ஏழைகள் வயிற்றில் அடித்து
லட்சம் கோடி ஏப்பம்
ஒரு ரூபாய்ல ஒரு பைசா எடுத்தா தப்பா...?
ஒரு ரூபாய்ல ஒரு பைசாவை ஒரு லட்சம் தடவை எடுத்தா தப்பா...?
ஒரு ரூபாய்ல ஒரு பைசாவை, ஒரு லட்சம் பேர், ஒரு லட்சம் முறை எடுத்தா...?
பார்த்து, கேட்டு, ரசிக்க வேண்டுமானால், சினிமா வசனமாக இருக்கலாம். அப்படி தான் இத்தனை ஆண்டு காலம் சினிமா காமெடியாகவே நாம் பார்த்து, அட, சூப்பர் டயலாக்...ப்பா...என்று சொல்லி டிக்கட் வாங்கி படத்தையும் பார்த்து விட்டு திரும்பி விடுகிறோம். வீட்டிற்கு வந்த பின் தான் சமூக அக்கறையே வருகிறது; பத்திரிக்கைகளை படித்து விட்டு, ‘பாருங்க, எப்படி இருந்தாரு, இப்படி கோடிகளை குவித்திருக்காரு...’ என்று புலம்புகிறோம். ஆனால், அப்பாவிகளை தாண்டி ஒரு தனி உலகம், சுரண்டல் உலகம் நம்மை பின்னிப்பிணைந்து இருப்பது பலருக்கும் இப்போது தான் தெரிய ஆரம்பித்திருக்கிறது.
போபார்ஸ் பீரங்கி பேர ஊழல் பணம் 64 கோடி தான். அதன் விசாரணைக்காக பல ஆண்டுகள் பல புலனாய்வு ஏஜன்சிகளுக்கு, சட்ட செலவோ பத்து மடங்கு. அந்த ஊழலில் கடைசியில் எதுவுமே கண்டுபிடிக்க முடியாதது தான் ‘ஜனநாயகத்தின்’ மிகப்பெரும் தமாஷ்.
அது முதல் எல்லா ஊழல்களையும் தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு ஓசைப்படாமல் ஒரு மெகா ஊழல் நடந்துள்ளது, இந்தியாவின் நெம்பர் 1 பெரிய மாநிலம் உத்தரப்பிரதேச மாநிலத்தில். இங்குள்ள 71 மாவட்டங்களில், பாதிக்கும் மேற்பட்டதில் நடந்த பகல் கொள்ளை இது. ஒரு நாளில் நடந்ததல்ல;
ஐந்தாண்டு முழுக்க பிளான் போட்டு நடந்துள்ளது; ரேஷன் கோதுமை, தானியங்கள் அப்படியே ‘லபக்’கப்பட்டுள்ளது.
35 மாவட்டங்களில் ரேஷன் உட்பட எந்த திட்டங்களிலும் ஏழைகளுக்கு கோதுமை உட்பட தானியங்கள் வினியோகிக்கப் படவில்லை.
பல ஆயிரம் வியாபாரிகள், ஏற்றுமதி நிறுவனங்களுக்கு அள்ளிக்கொடுக்கப்பட்டுள்ளது.
ஆயிரக்கணக்கான அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் இதற்கு உடந்தை.
வேற்று மாநிலங்களுக்கு மட்டுமல்ல, பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம் என்று வெளிநாடுகளுக்கும் கூட நம் ஏழைகளுக்கு போய்ச்சேர வேண்டிய கோதுமை கடத்தப்பட்டுள்ளது.
றீ
ரயில்களில் வந்திறங்கிய மத்திய அரசின் ஒதுக்கீட்டு கோதுமை, அரிசி மூட்டைகள், பைக் முதல் பஸ், லாரிகள் மூலம் ரேஷன் கடைகளுக்கு போவதற்கு பதில், தனியார் குடோன்களுக்கு போயுள்ளது.
றீ
ரேஷன் கார்டுகளுக்கு ‘விநியோகிக்கப்பட்டுள்ளது’ என்று கூசாமல், பல ஆயிரம் கார்டுகளில், பல மாவட்ட அரசு அதிகாரிகள், ஊழியர்கள் பதிவு செய்துள்ளனர்.
இப்படி ஒரு கூட்டுக்கொள்ளையின் ஊழல் சைஸ் என்ன தெரியுமா? இப்போதைக்கு ஐந்து மாவட்டங்களில் மட்டும் 35 ஆயிரம் கோடி ரூபாய். ஆனால், முதல் கட்ட விசாரணையில் மட்டுமே இது. 35 மாவட்டங்களில் விசாரணை முடிந்தால் 2,00,00, 00,000,000 ரூபாய் அளவுக்கு அதிகரிக்குமாம். உங்களால் பூஜ்யத்தை தான் எண்ண முடியும். சேர்த்து படியுங்கள், மயக்கம் வரும்.
அப்பாவிகளை பட்டினி போட்டு அவ்ளோவும் சுருட்டிய கொடுமை
இது தான் டாப்பு...
1. போபர்ஸ் & 64 கோடி ரூபாய்
2. உரம் ஊழல் & 133 கோடி ரூபாய்
3. லாலுவின் கால்நடை தீவன ஊழல் & 950 கோடி ரூபாய்
4. பங்குச்சந்தை ஊழல் & 4,000 கோடி ரூபாய்
5. ராமலிங்க ராஜுவின் சத்யம் கம்ப்யூட்டர்ஸ் ஊழல் & 7,000 கோடி ரூபாய்
6. தெல்ஜியின் முத்திரைத்தாள் ஊழல் & 43,000 கோடி ரூபாய்
7. காமன்வெல்த் போட்டி ஏற்பாடு ஊழல் & 70,000 கோடி ரூபாய்
8. 2ஜி ஸ்பெக்ட்ரம் இழப்பு & 1.76 லட்சம் கோடி ரூபாய்
9. உ.பி. உணவு தானிய ஊழல் & 2,00,000 கோடி ரூபாய்
தொகுப்பு & வி.ராமன்
பல கோடி ரூபாய்
பகல் கொள்ளை...
பல ஆண்டுகள்
தொடர்ந்து நடந்தால்...
பல ஆயிரம் பேர்
சேர்ந்து சுரண்டினால்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக