ஒவ்வொரு நாட்டுக்கும்
விதவிதமாக நுகர்வோர் பாதுகாப்புச் சட்டமிருந்தாலும் அடிப்படையில் ஐ.நா.
அடிப்படை உரிமைகளைக்கொண்டு மேலும் பல சட்ட விதிகளை புகுத்தி நுகர்வோர்
நலனையே மையமிட்டுள்ளது.
இங்கு நுகர்வோர் என்கிற சொல்லாடல் ஒரு
பொருளை வாங்குபவர் என்று பொருள் கொள்வதல்ல வணிகரீதியல்லாமல் வாங்குபவரைத்
தான் குறிக்கிறது. அப்படி வணிகரீதியல்லாமல் தனிநபர் வாங்கும் அல்லது
பயன்படுத்தும் பொருட்கள் மீதான குறைகளை எப்படி எதிர்கொள்வது? சாதாரண மளிகை
சாமானிலிருந்து மொபைல் வரை ஏமாற்றப்படுகிறார்கள் இந்த வரிசையில் பலர்
ஏமாற்றப்பட்டதையே அறியாமலும் உள்ளனர். கவர்ச்சி விளம்பரங்களாலும், இலவச
பொருட்களாலும், போலி பரிந்துரைகளாலும் பரிதாபமாக பாதிக்கப்படுவது நாமே.
• முதலில் விழிப்புணர்வை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும் நாம் வாங்கும் பொருளுக்கும் நமது பணத்திற்கும் ஒரு புரிதல் வேண்டும்• முடிந்த வரை ஊடகங்கள் மக்களுக்கு இத்தகையச் செய்திகளை வெளிக்கொணர வேண்டும்.
• வர்த்தக நிறுவனங்கள் தாங்களாக முன்வந்து தங்கள் நுகர்வோரிடம் வெளிப்படையாக நடக்க வேண்டும், போதிய நம்பத்தன்மையை ஏற்படுத்தவேண்டும்
• மக்களும் தங்களால் முடிந்த அளவு செய்திகளையும் சட்ட வழிமுறைகளையும் அறியவும் வேண்டும் பகிரவும் வேண்டும்.
• நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகளைப் பற்றியான கேள்வி ஞானம் கட்டாயம் பெற்றிருக்கவேண்டும். இந்த தொடர்புகள் இல்லாத மக்கள் தான் அதிகமான பாதிப்புக்குள்ளாகிறார்கள்.
.
பலம் வாய்ந்த நிறுவனங்களை எதிர்த்து தனிமனிதன் செய்யும் புகாரைவிட(அதிகம் செய்யவதில்லை) ஊர்கூடிச்செய்தால் நிச்சயம் பலன் கிட்டும். அப்போது யார்யார் பாதிக்கப்பட்டுள்ளார்கள், எங்கே இந்த தகவலைப் பெறமுடியும்? இணையசுழல் அதற்கு பல வசதிகளைச் செய்துள்ளது ஆனால் பயன்படுத்துபவர்கள்தான் குறைவு. பல இணையக்குழுக்கள் உள்ளன
இவற்றை நாம் பயன்படுத்தும் முறை எப்படிஎன்றால், நாம் புகார்களை அளிப்பதைவிட மற்றவர்களின் புகாரைக் கொண்டே நல்ல பொருட்களை அடையாளம் கண்டுகொள்ளலாம். இருந்தால் நாமும் புகார் அளிக்கலாம்
http://www.complaintsboard.com/
http://www.complaints.com/
http://www.registercomplaints.com/
இந்திய அமைப்புகள்
http://www.indiaconsumerforum.org/
http://www.consumercomplaints.in/
http://consumer.org.in/
http://www.bis.org.in/cad/complain.htm
சில சமயங்களில் கைமேல் பலனாக புகாரளிக்கப்பட்ட நிறுவனமே நமக்கு உதவமுன்வரும்
சரி புகார் அளிக்கும் முன் நாம் முதலில் அடிப்படை தகவல்களை எப்படி பெறுவது? சட்டம் என்ன சொல்லுகிறது? போன்றவைதான் மிகமுக்கியமாகத் தேவை (இந்திய சட்டம்)
http://india.gov.in/sectors/consumer_affairs/consumer_protection.php
http://www.consumer.tn.gov.in/
நேரடி புகாரும் அளிக்கலாம்.
http://fcamin.nic.in/
பிரத்தேக விழிப்புணர்வு அமைப்புகள்
http://www.ccccore.co.in/
http://www.consumergrievance.com/
எந்த ஒரு புகார் அளிக்கும் முன் நாம் அந்தப் பொருளை முறைப்படி வாங்கிக்கொண்டோமா என சிந்தித்துச் செய்வது உத்தமம்.
ஆங்காங்கே சில அமைப்புகள் நுகர்வோர் நலனைப் பற்றி பேசினாலும் இணையத்தில் எனக்கு தெரிந்த வரை
தமிழில் நுகர்வோர் பற்றிய இணையதளங்கள்
http://cchepeye.blogspot.com
http://nukarvor-nalan.blogspot.com/
http://lawforus.blogspot.com/
http://www.makkal-sattam.org/
மேலும் அதிகமாக உருவாக வேண்டும், அந்த துறைசார்ந்தவர்கள் இணைய விழிப்புணர்வை கொண்டுவரலாம்.
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக