பந்தலூர் : பந்தலூர் அருகே அம்பலமூலா பகுதியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.
தமிழ்நாடு அறக்கட்டளை
கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம்
நீலகிரி வயநாடு ஆதிவாசி நலச்சங்கம்
நீலகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், இணைந்து
அம்பலமூலா ஆதிவாசி நல மருத்துவமனையில்
இலவச கண் சிகிச்சை முகாமை நடத்தின.
ஆதிவாசி நலச்சங்க திட்ட ஒருங்கிணைப்பாளர் சோமன் தலைமை வகித்தார்.
ஊட்டி அரசு மருத்துவமனை டாக்டர் அமராவதி ராஜன் தலைமையிலான மருத்துவ குழுவினர் சிகிச்சையளித்தனர்.
கண் ஏற்கனவே கண்புரை அறுவை சிகிச்சை செய்துக்கொண்டவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.
இதில், 100 பேர் பயன்பெற்றனர். 13 பேர் கண் புரை அறுவை சிகிச்சைக்காக ஊட்டி அரசு மருத்துவமனை அழைத்துச்செல்லப்பட்டனர்.
முகாமிற்கான ஏற்பாடுகளை சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையத்தலைவர் சிவசுப்பிரமணியம் மற்றும் மருத்துவமனை நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக