அன்புடன் வரவேற்கின்றோம்


you are welcome to our web page

எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்

Please give your GOOD IDEAS FOR DEVELOPING
THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPS

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்
eye camp லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
eye camp லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 27 மார்ச், 2012




பந்தலூர் :  பந்தலூர் அரசு மேல் நிலை பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச் சூழல் பாதுகாப்பு மையம்-மக்கள் மையம், நீலகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், தமிழ்நாடு அறக்கட்டளை ஷாலோம் சாரிட்டபிள் டிரஸ்ட், உப்பட்டி பள்ளி வாசல் கமிட்டி ஆகியன , சார்பில், உப்பட்டி எம் எம் எஸ் மெட்ரிக் பள்ளியில் இலவச கண் சிகிச்சைமுகாம் நடந்தது.
முகாமுக்கு கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையத் தலைவர் சிவசுப்ரமணியம் தலைமை வகித்தார்
பள்ளி முதல்வர் கவிதா, நெல்லி யாளம்   நகர மன்ற உறுப்பினர் கள் மூர்த்தி, விஜயன், பள்ளி வாசல் கமிட்டி பொருளாளர் ஐமுட்டி, HADP பழனிசாமி  ஆகியோர்  முன்னிலை வகித்தனர்.
நீலகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்க திட்ட மேலாளரும் உதகை அரசு மருத்துவமனை மருத்துவருமான  அமராவதி ராஜன் பேசும் போது ஏழை மக்கள் பயன் பெரும் விதமாக இலவச கண் சிகிச்சை முகாம்கள் நடத்தப்படுகின்றது நாற்பது வயதிர்ற்கு மேற்பட்டவர்களுக்கு அதிகமாக பாதிக்கும் கண் புரை நோய்க்கு கண் புரை அறுவை சிகிச்சை  மட்டுமே தீர்வாகும் எனவே இது போன்ற முகாம்களில் பங்கேற்று பயன் பெற வேண்டும் என்றார்

பின்னர் மருத்துவர் அமராவதி ராஜன்   தலைமையிலான குழுவினர், பார்வை குறைபாடு உடையவர்களை பரிசோதித்து ஆலோசனை வழங்கினர்

முகாமில் உப்பட்டி அத்திகுன்னா நெல்லி யாளம்   பொன்னானி பெருங்கரை சேலக்குன்ன உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளை சேர்ந்த  120க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். கண் புரை அறுவை சிகிச்சைக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 10 பேர், ஊட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.  நிகழ்ச்சியில் , மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்க ஒருங்கிணைப்பாளர் மங்கை களபணியளர்கள் முத்துராஜ் ஸ்ரீதர்   மாணவர்கள்  உட்பட பலர் பங்கேற்றனர்
கூடலூர் நுகர்வோர் மைய நிர்வாகிகள் தனிஸ்லாஸ் வரவேற்றார் முடிவில் மைய நிர்வாகி முருகன் நன்றி கூறினார்













கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

வியாழன், 22 மார்ச், 2012

pandalur eye camp





கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

புதன், 24 ஆகஸ்ட், 2011

கொளப்பள்ளியில் கண் பரிசோதனை முகாம்

கொளப்பள்ளியில் கண் பரிசோதனை முகாம்


ஆக.7 2011: பந்தலூர் அடுத்த கொளப்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், இலவச கண் பரிசோதனை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 


நிலகிரி  மாவட்ட பார்வை இழப்பு சங்கம், கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில் நடைபெற்ற முகாமிற்கு 


கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவ சுப்பிரமணியம் தலைமை வகித்தார். 


சேரங்கோடு ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஜி.ஈ. தங்கவேலு முகாமை துவக்கி வைத்துப் பேசினார்.
வட்டார மருத்துவ அலுவலர் கதிரவன் முன்னிலை வகித்தார்.



டாக்டர் அமராவதி ராஜன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் பரிசோதனை செய்தனர்.

முகாமில் 160 பேர் கலந்து கொண்டதில், 
13 பேர் அறுவைச் சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டனர்.

மலைப் பகுதி மேம்பாட்டுத் திட்ட சமுதாய ஓருங்கிணைப்பாளர் தேவதாஸ் கொளப்பள்ளி சுகாதார ஆய்வாளர் கணையேந்திரன் சுகாதார செவிலியர்கள் மற்றும் தன்னார்வ செவிலியர்கள்  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

சனி, 18 ஜூன், 2011

அம்பலமூலா இலவச கண் சிகிச்சை

பந்தலூர் : பந்தலூர் அருகே அம்பலமூலா பகுதியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. 

தமிழ்நாடு அறக்கட்டளை 
கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம்
நீலகிரி வயநாடு ஆதிவாசி நலச்சங்கம் 
நீலகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம்,  இணைந்து 

அம்பலமூலா ஆதிவாசி நல மருத்துவமனையில் 
இலவச கண் சிகிச்சை முகாமை நடத்தின. 

ஆதிவாசி நலச்சங்க திட்ட ஒருங்கிணைப்பாளர் சோமன் தலைமை வகித்தார். 
ஊட்டி அரசு மருத்துவமனை டாக்டர் அமராவதி ராஜன் தலைமையிலான மருத்துவ குழுவினர் சிகிச்சையளித்தனர். 


கண் ஏற்கனவே கண்புரை அறுவை சிகிச்சை செய்துக்கொண்டவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. 





இதில், 100 பேர் பயன்பெற்றனர். 13 பேர் கண் புரை அறுவை சிகிச்சைக்காக ஊட்டி அரசு மருத்துவமனை அழைத்துச்செல்லப்பட்டனர். 

முகாமிற்கான ஏற்பாடுகளை சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையத்தலைவர் சிவசுப்பிரமணியம் மற்றும் மருத்துவமனை நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

வியாழன், 16 ஜூன், 2011

eye camp at Hatty vayal Pandalur 15.06.2011 photos

















 பந்தலூர் ஹட்டி வயல் கண் சிகிச்சை முகாம் 15.06.2011

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

ஞாயிறு, 12 ஜூன், 2011

ambalamoola eye camp 12.06.2011 photos


முகாமில் மருத்துவர் அமராவதி ராஜன் ஆதிவாசி பெண் ஒருவருக்கு கண் பரிசோதனை செய்தபோது எடுத்தப் படம் 

முகாமின் துவக்க நிகழ்ச்சியில் மருத்துவர் அமராவதி ராஜன் முகாமின் செயல் முறைகள் குறித்தும் கண் நலம் குறித்தும்   பேசியபோது  எடுத்தப்படம்  அருகில் நுகர்வோர் மைய தலைவர் சிவசுப்பிரமணியம் உள்ளார்.

முகாமில் பங்கேற்ற ஆதிவாசிகள்

முகாமில் ஆதிவாசிகளுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது 
மருத்துவர் கண் பரிசோதனை செய்தபோது எடுத்தப்படம் 

ஆதிவாசி பெண் ஒருவருக்கு மருத்துவர் அமராவதி ராஜன் கண் பரிசோதனை செய்தபோது எடுத்தப்படம் 

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

திங்கள், 9 மே, 2011

நாயக்கன்சோலை இலவச கண் சிகிச்சை முகாம்

பந்தலூர் அருகே நாயக்கன்சோலை கிராமத்தில் 
இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.






கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் , 
மக்கள் மையம் ,  தமிழ்நாடு அறக்கட்டளை; 
நீலகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம்; 
நாயக்கன்சோலை கிராம மக்கள்; 
ஷாலோம் சாரிட்டபிள் டிரஸ்ட் 
ஆகியவை இணைந்து 
நாயக்கன் சோலை நடுநிலைப்பள்ளி வளாகத்தில்
 இலவச கண் சிகிச்சை முகாமை நடத்தின. 
முகாமில் கண் பரிசோதகர்கள் பயனாளிகளுக்கு கண் பரிசோதனை செய்தனர் 

முகாமில் ஆர்வமுடன் பங்கேற்ற மக்கள் 

கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு குறித்து
 மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்க திட்ட மேலாளர் டாக்டர். அமராவதிராஜன் விளக்கமளித்தார் .

  இதில், மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்க திட்ட மேலாளர் டாக்டர். அமராவதிராஜன் மற்றும் டாக்டர்கள் 100 நோயாளிகளை பரிசோதனை செய்தனர். அதில், 12 பேர் கண் புரை அறுவை சிகிச்சைக்காக ஊட்டிக்கு அழைத்து செல்லப்பட்டனர். 

ஊர் பிரமுகர் தியாகராஜா வரவேற்றார். கிராம தலைவர் தேவராஜன் தலைமை வகித்தார். நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்ரமணியம், எச்.ஏ.டி.பி., சமுதாய ஒருங்கிணைப்பாளர் பழனிச்சாமி, தேவதாஸ், பள்ளி ஆசிரியர் அனிதா, ஷாலோம் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகிகள் சாமுவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.