புகார்களும் சென்னையில் இருக்கும் உதவி மையத்திற்கு தெரிவிக்கலாம். புதிய மின் இணைப்புக்கு விண்ணப்பித்தல் முதல் மின் தடை, குறைந்த மின் அழுத்தம், ரீடிங் உள்ளிட்ட அனைத்து வித புகார்களும் ஆன்லைன் முலம் விண்ணப்பித்து பயன் பெறலாம்.  மின் பகிர்மான கழகம் தற்போது ஊழியர் பற்றாக் குறையிலும் சிறந்த சேவை வழங்கி வருகின்றோம். பொது மக்கள் ஒத்துழைப்பு தந்தால் இன்னும் சிறப்பான சேவையை வழங்க முடியும் என்றார்.

சசக்ஸ் கல்வி மைய ஆசிரியர்கள் சுமித்ரா, திருச்செல்வி, கௌதமி,  மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.  முன்னதாக ஆசிரியர் மும்மூர்த்தி வரவேற்றார் முடிவில் ஆசிரியர் மாணிக்க சாமி நன்றி கூறினார்.






கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக