ஊட்டி:உலக புற்றுநோய் தினத் தையொட்டி, கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் மக்கள் மையம் சார் பில், ஊட்டி நகரில் புற்றுநோய் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.ஊட்டி நகர மக்கள் விழிப்புணர்வு சங்க செயலாளர் ஜனார்தனன் நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசுகையில், ""இன்றைய இளைஞர்கள் பலர் புகையிலை, பான்மசாலா மற்றும் பிற போதை வஸ்துகளுக்கு அடிமை ஆகிவிட்டனர். இதனால், பல நிலைகளில் அவர்கள் புற்று நோயால் பாதிக்கப்படுகின்றனர். அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் புற்றுநோய் ஆலோசனை, சிகிச்சை மையங்களை உருவாக்க வேண்டும்,'' என்றார்.கூடலூர் நுகர்வோர் மைய தலைவர் சிவசுப்ரமணியம் பேசுகையில், ""புற்றுநோயை பரப்புவதில் புகையிலை பெரும் பங்கு வகிக்கிறது. பீடி, சிகரெட் போன்றவற்றின் புகையை மற்றவர்கள் சுவாசிக்கும் போதும் புற்றுநோய் பரவுகிறது. சுற்றுச்சூழல் பாதிப்பு, நாம் பயன்படுத்தும் ரசாயனங்கள் போன்றவையும் புற்றுநோயை உருவாக்குகிறது,'' என்றார். நிகழ்ச்சியில் விழிப்புணர்வு குறித்த துண்டுபிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டன. காத்தாடிமட்டம் அரசு மேல்நிலைபள்ளி என்.எஸ்.எஸ்., மாணவர்களின் சார்பில் நடத்தப்பட்ட ஒருநாள் சிறப்பு முகாமில் புற்றுநோய் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் சிவராஜ் சிவபுத்ரா வரவேற்றார். தென்றல் நகர் ஊர் தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார். தலைமையாசிரியர் செவனன் பேசினர்.
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக