அன்புடன் வரவேற்கின்றோம்


you are welcome to our web page

எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்

Please give your GOOD IDEAS FOR DEVELOPING
THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPS

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்

திங்கள், 11 மார்ச், 2013

ஹால் மார்க் முத்திரை இடப்பட்ட தங்க நகைகளையே வாங்க வேண்டும். விழிப்புணர்வு முகாமில் வலியுறுத்தல்

ஹால் மார்க் முத்திரை இடப்பட்ட தங்க நகைகளையே வாங்க வேண்டும். விழிப்புணர்வு முகாமில் வலியுறுத்தல்

உதகையில் உலக நுகர்வோர் தினத்தை முன்னிட்டு  மத்திய அரசு இந்திய தர கட்டுப்பட்டு அமைவனம் தமிழ்நாடு அரசு நுகர்வோர் பாதுகாப்பு துறை கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் ஆகியன இணைந்து தரமான தங்கம் வாங்குவது குறித்து விழிப்புணர்வு முகாமினை நடத்தின

நிகழ்ச்சிக்கு தமிழநாடு நுகர்வோர் பாதுகாப்பு இயக்க மக்கள்  தொடர்பு அலுவலர் செல்வராணி தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சியில்  பேசிய உதகை நகர மக்கள் விழிப்புணர்வு சங்க தலைவர் ஜனார்த்தனன் பேசும்போது 

ஹால் மார்க் தங்க நகைகளின் தரத்தை உறுதி செய்யும்.அதாவது ஆபரண தங்கத்தில்  உள்ள தங்கத்தின் சுத்தத்தன்மையை அளவிடுவதற்கான   அதிகாரப் பூர்வமான முத்திரை. 2000ம் ஆண்டு முதல்   இந்திய தர நிர்ணய அமைவனத்தால் வழங்கப் படுகிறது. இது நுகர்வோர் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டது.
வாங்கும் நகை சரியான மதிப்பீடு செய்யப்பட்டதா, அதிகாரப்பூர்வமான அஸேயிங் [ Assay ] மற்றும் ஹால்மார்க் மையத்தின் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதா, அதில் கலக்கப்பட்ட உலோகம்  தேசிய/ உலக தர நியமங்களுக்கு ஏற்ப சுத்தம் செய்யப் பட்டுள்ளதா ? என்பதை குறிக்கும்.
 இதனால் மக்கள் மாற்று குறைவான நகைகள் வாங்கி ஏமாற்றம் அடைவதை தடுக்கிறது.  தங்கத்தின் தரம் கேரட் (KARAT) என்ற அலகால் அறியப்படுகிறது. சுத்தமான தங்கம் என்பது 24 கேரட் ஆகும்.  அதாவது 99.9%. முதலீட்டுக்காக தங்கம் வாங்குபவர்கள் 24 கேரட் தங்க கட்டியாக வாங்குவார்கள்.  இதனை கொண்டு ஆபரணங்கள் செய்ய முடியாது. நகை செய்ய வேண்டுமெனில் தங்கத்துடன் சில உலோகங்களை  சேர்த்து செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும் போது அதன் தரம் 22 கேரட், 18 கேரட் தங்கமாக மாறுகிறது. இது தான் ஆபரணத் தங்கமாகும். நாம் வாங்கும் தங்கம் 22 கேரட்டா அல்லது 18 கேரட்டா என்று தெரிந்து கொள்ள   ஹால்மார்க் முத்திரை உதவுகிறது.

24 கேரட் என்பது  99.9%  22 கேரட் என்பது  91.6%  18 கேரட் என்பது  75.0%  14 கேரட் என்பது  58.5% 10 கேரட் என்பது  41.7%    9 கேரட் என்பது  37.5%
  8 கேரட் என்பது  33.3%  ஆகியன கேரட் அளவுகள் ஆகும் இவை அனைத்துக்கும் ஹால் மார்க் முத்திரை வழங்கப்படும் நகையின் தரம் முத்திரையோடு குறிப்பிட வேண்டியது கட்டாயமாகும்  22 கேரட் ஆபரணத்தங்கம் என்பது, அதன் சுத்தத்தில் 91.6% ஆகும்.  இதைத்தான் 916 தங்கம் என்று குறிப்பிடுகிறார்கள்.

இந்திய அரசின் தர கட்டுப்பாடு அமைப்பான  “பீரோ ஆஃப் இந்தியன் ஸ்டாண்டர்டு ”  (Bureau of IndianStandards) என்ற அமைப்பு தான்  ஹால்மார்க் முத்திரையை வழங்குகிறது.  இதைத்தான் BIS முத்திரை பதித்த நகைகள் என்று செல்லப்படுகிறது. இந்த முத்திரை கொடுப்பதற்கு நாடு முழுவதும்  பல டீலர்களை லைசென்ஸ் கொடுத்து நியமித்திருக்கிறார்கள்.  இந்த லைசென்ஸ் பெற்ற டீலர்கள் மட்டுமே   ஹால்மார்க் முத்திரை வழங்க முடியும்.
நகை கடை உரிமையாளர்கள்,  பொற்கொள்ளர்களிடமிருந்து வாங்கிய  நகைகளை  இந்த டீலர்களிடம்  கொடுத்து தரத்தை பரிசோதிக்கின்றனர்.
அவ்வாறு பரிசோதிக்கும் நகைகள்  22 கேரட் எனில்   91.6% ஹால்மார்க் முத்திரையும்,  18 கேரட் எனில்  75% ஹால்மார்க் முத்திரையும் தருகின்றனர். ஹால்மார்க் நகை விற்க லைசன்ஸ்  பெற்ற நகை வியாபாரி  கடையின் பிரதான இடத்தில்  இது குறித்த தகவல் பலகை வைத்து இருக்க வேண்டும்.ஹால் மார்க் ஐந்து முத்திரைகளை கொண்டது. ஹால் மார்க் தங்க நகைகளை மட்டும் கேட்டு வாங்க வேண்டும் இது நுகர்வோர்களின் உரிமை ஆகும் என்றார்

தொடர்ந்து பேசிய கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்ரமணியம் பேசும்போது
நகை எவ்வளவு சின்னதாக இருந்தாலும் நகையின் பின்புறமோ, உட்புறமோ  ஐந்து முத்திரைகள் இருக்க வேண்டும். அவை  BIS முத்திரை [ THE BIS LOGO ]  நேர்த்தி தன்மை முத்திரை [ PURITY OF GOLD ] அஸேயிங் & ஹால்மார்க் முத்திரை [ ASSAY CENTER ] ஹால்மார்க் முத்திரையிடப்பட்ட ஆண்டு [ THE YEAR OF HALL MARKING ] நகை விற்பனையாளர் முத்திரை[ JEWELLER'S IDENTIFICATION MARK ] ஆகும்.  இவை சிறியதாக இருப்பதால் நுகர்வோருக்கு முத்திரை குறித்து தெளிவு படுத்த  நகை விற்பனையாளர் கண்டிப்பாக பூதக்கண்ணாடி [magnifying glass] வைத்திருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.  வாங்குபவர்கள் பூதக்கண்ணாடி மூலம் , ஐந்து முத்திரைகள் இருக்கிறதா என்று  சரிபார்த்த பின்னரே வாங்க வேண்டும்.

916 அல்லது 916 & KDM அல்லது 916 & BIS முத்திரை  மட்டும் இருந்தால்  அது  உண் மையான  ஹால்மார்க் முத்திரை அல்ல. ஐந்து  முத்திரைகள் இருக்க வேண்டும். KDM என்பது கேட்மியம் மோனாக்சைட்  என்ற உலோகத்தை குறிப்பது. நகை செய்யும் போது எளிதாக தங்கத்தைப் பற்ற வைக்க பயன்படுத்தப் படும் பொடி. கேட்மியம் பயன்படுத்துவதால்  புற்று நோய் வர வாய்ப்பு இருப்பதால்  ஹால்மார்க் செய்யப்பட்ட நகைகளில் இதை பயன்படுத்த BIS அனுமதிப்பது இல்லை. நகைகளில் KDM என குறிப்பது விற்பனையாளரின் விற்பனை தந்திரம். KDM  என இருப்பது சுத்தமான தங்க நகை  என எண்ணி வாங்கி ஏமாற வேண்டாம். 

BIS. கடைகளில் தங்கத்தின் சுத்த தன்மையை அளவிட கேரட் மீட்டர் பயன்படுத்துகிறார்கள். அது நகையின் மேற்புறம்  [20மைக்ரான் அளவில்]  மட்டுமே சோதித்து காட்டுகிறது. ஆனால் ஹால்மார்க் செய்யப்பட்ட நகைகள்  உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட  FIRE ASSAY முறையைப் பின்பற்றி  தங்கத்துடன் சேர்க்கப்படும் உலோகங்களை பிரித்து எடுத்து  பின் எஞ்சிய சுத்த தங்கத்தின்  கேரட் அளவை சோதித்து  பின் ஹால் மார்க் முத்திரை தருகிறது. .அஸேயிங் மையத்தில் ஒரு நகை  எவ்வளவு எடை இருந்தாலும்  ஹால் மார்க் முத்திரை தர  வெறும் 18 ரூ மட்டுமே பெறப்படுகிறது. எனவே ஹால் மார்க் நகைகள்  அதிக விலை என கூறுவது தவறு என்கிறது.  BIS. நகை வாங்கும் போது  முறையான பில் ரொக்க ரசீது  வாங்குவது அவசியம்.

ஹால்மார்க் முத்திரை உள்ள நகை  என்ற விவரம் மட்டும் போதாது,  அதற்கு கீழே அந்த நகையின் தரம் எவ்வளவு  என்பதயும் (91.6% or 75%) குறிப்பிடப்பட்டிருக்கும்.  அது தான் முக்கியம். வாங்கிய ஹால்மார்க் நகையில்  ஏதேனும் குறை இருந்தால் [நகை வாங்கும்போது 22 கேரட் என வாங்கிவிட்டு, பின்  18 கேரட் என தெரிய வந்தால்] ஒரிஜினல் பில்லுடன் உடனடியாக BIS அலுவலகத்தில் புகார் தெரிவிக்கலாம்.

தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர் ஆகிய ஊர்களில் இந்த அலுவலகம் இருக்கிறது. தரம் குறைவாக இருக்கும் நகையை அவர்கள் பரிசோதித்து புகார் உறுதி செய்யப்பட்டால் அந்த ஹால்மார்க் முத்திரை வழங்கிய  டீலரின் லைசென்ஸை உடனடியாக ரத்து செய்வார்கள். எந்த கடையில் நகை வாங்கினோமோ அந்தக் கடை கண்டிப்பாக நஷ்டஈடு வழங்கியாக வேண்டும். ஒருவேளை நஷ்ட ஈடு தர மறுத்தால்  நுகர்வோர் நீதிமன்றத்தை அணுகலாம். 
சின்ன மோதிரமோ, காதில் அணியும் தோடோ அனைத்து நகைகளிலும்  இந்த ஹால்மார்க் முத்திரை இருக்கும். ஹால்மார்க் முத்திரை வழங்கும்  ஒவ்வொரு டீலருக்கும்  ஒரு தனிப்பட்ட அடையாளத்துடன் கூடிய முத்திரை இருக்கும். இந்த முத்திரையை வைத்து  அதை வழங்கிய டீலரை எளிதாக கண்டுபிடித்துவிட முடியும்.

இதுநாள் வரை சில நகைக் கடைகள் மட்டுமே  ஹால் மார்க் முத்திரை பதித்த நகைகளை  விற்பனை செய்தன. இனி எல்லா நகைக் கடைகளும்  ஹால் மார்க் முத்திரை பதித்த நகைகளை விற்க வேண்டும் என  மத்திய அமைச்சரவை உத்தரவு பிறப்பித்திருக்கிறது.  எனவே தங்க நகை வாங்கும்போது விழிப்புடன் இருப்பது நுகர்வோர்களின் பொறுப்பாகும் என்றார்.

நிகழ்ச்சியில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மகளிர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து பொது மக்களிடையே  BIS  ஹால் மார்க் முத்திரை குறித்த தகவல்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.




கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக