போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம்
நீலகிரி மாவட்ட நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு,
ஊட்டி நகர விழிப்புணர்வு சங்கம் மற்றும்
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் மக்கள் மையம் சார்பில்
ஊட்டியில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.
ஊட்டி மத்திய பஸ் நிலையம் பகுதியில் நடந்த இந்த பிரசார கூட்டத்திற்கு மாவட்ட நுகர்வோர் கூட்டமைப்பு தலைவர் கிருஷ்ணசாமி தலைமை வகித்தார்.
நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் வீரபாண்டியன், கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய மக்கள் மைய தலைவர் சிவசுப்பிரமணியம், ஊட்டி நகர விழிப்புணர்வு சங்க தலைவர் ஜனார்த்தனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பிரசாரத்தை எழுத்தாளர் சங்க தலைவர் ஜே.பி., துவக்கி வைத்தார்.
மனநல மருத்துவர் ஜெரால்டு, போதை பொருட்களினால் ஏற்படும் விளைவுகள் குறித்து விளக்கி பேசினார்.
கூட்டத்தில்
போதை பொருட்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து அரசு மருத்துவனைகளிலும் மறு வாழ்வு மையம், போதை மீட்பு மையங்கள் உருவாக்க வேண்டும்.
டாஸ்மாக் மதுக்கடைகளின் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசின் வருமானத்தை பெருக்க மதுவை தவிர்த்து வேறு வழிமுறைகளை கையாள வேண்டும்.
18 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்க வேண்டும்.
பொது இடத்தில் புகை பிடிப்பதை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக