அன்புடன் வரவேற்கின்றோம்


you are welcome to our web page

எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்

Please give your GOOD IDEAS FOR DEVELOPING
THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPS

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்
கட்டுரைகள் water லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கட்டுரைகள் water லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 23 அக்டோபர், 2013

தமிழக அரசு சேவைகள்


தமிழக அரசு
சேவைகள்
திட்டங்கள்
படிவங்கள்
ஆவணங்கள்
கோரிக்கை தீர்ப்பு
தமிழ் நாடு
முகப்பு » சேவைகள்


திணைக்களம்
சேவைகள் முறை
வகை
தேடல்
 வேளாண்மை துறை
 வணிகவரி மற்றும் பதிவுத்துறை
 எரிசக்தி
 நிதி துறை
 உள், மதுவிலக்கு (ம) ஆயத்தீர்வை துறை
 வேளாண்மை துறை
 வணிகவரி மற்றும் பதிவுத்துறை
 எரிசக்தி
 நிதி துறை
 உள், மதுவிலக்கு (ம) ஆயத்தீர்வை துறை
 தொழில் துறை
 தொழிலாளர் (ம) வேலைவாய்ப்பு துறை
 சட்டத்துறை
 பொது துறை
 வருவாய் துறை
 பள்ளிக் கல்வி துறை
 சுற்றுலா,பண்பாடு மற்றும் சமய அறநிலையத் துறை
 போக்குவரத்து துறை

 

நீலகிரி மாவட்டத்திற்கு கூடுதல் மண்ணெண்னை வழங்க கோரிக்கை


கூடலூர் நுகர்வோர் மனித வள பாதுகாப்பு  மைய தலைவர் சு. சிவசுப்பிரமணியம் உணவு பொருள் வழங்கல் நுகர்வோர் பாதுகாப்பு துறை முதன்மை செயலாளருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதவது  
  நிலகிரி மாவட்டத்தில் தற்போது கூடுதல் மண்ணெண்ணை  தேவைபடுகிறது ஆனால் தற்போது வெறும் 5 லிட்டர் மண்ணெண்ணை மட்டுமே  ரேசன் முலம் விநியோகிக்கப்படுகின்றது இதனால் பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
நீலகிரி மாவட்டம் மலை மாவட்டம் இங்கு ஜூன் முதலே மழை காலம் ஆரம்பித்து விடுகின்றது மழை காலத்தில் இங்கு விறகு மற்றும் இதர எரிபொருட்கள் கிடைப்பதில் மிகவும் சிரம்மம் ஏற்படுகின்றது. பெரும்பான்மையான குடியிருப்புகளுக்கு மின் இணைப்பு இன்றி உள்ளத்தால் மக்கள் மண்ணெண்ணெய் விளக்கை மட்டுமே பயன் படுத்துகின்றனர்
இங்கு மண்ணெண்ணை மட்டுமே பெருமளவு  எரிபொருளாக பயன்டுகின்றது தற்போது இரண்டாம் கட்ட மழை துவங்கவுள்ளது. வரும் 2ம் தேதி தீபாவளி பண்டிகை வருகின்றது இம்மாதம் சில பண்டிகைகளும் வருகின்றது.   இந்நிலையில் மண்ணெண்ணை  அளவு குறைக்க பட்டுள்ளது மிகவும் வேதனை அளிக்க கூடியதாக உள்ளது
ஏற்கனவே மாவட்ட ஆட்சியர் தலைமையிலான மாவட்ட  நுகர்வோர் பாதுகாப்பு குழு கூட்டத்தில் கூடுதல் மண்ணெண்னை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைப்பு சார்பில் வலியுத்தப்பட்டுள்ளது. ஆனால் மாதந்தோறும் மண்ணெண்னை அளவு குறைக்கப்பட்டு வருவது மக்களை மிகவும் சிரம்மத்திற்குள்ளக்குகின்றது
மக்களின் நிலையை கருத்தில் கொண்டு மலை மாவட்டம் என்கின்ற அடிப்படையில் ஏற்கனவே இப்பகுதியில் 10 லிட்டர் மண்ணெண்ணெய் வழங்க பட்டது போல தற்போதும் கூடுதல் மண்ணெண்ணெய் ஒதுக்கிடு செய்து வழங்க பட வேண்டும் என கூறியுள்ளார்
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

ஞாயிறு, 6 அக்டோபர், 2013

Black, Green or Herbal?

Green Tea VS. Black Tea

Black, Green or Herbal?

First cultivated in China nearly 5,000 years ago, tea is consumed in greater quantity worldwide than any other beverage except water. The beverage is made from the leaves of the plant Camellia sinensis, which is native to India and perhaps parts of China and Japan.Black, green and oolong teas are all made from this plant but differ in their methods of preparation. All tea leaves are withered, rolled and heated, but black teas go through an oxidative process known as fermentation before the final heating process. Oolong teas are partially fermented.
Herbal teas are not derived from Camellia sinensis, but from the leaves, bark, roots, seeds and flowers of other plants. These teas have not been associated with the many healing benefits related to black and green teas.
Source: Columbia Encyclopedia, Sixth Edition; Tea Association, Tea Council and Specialty Tea Registry (STAR)

Green Tea 
Natural Remedy 

What is green tea?

Green tea comes from a large shrub with evergreen leaves. The shrub is native to eastern Asia. It has leathery, dark green leaves and fragrant, white flowers. The dried, cured leaves have been used to prepare brewed drinks for more than 4000 years.
Green tea and black tea come from the same plant, but green tea leaves are less processed than black tea. (Black tea is fermented but green tea is not.) Green tea retains many chemicals of the fresh leaf.
The scientific name for green tea is Camellia sinensis. Common names include green tea and Chinese tea.

What is green tea used for?

Green tea is said to have effects that are antimicrobial (fights bacteria), antimutagenic (prevents mutation of bacteria), and antioxidant (helps reduce harmful chemicals in the body).
Green tea is thought to:
  • Reduce the risk of cancer and other fatal diseases.
  • Lower lipid (cholesterol/fat) blood levels.
  • Help prevent dental cavities.
  • Treat stomach problems (such as diarrhea and vomiting).

How is green tea taken?

Green tea can be drunk, or it can be swallowed in the form of a tablet or capsule. An active ingredient of green tea used in the tablets or capsules is called epigallocatechin. Follow the directions printed on the product label.

What are the side effects?

Side effects are possible in people who have sensitive stomachs. Heartburn, stomach irritation, loss of appetite, and diarrhea could result from drinking large amounts of green tea.
Green tea has caffeine in it, which could cause side effects such as:
  • nervousness
  • insomnia
  • a need to urinate more often
  • an increase in blood pressure
  • an increase in your heart rate.

What precautions are there?

  • If you are pregnant, trying to get pregnant, or breast-feeding, avoid drinking green tea because the caffeine it contains may be harmful to the baby.
  • If you have a weakened cardiovascular system (heart and circulatory system), kidney disease, or abnormally high levels of thyroid hormone, you should not take green tea without the approval of your doctor.
  • If you are prone to spasms or have certain psychic disorders (such as panicky states of anxiety), you should not use green tea without the approval of your doctor.
  • Green tea may worsen asthma.
  • Green tea may decrease the effect of warfarin (Coumadin). If you are taking this medicine, talk to your doctor before taking green tea.
  • If you are being treated for a medical condition (especially if you are taking prescription medicine), you should get the approval of your doctor before taking any natural remedy.
  • Some natural remedies have the same effects as prescription medicines. This means there is a danger of being overmedicated. If you have any unusual effects while taking any natural remedy, get advice from a doctor right away.
Remember when taking any natural remedy:
  • "Natural" does not always mean safe.
  • Natural remedies and prescription medicines may interact.
  • Lack of standardization may result in products with different strengths and effects.
  • Lack of quality control may allow contamination of products.
  • If you are pregnant or breast-feeding, you should get the approval of your doctor before taking any natural remedy.
  • Follow dosage recommendations on the package. Do not increase dosages.
  • Do not use natural remedies for long periods of time without advice from your doctor.
  • If you have any questions about any natural remedy, ask your doctor.
  • Infants, children, and the elderly should not use natural remedies without advice from a health care professional.
Keep all natural remedies and medicines out of the reach of children.

The information included here is based on information found in scientific journals, study reports, news releases, and other publications. The author and publisher make no warranty, expressed or implied, as to the accuracy and complete nature of the information. Nothing herein should be interpreted as a recommendation by the author or publisher for the use of any natural remedy.கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

வெள்ளி, 17 மே, 2013

மின்சாரம் தடை படும் ஒவ்வொரு ஆறு மணி நேரத்திற்கும் 50 ரூபாய் வீதம் நுகர்வோருக்கு மின்சார வாரியம் நிவாரணம் தரவேண்டும்


மணிக்கணக்கில் கரண்ட் கட் ஆகிறதா கவலை வேண்டாம் இனி பவர் கட் பற்றி புகார் தந்தால் அதற்கான நிவாரணம் உடனடியாக கிடைக்கும். மின்சாரம் தடை படும் ஒவ்வொரு ஆறு மணி நேரத்திற்கும் 50 ரூபாய் வீதம் நுகர்வோருக்கு மின்சார வாரியம் நிவாரணம் தரவேண்டும் என்று தமிழ்நாடு மின்சார ஓழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மின் நுகர்வோருக்கான உரிமைகள் மற்றும் நுகர்வோரின் குறை தீர்ப்புக்கான காலக்கெடு குறித்த, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது : உடனடியாக புகார் தரலாம் மின் நுகர்வோர், தங்களது குறைகள் தொடர்பான அனைத்து முறையீடுகளையும், மின் பகிர்மான கழகத்தின் பிரிவு அலுவலகங்களில் நேரடியாகவோ, தபால் மூலமாகவோ தரலாம். இணைப்பை இடமாற்றுதல், மின்சார தடை, பெயர் மாற்றம், கட்டணப் பிரிவு மாற்றம், கட்டணப் பிரச்னை, தற்காலிக இணைப்பு, வோல்டேஜ் பிரச்னை, வைப்பு நிதி திரும்பப் பெறுதல் மற்றும் அனைத்து வகை மின் நுகர்வு பிரச்னைகளுக்கு மனுக்கள் தரலாம். பிரிவு அலுவலர்கள் அல்லது அவர்களால் அதிகாரம் அளிக்கப்பட்ட நபர்கள், மனுக்களை பெற்று, எழுத்து மூலம் ஒப்புகை தர வேண்டும். இதற்காக, பிரிவு அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்து அலுவலகங்களிலும், பதிவேடு பராமரிக்க வேண்டும். மின்வாரியம் தரவேண்டிய நிவாரணம் அறிவிக்கப்படாத மின்வெட்டு மின்தடை பிரச்சினைகளை தீர்க்க மணிக்கணக்கில் காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒவ்வொரு 6 மணி நேரத்திற்கும் அறிவிக்கப்படாத மின் வெட்டு குறித்து புகார் அளிக்கப்பட்டால் நுகர்வோருக்கு குறைந்த பட்சம் 50 ரூபாய் முதல் அதிகபட்சம் 2000 ரூபாய் வரை நிவாரணம் அளிக்க வேண்டும். மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் ஒரு நாளுக்கு 25 ரூபாயில் இருந்து 250 ரூபாய் வரை நிவாரணம் தரவேண்டும். நிவர்த்தி செய்ய காலக்கெடு மீட்டர் அல்லது இணைப்பு இடமாற்றம்: 25 நாட்கள்; மின்தடம் மாற்றுதல்: 60 நாட்கள்; டிரான்ஸ்பார்மர் இடமாற்றம்: 90 நாட்கள்; மீட்டர் புதுப்பித்தல்: 30 நாட்கள்; கட்டண வகை மாற்றம்: 7 நாட்கள்; பெயர் மாற்றம்: 7 நாட்கள்; கட்டண கணக்கு பிழை திருத்தம்: பணம் செலுத்தும் இறுதி நாட்களுக்குள், குறைகளை தீர்க்க வேண்டும். இவ்வாறு, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. திருப்தி இல்லை என்றால் புகார் பிரிவு அலுவலகங்கள், குறைகளை தீர்க்க தவறும்போதும், நிவாரணத்திலும் திருப்தி அடையாத நுகர்வோர், அந்தந்த பகுதி மின் வாரிய கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தில் உள்ள குறைதீர்ப்பு மையத்தில் முறையிடலாம். இந்த மையங்கள் குறித்து அலுவலக முகவரி, தொலைபேசி எண், மின்னஞ்சல் (இ-மெயில்) உள்ளிட்ட விவரங்களை, மின்வாரிய இணையதளத்தில் வெளியிட வேண்டும். குறை தீர்ப்பகத்தின் உத்தரவை மேல்முறையீடு செய்ய விரும்புவோர், சென்னை எழும்பூரில் உள்ள, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் குறை தீர்ப்பாயத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது. 


கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

திங்கள், 9 ஏப்ரல், 2012

காஸ் சிலிண்டர் வினியோகத்தை முறைப்படுத்த வேண்டும்

காஸ் சிலிண்டர் வினியோகத்தை முறைப்படுத்த வேண்டும்


பந்தலூர்: கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய தலைவர் சிவ சுப்பிரமணியம், கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: மலை மாவட்டம் என்பதால் எரி பொருள் அதிகளவில் தேவைப்படுகிறது. அரசு மண்ணெண்ணெய் மற்றும் எரிவாயு வினியோகத்தில் அதிக அக்கறை காட்டுகிறது. இவற்றில் நடைபெறும் முறைகேடுகள் அதிகளவு நுகர்வோரை பாதிக்கிறது.
ரேஷன் கார்டு தாரர்களுக்கு மண்ணெண்ணெய் வழங்குவதில் ஓதுக்கீடு குறைவு என கூறி குறைந்த அளவே மண்ணெண்ணெய் வினியோகம் செய்யப்படுகிறது. கேஸ் சிலிண்டர்கள் உரிய காலத்தில் கிடைக்காமல் நுகர்வோர் அவதியுற்று வருகின்றனர்.
லாரி ஸ்டிரைக் காரணமாக கேஸ் சிலிண்டர் சப்ளையை தாமதப்படுத்துகின்றனர். உண்மையான பயனாளிகள் சிலிண்டர் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். கேஸ் மூலம் இயக்கப்படும் ஆட்டோ, கார் போன்றவற்றுக்கு கள்ள சந்தையில் விற்பனை செய்வது மட்டும் தங்கு தடையின்றி நடைபெற்று வருகிறது. தனியாருக்கு அதிக விலைக்கு கேஸ் சிலிண்டர்கள் விற்பனை செய்யப்படுகிறது.
இதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கேஸ் சிலிண்டர்களை முறையாக வினியோகிக்க வேண்டும். அதுபோல் கேஸ் சிலிண்டருக்கு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக தொகை வசூலிக்கப்படுகிறது. கேஸ் சிலிண்டர் வினியோகிக்க அரசால் ரூ.26 வினியோக கட்டணமாக வழங்கப்படுகிறது. 5 கி.மீ தூரம் வரை போக்குவரத்து கட்டணம் வசூலிக்க கூடாது என்று அறிவுறுத்தி உள்ளது.
5 கி.மீ மேல் 15 கி,மீ வரை மாவட்ட வருவாய் அலுவலர் மூலம் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை போக்குவரத்து கட்டணமாக வசூலிக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் சில கேஸ் ஏஜன்சிகள் அதிக கட்டணத்தை தொடர்ந்து வசூலித்து வருகின்றன. இதுகுறித்து பல முறை ஆர்டிஓ பல முறை எச்சரித்தும் பலன் இல்லை. எனவே கேஸ் ஏஜன்சி நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டு கொண்டுள்ளார்.
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

வியாழன், 29 டிசம்பர், 2011

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச் சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம் சார்பில் பந்தலூர் மருத்துவமனை வளாகத்தில் 25 வது நுகர்வோர் தினத்தை முன்னிட்டு சிறப்பு ஒரு நாள் நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கு நடத்தப்பட்டத

விஜய சிங்கம் வரவேற்றார்  
கூடலூர் நுகர்வோர் மைய தலைவர் சிவசுப்பிரமணியம் முன்னிலை வகித்தார்
cchep cc pro...1.JPG 

நிகழ்ச்சிக்கு கூடலூர் வட்ட வழங்கல் அலுவலர் இன்னாசிமுத்து தலைமை தாங்கி பேசும்போது நுகர்வோர் சட்டம் இயற்றப்பட்ட 1986 முதல்  இன்று வரை  25 -- ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது ஆனால் மக்களிடம் விழிப்புணர்வு குறைவாக உள்ளது அரசு பல நடவடிக்கைகள் மேற்கொண்டும் மக்களிடம் அரவமின்மையல் விழிப்புணர்வு மிக குறைவாக உள்ளது 
மக்கள் தேவை இல்லாத பொருட்களுக்கு ஆசை படுவதை விட தேவைகளை மட்டும் வங்கி பயன் படுத்துவதால் அதிக செலவினங்கள் தவிர்க்கப்படும். போலி விளம்பரங்கள் மற்றும் இலவசங்களுக்கு அடிமை ஆகாமல் விழிப்போடு இருக்க வேண்டும்.  தற்போது கலவி நிறுவனகள் மற்றம் பல சேவை நிறுவனகள் அரசு அங்கிகாரம் அரசு சான்றிதழ் என கூறி விளம்பர படுத்துகின்றன இவற்றின் உண்மை தன்மை அறிந்து பயன் படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.



cchep cc pro...3.JPG

 
சிறப்பு திட்ட தனி வட்டாட்சியர் தரமான தங்கம் மற்றும் ஹால் மார்க் முத்திரைகள் 916  22 கரட்  தரங்கள் குறித்தும் தங்கம் வாங்கும் போது கவனிக்க வேண்டியன் குறித்தும் விளக்கமளித்தார்.
 
பந்தலூர் அரசு மேல்நிலை உதவி பள்ளி தலைமை ஆசிரியர் தண்டபாணி  நுகர்வோர் கடமைகள் ரசிதுகள் ஆவணங்கள் ஆகியன  குறித்து விளக்கமளித்தார் 
 
பொன்னானி பழங்குடியினர் பள்ளி தலைமை ஆசிரியர் சமுத்திர பாண்டியன் சுற்றுச்சுழல் பாதுகாப்பு அதன் அவசியங்கள் மற்றும் ஓசோன் படலங்கள் பாதிப்பு மக்களின் எதிர்கால பதிப்புகள் குறித்து விளக்கமளித்தார் .
 
சேரன்ஸ் அறக்கட்டளை இயக்குனர் தங்கராஜ் பட்டு துணிகள் மற்றும் துணிகள் வாங்கும்போது கணிக்க வேண்டியன குறித்து விளக்கமளித்தார் .
 தொடர்ந்து ஓய்வு தலைமையாசிரியர் பெள்ளு, பிரைட் பியுச்சர் அகாடமி முதல்வர்    தனராஜ், மகளிர் குழு ஒருங்கிணைப்பாளர் பாக்கியவதி ஆகியோர் நுகர்வோர் விழிப்புணர்வு குறித்து விளக்கமளித்தனர் 
 
 
நிகழ்ச்சியில் ஆசிரியர் பயிற்சி நிலைய மாணவர்கள்  தையல் நிலையம் மாணவர்கள் மகளிர் குழுவினர் உட்பட 100 க்கும் மேற்ப்பட்டோர் பங்கேற்றனர்
கணேசன் நன்றி கூறினார்.
 
S.Sivasubramaniam
President CCHEP
Center for Consumer Human resources & Environment protection
Citizen Center


Pandalur Pandalur (Po & Tk)
The Nilgiris 643 233
Tamilnadu
email. cchep.siva@gmail.com
cell:94898 60250  9488 520 800
www.cchepeye.blogspot.com
www.fedcons.blogspot.com
www.consumernlg.blogspot.com




வியாழன், 24 நவம்பர், 2011



ஒவ்வொரு நாட்டுக்கும் விதவிதமாக நுகர்வோர் பாதுகாப்புச் சட்டமிருந்தாலும் அடிப்படையில் ஐ.நா. அடிப்படை உரிமைகளைக்கொண்டு மேலும் பல சட்ட விதிகளை புகுத்தி நுகர்வோர் நலனையே மையமிட்டுள்ளது.
இங்கு நுகர்வோர் என்கிற சொல்லாடல் ஒரு பொருளை வாங்குபவர் என்று பொருள் கொள்வதல்ல வணிகரீதியல்லாமல் வாங்குபவரைத் தான் குறிக்கிறது. அப்படி வணிகரீதியல்லாமல் தனிநபர் வாங்கும் அல்லது பயன்படுத்தும் பொருட்கள் மீதான குறைகளை எப்படி எதிர்கொள்வது? சாதாரண மளிகை சாமானிலிருந்து மொபைல் வரை ஏமாற்றப்படுகிறார்கள் இந்த வரிசையில் பலர் ஏமாற்றப்பட்டதையே அறியாமலும் உள்ளனர். கவர்ச்சி விளம்பரங்களாலும், இலவச பொருட்களாலும், போலி பரிந்துரைகளாலும் பரிதாபமாக பாதிக்கப்படுவது நாமே.
• முதலில் விழிப்புணர்வை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும் நாம் வாங்கும் பொருளுக்கும் நமது பணத்திற்கும் ஒரு புரிதல் வேண்டும்
• முடிந்த வரை ஊடகங்கள் மக்களுக்கு இத்தகையச் செய்திகளை வெளிக்கொணர வேண்டும்.
• வர்த்தக நிறுவனங்கள் தாங்களாக முன்வந்து தங்கள் நுகர்வோரிடம் வெளிப்படையாக நடக்க வேண்டும், போதிய நம்பத்தன்மையை ஏற்படுத்தவேண்டும்
• மக்களும் தங்களால் முடிந்த அளவு செய்திகளையும் சட்ட வழிமுறைகளையும் அறியவும் வேண்டும் பகிரவும் வேண்டும்.
• நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகளைப் பற்றியான கேள்வி ஞானம் கட்டாயம் பெற்றிருக்கவேண்டும். இந்த தொடர்புகள் இல்லாத மக்கள் தான் அதிகமான பாதிப்புக்குள்ளாகிறார்கள்.
.
பலம் வாய்ந்த நிறுவனங்களை எதிர்த்து தனிமனிதன் செய்யும் புகாரைவிட(அதிகம் செய்யவதில்லை) ஊர்கூடிச்செய்தால் நிச்சயம் பலன் கிட்டும். அப்போது யார்யார் பாதிக்கப்பட்டுள்ளார்கள், எங்கே இந்த தகவலைப் பெறமுடியும்? இணையசுழல் அதற்கு பல வசதிகளைச் செய்துள்ளது ஆனால் பயன்படுத்துபவர்கள்தான் குறைவு. பல இணையக்குழுக்கள் உள்ளன
இவற்றை நாம் பயன்படுத்தும் முறை எப்படிஎன்றால், நாம் புகார்களை அளிப்பதைவிட மற்றவர்களின் புகாரைக் கொண்டே நல்ல பொருட்களை அடையாளம் கண்டுகொள்ளலாம். இருந்தால் நாமும் புகார் அளிக்கலாம்
http://www.complaintsboard.com/




http://www.complaints.com/




http://www.registercomplaints.com/
இந்திய அமைப்புகள்
http://www.indiaconsumerforum.org/


http://www.consumercomplaints.in/

 


http://consumer.org.in/




http://www.bis.org.in/cad/complain.htm

சில சமயங்களில் கைமேல் பலனாக புகாரளிக்கப்பட்ட நிறுவனமே நமக்கு உதவமுன்வரும்
சரி புகார் அளிக்கும் முன் நாம் முதலில் அடிப்படை தகவல்களை எப்படி பெறுவது? சட்டம் என்ன சொல்லுகிறது? போன்றவைதான் மிகமுக்கியமாகத் தேவை (இந்திய சட்டம்)
http://india.gov.in/sectors/consumer_affairs/consumer_protection.php


http://www.consumer.tn.gov.in/
நேரடி புகாரும் அளிக்கலாம்.
http://fcamin.nic.in/
பிரத்தேக விழிப்புணர்வு அமைப்புகள்
http://www.ccccore.co.in/




http://www.consumergrievance.com/
எந்த ஒரு புகார் அளிக்கும் முன் நாம் அந்தப் பொருளை முறைப்படி வாங்கிக்கொண்டோமா என சிந்தித்துச் செய்வது உத்தமம்.
ஆங்காங்கே சில அமைப்புகள் நுகர்வோர் நலனைப் பற்றி பேசினாலும் இணையத்தில் எனக்கு தெரிந்த வரை
தமிழில் நுகர்வோர் பற்றிய இணையதளங்கள்
 
http://cchepeye.blogspot.com
 
 
http://www.consumererode.org/

 


http://nukarvor-nalan.blogspot.com/




http://lawforus.blogspot.com/


http://www.makkal-sattam.org/
மேலும் அதிகமாக உருவாக வேண்டும், அந்த துறைசார்ந்தவர்கள் இணைய விழிப்புணர்வை கொண்டுவரலாம்.



கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

வியாழன், 21 ஜூலை, 2011

நீர் தண்ணீராக இருந்தால் மட்டும் போதாது, நன்னீராகவும் இருக்க வேண்டும்

நீரின்றி அமையாது இவ்வுலகம் என்று கூறியது நாம் மதிக்க மறந்துவிட்ட மாபெரும் உண்மையை உணர்த்தவேயாகும். நீர் தண்ணீராக இருந்தால் மட்டும் போதாது, நன்னீராகவும் இருக்க வேண்டும்.இப்பூவுலகின் பரப்பிலே படிந்துள்ள தண்ணீரின் மொத்த அளவில் 97.51 சதவிகிதம் கடல் நீராகும். மீதமுள்ள 3 சதவிகித நல்ல நீரில், 97 சதவிகிதம் வடதுருவம், தென் துருவப் பனிப்பாறைகளாகவும், 2 சதவிகிதம் நிலத்தடி நீராகவும் உள்ளது. மீதமுள்ள 1 சதவிகிதம் மட்டுமே குளம், குட்டைகள், ஏரிகள், ஆறுகள், அணைகள் அனைத்திலும் நிரம்பியுள்ள நீராகும். வருண பகவானின் கருணையால், பொய்க்காமல் பெய்தால்தான் இக்குறைந்த அளவு நீரும் முழுமையாகக் கிடைக்கும்.உலகம் வெப்பமாவதன் வெளிப்பாடாக, காலம் மற்றும் அளவு மாறிவரும் பருவமழையின் வருங்காலத் தாக்கங்களும், நீரின் கொள்ளளவைக் குறைக்க வாய்ப்புள்ளது. இந்த 1 சதவிகித தண்ணீரில், 52 சதவிகிதம் ஏரிகள் மற்றும் அணைகளிலும், 38 சதவிகிதம் மண்ணிலேயும், 8 சதவிகிதம் காற்றிலும் ஈரப்பதமாக உள்ளன. 1 சதவிகிதம் ஆறுகளிலும், 1 சதவிகிதம் உயிர்களின் உடலிலும் உள்ளன.எனவேதான், தண்ணீர் திரவத் தங்கம் என்று வர்ணிக்கப்படுகிறது. பெருகிவரும் மக்கள்தொகையும், அதிவேக நாகரிக வளர்ச்சியும், காசுநோயும் அன்றாட வாழ்வுக்கு அடிப்படை ஆதாரமாக உள்ள தண்ணீரை வேகமாக மாசுபடுத்தி வருகிறது. இது நாம் கண்கூடாகக் காணும் உண்மை.இதன் விளைவு, ஐக்கிய நாடுகள் சபையின் "மக்களுக்குத் தண்ணீர், வாழ்வுக்குத் தண்ணீர்' என்ற உலக நீர் மேலாண்மை பற்றிய ஆய்வறிக்கையில் மிக மோசமான, அசுத்த நீர் அதிகம் கொண்ட ஒரு சில நாடுகளில் இந்தியா உள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.உலகத்தில் மற்றைய நாடுகளை ஒப்பிடுகையில், ஆசியாவில் உள்ள நதிகள் மிக அசுத்தமானதாகவும், நீரில் மூன்று மடங்கு அதிக அளவில் மனித மலத்தில் உள்ள பாக்டீரியா கலந்துள்ளது என்பதும், இருபது மடங்கு அதிக அளவு ஈயம் கரைந்துள்ளது என்ற விவரங்களும் பட்டியலிடப்பட்டுள்ளது.இருபதாம் நூற்றாண்டில், உலகில் மக்கள்தொகை மூன்று மடங்காக அதிகரிக்கும்போது, நீரின் பயன்பாடு ஆறு மடங்காக அதிகரித்துள்ளது.இந்த நூற்றாண்டின் சரி பகுதி கால அளவில், 60 நாடுகளில் உள்ள 700 கோடி மக்கள் நீர் பற்றாக்குறையால் பாதிக்கப்படலாமென்ற கணிப்பும் அந்த அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.எனவே, ஒவ்வொரு சொட்டு நீரையும், ஒவ்வொரு பருக்கு மண்ணையும், ஒவ்வொரு சூரியக் கதிரையும் ஒன்றிணைத்துச் சீரிய முறையில் செம்மையாகப் பயன்படுத்தினால்தான், நமது நாட்டின் வருங்காலச் சந்ததிகளுக்கு நலமான, வளமான, மகிழ்வான வாழ்வுக்கு அடித்தளம் அமைக்கும் அந்தப் புனிதச் செயலை நிகழ்த்த இயலும்.மனித வாழ்வுக்கு இன்றியமையாத குடிநீர், தமிழகத்தில் எந்த அளவு பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது என்பதைக் கீழ்க்கண்ட விவரங்கள் வெளிக்கொணர்கின்றன.தமிழ்நாட்டில் 2010-ம் ஆண்டில், அரசு நீர் பரிசோதனை ஆய்வாளர்களால், எவ்வளவு சதவிகிதம் குடிநீர், குடிக்கவே லாயக்கற்றது என்று கண்டுபிடிக்கப்பட்ட விவரங்கள் பின்வருமாறு: மனித மலத்தில் உள்ள எஸ்கர்கியா கோலை என்ற பாக்டீரியா, அவற்றுடன் வயிற்றுப்போக்கு மற்றும் காலரா போன்ற நோய்களை உண்டாக்கும் ஜியார்டியா, அமீபா போன்ற கிருமிகளும் கலந்துள்ள உண்மைகளும் தெரிய வருகிறது.குடிநீராக, நகர்ப்புறங்களில் விநியோகிக்கப்படும் தண்ணீரில் மாநகராட்சிகளில் 6 சதவிகிதம், அரசு நிறுவனங்களில் 17 சதவிகிதம், நகராட்சிகளில் 26 சதவிகிதம், நகரப் பஞ்சாயத்துகளில் 31 சதவிகிதம், அரசு மருத்துவமனைகளில் 48 சதவிகிதம், ரயில் நிலையங்களில் 66 சதவிகிதம் குடிக்கவே லாயக்கற்றது - மோசம் என்ற முத்திரையைப் பெற்றுள்ளது வருந்த வேண்டிய விவரங்களாகும்.கிராமப்புறங்களில் விநியோகிக்கப்படும் குடிநீரிலும், 63.79 சதவிகிதம், குடிக்க லாயக்கற்றது என்ற வேதனையை, பரிசோதனைப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.நகரங்களைவிட கிராமப் பகுதிகளில், நீரின் மாசு அதிகமாக உள்ளதையும், நகரப் பகுதிகளில், மாநகராட்சிகளில் குறைவாகவும், பிறகு படிப்படியாக நகராட்சிகள், கிராமப் பஞ்சாயத்துகள் மற்றும் மக்கள் கூடும் பொதுஇடங்களான அரசு மருத்துவமனைகள், ரயில் நிலையங்களில் அதிகரித்து வருவதையும், அதன் காரணங்களையும் கவனமாகப் பரிசீலித்து, அக்குறையைக் குறைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.2009-ம் ஆண்டு மேற்கொண்ட குடிநீர் ஆய்விலும், இதேபோன்ற குறைகள், கிட்டத்தட்ட இதே விகிதாசாரத்தில் உள்ளதையும், ஆய்வுப் புள்ளிவிவரங்கள் தெளிவாகத் தெரிவிக்கின்றன.இதுபோன்ற மாசுபட்ட குடிநீரைக் குடிப்பதால் எவ்வகையில் மக்களின் உடல்நலம் பாதித்திருக்கும் என்ற உண்மையைத் தெரிந்துகொள்ளும் உந்துதலில், மாவட்ட வாரியாக, ஆண்டு முழுவதும், தண்ணீர் மூலம் பரவும் நோய்களான வாந்தி பேதி, வயிற்றுப் போக்கு, காலரா போன்ற நோய்களால் தாக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை, சுகாதார மையங்கள், மருத்துவமனைகளின் பதிவுகளின் மூலம் கண்டறியப்பட்டது. மாவட்ட வாரியான நோய்ப் பட்டியலில் அதிகமாக 2006 முதல் 2009 வரையான நான்கு ஆண்டுகளில், கடலூரில் 8,000 பேரும், மதுரையில் 7,153 பேரும், திருவள்ளூரில் 6,126 பேரும் நீரில் பரவும் நோயால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையை நாடியது தெரிய வந்துள்ளது.தமிழ்நாட்டின் 32 மாவட்டங்களிலும் சேர்த்து நான்கு ஆண்டின் சராசரியாக 62,886 நபர்கள் இவ்வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாதங்களில், மே, ஜூன், ஜூலையில்தான் மிக அதிகமான நோய்த்தாக்கமாக, சராசரி மாதம் 5,000 என்பதும், 2009-ம் ஆண்டு மிக அதிகமாக 88,746 நபர்கள் பாதிப்புக்குள்ளானதும் தெரிகிறது.கோடைக்காலத்தில் நீர் அளவு வெகுவாகக் குறைவதால், கிருமிகளின் தாக்கம் அதிகரிப்பதைக் கட்டுப்படுத்த, அந்த மாதங்களில் சிறப்புத் தணிக்கைகளும், நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்.குடிநீரில், சாக்கடை நீர் கலப்பதைச் சுலபமான முறையில் கண்டறிய முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். சாக்கடைகள், வீதிகளின் அகல விளிம்புகளில் நீளவாக்கில் அமைந்துள்ளன. வீட்டுக்கு விநியோகிக்கும் குடிநீர்க் குழாய்களோ, சாக்கடையைத் தாண்டி, எதிர்ப்புறத்தில் உள்ளே செல்கின்றன.இந்தச் சந்திப்புகளில், குழாய்களில் விரிசல், கசிவு காரணமாக சாக்கடை நீர் கலக்க வாய்ப்புள்ளது. குடிநீரும், வடிகாலும் ஒன்றாகிவிடும். இதைக் கண்டறிய, ஒவ்வொரு வீட்டிலும் உள்ள குடிநீர்க் குழாய்களில் நீரைக் கீழ்க்கண்டவாறு சோதிக்கலாம்.ஹைட்ரஜன் சல்பைடு மற்றும் நுண்ணுயிர் வளர்ச்சி ஊக்க திரவத்தில் உறிஞ்சு காகிதத்தை நனைத்து, உலர்த்தி, சுருட்டி, சிறிய 80 மில்லி மீட்டர் அளவேயுள்ள கண்ணாடிக் குப்பியில் அடைத்து, அதில் வீட்டில் உள்ள குடிநீர்க் குழாய்களிலிருந்து சேகரிக்கப்படும் நீரை ஊற்றி மூடி வைத்தால், 24 மணி நேரத்தில், கிருமிகள் உள்ள தண்ணீர் கரும் சிவப்பு நிறமாக மாறும்.மலத்தில் மட்டுமேயுள்ள எஸ்கர்கியா கோலை என்ற நோய் உண்டாக்கும் பாக்டீரியா உள்ளதை இது உறுதிசெய்யும். அந்தக் கிருமி நீரில் கலக்காவிட்டால், நிற மாறுதல் இருக்காது.இதனால் அவ்வாறு நிறம் மாறும் தண்ணீருடைய வீடுகளுக்கு நீர் விநியோகிக்கும் குழாய்களையும், சாக்கடைக் குழாய்களையும் மண்ணைத் தோண்டி பழுதுபார்க்க ஏதுவாகும். வீதியில் உள்ள அனைத்து வீடுளிலும் தண்ணீர் நிறம் மாறினால், வீதிகளுக்கு வழங்கும் முக்கிய குழாய் சந்திப்புகளைச் சரிபார்க்க வேண்டும்.ஹைட்ரஜன் சல்பைடு மூலம் பாக்டீரியா கண்டறியும் இந்த மிகமுக்கிய சோதனைக்கு ஆகும் செலவு ரூ.2 அல்லது 3 மட்டுமே என்பது மகிழ்வான செய்தி. மிக எளிதில் செய்யவல்ல இந்தத் திட்டத்தைச் சுலபமாகக் குறைந்த செலவில், மக்களது ஆதரவுடன் விரைவில் செயல்படுத்தினால், வரும் ஆண்டுகளில் நோய்களை வெகுவாகக் குறைக்கலாம்.குடிநீர்த் தேவை அன்றாடம் அதிகரித்து வருவதால், விலை நீராக அவை மாற்றப்பட்டு, இல்லாதவர்களுக்கு இல்லாததாக மறுக்கப்படுகிறது.உலகத்தில், எட்டு நபர்களில் ஒருவருக்கு தூய குடிநீர் கிடைப்பதில்லை. குடிநீரைச் சுத்தப்படுத்தி, கிருமிகளைக் களைய, இப்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் குளோரின் முறையுடன் யு.வி. (அல்ட்ரா வயலெட்) கதிர்களைப் பயன்படுத்தி, மிகச் சிறப்பாகக் குடிநீர்க் கிருமிகளை முற்றிலுமாகக் கட்டுப்படுத்தலாம். அல்ட்ரா வயலெட் கதிர்கள் கிருமிகளின் செல்களுக்குள் ஊடுருவிச் சென்று, டி.என்.ஏ., ஆர்.என்.ஏ. போன்ற மரபுக் காரணிகளைச் சிதைத்து, செயலிழக்கவைக்க வல்லவை. எனவே, இது குளோரினால் அழிக்க முடியாத கிருமிகளையும் சிதைத்துவிடும்.தொழில்நுட்ப வளர்ச்சியின் விளைவாக, வளரும் நாடுகளில் செலவு குறைவாகவும், எளிமையாகக் கையாளும் வகையிலும், எல்லோராலும் ஏற்கத்தக்க வகையிலும் உள்ள, சூரிய சக்தியால் இயங்கி, நாள் ஒன்றுக்கு 4,000 லிட்டர் தண்ணீரை அல்ட்ரா வயலெட் கதிர் மூலம் நன்நீராக்கும் புதிய கருவிகள் தென்னாப்பிரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இவைகளை பள்ளிகள், மருத்துவமனைகள் கட்டடங்களின் மேல் பொருத்திக் குறைந்த செலவில் இயக்கலாம்.அதுபோன்றே, "லைப் ஸ்டிரா' என்ற ஓர் அடி நீளமும். ஊதுகுழாய் பருமனுமே உள்ள கிருமி வடிகட்டி ஒன்று குறைந்த விலையில் (6 டாலர்) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் உறிஞ்சி நீர் குடித்தால், அசுத்த நீரில் உள்ள கிருமிகளை 99.9 சதவிகிதம் நீக்கும்.இரண்டு ஆண்டுகளுக்குத் தொடர்ந்து பயன்படுத்தவல்ல இக்கருவி, பள்ளிக் குழந்தைகளின் பயன்பாட்டுக்கு, வளரும் நாடுகளில் இப்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.தண்ணீரை நன்னீராக்கிக் கண்ணீரைத் துடைத்திடும் கருணைச் செயலை விரைவில் நிறைவேற்றத் தமிழக அரசு முனைந்திருப்பது ஒரு திருப்புமுனையாகத் திகழ்ந்து, நலமும், வளமும், மகிழ்வும் தமிழக இல்லங்களில் பரிமளிக்கச் செய்ய வல்ல நல்ல நிகழ்வாகட்டும்! 

அன்புடன் 
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் 
பாதுகாப்பு மையம் மக்கள் மையம்
பந்தலூர்