குன்னூர் தொழிலாளர் நல துறை அலுவலகத்தில் துறை ரீதியான நுகர்வோர் காலாண்டு கூட்டம் நடைப்பெற்றது. கூட்டத்திற்கு தொழிலாளர் நல அலுவலர் வேல் முருகன் தலைமை தாங்கினார்.
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம் பேசும்போது தேயிலை தோட்டங்கள் மற்றும் தனியார் எஸ்டேட்டுகளில் அரசு விடுமுறை அறிவிக்கும் போது விடுமுறை விடாமல் வேலை செய்ய வைக்கின்றனர், உன்¢ய ஆய்வு மேற்க்கொள்ள வேண்டும், குழந்தை தொழிலாளர் குறித்து ஆய்வு அவ்வப்போது மேற்க்கொள்ள வேண்டும், எடை அளவுகள் பொட்டலமிடுதல் போன்றவை முறையற்று நடைபெறுகின்றது, எந்த தகவலும் இல்லாமல் உள்ளதையும் பாலில் பல நிறுவனங்கள் பயன்பாட்டு தேதியை அச்சிடுகின்றனர், இதனால் நுகர்வோர் குழப்பம் அடைகின்றனர் இவற்றையும் உரிய ஆய்வு மேற்க்கொள்ள வேண்டும் என்றார்,
நீலகின்¢ மாவட்ட நுகர்வோர் கூட்டமைப்பின் பொது செயலாளர் வீரபாண்டியன் பேசும்போது எரிவாயு வினியோகத்தின் போது எடையளவு கருவிகள் கொண்டு செல்வதில்லை, தராசுகள் பல இடங்களில் முறைகோடாக பயன்படுத்தபடுவதால் நுகர்வோர் எடையளவில் பாதிக்கப்படுகின்றனர். மண்ணென்னை அளவுகள் மிகவும் குறைவாக ஊற்றப்படுகின்றது, பெட்ரோல் பங்குகளில் அளவுகளில் முறைகேடு உள்ளது இவற்றை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்
கோத்தகிரி நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் நாகேந்திரன் பேசும்போது பெட்ரோல் விலை அதிகரித்தவுடன் விலையை அதிகரிக்கும் பெட்ரோல் பங்குகள் விலை குறையும் போது உடனடியாக குறைப்பதில்லை உரிய ஆய்வு மேற்க்கொள்ள வேண்டும் எடை தராசுகள் பதிவு முத்திரை இடாதவர்கள் பதிவு செய்து கொள்ள உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்,
பதிலளித்து பேசிய தொழிலாளர் நல அலுவலர் வேல்முருகன் பேசும்போது தோட்டங்களில் அரசு அறிவித்த விடுமுறைகளில் வேலை வைத்தால் அதற்கு இரட்டை ஊதியம் வழங்க வேண்டும், பலரும் எங்களுக்கு படிவம் 5ல் தொழிலாளர்களிடம் கையெழுத்து பெற்று தந்துவிட்டு வேலை வழங்குகின்றனர், எங்களுக்கு தகவல் தராமல் வேலை கொடுப்பவர்கள் மீது புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து வருகின்றோம், குழந்தை தொழிலாளர்களை பொறுத்த வரையில் 14 வயதிற்குட்பட்டவர்கள் கட்டாயம் வேலையில் அமர்த்த கூடாது, 14 முதல் 18 வயது வரையிலானவர்கள் எளிமையான வேலைகளில் மட்டும் பயன்படுத்தி கொள்ளலாம் என்பதால் அதனை தடை செய்ய முடியாது, எனினும் அவ்வப்போது ஆய்வு செய்யப்படும், பொட்டலமிடுவதற்கு சென்னையில் உரிமம் பெற வேண்டும் பொட்டலங்கள் உரிய தகவல் இல்லாதபோது அவை மீது நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து பொருட்களுக்கும் பொட்டலமிடப்பட்ட தேதியை கட்டாயம் அச்சிட வேண்டும், பாலை பொறுத்தவரையிலும் பொட்டலமிடப்பட்ட தேதியையே பயன்படுத்த வேண்டும்
எரிவாயு நிறுவனங்கள் வில் தராசு பயன்படுத்துகின்றனர் அவை கட்டாயம் எரிவாயு வினியோக வாகனத்தில் இருக்க வேண்டும், மண்ணென்னை அளவு குறைபாடு மக்களில் அவசரத்தினாலேயே ஏற்படுகின்றது, மக்கள் பொறுமையாக அளவை சரிபார்த்து வாங்க வேண்டும் பெட்ரோல் பங்குகளில் தற்போது உள்ள இயந்திரங்களில் முறைகேடு செய்ய இயலாது, அதற்கேற்றார் போல் எங்களின் துறை சார்பான சீல் வைக்கப்படுகின்றது, எடையளவு கருவிகளை பொருத்தவரை தயாரிப்பு நிறுவனம் மற்றும் எண்ணெய் நிறுவனங்களே 0.05 சதவீதம் எடை அளவில் மாறுபடும் என கூறியுள்ளனர், அதைவிட அதிக அளவு குறைவாக இருப்பின் கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும்
தாராசுகள் முகாம்கள் மூலம் அனைத்து பகுதிகளிலும் முத்திரை இடப்படுகின்றது, முகாம்களில் தவறவிட்டவர்கள் கூடலூர் பந்தலூர் உதகை ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் வியாழக்கிழமை தோறும் உதகை தொழிலாளர் அலுவலகத்திலும், குன்னூர் கோத்தகிரி குந்தா பகுதியை சேர்ந்தவர்கள் வெள்ளி தோறும் குன்னூர் தொழிலாளர் அலுவலகத்திலும் முத்திரை இட்டுக்கொள்ளலாம், வில்தாராசுகள் எலக்ராணிக்ஸ் தாராசுகள் ஆண்டுக்கொரு முறையும், எடை கற்கள் தாராசுகள் இரண்டான்டிற்கு ஒரு முறையும் முத்திரை இட வேண்டும் காலத்தில் தவறவிட்டவர்கள் எப்போது வேண்டுமானாலும் முத்திரை இட்டுக்கொள்ளலாம் முத்திரை இடாத தாராசுகள் அளவைகள் பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் பெட்ரோல் உள்ளிட்ட எண்ணை விலைகள் அறிவிக்கப்பட்ட நேரத்தில் இருந்து நடைமுறைப்படுத்த வேண்டும் தவறும் பட்சத்தில் ஒவ்வொரு பங்குகளிலும் விற்பனை அலுவலர் எண் குறிப்பிட வேண்டும் அதில் புகார் தெரிவிக்க வேண்டும் என்றார்
கூட்டத்தில் மாவட்ட வணிகர் சங்க பேரவை தலைவர் பரமேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்,
முன்னதாக குன்னூர் தொழிலாளர் உதவி ஆய்வாளர் செல்லப்பா இசக்கி வரவேற்றார் முடிவில் உதகை தொழிலாளர் உதவி ஆய்வாளர் சேகரன் நன்றி கூறினார்.
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்
மக்கள் மையம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக