கொளப்பள்ளியில் கண் பரிசோதனை முகாம்
ஆக.7 2011: பந்தலூர் அடுத்த கொளப்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், இலவச கண் பரிசோதனை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நிலகிரி மாவட்ட பார்வை இழப்பு சங்கம், கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில் நடைபெற்ற முகாமிற்கு
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவ சுப்பிரமணியம் தலைமை வகித்தார்.
சேரங்கோடு ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஜி.ஈ. தங்கவேலு முகாமை துவக்கி வைத்துப் பேசினார்.
வட்டார மருத்துவ அலுவலர் கதிரவன் முன்னிலை வகித்தார்.
டாக்டர் அமராவதி ராஜன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் பரிசோதனை செய்தனர்.
முகாமில் 160 பேர் கலந்து கொண்டதில்,
13 பேர் அறுவைச் சிகிச்சைக்காக
பரிந்துரைக்கப்பட்டனர்.
மலைப் பகுதி மேம்பாட்டுத் திட்ட சமுதாய ஓருங்கிணைப்பாளர் தேவதாஸ் கொளப்பள்ளி சுகாதார ஆய்வாளர் கணையேந்திரன் சுகாதார செவிலியர்கள் மற்றும் தன்னார்வ செவிலியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மலைப் பகுதி மேம்பாட்டுத் திட்ட சமுதாய ஓருங்கிணைப்பாளர் தேவதாஸ் கொளப்பள்ளி சுகாதார ஆய்வாளர் கணையேந்திரன் சுகாதார செவிலியர்கள் மற்றும் தன்னார்வ செவிலியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்
மக்கள் மையம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக