கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்
மக்கள் மையம்
பந்தலூர் அருகே குந்தலாடியில் இரத்த தான முகாம் நடை பெற்றது.
பந்தலூர் அருகே குந்தலாடியில் இரத்த தான முகாம் நடை பெற்றது.
உதகை தலைமை மருத்துவ மனை இரத்த வங்கி, பசுமை நட்சத்திரங்கள் கலை மற்றும் விளையாட்டு கழக, நேரு யுவ கேந்திரா, கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் ஆகியன இணைந்து குந்தலாடி அரசு உயர் நிலை பள்ளியில் இரத்த தான முகாமினை நடத்தின.
விளையாட்டு கழக நிர்வாகி தமிழரசன் வரவேற்றார்.
பசுமை நட்சத்திரம் இளைஞர் மன்ற தலைவர் கணேஷன் தலைமை தங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் பஜீத்குமார், கூடலூர் நுகர்வோர்பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம், பசுமை நட்சத்திரங்கள் கலை மற்றும் விளையாட்டு கழக செயலாளர் சத்தியசீலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பந்தலூர் மருத்துவர் கனிமொழி உதகை இரத்த வங்கி மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு இரத்தம் பெற்று கொண்டனர். குந்தலாடி பசுமை நட்சத்திரங்கள் கலை மற்றும் விளையாட்டு கழக உறுப்பினர்கள் தன்னார்வலர்கள் 30க்கும் மேற்பட்டோர் இரத்தம் வழங்கினார்கள்.
நிகழ்ச்சியில் விளையாட்டு கழக நிர்வாகிகள் மனோகர் கார்மேகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் விளையாட்டு கழக நிர்வாகி மனோகர் நன்றி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக