அன்புடன் வரவேற்கின்றோம்


you are welcome to our web page

எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்

Please give your GOOD IDEAS FOR DEVELOPING
THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPS

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்
கட்டுரைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கட்டுரைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 12 அக்டோபர், 2013

தரமான தேயிலை மற்றும் தேயிலையின் பயன்கள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு

பந்தலூர் பாரிஸ் ஹாலில் தரமான தேயிலை மற்றும் தேயிலையின் பயன்கள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடத்தப்பட்டது

குன்னூர் தென் இந்திய  தேயிலை  வாரியம், கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சசூழல்   பாதுகாப்பு மையம், பந்தலூர் புனித சேவியர் பெண்கள் பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்றம் ஆகியன இணைந்து நடத்திய இந்த முகாமிற்கு கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சசூழல் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம் தலைமை தாங்கினார்

பள்ளி தலைமை ஆசிரியர் செலின் தாளாளர் ஜான்சி ஆகியோர் முன்னிலை வகித்தனர்

நிகழ்ச்சியை பந்தலூர் வட்டாச்சியர் இன்னாசிமுத்து துவக்கி வைத்து பேசிய பொது    இந்தியாவில்    தேயிலைத் தொழில் சுமார் 200ஆண்டுகளுக்கு மேல்   பழமையானது ஆகும். உலகில் மிகப் பெரிய தேயிலை உற்பத்தி நாடாகவும், தேயிலை நுகர்வு நாடாகவும் இந்தியா திகழ்கிறது.   இப்பகுதி மக்கள் தேயிலையை நம்பியே வாழ்கின்றனர் நல்ல தேயிலை பல்வேறு பயன்களை தருகின்றது. விளம்பர பானங்களை தவிர்த்து தேயிலையை அதிகம் பயன் படுத்த வேண்டும் என்றார்.

சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட  தென்னிந்திய தேயிலை வாரிய துணை இயக்குனர் ஹரி பிரகாஷ்  பேசும் பொது   தேயிலை தொழில் பல்வேறு மக்களின் வாழ்வாதாரம் ஆகும்.  அசாம் தேயிலை, டார்ஜிலிங் தேயிலை, தமிழகத்தின் நீலகிரித் தேயிலை ஆகியவை சிவப்பு புவிக்குறியீட்டு எண் பெற்றவையாகும்.  தேயிலையில் கறுப்புத் தேயிலை. பச்சைத் தேயிலை வெண்மைத் தேயிலை என பல வகைகள் உள்ளன. தேநீரின் நிறத்தைப் பொருத்து ,இவை இவ்வாறு பிரிக்கப்படுகின்றன.தேயிலை, உடல் நலத்திற்கும், ஆரோக்கியத்திற்கும் நன்மை செய்யக்கூடியதாகும். தேயிலை தயாரிப்பு குறித்தும் அதன் நன்மைகள் குறித்தும் தொடர்ந்து  மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த தேயிலை வாரியம் முடிவு செய்துள்ளது என்றார்.

தேயிலை கலப்படம் குறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்  மருத்துவர் ரவி பேசும்போது
தேயிலையில் கலப்படம் செய்யும் போது அதன் தன்மை மாறி விடுகின்றது இதனால் தேயிலையின் நல்ல பயன்கள் மாறி பாதிப்பு   ஏற்படுத்துகின்றது. தேயிலை தூள் வாங்கும்போது தயாரிப்பு நிறுவனம் மற்றும் தகவல்கள் பார்த்து வாங்கினால்  தரமான தேயிலை கிடைக்கும் என்றார்.

பச்சைத் தேயிலையை உட்கொண்டால் சில வகைப் புற்று நோய், அல்சிமர் நோய் மற்றும் இதய நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவதாக உலகம் முழுவது நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

தேயிலையின் பயன்கள் குறித்து பேசிய உபாசி திட்ட அலுவலர் சிவகுமார் போசும்போது  தேயிலை பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்டது  சீனாவிலும் ஜப்பானிலும் நடத்தப்பட்ட ஆய்வுகளில் நீண்ட நாள் வாழத் தேயிலைத் துணை புரிவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. தேநீர் பருகுவதால் உடல் சோர்வும் , களைப்பும் நீங்கிப் புத்துணர்ச்சி ஏற்படுகிறது. அத்துடன் சுறு சுறுப்பாகவும், துடி துடிப்புடன் திகழவும் தேநீர் உதவுகிறது. தேநீரில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்டுகள். குறைவான கொழுப்புஅளவு ஆகியவற்றால் இதய நோய்கள் வராமல் தடுக்கப்படுகின்றன. தேநீர் தோல் புற்று நோய்வராமல் தடுப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தேயிலையில் உள்ள சத்துக்கள் பல் ஈறுகளின் வளர்ச்சிக்கு உதவுகின்றன. தேயிலையில் உள்ள புளோரைடு , பற்கள் சொத்தையாகாமல் தடுக்கிறது. கறுப்புத் தேநீர் பருகுவது இதயம் மற்றும் ஈரல் நோய்களைத் தடுப்பதாக சில ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. உடல் எடை குறைக்கவும் தேயிலை உதவுகிறது.என்றார்

தொடர்ந்து தேயிலையின் தரம் குறித்து சுனில் குமார் பேசினார்

வட்டார மருத்துவ அலுவலர் கதிரவன் பந்தலூர் அரசு பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருங்கிணப்பாளர் தண்டபாணி காந்தி சேவை மைய அமைப்பாளர் நௌசாத் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட பலர்  கொண்டனர்

முன்னதாக பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் மார்டின் வரவேற்றார்

முடிவில் நுகர்வோர் மைய செயலாளர் கணேஷன் நன்றி கூறினார் 

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்   pls visit our webs  http://cchepnlg.blogspot.in/    http://cchepeye.blogspot.in/ http://consumernlg.blogspot.in/

ஞாயிறு, 6 அக்டோபர், 2013

Tea Quotes A Perfect Cup of Tea !

Tea Quotes

  • Free yourself from the slavery of tea and coffee and other slop kettles! - William Cobbett (sent by Henners1@aol.com)
  • If a man has no tea in him, he is incapable of understanding truth and beauty - Japanese proverb
  • It has been well said that tea is suggestive of a thousand wants, from which spring the decencies and luxuries of civilization
  • It is a poor person who must drink first brewed tea - The Kung fu tea ceremony. This means that you don't have time to do it right. The second and third brew is much more mellow with out the tanic acid bite. Agnes Repplier, To Think of Tea!
  • Look here, Steward, if this is coffee, I want tea; but if this is tea, then I wish for coffee. Punch 23 July 1902 (cartoon caption)
  • Thou soft, thou sober, sage and venerable liquid! Thou innocent pretense for bringing the wicked of both sexes together in the morning! Thou female tongue-running, smile-soothing, heart-opening, wink-tipping cordial to whose glorious insipidity I can owe the happiest moments of my life. Colby Cibber
  • Thank God for tea! What would the world do without tea? How did it exist? I am glad I was not born before tea. Sydney Smith
  • To kiss is like drinking tea from a tea-strainer - you always want more old chinese saying
  • Under certain circumstances there are few hours in life more agreeable than the hour dedicated to the ceremony known as afternoon tea. Henry James, Portrait of a Lady
  • Wherever I go, I will always have my tea

A Perfect Cup of  Tea !

Seemingly anyone, even those who don't "cook," can boil water and make tea. But there is more to making a truly savory cup of tea, which requires the following care.
Teapot
  1. Use the best quality leaf tea you can find (often British, like Twinings or Jackson's of Piccadilly--American teas often contain higher percentages of stalk, as well as tea "dust" to gain fast color, but not necessarily wonderful flavor). The best qualities can be purchased in bulk, but there are some fine qualities in tea bags, like the above brands.
  2. Use a teapot and scald it by pouring in boiling water before use. This gets the pot well heated so that the water for steeping does not cool down too quickly from cold ceramic or china. Empty hot water and place one teabag for each cup (6 fl. oz.) in the pot. For 30 fl. oz. of water, for instance, use five teabags. Water must be fresh and just off a rolling boil.
  3. Allow tea to steep without stirring for three to five minutes (depends on the strength you like--decide by trial and error). To keep the tea at ideal extraction temperature use a "cozy," usually a quilted cover that fits over the teapot and holds in the heat.
  4. After the steeping period in step three, remove teabags without squeezing them (squeezing can press out some of the bitter tasting polyphenols that remain in the leaf).
  5. Pour hot tea from pot into cups and enjoy. Add what pleases you, but NEVER use cream -- it contains too much fat for the delicate flavor of tea. You may add a dollop of whole milk, milk and sugar, Sweet 'N Low, or the like.
If you have never developed an interest in hot tea, give the above a try. The unadulterated taste of tea itself -- properly steeped to yield a rich, bright flavor and color -- is a 2,000 year old delicacy begun by China's first emperor in 2737 B.C. There is a world of difference in the true flavor of fine tea if it is prepared correctly.
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

Black, Green or Herbal?

Green Tea VS. Black Tea

Black, Green or Herbal?

First cultivated in China nearly 5,000 years ago, tea is consumed in greater quantity worldwide than any other beverage except water. The beverage is made from the leaves of the plant Camellia sinensis, which is native to India and perhaps parts of China and Japan.Black, green and oolong teas are all made from this plant but differ in their methods of preparation. All tea leaves are withered, rolled and heated, but black teas go through an oxidative process known as fermentation before the final heating process. Oolong teas are partially fermented.
Herbal teas are not derived from Camellia sinensis, but from the leaves, bark, roots, seeds and flowers of other plants. These teas have not been associated with the many healing benefits related to black and green teas.
Source: Columbia Encyclopedia, Sixth Edition; Tea Association, Tea Council and Specialty Tea Registry (STAR)

Green Tea 
Natural Remedy 

What is green tea?

Green tea comes from a large shrub with evergreen leaves. The shrub is native to eastern Asia. It has leathery, dark green leaves and fragrant, white flowers. The dried, cured leaves have been used to prepare brewed drinks for more than 4000 years.
Green tea and black tea come from the same plant, but green tea leaves are less processed than black tea. (Black tea is fermented but green tea is not.) Green tea retains many chemicals of the fresh leaf.
The scientific name for green tea is Camellia sinensis. Common names include green tea and Chinese tea.

What is green tea used for?

Green tea is said to have effects that are antimicrobial (fights bacteria), antimutagenic (prevents mutation of bacteria), and antioxidant (helps reduce harmful chemicals in the body).
Green tea is thought to:
  • Reduce the risk of cancer and other fatal diseases.
  • Lower lipid (cholesterol/fat) blood levels.
  • Help prevent dental cavities.
  • Treat stomach problems (such as diarrhea and vomiting).

How is green tea taken?

Green tea can be drunk, or it can be swallowed in the form of a tablet or capsule. An active ingredient of green tea used in the tablets or capsules is called epigallocatechin. Follow the directions printed on the product label.

What are the side effects?

Side effects are possible in people who have sensitive stomachs. Heartburn, stomach irritation, loss of appetite, and diarrhea could result from drinking large amounts of green tea.
Green tea has caffeine in it, which could cause side effects such as:
  • nervousness
  • insomnia
  • a need to urinate more often
  • an increase in blood pressure
  • an increase in your heart rate.

What precautions are there?

  • If you are pregnant, trying to get pregnant, or breast-feeding, avoid drinking green tea because the caffeine it contains may be harmful to the baby.
  • If you have a weakened cardiovascular system (heart and circulatory system), kidney disease, or abnormally high levels of thyroid hormone, you should not take green tea without the approval of your doctor.
  • If you are prone to spasms or have certain psychic disorders (such as panicky states of anxiety), you should not use green tea without the approval of your doctor.
  • Green tea may worsen asthma.
  • Green tea may decrease the effect of warfarin (Coumadin). If you are taking this medicine, talk to your doctor before taking green tea.
  • If you are being treated for a medical condition (especially if you are taking prescription medicine), you should get the approval of your doctor before taking any natural remedy.
  • Some natural remedies have the same effects as prescription medicines. This means there is a danger of being overmedicated. If you have any unusual effects while taking any natural remedy, get advice from a doctor right away.
Remember when taking any natural remedy:
  • "Natural" does not always mean safe.
  • Natural remedies and prescription medicines may interact.
  • Lack of standardization may result in products with different strengths and effects.
  • Lack of quality control may allow contamination of products.
  • If you are pregnant or breast-feeding, you should get the approval of your doctor before taking any natural remedy.
  • Follow dosage recommendations on the package. Do not increase dosages.
  • Do not use natural remedies for long periods of time without advice from your doctor.
  • If you have any questions about any natural remedy, ask your doctor.
  • Infants, children, and the elderly should not use natural remedies without advice from a health care professional.
Keep all natural remedies and medicines out of the reach of children.

The information included here is based on information found in scientific journals, study reports, news releases, and other publications. The author and publisher make no warranty, expressed or implied, as to the accuracy and complete nature of the information. Nothing herein should be interpreted as a recommendation by the author or publisher for the use of any natural remedy.கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

புதன், 14 ஆகஸ்ட், 2013

ஆறுகள் இருந்தும், திட்டங்கள் இல்லை நிறைவேறுமா? நீலகிரி மக்களின் நீண்ட கால கனவு!

ஊட்டி: நீலகிரி மாவட்டம், அப்பர் பவானி சுற்றுப்புற பகுதிகளில் உற்பத்தியாகும் தண்ணீர், 60 சதவீத அளவுக்கு கேரளாவுக்கு சென்று கடலில் கலக்கிறது. "இதனை தமிழகத்துக்கு பயன் படுத்தும் விதத்தில், புதிய திட்டத்தை அரசு அமல்படுத்தினால் நல்ல பயன் கிடைக்கும்' என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

தமிழக- கேரள மாநிலங்களின் முக்கிய குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்யும் பவானி ஆறு, நீலகிரியில் உற்பத்தியாகிறது. இங்குள்ள அப்பர் பவானியில் புளியமலை, நாடுகாணிமலை, மடிப்பு மலை, கிங்குருண்டிமலை மற்றும் "வெஸ்டர்ன் கேட்ச்மென்ட் 1,2' ஆகிய நீர் பிடிப்பு பகுதிகளில் இருந்து 20க்கும் மேற்பட்ட சிற்றோடைகள் உற்பத்தியாகின்றன.
இந்த சிற்றோடைகள் புளிமலை, நாடுகாணி, மடிப்பு மலை என 3 சிற்றாறுகளாக மாறி, சுமார் 2 கி.மீ., தூரத்துக்குப்பின் கிங்குருண்டி என்ற இடத்தில் பவானி நதியாக உருமாறுகின்றன. இந்த நதி தமிழகத்தில் சில கி.மீ., அளவுக்கு மட்டுமே ஓடி, கேரளாவுக்குள் பவானி புழா ஆக மாறுகிறது. தவிர, அப்பர்பவானி அருகிலிருந்து துவங்கும் பக்தவத்சலம் சாகர் ஆறும், கேரள எல்லையில் பவானி ஆற்றுடன் கலக்கிறது. பின்னர் இந்த ஆறு கீழ்பவானி, துடுக்கி, கோட்டத்தரை ஆகிய வனப்பகுதிகள் வழியாக சென்று முக்காலி பகுதியை அடைகிறது. அங்கிருந்து அட்டப்பாடி, கூடப்பட்டி, அத்திக்கடவு வழியாக பில்லூர் அணைக்கு செல்கிறது.

மேற்கு தொடர்ச்சி மலை ஆறுகள்:

நீலகிரியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைகளில் இருந்து, சிஸ்பாரா ஆறு உற்பத்தியாகி, கேரள மாநிலம் சைலன்ட் வேலி தேசிய பூங்கா வழியாக செல்கிறது. அங்கு குந்திப்புழா என்ற ஆறாக மாறி, முக்காலியில் மீண்டும் பவானி ஆறுடன் சங்கமிக்கிறது. இதேபோல, தமிழக எல்லையில் உள்ள அங்கிண்டா என்ற மலை பகுதியில் இருந்து உற்பத்தியாகும் ஆறுகள், கேரளாவுக்குள் நுழைந்து எம்முரிபுழா ஆற்றுடன் கலந்து விடுகிறது.

இந்த ஆறும் பவானி ஆற்றுடன் கலந்து விடுகிறது. மேலும், பங்கியாழா மலைப்பகுதியில் இருந்து உற்பத்தியாகும் பல நீரோடைகள், கேரள மாநிலம் நிலம்பூருக்கு செல்கின்றன. நீலகிரியில் உள்ள மூக்கூர்த்தி சிகரம், நீலகிரி சிகரம் ஆகிய பகுதிகளில் இருந்து உற்பத்தியாகும் ஆறுகள், நியூ அம்பராம்பள்ளம் வழியாக சென்று நிலம்பூர் ஆற்றில் கலக்கிறது.

கேரள கடலில் கலப்பு:

நீலகிரி மலையில் இவ்வாறு உற்பத்தியாகும் பல்வேறு ஆறுகள், தமிழகத்தில் எவ்வித திட்டத்துக்கும் பயன்படுத்தப்படாமல் கேரளாவுக்குள் சென்று கடலில் கலக்கிறது.
இவற்றை தவிர்க்க, பவானி நதி கேரளாவுக்குள் நுழையும் பகுதிகளிலேயே தடுப்பணை கட்டினால், 60 சதவீத நீரை தமிழக குடிநீர் திட்டத்துக்கு அல்லது நீர் மின் உற்பத்திக்கு பயன்படுத்தலாம் என்பதே, கடந்த 40 ஆண்டுகளாக நீர்மேலாண்மையில் ஈடுபட்டுள்ள ஆய்வாளர்கள் மற்றும் தமிழக விவசாயிகளின் கருத்து.
அ.தி.மு.க., ஆட்சியில் ஆய்வு:

தமிழக விவசாயிகளின் வேண்டுகோளை ஏற்று, கடந்த 2002ல் அ.தி.மு.க., ஆட்சியின்போது, நீலகிரி மாவட்டத்தில் முக்கிய ஆறுகள் உற்பத்தியாகும் பகுதிகளில் தமிழக புலனாய்வு துறை அதிகாரிகள் மற்றும் நீர் மேலாண்மை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
அதன்படி, கிங்ருண்டி என்ற பகுதியில் அணை கட்டி கேரளாவுக்கு செல்லும் பவானி நதியின் கிளை ஓடைகளை தடுத்து, தமிழகத்திற்கு பயன்படுத்த ஆலோசனை நடத்தப்பட்டது. அந்த சூழ்நிலையில் தான் கேரள அரசு புதிய அணை கட்டும் திட்டத்தில் இருந்து பின்வாங்கியது. தமிழகத்தில் ஆட்சி மாற்றங்களுக்கு பின்பு, நீலகிரி நீர் மேலாண்மை திட்ட ஆலோசனைகள் கைவிடப்பட்டன.
மீண்டும் ஆலோசித்தால் பயன்:

தமிழக- கேரள மாநிலங்களுக்கு இடையே முல்லை பெரியாறு உட்பட நீர் பங்கீட்டு பிரச்னைகள் அதிகரித்து வரும் சூழலில், நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தியாகும் பல்வேறு நதிகள் கேரளாவுக்குள் நுழைந்து கடலில் கலந்து வீணாவதை தடுக்க, புதிய நீர்மேலாண்மை திட்டத்தை அமைக்க மாநில அரசு மீண்டும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடந்த 2002ம் ஆண்டை போலவே தற்போதும் ஆய்வுகளை மேற்கொண்டு, புதிய திட்டத்தை துவக்கினால், பவானி விவசாயிகளுக்கு தேவையான தண்ணீரை சேமிக்க வாய்ப்பு ஏற்படும் என்பதே, பவானி நதியை நம்பி வாழும் விவசாயிகள் மற்றும் தமிழக மக்களின் வேண்டுகோள்.

பொதுப்பணித் துறை சுற்றுச்சூழல் பிரிவின் அதிகாரிகள் சிலர் கூறுகையில்,"மேற்கு தொடர்ச்சி மலைகளில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சி திட்டங்கள் பற்றி, கடந்த 40 ஆண்டுகளாக பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில், நீர் மேலாண்மை திட்டங்களை செயல்படுத்தினால், அதில் சுற்றுச்சூழல் பாதிக்காத வகையிலான திட்டங்கள் மட்டுமே எதிர்காலத்தை காப்பதாக அமையும். அதனை ஆய்வாளர்கள் சிந்திக்க வேண்டும். வீணாகும் நீரை நம் மாநிலத்துக்கு பயன்படுத்த வேண்டிய திட்டங்கள் அவசியமாகும்' என்றனர்.

கேபிள் "டிவி'களை கட்டுப்படுத்த புதிய சட்டம்

கேபிள் ஆபரேட்டர் அலுவலகங்களில் ரெய்டு என்பது தான், அனைத்துப் பகுதிகளில் இருந்தும் வரும் தலைப்புச் செய்தி. கேபிள் "டிவி'கள் எப்படி இயங்குகின்றன? தவறு எங்கே நடக்கிறது?
முதலாவதாக, கேபிள் "டிவி' என்பதே முழுக்க முழுக்க மத்திய அரசு சமாச்சாரம். மாநில அரசின் பங்களிப்பு எதுவும் கிடையாது. எல்லாமே, "இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்' எனப்படும், "டிராய்'ன் வழிநடத்துதலில் வருபவை. சேவை வரி தான் விதிக்கப்படுகிறது என்பதால், அதுவும் டில்லிக்கு போய்விடுகிறது. அடிப்படையில், கேபிள் தொழிலை மூன்று பிரிவாக பிரிக்கலாம். முதலாவது, எம்.எஸ்.ஓ.,க்கள் (மல்ட்டி சிஸ்டம் ஆபரேட்டர்). அடுத்தது, ஆபரேட்டர்கள். மூன்றாவது, உள்ளூர் சேனல்கள். இந்த மூன்றுமே, ஒரு பெட்டிக்கடை துவக்குவதை விட மிகச் சுலபம். அருகாமையில் உள்ள தலைமை தபால் அலுவலகத்தில், "போஸ்ட் மாஸ்டரை' பார்த்து, அதற்கென உள்ள விண்ணப்பத்தை (பாரம் 1) பூர்த்தி செய்து, வெறும் 500 ரூபாய் கட்டினால் போதும்; நீங்கள் எம்.எஸ்.ஓ.,வாகவோ, ஆபரேட்டராகவோ, உள்ளூர் சேனல் அதிபராகவோ அவதாரம் எடுத்துவிடலாம்.
விண்ணப்பங்களை ஏற்பதற்கும், நிராகரிப்பதற்கும், தலைமை தபால் அலுவலவருக்கு முழு அதிகாரம் உண்டு. முறையான பதிவு இன்றி, இந்த மூன்று பிரிவினருமே இயங்க முடியாது. நிராகரித்ததற்கான காரணத்தை, தலைமை தபால் அலுவலர், எழுத்து மூலம் தெரிவித்துவிடுவார் (பாரம் 4). பதிவு செய்யப்பட்டால், அதற்குரிய சான்றிதழ் (பாரம் 3) வழங்கப்படும். இந்தப் பதிவு, அடுத்த 12 மாதங்களுக்கு மட்டுமே செல்லும். ஒவ்வொரு ஆண்டும் கேபிள் மும்மூர்த்திகள், இப்பதிவுகளை புதுப்பித்துக்கொள்ள வேண்டும்.
மத்திய அரசால் இயற்றப்பட்ட, "கேபிள் டிவி ஒழுங்குமுறைச் சட்டம் 1995' இந்த மூன்று பிரிவினரையும் கட்டுப்படுத்துகிறது. செயற்கைக்கோள் சேனல்களுக்கு உள்ள ஒளிபரப்பு விதிமுறை, விளம்பர கட்டுப்பாடுகள் (முறையான அனுமதி, ஆபாசம், வன்முறை, தேசவிரோதம் உள்ளிட்டவை) உள்ளூர் சேனல்களுக்கும் பொருந்தும். ஒவ்வொரு உள்ளூர் சேனல் நிறுவனமும், தங்கள் சேனலில் என்ன நிகழ்ச்சி, எத்தனை மணிக்கு, எவ்வளவு நேரம், யாரால் வழங்கப்பட்டது என்பது உள்ளிட்ட அத்தனை விவரங்களையும், ஒரு பதிவேட்டில் (பாரம் 5) குறித்து வைக்க வேண்டியது அவசியம். சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி ஒளிபரப்பாகி ஓராண்டு வரை, அந்த பதிவேடு பாதுகாக்கப்பட வேண்டும்.
கேபிள் ஆபரேட்டர்களைப் பொறுத்தவரை, எம்.எஸ்.ஓ.,க்கள் கொடுக்கும் அத்தனை சேனல்களையும் ஒளிபரப்பிக் கொள்ளலாம். குறைந்தபட்சம், ஏதேனும் இரண்டு தூர்தர்ஷன் சேனல்களையாவது ஒளிபரப்பியே ஆகவேண்டும். கேபிள் ஆபரேட்டர்களின் எந்த செயல்பாடும், இயக்கமும், அதிகாரப்பூர்வ தொலைத் தொடர்பு அமைப்புகளில் குறுக்கிடக் கூடாது. மேற்சொன்ன விதிமுறைகளில் ஏதேனும் குறைபாடுகள் காணப்பட்டால், ஒளிபரப்புக்குரிய பொருட்களையும், சாதனங்களையும் பறிமுதல் செய்ய முடியும். அதற்கான அதிகாரம், மத்திய அரசின், "ஏ' பிரிவு அதிகாரிகளுக்கு மட்டும் தான் இருக்கிறது. பறிமுதல் செய்யப்பட்ட சாதனங்களை, பத்து நாட்களுக்கும் மேலாக அதிகாரியே வைத்திருப்பதானால், சம்பந்தப்பட்ட மாவட்ட நீதிபதியிடம் அனுமதி வாங்க வேண்டும்.
பறிமுதல் செய்வதற்கு முன், அதற்கான காரணத்தை கேபிள் ஆபரேட்டருக்கு விளக்க வேண்டும். ஏன் பறிமுதல் செய்யக் கூடாது என்பதற்கான பதிலை அளிக்க அவருக்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும். இருதரப்புக்கும் இடையில் தகராறு என்றால், நீதிமன்ற கதவுகளைத் தட்ட வேண்டியது தான்.
"கேபிள் டிவி ஒழுங்குமுறைச் சட்டம் 1995'ஐ மீறி எம்.எஸ்.ஓ.,வோ, ஆபரேட்டரோ, உள்ளூர் சேனலோ செயல்பட்டால், முதல் முறை குற்றத்துக்கு இரண்டாண்டு வரை சிறை தண்டனையோ, ஆயிரம் ரூபாய் அபராதமோ அல்லது இரண்டும் சேர்த்தோ வழங்கப்படலாம். தொடர்ந்து விதி மீறுவதையே தொழிலாகக் கொண்டால், ஐந்தாண்டுகள் வரை சிறைத் தண்டனையோ, 5,000 ரூபாய் அபராதமோ விதிக்கப்படலாம்.
இது தான் கேபிள் தொழிலைப் பற்றிய சட்டத்தின் பார்வை.

கேபிள் "டிவி'யின் கதை : அந்தக் காலத்தில், "டிவி' என்றாலே தூர்தர்ஷன் மட்டும் தான். வெள்ளிக்கிழமை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பப்படும், "ஒளியும் ஒலியும்' (சினிமா பாடல்கள் நிகழ்ச்சி) பார்ப்பதற்கு, பெரிய அடிதடியே நடக்கும். சனிக்கிழமைகளில், மாநில மொழிப் படங்களும், ஞாயிறு மாலைப் பொழுதுகளில் தமிழ்ப் படமும் ஒளிபரப்பினர். அது ஒரு வசந்த காலம். இருபது ஆண்டுகளுக்கு முன், செயற்கைக்கோள் சேனல்கள் அறிமுகமாகின. அவற்றிடமிருந்து, "டிஷ்' மூலம், சிக்னல்களைப் பெற்று, தத்தம் சத்துக்கு ஏற்றவாறு, கேபிள் இணைப்பு வழியாக, வீடுகளுக்கு வழங்கிக் கொண்டிருந்தனர். இந்த கேபிள் ஆபரேட்டர் பணியை, பெரும்பாலும் வேலையில்லா பட்டதாரிகள் தான் மேற்கொண்டனர். சேனல்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க, ஒவ்வொரு சேனலுக்கும் ஒரு, "டிஷ்' வைக்க வேண்டியதாயிற்று. கட்டமைப்புப் பணிகளுக்கான செலவும் அதிகரித்தது. இதற்கிடையில், அதுவரை "ஓசி'யில் ஒளிபரப்பிக் கொண்டிருந்த அத்தனை சேனல்களும், தங்களை கட்டணச் சேனல்களாக அறிவித்தன. அவற்றிடமிருந்து பணம் கட்டி சிக்னல் வாங்குவது, சிறிய அளவில் இயங்கிக் கொண்டிருந்த கேபிள் ஆபரேட்டர்களுக்கு இயலாத காரியமாக இருந்தது. அப்போது பிறந்தது தான் எம்.எஸ்.ஓ., அமைப்பு. இவர்கள், இரண்டு மூன்று மாவட்டங்களுக்கு ஒன்று என்ற அடிப்படையில் இயங்கிக் கொண்டிருக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள், கேபிள் ஆபரேட்டர்களாக இருந்தவர்கள். எனவே, அந்தத் தொழிலையும் தொடர்ந்தனர். எம்.எஸ்.ஓ.,க்களின் வேலை, செயற்கைக்கோள் சேனல்களிடம் பணம் கட்டி, அவற்றை வாங்கி, கேபிள் ஆபரேட்டர்களுக்கு வினியோகிப்பது. சேனல்களுக்கு, எம்.எஸ்.ஓ.,க்கள் எவ்வளவு தர வேண்டும் என்ற கட்டணத்தை, "டிராய்' தான் நிர்ணயிக்கிறது. எம்.எஸ்.ஓ.,க்களிடமிருந்து, "சிக்னல்' பெறும் கேபிள் ஆபரேட்டர்கள், தங்கள் வசமுள்ள ஒவ்வொரு இணைப்புக்கும் 70 முதல் 80 ரூபாய் வரை கட்டணமாக, எம்.எஸ்.ஓ.,க்களுக்கு கொடுப்பர். எவருமே உண்மையான இணைப்பு எண்ணிக்கையைச் சொல்ல மாட்டர் என்பது சிறப்பம்சம்.

அவசரச் சட்டம் அவசியம் : உள்ளூர் சேனல்களை, பெரும்பாலும் கேபிள் ஆபரேட்டர்களும், எம்.எஸ்.ஓ.,க்களும் தான் இயக்கி வருகின்றனர். சில இடங்களில், எம்.எஸ்.ஓ.,க்களுக்கு பணம் கட்டி, வேலையில்லா பட்டதாரிகள், தொழில் சுகம் கண்டவர்கள், தனிப்பட்ட முறையில் நடத்துவதும் உண்டு. இவ்வாறு தமிழகம் முழுவதும் 250க்கும் மேற்பட்ட சேனல்கள் இருக்கும் என கருதப்படுகிறது.
இவர்கள், சினிமா, பாடல்கள், நகைச்சுவை காட்சி உள்ளிட்டவற்றை ஒளிபரப்புகின்றனர். சில முன்னேறிய உள்ளூர் சேனல்கள், நேயர் விருப்பம், தொலைபேசி உரையாடல் போன்ற நிகழ்ச்சிகளை, நேரலையாகவே ஒளிபரப்பவும் செய்கின்றனர். இவர்களில் யாருக்கும், சினிமா காட்சிகளை ஒளிபரப்புவதற்கான உரிமை கிடையாது. ஆனால், அத்தகைய உரிமைகளை வைத்துள்ள செயற்கைக்கோள் சேனல்களிடம் இருந்து, உள்குத்தகைக்கு வாங்கி, அவற்றை ஒளிபரப்புவர். இதற்கு, மாதந்தோறும் குறிப்பிட்ட தொகையை அவர்கள், தனி கட்டணமாக செலுத்த வேண்டும். இப்படி ஒரு சேனல் நடத்துவதற்கு, தபால் அலுவலகச் சான்றிதழ் தவிர வேறு எந்த அனுமதியும் தேவையில்லை என்பது மிகப் பெரிய சோகம். உள்ளூர் சேனல்களில், செய்தி ஒளிபரப்புவதற்கு அனுமதி இல்லை என்பது அடுத்த விஷயம். அவர்கள் வாங்கும் விளம்பரங்களுக்கு முறையாக கணக்கு காட்டுவதில்லை என்பது தனி கதை. இத்தனையும் மீறி, உள்ளூர் சேனல்கள் இயங்கிக்கொண்டிருக்கின்றன. ஒரு செயற்கைக்கோள் சேனல் துவங்க வேண்டும் என்றால், அதைத் தொடங்க விரும்புவர்களின் ஜாதகத்தையே கேட்கிறது மத்திய அரசு. மத்திய அரசின் ஐந்து துறைகள், இதற்கான அனுமதி வழங்குவதில் தொடர்புடையதாக இருக்கின்றன. 

அவ்வளவு ஏன்? எப்.எம்., ரேடியோக்களில் செய்தி ஒலிபரப்புவதற்கு கூட, ஆயிரத்தெட்டு நடைமுறைகள் இருக்கின்றன. ஆனால், எந்தச் சம்பிரதாயமும் இல்லாமல், சாதாரணமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன உள்ளூர் சேனல்கள். இவர்கள் செய்தி ஒளிபரப்பும்போது, அதில், தங்கள் எண்ணத்தைத் திணிக்கும் வாய்ப்பும், ஒரு சாராருக்கு சாதகமாக செயல்படும் வாய்ப்பும் அதிகம். கலவர சமயங்களில், இரண்டு வார்த்தை தப்பாக ஒளிபரப்பிவிட்டால், பிரச்னை பற்றி எரிவதற்கு, அதுவே காரணமாகிவிட முடியும். ஆனால், இதை எல்லாம் கண்காணிக்க எந்த அமைப்புமே இல்லை என்பது தான் அதிர்ச்சிக்குரிய உண்மை. பத்திரிகைகளை வழிநடத்த, "பிரஸ் கவுன்சில்' இருக்கிறது. ஆனால், உள்ளூர் கேபிள் சேனல்களை வழிநடத்த, கவுன்சிலர்கள் கூட இல்லை.
இதைக் கட்டுப்படுத்த, மாநில அரசின் தலையீடு, அவசர அவசியமாக இருக்கிறது. மத்திய அரசின் சட்ட திட்டங்களுக்கு குந்தகம் விளைவிக்காத வகையில், மாநில அரசின் அதிகாரத்தை நிலைநாட்டும் வகையில், உள்ளூர் கேபிள் சேனல்களை நெறிப்படுத்த, ஒரு சட்டம் அவசியம்.


 கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

வியாழன், 24 நவம்பர், 2011

நுகர்வோர் உரிமைகள்

இந்திய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 1986


Logo Court Hammer Logo.jpg
சட்டம்.
இந்திய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 1986 (தி கன்சியூமர் புரட்டக்சன் ஆக்ட், 1986) இந்தியாவில் வாழும் மக்களின் நுகர்வுத் தன்மையை பதுகாக்கும் பொருட்டு இந்திய அரசால் ஏற்படுத்தப்பெற்றச் சட்டமாகும். ஜூலை 1, 1987[1] முதல் இச்சட்டம் அமலுக்கு வந்த்து.
இச்சட்டம் 1991 மற்றும் 1993 [1]களில் திருத்தச் சட்டங்களாக வெளிவந்தன். நுகர்வோர் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் விதமாகவும், அதன் செயற்பாடுகள், முக்கியத்துவங்கள் அதிகரிக்கப்பட்டு டிசம்பர், 2002[1] இல் புதிய திருத்தச்சட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டு, மார்ச் 15, 2003[1] புதிய பரிமானங்களுடன் வெளியிடப்பட்டு அமலுக்கு வந்த்தது.
இதன்படி வடிவமைக்கப்பட்ட விதிகள் நுகர்வோர் பாதுகாப்பு விதிகள், 1987 என அழைக்கப்படுகின்றன. இந்த விதிகள் மார்ச் 5, 2004[1] முதல் நாட்டுக்கு அறிமுகம் செய்யப்ப்ட்டது.

பொருளடக்கம்


நுகர்வோரின் உரிமைகள்

கீழே காணப்படும் நுகர்வோரின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக இச்சட்டம் இயற்றப்பட்டது
  1. உயிருக்கும் உடைமைகளுக்கும் தீங்கு விளைவிக்ககூடிய பொருட்களை சந்தைப்படுத்துவதில் இருந்து பாதுகப்பு பெறும் உரிமை
  2. நேர்மையற்ற வர்த்தக செயல்முறைகளில் இருந்து தங்களைப்பாதுகாத்துக் கொள்வதற்காக, சந்தையில் வழங்கப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளின் தரம், அளவு, தூய்மை, தரனிலை மற்றும் விலை பற்றிய அனைத்து விவரங்களையும் அறிந்துகொள்வதற்கான உரிமை.
  3. பலவகைப்பட்ட பொருட்கள் மற்றும் சேவைகளை போட்டி விலைகளில் வாங்குவதற்கான வாய்ப்புகளைப் பெறுவதற்கான உரிமை
  4. நுகர்வோரின் குறைகளைக் கேட்பத்ற்கும் அவர்க்ளின் உரிமைகளைப் பாதுகாக்கவும் உத்தரவாதம் பெறும் உரிமை
  5. நேர்மையற்ற வர்த்தகச் செயல்முறைகள் மற்றும் கட்டுப்படுத்தும் வர்த்தகச் செயல்முறைகள் போன்றவற்றைத் தடுத்து நிறுத்துவதற்கான உரிமை
  6. நுகர்வோருக்கான விழிப்புணர்வினைப் பெறும் உரிமை
  7. நுகர்வோரின் சச்சரவுகளுக்கு விரைவாகவும் எளிமையாகவும் தீர்வு பெறும் உரிமை.

முக்கிய கூறுகள்

  • இச்சட்டம் மைய அரசால்[1] விலக்கு அளிக்கப்பட்ட பொருட்கள் மற்றும் சேவைகளைத் தவிர ஏனைய எல்லா பொருட்களுக்கும், சேவைகளுக்கும் இச்சட்டம் பொருந்தும்.
  • அனைத்துறையின் எதுவாயினும், தனியார் மற்றும் பொதுத் துறை மற்றும் கூட்டுறவு நிறுவனங்கள் அல்லது தனி நபர் இவை யாவரையும் கட்டுப் படுத்தும். இச்சட்டம் வகுத்துள்ளதின்படி இவர்கள் நட்டஈடு வழங்க அதே சமயத்தில் தடை செய்யவோ,தண்டணை [1]வழங்கவோ வழி செய்கின்றது.
  • நுகர்வோரை போற்றிப் பேணுகின்ற உரிமைகளாவன;-[1]
    • (1) உடலுக்கும், உடமைக்கும் தீங்கு விளைகின்ற வகையில் வணிக நோக்கில் விறகப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளிடமிருந்து நுகர்வோர் தங்களை பாதுகாத்துக்கொள்ளும் உரிமை.
    • (2) பொருட்கள் மற்றும் சேவைகளின் தரம், எடை, வீரியம், கலப்படமற்ற, தரநிர்ணயம் மற்றும் விலை அறிந்து கொள்ளவும், நேர்மையற்ற வணிகத்தினரிடமிருந்து நுகர்வோர் தங்களை தற்காத்துக் கொள்ளும் உரிமை.
    • (3) மலிவு அல்லது போட்டி விலைகளில் கிடைக்கும் பலதரப்பட்ட பொருட்கள் மற்றும் சேவைகள் குறித்த நம்பகத்தன்மையை நுகரவோருக்கு உறுதிபடுத்துதல் உரிமை.
    • (4) மலிவான சலுகை விளம்பரங்கள் மற்றும் ஊடகங்களினால் இழுக்கப்பட்டு, அதன் பலனை வணிகத்தினர்கள் தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டதை தெரிவிக்கும் உரிமை.
    • (5) நேர்மையற்றை வணிகத் தொழிலினால் அல்லது மனச்சாட்சியற்ற சுரண்டல்களினால் ஏற்பட்ட பாதிப்பினால் நுகர்வோர் குறைதீர்க்கும் மையத்தை நாடுதல் உரிமை.
நுகர்வோர் பொருட்களையும், சேவைகளையும் நுகரும் போது அவர்களிற்கு உள்ள உரிமைகளே நுகர்வோர் உரிமைகள் (Consumer rights) ஆகும். காலத்திற்குக் காலம் பல்வேறுபட்ட வகைகளில் நுகர்வோர் உரிமைகள் வகைப்படுத்தி கூறப்பட்டு வருகின்றது. இத்தகைய நுகர்வோர் உரிமைகளை முன் வைத்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் அல்லது நிறுவனங்கள் வருமாறு.
  1. அமெரிக்க ஜனாதிபதி ஜோன். எப். கென்னடி(John F. Kennedy)
  2. சர்வதேச நுகர்வோர் பாதுகாப்பு சம்மேளனம்.

பொருளடக்கம்


கென்னடியின் அடிப்படை நுகர்வோர் உரிமைகள்

  • பாதுகாப்பு பெற்றுக் கொள்ளும் உரிமை -
உயிருக்கும், சுகாதாரத்துக்கும் ஆபத்தை உண்டு பண்ணக்கூடிய பொருட்களை நுகர்வதில் இருந்து பாதுகாப்புப் பெறல்.
  • தெரிவு செய்து கொள்ளும் உரிமை -
விரும்பிய இடத்தில் பல்வேறுபட்ட வகையான பொருட்கள்,சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்கும், போட்டிச் சந்தையில் அரசாங்க விதிகளிற்கு உட்பட்ட, தரமான நம்பிக்கையான பொருட்களையும், சேவைகளையும் சந்தை விலையில் பெற்றுக் கொள்வதற்குமான உரிமை.
  • தகவல்களை அறிந்து கொள்ளும் உரிமை -
விளம்பரங்கள், வெளிப்புற தகவல் சீட்டுக்கள்(lebal) மற்றும் வேறு விளம்பர வழிமுறைகளில் குறிப்பிடப்படும் தகவல்கள், விலை, நிறை போன்றவற்றின் உண்மைத் தன்மையை அறிந்து கொள்வதற்கும், தவறான தகவல்களை அறிந்து சரியான தெரிவுகளை தேர்வு செய்வதற்குமான உரிமை.
  • கவனத்தை ஈர்க்கும் உரிமை -
ஒரு குறிப்பிட்ட அரசாங்கம் பொருட்கள், சேவைகள் தொடர்பாக வெளியிடும், அறிவித்தல்கள், நியாய விலைகள், பொருட்களின் தரம் என்பன தொடர்பாக அவ்வரசாங்கத்தின் ஆட்சி எல்லைக்குள் வசிக்கும் நுகர்வோரால் அறிந்து கொள்ளும் உரிமை.

சர்வதேச நுகர்வோர் பாதுகாப்பு சம்மேளனத்தின் அடிப்படை நுகர்வோர் உரிமைகள்

  • அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்து கொள்ளும் உரிமை.
  • நட்ட ஈட்டினைப் பெற்றுக் கொள்ளும் உரிமை.
  • சூழல் பாதுகாப்பினைப் பெற்றுக் கொள்ளும் உரிமை.
  • சுமூகமான சூழலில் வாழ்வதற்கான உரிமை.

நுகர்வோர் உரிமைகளின் முக்கியத்துவம்

  1. நுகர்வோர் பொருட்கள் சேவைகளை விலையினூடாகவே நுகர்வு செய்கின்றார். இதனால் திருப்தியளித்தல் வேண்டும்.
  2. நுகர்வோர் திட்டமிட்டு பொருட்களைக் கொள்வனவு செய்வதை ஊக்குவித்தல்.
  3. போட்டியான சூழலில் நுகர்வோர் பாதுகாக்கப்படுதல் வேண்டும்.
  4. நுகர்வோரது உடல், உள நலம் பாதிப்படயாதவாறு திருப்தியளிக்கப்படல் வேண்டும்.
  5.  
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்


ஒவ்வொரு நாட்டுக்கும் விதவிதமாக நுகர்வோர் பாதுகாப்புச் சட்டமிருந்தாலும் அடிப்படையில் ஐ.நா. அடிப்படை உரிமைகளைக்கொண்டு மேலும் பல சட்ட விதிகளை புகுத்தி நுகர்வோர் நலனையே மையமிட்டுள்ளது.
இங்கு நுகர்வோர் என்கிற சொல்லாடல் ஒரு பொருளை வாங்குபவர் என்று பொருள் கொள்வதல்ல வணிகரீதியல்லாமல் வாங்குபவரைத் தான் குறிக்கிறது. அப்படி வணிகரீதியல்லாமல் தனிநபர் வாங்கும் அல்லது பயன்படுத்தும் பொருட்கள் மீதான குறைகளை எப்படி எதிர்கொள்வது? சாதாரண மளிகை சாமானிலிருந்து மொபைல் வரை ஏமாற்றப்படுகிறார்கள் இந்த வரிசையில் பலர் ஏமாற்றப்பட்டதையே அறியாமலும் உள்ளனர். கவர்ச்சி விளம்பரங்களாலும், இலவச பொருட்களாலும், போலி பரிந்துரைகளாலும் பரிதாபமாக பாதிக்கப்படுவது நாமே.
• முதலில் விழிப்புணர்வை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும் நாம் வாங்கும் பொருளுக்கும் நமது பணத்திற்கும் ஒரு புரிதல் வேண்டும்
• முடிந்த வரை ஊடகங்கள் மக்களுக்கு இத்தகையச் செய்திகளை வெளிக்கொணர வேண்டும்.
• வர்த்தக நிறுவனங்கள் தாங்களாக முன்வந்து தங்கள் நுகர்வோரிடம் வெளிப்படையாக நடக்க வேண்டும், போதிய நம்பத்தன்மையை ஏற்படுத்தவேண்டும்
• மக்களும் தங்களால் முடிந்த அளவு செய்திகளையும் சட்ட வழிமுறைகளையும் அறியவும் வேண்டும் பகிரவும் வேண்டும்.
• நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகளைப் பற்றியான கேள்வி ஞானம் கட்டாயம் பெற்றிருக்கவேண்டும். இந்த தொடர்புகள் இல்லாத மக்கள் தான் அதிகமான பாதிப்புக்குள்ளாகிறார்கள்.
.
பலம் வாய்ந்த நிறுவனங்களை எதிர்த்து தனிமனிதன் செய்யும் புகாரைவிட(அதிகம் செய்யவதில்லை) ஊர்கூடிச்செய்தால் நிச்சயம் பலன் கிட்டும். அப்போது யார்யார் பாதிக்கப்பட்டுள்ளார்கள், எங்கே இந்த தகவலைப் பெறமுடியும்? இணையசுழல் அதற்கு பல வசதிகளைச் செய்துள்ளது ஆனால் பயன்படுத்துபவர்கள்தான் குறைவு. பல இணையக்குழுக்கள் உள்ளன
இவற்றை நாம் பயன்படுத்தும் முறை எப்படிஎன்றால், நாம் புகார்களை அளிப்பதைவிட மற்றவர்களின் புகாரைக் கொண்டே நல்ல பொருட்களை அடையாளம் கண்டுகொள்ளலாம். இருந்தால் நாமும் புகார் அளிக்கலாம்
http://www.complaintsboard.com/




http://www.complaints.com/




http://www.registercomplaints.com/
இந்திய அமைப்புகள்
http://www.indiaconsumerforum.org/


http://www.consumercomplaints.in/

 


http://consumer.org.in/




http://www.bis.org.in/cad/complain.htm

சில சமயங்களில் கைமேல் பலனாக புகாரளிக்கப்பட்ட நிறுவனமே நமக்கு உதவமுன்வரும்
சரி புகார் அளிக்கும் முன் நாம் முதலில் அடிப்படை தகவல்களை எப்படி பெறுவது? சட்டம் என்ன சொல்லுகிறது? போன்றவைதான் மிகமுக்கியமாகத் தேவை (இந்திய சட்டம்)
http://india.gov.in/sectors/consumer_affairs/consumer_protection.php


http://www.consumer.tn.gov.in/
நேரடி புகாரும் அளிக்கலாம்.
http://fcamin.nic.in/
பிரத்தேக விழிப்புணர்வு அமைப்புகள்
http://www.ccccore.co.in/




http://www.consumergrievance.com/
எந்த ஒரு புகார் அளிக்கும் முன் நாம் அந்தப் பொருளை முறைப்படி வாங்கிக்கொண்டோமா என சிந்தித்துச் செய்வது உத்தமம்.
ஆங்காங்கே சில அமைப்புகள் நுகர்வோர் நலனைப் பற்றி பேசினாலும் இணையத்தில் எனக்கு தெரிந்த வரை
தமிழில் நுகர்வோர் பற்றிய இணையதளங்கள்
 
http://cchepeye.blogspot.com
 
 
http://www.consumererode.org/

 


http://nukarvor-nalan.blogspot.com/




http://lawforus.blogspot.com/


http://www.makkal-sattam.org/
மேலும் அதிகமாக உருவாக வேண்டும், அந்த துறைசார்ந்தவர்கள் இணைய விழிப்புணர்வை கொண்டுவரலாம்.



கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

புதன், 9 நவம்பர், 2011

நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு நடத்தும் கவிதை, கட்டுரை போட்டிகள்

ஊட்டி : நீலகிரி மாவட்ட நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு, கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் ஆகியவை சார்பில் நடத்தப்படும் கட்டுரை, கவிதை போட்டிகளில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்ரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கை:

இந்தியாவில் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்டு 25ம் ஆண்டை(1986-2011) எட்டிய நிலையில் மக்கள் மத்தியில் நுகர்வோர் விழிப்புணர்வு குறைவாகவே உள்ளது. இதனை அதிகப்படுத்தும் நோக்கில் மாவட்ட அளவிலான கவிதை-கட்டுரை போட்டிகள் நடத்தப்படவுள்ளது.

நீலகிரி மாவட்ட நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு, கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் ஆகியவை சார்பில் நடத்தப்படும் இப்போட்டிகளில் பல தரப்பினரும் பங்கேற்கலாம்.

கவிதையின் தலைப்பு "கலப்படம் செய்யும் கல் நெஞ்சங்கள்', "மயக்கும் மாயங்கள்' ஆகும்.

கவிதைகளை எழுதியோ, கம்ப்யூட்டர் பிரதிகள் மூலமாகவோ அனுப்பி வைக்க வேண்டும்.

ஏற்கனவே பிரசுரிக்க பட்டவையாக இருக்க கூடாது.

சிறந்த கவிதைகளுக்கு பரிசுகள் வரும் டிசம்பர் தேசிய நுகர்வோர் தின விழாவில் வழங்கப்படும்.

கவிதைகளை வரும் 25ம் தேதிக்குள் 

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், பந்தலூர்',

"நீலகிரி மாவட்ட நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு, வசம்பள்ளம், குன்னூர்',

"ஊட்டி நகர மக்கள் விழிப்புணர்வு சங்கம், டவுன்பஸ் ஸ்டாண்ட், ஊட்டி',

"கோத்தகிரி நுகர்வோர் பாதுகாப்பு சங்கம், புதுமார்க்கெட் ரோடு, கோத்தகிரி'

என்ற முகவரிகளுக்கு அனுப்பலாம்.

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

வியாழன், 21 ஜூலை, 2011

கந்து வட்டி

தமிழக முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்றவுடன், திருட்டு வழிப்பறிச் சம்பவங்களில் ஈடுபடுகிறவர்கள் ஆந்திர மாநிலத்துக்குத் தப்பிச்சென்றுவிட்டனர்; மக்கள் நிம்மதியாக வாழலாம் என்றார். வெளி மாநிலங்களுக்குத் தப்பிச் சென்றவர்களின் பட்டியலில் கந்துவட்டி தாதாக்களும் உள்ளனர். கந்து வட்டிக் கும்பல்களால் கொலைகள் மட்டுமன்றி தற்கொலைகளும் அதிகமாக நடைபெற்று வருகின்றன என சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் ஒட்டுமொத்தமாகக் குரல் எழுப்பியபோது, சட்டப்பேரவையில் கடந்த 2009-ம் ஆண்டு ஜூலை 21-ம் தேதி பேசிய அப்போதைய முதல்வர் கருணாநிதி கந்து வட்டி, கட்டப்பஞ்சாயத்தை ஒழிக்க அரசு தீவிர முயற்சி எடுக்கும் என்றார். இதன்பிறகுதான் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் கந்துவட்டி கும்பலால் சீரழிக்கப்பட்ட இளம்பெண்ணுக்குப் பாதுகாப்புக் கேட்டு போராடிய மார்க்சிஸ்ட் கட்சியின் கிளைச் செயலர் வேலுச்சாமி படுகொலை செய்யப்பட்டார். நடிகை சுலக்சனா கந்து வட்டிக்கும்பல் தன்னை மிரட்டுவதாக சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் தெரிவித்தார். நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் பணிபுரிந்த ஊழியர் செல்லப்பாண்டியன் கந்து வட்டிக் கும்பலின் கொடுமையால் தற்கொலை செய்து கொண்டார். அப்போதைய முதல்வர் கருணாநிதி சட்டப்பேரவையில் பேசியதற்குப் பின் நடைபெற்ற சம்பவங்கள் இவை. இதுபோன்று ஏராளமான குற்றச்சம்பவங்கள் கடந்த ஆட்சிக்காலத்தில் நடைபெற்றுள்ளது. பள்ளிபாளையம் பகுதியில் மட்டும் சுமார் 150-க்கும் மேற்பட்ட வட்டிக்கடைகள் உள்ளன. தினவட்டி, மணி நேர வட்டி, மீட்டர் வட்டி, தண்டல் போன்ற வரன்முறை இல்லா வட்டி, ரன் வட்டி என பல பெயர்களில் கந்துவட்டி வசூலிக்கப்படுகிறது. இதில் அக்ரஹாரம் பகுதியில் உள்ள கந்து வட்டிக்கடைகளில் ஆயிரம் ரூபாய்க்கு 200 ரூபாய் என அநியாய வட்டி வசூலிக்கப்படுகிறது. அன்றாடக்கூலிகளான நெசவாளர்களைக் குறிவைத்து இறங்கிய கந்து வட்டிக்கும்பலிடம் 2 ஆயிரம் ரூபாய் வட்டிக்கு வாங்கி அந்தப் பாக்கியை வாராவாரம் செலுத்தி வந்த பெண்ணின் மகள், பணம் கொடுக்கச் சென்றபோதுதான் அக்கும்பலின் தூண்டுதலால் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, அதைச் செல்போன் மூலம் படமெடுத்து இணையத்தில் வெளியிட்டனர். எப்படியாவது பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற குறுக்குப்புத்தி உள்ளவர்களின் தொழில் பெரும்பாலும், கந்துவட்டியாகத்தான் இருக்கிறது. பணம் கொழிக்கும் தொழிலாக விளங்கும் கந்து வட்டியால், தங்களுடைய வசதிகளைப் பெருக்கிக் கொள்ளும் நபர்கள், குற்ற நடவடிக்கைகளையும் பெருக்கிக் கொள்கிறார்கள். சிறுதொழில்களில் தொடங்கி ரியல் எஸ்டேட், சினிமா என முதலீட்டை வேறுபாதைக்கும் திருப்பிவிடுகின்றனர். ஆனாலும், அங்கும் இருப்பது கந்துவட்டிதான். தனியார் நிறுவனமோ, தனியாரோ வட்டிக்குப் பணம் கொடுத்து வாங்குவது பற்றி, வரைவுச்சட்டம் ஏற்கெனவே அமலில் உள்ளது. அதன்படி, சொத்துப் பத்திரங்களைக் கொடுத்துக் கடன் பெற்றால், ஆண்டுக்கு 9 சத வட்டி வசூலித்துக் கொள்ளலாம். சொத்துப்பத்திரங்கள் கொடுக்காமல், நம்பிக்கையின் அடிப்படையில் கடன் பெற்றால், ஆண்டுக்கு 12 சத வட்டி வசூலித்துக் கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி கூறுகிறது. வட்டிக்குப் பணம் கொடுப்பவர், இந்த நடைமுறைகளைப் பின்பற்றினால், மிகவும் குறைவான லாபம் கிடைக்கும். அதனால், அநியாய வட்டி வசூலிக்கின்றனர். காவல்துறையில் புகார் கொடுத்து விசாரிக்கும்போது, இந்த தில்லு முல்லு வெளியாகி வழக்குப்பதிவு வரை செல்கிறது எனவும் ரிசர்வ் வங்கியின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1957-ம் ஆண்டு தமிழ்நாடு கடன் கொடுப்போர் சட்டத்தில் எது எவ்வாறு இருப்பினும் எவரொருவர் பிரிவு 3-ன் கீழ் உத்தரவாதத்தை மீறுவாராயின் அல்லது கடன் தொகையை வசூல் செய்ய எவரேனும் கடனாளியைத் தொந்தரவு அல்லது தொந்தரவு செய்ய உடந்தையாக இருப்பாராயின், 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையுடன் ரூ.30 ஆயிரம்வரை அபராதமும் விதிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த 2001-2006-ம் ஆண்டில் முதல்வராக ஜெயலலிதா இருந்த காலத்தில்தான் கந்துவட்டி தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டது.இதன்பிறகே கந்துவட்டிக் கொடுமை குறைந்தது. கிராமங்களில் ஒவ்வொரு நாளும் அதிகாலையில் கடன் வாங்கியவர்களை எழுப்பும் கந்து வட்டிக் கும்பலின் அட்டகாசத்துக்கு முடிவு கட்டப்பட்டது. கந்து வட்டிக் கொடுமையால் பாதிக்கப்பட்ட அன்றாடம் தொழில் செய்து பிழைப்பு நடத்திவந்த ஏழை மக்களுக்கு கூட்டுறவு வங்கிகளில் சிறு தொழில் கடன் வழங்கப்பட்டது. இதன்பிறகு ஆட்சிக்கு வந்த திமுக, அதிமுக அரசு கொண்டுவந்த கந்துவட்டித் தடைச் சட்டத்தையும், கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் வழங்கும் திட்டத்தையும் கிடப்பில்போட்டது. இதனால் அப்போது ஆளும் கட்சியின் ஆதரவுடனயே கந்து வட்டித் தொழில் உச்சத்தை அடைந்தது. இப்போது மீண்டும் ஜெயலலிதா முதல்வராகப் பொறுப்பேற்றவுடன், கந்துவட்டித் தொழிலில் ஈடுபட்டுள்ள பலரும், தங்கள் தொழிலுக்கு அடிப்படையாக உள்ள ஆந்திர மாநிலத்துக்குச் சென்றுவிட்டனர். கடந்த 1 மாத காலத்தில் கந்துவட்டி குறித்து குறிப்பிடும்படி எங்கும் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை.ஊடகங்களிலும் இதுகுறித்த எந்தச் செய்தியும் இல்லை. இதனால் திருட்டு பயம் நீங்கியுள்ளதோடு, கந்துவட்டிக் கொடுமைக்காரர்களிடம் சிக்கித்தவித்த ஏழை மக்களுக்கு இப்போது விடுதலை கிடைத்துள்ளது. 


 கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

இயற்கையைச் சீண்டினால் விபரீதம்தான்...

செயற்கையால் இயற்கையைக் கட்டுப்படுத்த முடியாது என்பது இயற்கை நியதி. அதை மீறினால் ஏதாவது விபரீதம் ஏற்படுவது நிச்சயம்.  கோவை மாவட்டம் பெரியநாயக்கம்பாளையம் வனச்சரகம் தடாகம் காப்புக் காட்டில் ஜூலை 9-ம் தேதி 20 வயது மதிக்கத்தக்க ஆண் யானை "ரேடியோ காலர்' பொருத்தும்போது துடிதுடித்து இறந்துள்ளது.  இச்சம்பவம் நடப்பதற்கு 2 நாள்களுக்கு முன்பு இதே மாவட்டத்தில் போளுவாம்பட்டி வனச்சரகத்தில் 20 வயது மதிக்கத்தக்க பெண் யானைக்கு "ரேடியோ காலர்' பொருத்தப்பட்டது.  யானைகள் வனத்தில் இருந்து வெளியேறி மனிதர்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்துவதைத் தடுக்க இந்தியாவிலேயே முதல்முறையாக யானைக்கு "ரேடியோ காலர்' பொருத்திவிட்டோம் என பெருமைகொண்டது வனத்துறை. ஆனால், அடுத்த 2 நாள்களுக்குள் வனத்துறையினர் சாயம் வெளுத்துவிட்டது.  "ரேடியோ காலர்' பொருத்தப்படுவது என்ற தகவல் கிடைத்த உடனேயே சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், வனவிலங்கு நல அமைப்புகளும் போர்க்கொடி தூக்கியிருந்தால் யானை இறப்பதை முன்கூட்டியே தடுத்திருக்கலாமோ என்று தோன்றுகிறது.  அமெரிக்காவில் இந்திய மாணவர்களுக்கு கால்களில் "ரேடியோ காலர்' கருவி பொருத்தப்பட்டபோது உலகம் முழுவதும் இருந்து மனசாட்சியுள்ள பல மனித உரிமை அமைப்புகள் குரல் கொடுத்தன. யானைக்கு "ரேடியோ காலர்' பொருத்தப்படுகிறது அல்லது பொருத்தப்பட்டுவிட்டது என்ற செய்தியை அறிந்ததும் மனசாட்சியுள்ள சுற்றுச்சூழல் அமைப்புகள் வீதிக்கு வந்து போராடியிருக்க வேண்டும்.  தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம் ஆகிய மூன்று மாநிலங்களின் எல்லைகள் சந்திக்கும் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில்தான் ஆசியாவிலேயே அதிக யானைகள் உள்ளன. தோராயமாக 15,000 சதுர கிலோ மீட்டர் பரப்புள்ள இந்தப் பகுதியில் சுமார் 8,500 யானைகள் உள்ளதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.  இங்குதான் மனித-யானை மோதல்களும் அதிக அளவு நடக்கின்றன. வனத்தில் இருந்து யானைகள் வெளியே வருவதற்குப் பல்வேறு காரணங்கள் இருந்தாலும், யானைகளின் பாரம்பரியமான (பல ஆயிரம் ஆண்டுகள் பழமையான) வழித்தடங்களை மனிதர்கள் ஆக்கிரமித்ததுதான் பிரதான காரணம்.  தேயிலைத் தோட்டங்கள், காப்பித் தோட்டங்கள், ஆன்மிகக் குடில்கள், பொறியியல் கல்லூரிகள் என்ற வகையில் அரசியல்வாதிகளின் உதவியுடன் செல்வாக்குமிக்க தனிநபர்கள் யானை வழித்தடங்களை ஆக்கிரமித்துள்ளனர். சத்தியமங்கலம் வனப்பகுதியில் சில முன்னாள் அமைச்சர்கள், முன்னாள், இன்னாள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளின் பிடியில் சில ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் உள்ளன.  யானைகள் ஒரே இடத்தில் வாழ்வதில்லை. அவை இனப்பெருக்கம் நடத்திக்கொண்டே, மேற்குத்தொடர்ச்சி மலையில் சுமார் 300 கிலோ மீட்டர் சுற்றுவட்டாரத்துக்குள் அங்கும், இங்கும் இடம்பெயர்ந்து கொண்டே வாழும். அதன் வழித்தடங்கள் ஆக்கிரமிக்கப்படும்போது அவை வழிமாறி சமவெளிக்கு வருகின்றன.  2011-ம் ஆண்டில் கோவை மாவட்டத்தில் யானைகள் சுமார் 700 முறை விவசாய நிலங்களுக்குள் சென்றுள்ளன. 2010-ம் ஆண்டில் 844 முறையும், 2009-ம் ஆண்டில் 560 முறையும் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.  பிரதான பிரச்னையான யானைகள் வழித்தட ஆக்கிரமிப்பை அகற்ற வழிதேடாமல், யானைக்கு "ரேடியோ காலர்' பொருத்துவது, தும்பைவிட்டுவிட்டு, வாலைப் பிடிப்பதற்குச் சமமான செயல்.  அளவுக்கு அதிகமாக மயக்க மருந்து செலுத்தப்பட்டதால்தான் யானை இறந்தது என்கிறது வனத்துறை. மயக்க மருந்து கொடுக்க அல்ல; முதலில் "ரேடியோ காலர்' பொருத்த உங்களுக்கு அனுமதி கொடுத்தது யார்?  அட்டவணைப் பட்டியலில் இருக்கும் விலங்குகளைக் காயப்படுத்தினாலோ அல்லது சாகடித்தாலோ, அதற்குக் காரணமானவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து அவர்களைக் கைது செய்கிறது வனத்துறை.  "ரேடியோ காலர்' பொருத்தும் பணியின்போது யானை இறந்த சம்பவத்தைப் பார்க்கும்போது அது கொலை செய்யப்பட்டதற்குச் சமம் என்பது தெளிவாகிறது. அட்டவணைப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் யானை கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு யார் பொறுப்பு?  இனிமேலாது இதுபோன்ற தவறுகளுக்கு இடமளிக்காமல் வனத்துறையினர் சுதாரித்துக்கொண்டு அறிவுப்பூர்வமாகச் செயல்படுவது அவசியம். யானை-மனித மோதலைத் தடுக்க வனப்பகுதியில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அதிரடியாக அகற்றுவதுதான் முதல் நடவடிக்கையாக இருக்க வேண்டும்.  அதையும் மீறி வனத்தில் இருந்து வெளியேறும் யானைகளைக் கண்காணிக்க யானைகளுக்குப் பாதிப்பு ஏற்படாதபடி தொழில்நுட்ப ரீதியாக மாற்றுவழியைத் தேடலாம்.  யானைகளின் நடமாட்டத்தைச் சென்சார் கருவிகள் மூலம் கண்காணித்து வனத்தில் இருந்து வெளியேறும் யானைகள் குறித்து அந்தந்தப் பகுதியில் உள்ள வனச்சரகரின் செல்போனுக்குக் குறுந்தகவல் அனுப்பும் வகையிலான நவீன கருவியை கோவையில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் ஓராண்டுக்கு முன்பு கண்டுபிடித்தனர். அந்தக் கருவியைக் கண்டுபிடிக்கும் திட்டத்துக்கு வனத்துறைகூட நிதி ஒதுக்கியிருந்தது. அந்தத் திட்டம்கூட சிறந்த மாற்றாக இருக்கக்கூடும்.  இயற்கையோடு வாழுங்கள். முடியாவிடில், இயற்கையைவிட்டு ஒதுங்கி வாழுங்கள். இயற்கையைச் செயற்கையால் அடக்கி வாழலாம் என்றால் இயற்கையின் சீற்றத்தை யாராலும் கட்டுப்படுத்த இயலாது.
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

உரிமைக்கான விழிப்புணர்வு எப்போது?

உரிமைக்கான விழிப்புணர்வு எப்போது?
விழிப்புணர்வு மிக அவசியமாக இருக்கிறது. குடிநீர், ஆரோக்கியம், காற்று ஆகியவற்றைப் பெறுவதில், நோயற்ற வாழ்க்கை வாழ்வதில், விழிப்புணர்வு பெரும் பங்கு வகிக்கிறது.  உணவகங்களைத் தேர்ந்தெடுப்பதில், ஆடைகள் வாங்குவதற்கான தயாரிப்புகளில் எந்த கடைக்குச் செல்வது என்பதை விளம்பரங்கள் தீர்மானித்தாலும், அந்தக் கடை பற்றிய தனது ஞானமே முக்கியமான காரணம் என்ற கற்பனையில்தான், பலரின் உற்சாகம் உயிர் வாழ்கிறது.  

1996-ல் ஒரு சமையல் எண்ணெய் நிறுவனம், ஆரோக்கியமானது, குறைவான கொலஸ்ட்ரால் கொண்டது. எனவே, இதய நோய் குறித்த உபாதையில் இருந்து பாதுகாக்கவல்லது என்று விளம்பரம் செய்ததாம். அதன் காரணமாக அந்த நிறுவனத் தயாரிப்பு இன்று வரை சந்தையில் செல்வாக்கு செலுத்துவதாக, மார்க்கெட்டிங் துறையில் பணிபுரியும் நண்பர் குறிப்பிட்டார்.  மேற்படி விளம்பரம் நம்மை வாங்கத் தூண்டுகிறது. சந்தையில் கிடைக்கும் எண்ணெய் வகைகளில் ஒன்று என்று மட்டும் புரிந்துகொண்டால், நமது மக்கள் விழிப்புணர்வு பெற்றவர்கள் என முடிவுக்கு வரலாம்.  ஆனால், விளம்பரம் குறிப்பிடுவதைப்போல் அந்த எண்ணெய், பயன்பாட்டுக்குப்பின் தன் குடும்பத்தினர், இதய நோய் தொல்லைகளில் இருந்து விடுபட்டதாக உணர்வது, விழிப்புணர்வல்ல. அது மனநலம் சார்ந்தது. விளம்பரம் ஏதோ ஒருவகையில் அக்குடும்பத்தினரை "ரிலாக்ஸ்' செய்திருக்கலாம், ஆனால் தீர்க்காது. ஏனென்றால், இதய நோய் எண்ணெயுடன் மட்டும் சம்பந்தப்பட்டதல்ல. மன அழுத்தம், சுற்றுச் சூழல், பணிச்சூழல், குடும்பப் பாரம்பரியம் உள்ளிட்ட எத்தனையோ விதமான காரணங்களை உள்ளடக்கியது என்ற புரிதலே விழிப்புணர்வு. 

 விழிப்புணர்வின் அடிப்படை கல்வியறிவுடன் இணைந்தது. இந்தியாவோ கல்வி அறிவைப் பெறுவதிலும், படித்தவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான பாடத்திட்ட முறையிலும் பின்தங்கி உள்ளது.  நீண்ட போராட்டத்துக்குப் பின், 2009 ஆகஸ்டில் மத்திய அரசு 6 முதல் 14 வயது வரையிலான குழந்தைகள் அனைவருக்கும் இலவசக் கட்டாயக் கல்வி என்ற சட்டத்தை இயற்றியது. இதன் மூலம் இந்தியா கல்வி பெறும் உரிமையை அடிப்படைச் சட்டமாக்கிய 135 நாடுகளில் ஒன்றாக மாறியுள்ளது. அதாவது, இந்தியாவுக்கு முன் 134 நாடுகள் இச்சட்டத்தை இயற்றி, நமக்கு வழிகாட்டியுள்ளன.  2010-ல் சட்டத்தை அமலாக்குவதற்கான விதிமுறைகளையும் உருவாக்கியது. மத்திய அரசு உருவாக்கிய விதிமுறைகளில் கல்வியாளர்கள் பல விமர்சனங்களைச் சுமத்தி வருகின்றனர்.  குறிப்பாக, இலவசக் கட்டாயக் கல்வி என்று அறிவித்த பின் தனியார் பள்ளிகளில் 25 சத இடஒதுக்கீடு பள்ளி இருக்கும் பகுதியைச் சார்ந்த சாதாரண குடிமக்களின் குழந்தைகள் சேர்க்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருப்பது சரியா என்பது சீரிய விவாதத்துக்கு ஆளாகியுள்ளது.  


அனைவருக்கும் இலவசக் கல்வி என்ற முழக்கத்தை முன்வைத்துள்ள கல்வியாளர்களும் இதை எதிர்க்கிறார்கள். பணம் கொடுத்துப் படிக்க வைக்கத் தயாராக இருக்கும் பெற்றோர்களில் சிலரும், தனியார் பள்ளி நிர்வாகத்தினரும் எதிர்க்கின்றனர். முன்னவரின் எதிர்ப்பு புரிந்துகொள்ளக் கூடியது. பின்னவர்களில், குறிப்பாக பெற்றோர் எதிர்ப்புப் புரியவில்லை. ஒரு பள்ளியில் எப்படி இரண்டு விதமான மாணவர்களைப் பராமரிப்பது. பணம் கொடுத்துப் பயிலும் மாணவர் மீது ஆசிரியர் கவனம் செலுத்துவதுதானே சரி. 25 சத ஒதுக்கீட்டில் வரும் மாணவர், வசதியான பிற மாணவரின் நோட்டு மற்றும் புத்தகங்களைத் திருடிவிட்டால் என்ன செய்வது என பலவாறு பெற்றோர்கள் கேட்டதாகத் தனியார் பள்ளி நிர்வாகி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.  அது மட்டுமல்ல, 2011 பிப்ரவரியில், மத்திய அரசின் கல்வி உரிமைச் சட்டத்தின் மேற்படி பிரிவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளனர். இதை விசாரித்த தலைமை நீதிபதி, நாட்டின் நலன் கருதி, பொருளாதார ரீதியில் பின்தங்கிய பிரிவினரின் முன்னேற்றத்துக்கான முதலீடு எனக் கருதப்படும், தனியார் பள்ளிகளில் 25 சத ஒதுக்கீடு என்ற கொள்கை குறித்து, யாரும் புகார் கொடுக்க முடியாது என தெளிவுபடுத்தியுள்ளார்.  மகிழ்வுக்குரிய தீர்ப்பாக இதைக் கருதலாம். உச்ச நீதிமன்றம் கடந்த 1993 உன்னிகிருஷ்ணன் என்ற மாணவர் தொடுத்த வழக்கில் தீர்ப்பளிக்கும்போதும், கல்வி பெறுவது, உயிர் வாழும் அடிப்படை உரிமையுடன் இணைந்தது எனக் குறிப்பிட்டதையும் நினைவில் கொள்ளலாம். இந்திய அரசியல் சட்டம் தொடக்கத்தில் இருந்தே, பிரிவு 21 அடிப்படையில் கல்வி பெறும் உரிமை, ஒவ்வொரு தனி நபருக்கும் உண்டு என்பதை வலியுறுத்தி உள்ளது. இங்கு அனைவருக்கும் இலவசக் கட்டாயக் கல்வி என சட்டம் இயற்றிய பின் தனியாரை நாட வேண்டிய அவசியம் என்ன?  சட்டம் மிகமிகத் தாமதமானது. தாமதமான நீதி மறுக்கப்படும் நீதிக்கு ஒப்பாகும் என சொல்லிக் கொண்டே இருக்கிறோம். ஆனாலும், ஆட்சியாளர்கள் தாமதப்படுத்துகிறார்கள். விடுதலை இந்தியாவில், சுமார் 53 ஆண்டுகள், மத்திய ஆட்சிப் பொறுப்பில் இருந்து வரும் காங்கிரஸ் கட்சியே, மேற்படி தாமதத்துக்குக் காரணம்.  மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சத நிதியைத் தொடர்ந்து ஒதுக்கீடு செய்துவந்தால், ஒரு சில ஆண்டுகளிலேயே, அரசே இலவசக் கட்டாயக் கல்வியை வழங்க முடியும் என காங்கிரஸ் அரசு அமைத்த குழுக்கள் கோத்தாரி தொடங்கி, ஆச்சார்யா ராமமூர்த்திவரை திரும்பத் திரும்ப வலியுறுத்தியுள்ளனர்.  ஆனாலும், 

அதிகபட்சமாக 4 சதம் தான் பட்ஜெட்களின்போது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கியூபா 18.7. மலேசியா 8.1, கென்யா 7, தென் ஆப்பிரிக்கா 5.3, தாய்லாந்து 5.2, எத்தியோப்பியா 4.6, உலக நாடுகளின் சராசரி 4.9, என கல்விக்கான நிதி ஒதுக்கீடு பற்றி அறிய முடிகிறது. ஆனால், இந்தியா 4 சதம் மட்டுமே மொத்த உற்பத்தியில் ஒதுக்கீடு செய்கிறது. இந்தியாவில்தான் தேவை அதிகம். ஆனால், செயல் எதிர்மறையாக இருக்கிறது. மேலே குறிப்பிட்ட நாடுகள் அனைத்தும் இந்தியாவைவிட, பொருளாதார வலிமை கொண்ட நாடுகள் அல்ல என்பது முக்கியமானது.  2009-ல் சட்டம் முன்மொழியப்பட்டபோது, 1 லட்சத்து 71 ஆயிரம் கோடி தேவைப்படுவதாகக் குறிப்பிட்டனர். சட்டத்துக்கான விதிமுறைகளை உருவாக்கும்போது, 2 லட்சத்து 31 ஆயிரம் கோடிகளாக உயர்ந்தது என்பதையும் அரசு விவரம் தெரிவிக்கிறது. இந்த ஆண்டு அமலுக்கு வரும் குறிப்பிட்ட நிலையில், எவ்வளவு தேவைப்படும், எவ்வளவு ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை அரசு தெரிவிக்கவில்லை. சி.டபுள்யு.ஜி. (காமன்வெல்த் கேம்ஸ்), 2ஜி (ஸ்பெக்ட்ரம்), கே.ஜி. (கோதாவரி ஆற்றுப்படுகை கேஸ்) என்ற "ஜி' வரிசை ஊழல்களுடன் ஒப்பிடும்போது, கல்விபெறும் உரிமையை நிலைநாட்ட, நம் நாட்டில் பணம் ஒரு பிரச்னை அல்ல என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.  அடிப்படை உரிமைகளை நிறைவு செய்யத் தேவையான பணம், ஊழல்களில் கரைகிறது என்பதைப் புரிந்துகொள்வதும் கூட விழிப்புணர்வு சார்ந்ததே. மேற்படி ஊழல் குறித்த விசாரணைக்கு, நமது சி.பி.ஐ. மொரிஷியஸ் சென்றதாகச் செய்திகள் மூலம் அறிய முடிகிறது.  1994 காலத்திலேயே, மொரிஷியஸ் போன்ற நாடுகளில் இருந்து குறுகிய நீண்டகால முதலீட்டாளர்களுக்கு வரி இல்லை என்ற முடிவை அரசு மேற்கொண்டுள்ளது. இதற்காக மொரிஷியஸ் நாட்டுடன், இரட்டை வரி தவிர்ப்பு உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என்கிறார் டாக்டர் தர்மேந்திர பண்டாரி.  இக்காலத்தில் மன்மோகன் சிங் நிதி அமைச்சர், அவர் வழிகாட்டுதல் இல்லாமல், மேற்படி உடன்பாட்டுக்கான நெறிமுறைகளை உருவாக்கிய செபி, ஆர்.பி.ஐ. ஆகிய நிறுவனங்கள் செயலாற்றி இருக்க முடியாது. கல்வி உரிமைக்காகத் தொலைநோக்குப் பார்வையுடன் செயல்பட்டார்களோ இல்லையோ, ஊழல் பணத்தை முதலீடு செய்ய, கறுப்புப் பணத்தை வெள்ளையாக்க, தொலைநோக்குப் பார்வையுடன் செயல்பட்டுள்ளனர் என்பதை அறிய முடிகிறது.  நெடுங்காலமாக அரசு சொல்லும் நிதியாதாரம் இல்லை என்ற செய்தி பொய் என்பதை, இதுபோன்ற தகவல்களில் இருந்து தெரிந்துகொள்ளலாம். இந்த நிதி ஆதாரங்களையும் இதர பல முயற்சிகளாலும் அருகமைப் பொதுப் பள்ளிகளை அமைப்பதில் அரசு ஈடுபட வேண்டும். அருகமைப் பொதுப்பள்ளி என்பது சமூக, பொருளாதார வேறுபாடுகள் இல்லாமல் அனைத்து வீட்டுக் குழந்தைகளும் கல்வி கற்கும் பள்ளிகள் ஆகும்.  இந்த முறைதான் அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளில் பின்பற்றப்படுகிறது. அணில் சடகோபால் என்ற கல்வியாளர், அருகமைப் பள்ளி முறை அமலுக்கு வந்தால், மிகப்பெரிய அளவில் எரிபொருள் சேமிக்கப்படும். ஏனென்றால், அருகமைப் பள்ளிகளுக்குக் குழந்தைகள் சென்றுவர, பேருந்துகள் தேவை இருக்காது, நாட்டின் பொருளாதாரம் பெரிய அளவில் பாதுகாக்கப்படும் என்று கூறுகிறார்.  தமிழ்நாட்டில்கூட, இலவச பஸ் பாஸ் வழங்க அரசு செய்யும் செலவினமும் குறையும். பஸ் நிறுத்தங்களில் காலையிலும், மாலையிலும் நம் வீட்டுக் குழந்தைகள் அனுபவிக்கும் கொடுமைகளும் குறையும்.  சட்டத்தின் விதி குறிப்பிட்டுள்ள 25 சத ஒதுக்கீட்டைத் தனியார் பள்ளி நிறுவனங்கள் மற்றும் பெற்றோர்கள் எதிர்ப்பது தேவையற்றது என்பதை சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. சுகாதாரப் பராமரிப்பில் படித்த நடுத்தர வர்க்கத்தினர் கவனம் செலுத்துகின்றனர். இது பாராட்டுக்குரியதே. ஓட்டலில் அமர்ந்தவுடன் குடிநீர் பாட்டிலுக்கு ஆர்டர் செய்த பின்தான், உணவு வகைகளுக்கு ஆர்டர் செய்யும் குடும்பத்தினர் அதிகரித்து வருவதைக் காணலாம்.  குடிக்கும் தண்ணீர் என்ற வெளிப்படையாகத் தெரியும் பொருள் மீது மட்டுமே நமது பராமரிப்பு அக்கறை இருக்கிறது. சமையல் பகுதியில் உள்ள சுகாதாரப் பராமரிப்புகள் குறித்து நாம் கவலைகொள்வதில்லை. இன்னொரு கோணத்தில் பார்த்தால், உணவுக்கு விலை தருவது நியாயம், சுகாதாரமான குடிதண்ணீருக்கும் விலை தருவது எந்த வகையில் நியாயம் என கேள்வி எழுப்பும் மனநிலை ஏன் உருவாக்கப்படவில்லை.  இப்படி அடிப்படை உரிமை என்ற பட்டியலுக்குள் வரும் பொருள்களை, விலைபேசி விற்பதை அங்கீகரிப்பது, விழிப்புணர்வு பெற்ற சமூகத்தில் இருக்காது. மாறாக, படித்தவர்களே அறியாமையில் இருக்கிறோமோ என எண்ணத் தோன்றுகிறது.  தங்களிடம் பணம் இருக்கிறது என்பதற்காக நடுத்தர மக்கள், தனியார் பள்ளிகளை நாட வேண்டியதில்லை. அரசுப் பள்ளிகள், சிறந்தமுறையில் பராமரிக்கப்பட்டாலே, அரசுப் பள்ளிகள் சிறந்ததாக மாற முடியும். நமது விழிப்புணர்வு மத்திய அரசின் கொள்கைகளைக் கேள்விக்குள்ளாக்கும் வலிமை கொண்டதாக மாற வேண்டியுள்ளது. 


கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

திங்கள், 18 ஜூலை, 2011






ref="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj0WhmrM16UznUtTE-XNQZFiLoKsX6bsPgSlLBb6aus_ImUlkny_RtDa6i_ksT-DnbW7glorzo3dn288_g1Qx9aaADS87IZwKRTnXDigIpuDKvYaixCf6x-kxWsQqbpo2x2zLQWMXjfSCo/s1600/27.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்