தேசிய வாக்காளர் தின விழா
மாவட்ட அளவில், ஒட்டுச்சாவடிகளில் தேசிய வாக்காளர் தினம் விழா சிறப்பாக நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
இந்திய தேர்தல் கமிஷன் 1950 ம் ஆண்டு ஜனவரி 25 ம் தேதி தோற்றுவிக்கப்பட்டது. ஜனநாயக தேர்தல் முறைகளில், குடிமக்களின் பங்கேற்பை அதிகப்படுத்தும் முயற்சியாக, வரும் ஜனவரி 25 ம் தேதி முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25ம் நாளை தேசிய வாக்காளர் தினமாகக் கொண்டாட, இந்திய தேர்தல் ஆணையம் கமிஷன் முடிவெடுத்துள்ளது.
தேர்தலில் ஒட்டுப்பதிவை அதிகப்படுத்தி, ஒட்டு போடுவதன் முக்கியத்துவத்தை வாக்காளர்களுக்கு உணர்த்துவது தான் இதன் நோக்கம். தேர்தல் நடைமுறைகளில் பொதுமக்களை, குறிப்பாக இளைஞர்களை ஈடுபடுத்தி, விழிப்புணர்வை அதிகரிக்கும் நோக்குடன், முதலாவது தேசிய வாக்காளர் தினத்தை பெரிய அளவில் கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தேசிய வாக்காளர் தினம், மாவட்ட அளவிலும் ஒவ்வொரு வாக்குச்சாவடி அமைவிடங்களிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அப்போது தேசிய வாக்காளர் தின உறுதிமொழியை ஏற்க வைத்து புதிதாக பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களுக்கு புகைப்பட அடையாள அட்டைகளும் வழங்கப்படும்.
மாவட்ட அளவில், ஒட்டுச்சாவடிகளில் கீழ்க்கண்டவாறு விழா சிறப்பாக நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாவட்ட அளவில் விழா ஏற்பாடுகள்
1. 2011 ம் ஆண்டு ஜனவரி 25ந் தேதி மாவட்டத் தலைநகர் அருகிலுள்ள கல்லூரி வளாகத்தில் விழா ஏற்பாடு செய்யப்பட்டு 2011 ம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் சேர்ந்த வாக்காளர்களுடன் விழா நடத்தப்படும்.
2. 2011 ம் ஆண்டு வாக்காளர் பட்டியிலின் புதிதாக பெயர் சேர்க்கப்பட்ட வாக்காளர்களை, தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்க வைத்து, வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை வழங்கப்படும்.
3. வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கைகள் மேற்கொண்ட கல்லூரிகள் R W A அமைப்புகளுக்கு சான்றுகள் வழங்கப்படும்.
4. அதிக அளவிலான தேர்தல்களில் வாக்களித்த வாக்காளர்கள் கௌரவிக்கப்படுவார்கள்.
5. மாணவர்கள், N Y K, N S S , S H G s அமைப்புகள் பங்குபெறும், மனிதசங்கிலி, சைக்கிள் பேரணி, கலை நிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெறும்.
6. தேசிய வாக்காளர் தினம் தொடர்பாக நடத்தப்பட பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு-பொதுமக்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.
7. மிகச்சிறப்பாக பணியாற்றிய வாக்குச்சாவடி அலுவலர்கள் கௌரவிக்கப்படுவார்கள்.
வாக்குச்சாவடி அமைவிடங்களில் விழா ஏற்பாடுகள்.
2011 ம் ஆண்டு ஜனவரி 25 ம் தேதி வாக்குச்சாவடி அமைவிடங்களில்,
வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தக்கூடிய கூட்டங்கள் நடத்தப்படும். 2011 ம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்கப்பட வாக்காளர்களை, தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்க வைத்து, வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை வழங்கப்படும்.
தேசிய வாக்காளர் தினம் தொடர்பாக நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற பள்ளி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். அதிக அளவிலான தேர்தல்களில் வாக்களித்த வாக்காளர்கள் கௌரவிக்கப் படுவார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக