அன்புடன் வரவேற்கின்றோம்


you are welcome to our web page

எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்

Please give your GOOD IDEAS FOR DEVELOPING
THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPS

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்

வியாழன், 27 ஜனவரி, 2011

தகவல் உரிமை பெறும் சட்ட சமூக மாற்றத்தை ஏற்படுத்தலாம்

ஊட்டி: "தகவல் உரிமை பெறும் சட்டத்தை அனைவரும் பயன்படுத்துவதன் மூலம் பல்வேறு முறைகேடுகளை களைவதுடன், சமூக மாற்றத்தை ஏற்படுத்தலாம்,' என கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் பெறும் உரிமை சட்டம் குறித்த விழிப்புணர்வு கருத்தாய்வு கூட்டம் குன்னூர் சி.எஸ்.ஐ., பாதுகாப்பு மையத்தில் நடத்தப்பட்டது.

நீலகிரி மாவட்ட நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு, கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், மாவட்ட மக்கள் மையங்கள் சார்பில், நடந்த இந்த கூட்டத்தில்

நீலகிரி மாவட்ட கூட்டமைப்பு தலைவர் கிருஷ்ணசாமி  தலைமை தங்கினார்
தகவல் பெறும் உரிமை சட்டம் குறித்த  வழக்கறிஞர் கமருதீன் விளக்கம் அளித்து  பேசியதாவது: இந்திய அரசியலமைப்பு சட்டம் பிரிவு 19(1)ன்படி மனித உரிமை அடிப்படையில், பல போராட்டங்களுக்கு இடையில் தகவல் பெறும் உரிமை சட்டம் உருவாக்கப்பட்டது. இது மக்களை கேள்வி கேட்கும் அதிகாரத்தை கொடுத்துள்ளது. அரசு அலுவலகங்களில் உள்ள அனைத்து வடிவிலான தகவல்கள், ஆவணங்கள் இதில் அடங்கும். இந்த சட்டத்தினால் அரசு அலுவலகங்களை நேரடி ஆய்வு செய்ய முடியும். சமீபத்தில் ஆளுநர் மாளிகை, மாநில தகவல் ஆணையம் உட்பட காவல்துறை தலைமையகம், மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. பொது அமைதி பாதிப்பு, வழக்கு பாதிப்பு, பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படுத்தும் தகவல், ராணுவ ரகசியங்களை தவிர, அரசு, அரசு உதவி பெறும் நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்களின் தகவல்களை கேட்கலாம். அரசு துறைகள், அரசு சார்புடைய நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்து தகவல் கேட்டு தெரிந்து கொள்ளலாம். அனைத்து அரசு அலுவலகங்களிலும் உதவி பொது தகவல் அலுவலர், பொது தகவல் அலுவலர்களாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அவருடைய மேலதிகாரி முறையீட்டு அலுவலராக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட பொது தகவல் அலுவலராக மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவரிடம் கேள்விகள் கேட்டு விண்ணப்பிக்கலாம். தகவல் கட்டணம் 10 ரூபாய் மட்டுமேயாகும். மாநில அரசாக இருந்தால் கோர்ட் ஸ்டாம்ப், மத்திய அரசாக இருந்தால் அஞ்சல ஆணை வாங்கி இணைத்து அனுப்பலாம். 30 நாட்களில் தகவல் தராத பட்சத்தில் முதல் முறையீட்டையும் அதற்கு பதில் தராதபட்சத்தில் தகவல் ஆணையத்தில் இரண்டாம் முறையீட்டையும் தெரிவிக்கலாம். இச்சட்டத்தை பயன்படுத்துவதன் மூலம் பல்வேறு முறைகேடுகளை களைய முடியும். ஆதர்ஷ் வீட்டு ஒதுக்கீடு ஊழலை தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கேள்வி கேட்டதன் மூலம் வெளிக் கொணரப்பட்டுள்ளது. பல முறைகேடுகள் தவறுகள் ஆகியவற்றை தகவல் பெறும் உரிமை சட்டம் மூலம் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளது. இச்சட்டத்தை அனைவரும் முறையாக பயன்படுத்த வேண்டும். இதன்மூலம் சமுதாய மாற்றத்தை உருவாக்க முடியும். இவ்வாறு, கிருஷ்ணசாமி பேசினார்.


மாவட்ட கூட்டமைப்பு பொது செயலாளர் வீரபாண்டியன் பேசுகையில், ""தகவல் பெறும் உரிமை சட்டம் இந்தியாவின் இரண்டாவது சுதந்திரம். தகவல் கேட்டால் தர முடியாது என மறுத்த பல தகவல்களை பெற முடியும். வெளிப்படையான நிர்வாகம் அமைய இச்சட்டம் பெரிதும் உதவுகிறது. தகவல் கேட்பதில் உள்ள ஆர்வத்தை அதில் உள்ளபடி நடக்கிறதா என்பதை ஆய்வு செய்து சுட்டிக் காட்டலாம். பல நகராட்சிகளில் வசூலித்த கல்வி வரி குறித்து ஆய்வு செய்து அதனை சுட்டி காட்டி தற்போது தமிழகத்தில் பல அரசு பள்ளிகளில் புதிய கட்டடம் கட்டப்பட்டு வருகிறது,'' என்றார்.

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்ரமணியம் பேசுகையில், ""தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல்களை பெற விண்ணப்பங்களை கோப்பாக அனுப்ப வேண்டும். தகவல் முறையாக உரிய காலத்தில் வழங்கப்படாவிட்டால் தகவல் ஆணையத்தில் முறையீடு செய்யலாம். சமீபத்தில் நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் வழக்காக எடுத்து வெற்றி பெற்றுள்ளனர் . எனவே,இச்சட்டத்தை பயனுள்ளதாக பயன்படுத்தினால் முறைகேடுகளை களைவதுடன் சமூக மாற்றம் உருவாகும்,'' என்றார்.

தகவல் உரிமை சட்டம் குறித்த துண்டு பிரசுரம் நுகர்வோருக்கு வழங்கப்பட்டது.

ஊட்டி நகர மக்கள் விழிப்புணர்வு சங்க செயலர் ஜனார்தனன், நீலகிரி மாவட்ட கூட்டமைப்பு நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.

தகவல் பெறும் உரிமை சட்டம் குறித்த பல்வேறு சந்தேகங்களுக்கு வழக்கறிஞர் கமருதீன் விளக்கம் அளித்தார். மாவட்ட கூட்டமைப்பின் காந்திபுர கிளை தலைவர் டேவிட் வரவேற்றார். கூட்டமைப்பு கிளை தலைவர் கிப்சன் நன்றி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக