கிராமத்தின் முன்னேற்றத்துக்கு தடையாக இருப்பது சாராயம் என்பதை உணர்ந்தார். குடிப்பது ஆண்களாக இருந்தாலும் குடியால் பாதிப்பது பெண்களும் குடும்பத்தினரும்தான் அதிகம் என்பதை அறிந்து மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி அஹிம்சை முறையில் போராட்டம் நடத்தினார். ஒரு கிராமத்தில் 25 சதவீத பெண்கள், மதுவிலக்கு அமல்படுத்தக் கோரினால், அந்த கிராமத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று ஹசாரே வலியுறுத்தினார்.
இதையடுத்து, 2009ம் ஆண்டு மகாராஷ்டிர அரசு ஒரு சட்டத் திருத்தத்தை கொண்டு வந்தது. 1949ம் ஆண்டு பம்பாய் மதுவிலக்கு சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தது. அதன்படி, ஒரு கிராமத்தில் 25 சதவீத பெண் வாக்காளர்கள் தங்களது கிராமத்தில் மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மாநில கலால் துறையிடம் மனு கொடுத்தால், அதன் அடிப்படையில் அந்த கிராமத்தில் ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படும். அதில், சாராயம் விற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 50 சதவீத வாக்காளர்கள் வாக்களித்து இருந்தால் அந்த கிராமத்தில் மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும். சாராயம் விற்பது நிறுத்தப்பட வேண்டும். இப்படி ஏராளமான கிராமங்களில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
சாராயத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த ரகசிய வாக்கெடுப்பு
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக