அன்புடன் வரவேற்கின்றோம்


you are welcome to our web page

எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்

Please give your GOOD IDEAS FOR DEVELOPING
THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPS

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்

சனி, 1 ஆகஸ்ட், 2015

எம் எஸ் எஸ் பள்ளியில் குடிமக்கள் நுகர்வோர் மன்ற துவக்க விழா

பந்தலூர் அருகே  ப்பட்டி எம் எஸ் எஸ் பள்ளியில் குடிமக்கள் நுகர்வோர் மன்ற துவக்க விழா மற்றும் நுகர்வோர் விழிப்புணர்வு முகாம் நடைப்பெற்றது,
நிகழ்ச்சியில் மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலமிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது,


  https://www.youtube.com/watch?v=8v4304TdvWo





கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சுசிவசுப்பிரமணியம் தலைமை தாங்கினார்
மாவட்ட உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் நல்லசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மன்றத்தினை துவக்கி வைத்து பேசும்போது நுகர்வோர் விழிப்புணர்வு பெற வேண்டும் என்ற நோக்கில் பள்ளிகளில் நுகர்வோர் மன்றங்கள் அமைக்கப்படுகின்றது.  இந்த மன்றங்கள் மூலம் அவ்வப்போது கூட்டம் நடத்தி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.  தரமற்ற உணவுகளை தவிர்ப்பதன் மூலம் உடல்நலத்தை பாதுகாக்க முடியும் என்றார்.
மாவட்ட சித்தா மருத்துவ அலுவலர் ஓய்வு  கனேசன் பேசும்போது மூலிகைகள் இயற்கையால் கொடுத்த கொடை அவற்றில் பல மருந்துகள் உள்ளன.  இவற்றை மறந்துவிட்டு நாம் தற்போது கடைகளில் விற்பனை செய்யப்படும் அழகு சாதணங்களை அதிகமாக பயன்படுத்துகின்றோம் இதனால் தோல் நோய்கள் ஏற்படுவதோடு கண் மூளை சம்பந்தமான பாதிப்புகளும் அதிகமாக ஏற்படும் வாய்ப்புள்ளது என்றார்.
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய ஆலோசகர் காளிமுத்துஒருங்கிணைப்பாளர் சத்தியசீலன்ஷாலோம் சாரிட்டபிள் டிரஸ்ட் இயக்குனர் விஜயன் சாமுவேல் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் தையல் பயிற்சி மைய மாணவிகள்  உட்பட பலர் கலந்து கொண்டனர்,  முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியர் கவிதா வரவேற்றார்,  முடிவில் கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய ஒருங்கிணைப்பாளர் தணிஸ்லாஸ் நன்றி கூறினார்.






















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக