அன்புடன் வரவேற்கின்றோம்


you are welcome to our web page

எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்

Please give your GOOD IDEAS FOR DEVELOPING
THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPS

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்

புதன், 27 மார்ச், 2013

"மனித உரிமை கழகம்' என்ற பெயரில், எந்தவொரு அமைப்பும் செயல்படக் கூடாது; எஸ்.பி., செந்தில்குமார்

ஊட்டி: "மனித உரிமை கழகம்' என்ற பெயரில், எந்தவொரு அமைப்பும் செயல்படக் கூடாது; மீறினால், கைது நடவடிக்கை எடுக்கப்படும்' என, மாநில அரசு சார்பில், நீலகிரி மாவட்ட காவல் துறைக்கு சுற்றறிக்கை வந்துள்ளது. தனி மனித தன்மானத்தை சீண்டும் வகையில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க செய்ய தேசிய, மாநில அளவில் மனித உரிமை கமிஷன்கள் செயல்படுகின்றன.

இந்நிலையில், "மனித உரிமை கழகம்' என்ற பெயரில், மாநிலத்தின் பல இடங்களில், தெருவுக்கு தெரு, வீதிக்கு வீதி, "மனித உரிமை கழகம்' என்ற பெயரில் அமைப்புகள் செயல்படுகின்றன. பல இடங்களில், அமைக்கப்படும் சங்கத்தில், உறுப்பினர்களுக்கு ஏற்படும் கருத்து வேறுபாடால், அதிருப்தி நிர்வாகிகள் தனியாக கழன்று,"மனித உரிமை கழகம்' என்ற பெயரில், புதிய அமைப்பை உருவாக்குகின்றனர். இந்த அமைப்புகளின் நிர்வாகிகள் பலர், தங்கள் வாகனங்களில், "மனித உரிமை கழகம்' என எழுதி, தங்கள் பெயர், வகிக்கும் பொறுப்பை எழுதி வைத்து, ஒரு வி.வி.ஐ.பி.,க்கு நிகரான பந்தாவுடன் வலம் வருகின்றனர். மனித உரிமை மீறல் தொடர்பான பிரச்னை மட்டுமல்லாமல், தனி நபர்களுக்கு இடையே ஏற்படும் பிரச்னைகளை கையில் எடுக்கும் இந்த அமைப்பினர் பலர், கட்டப் பஞ்சாயத்து, மிரட்டல், பணம் பறிப்பு உட்பட செயல்களில் ஈடுபடுகின்றனர், என்ற குற்றச்சாட்டு பரவலாக இருந்து வருகிறது. குறிப்பிட்ட சிலர், மனித உரிமை கழகம் என்ற பெயரை பயன்படுத்தி அரசு துறை அதிகாரிகளை மிரட்டுவது, அவர்களிடம் பணம் பறிப்பது உட்பட செயல்களிலும் ஈடுபடுகின்றனர்.

இந்நிலையில், "மனித உரிமை கழகம்' என்ற பெயரை பயன்படுத்த கூடாது, என சில ஆண்டுகளுக்கு முன், கோர்ட் அறிவுறுத்தியது. இந்த அறிவுறுத்தலை ஏற்ற மாநில அரசு, ஒவ்வொரு மாவட்ட காவல் துறை அதிகாரிகளுக்கும், சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. 

நீலகிரி மாவட்ட எஸ்.பி., செந்தில்குமார் கூறியதாவது:தேசிய, மாநில மனித உரிமை கமிஷன்கள் மட்டுமே அரசால் அங்கீகரிக்கப்பட்டவை. மாறாக, "மனித உரிமை கழகம்' என்ற பெயரில், எந்தவொரு அமைப்பும் செயல்படக் கூடாது, என அரசு அறிவுறுத்தியுள்ளது. "மனித உரிமை கழகம்' என்ற பெயரில் செயல்பட்டு கொண்டிருக்கும் அமைப்புகள், சங்க விதிப்படி பதிவு செய்திருந்தால், தங்களது பெயரை மாற்றி கொள்ள வேண்டும். மாறாக, மனித உரிமை கழகம் என்ற பெயரை பயன்படுத்தி, கட்டப் பஞ்சாயத்து, மிரட்டல் உட்பட செயல்களில் ஈடுபடுவோர் குறித்து, பொதுமக்கள் புகார் கொடுத்தால், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். புகார் இல்லாமலேயே, "மனித உரிமை கழகம்' என்ற பெயரில் செயல்படும் அமைப்புகள் மீதும் நடவடிக்கை எடுக்கலாம், என்ற வழிகாட்டுதலும் உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்பு, மாவட்டத்தில் உள்ள மனித உரிமை கழகம் என்ற பெயரில் செயல்படும் அமைப்புகளுக்கு ஓரிரு நாளில், சுற்றறிக்கையாக அனுப்பப்படும். 

இவ்வாறு, எஸ்.பி., செந்தில்குமார் கூறினார்.

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

தமிழ்நாடு அரசு மக்கள் சாசனம்

Sugar   Download Icon(38KB)


  • « first
  •  
  • ‹ previous
  •  
  • 1
  •  
  • 2
  •  
  • 3
  •  
  • 4
  •  
  • next ›
  •  
  • last »


  • கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்