ஊட்டி : நீலகிரி மாவட்ட நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு, கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் ஆகியவை சார்பில் நடத்தப்படும் கட்டுரை, கவிதை போட்டிகளில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்ரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கை:
இந்தியாவில் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்டு 25ம் ஆண்டை(1986-2011) எட்டிய நிலையில் மக்கள் மத்தியில் நுகர்வோர் விழிப்புணர்வு குறைவாகவே உள்ளது. இதனை அதிகப்படுத்தும் நோக்கில் மாவட்ட அளவிலான கவிதை-கட்டுரை போட்டிகள் நடத்தப்படவுள்ளது.
நீலகிரி மாவட்ட நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு, கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் ஆகியவை சார்பில் நடத்தப்படும் இப்போட்டிகளில் பல தரப்பினரும் பங்கேற்கலாம்.
கவிதையின் தலைப்பு "கலப்படம் செய்யும் கல் நெஞ்சங்கள்', "மயக்கும் மாயங்கள்' ஆகும்.
கவிதைகளை எழுதியோ, கம்ப்யூட்டர் பிரதிகள் மூலமாகவோ அனுப்பி வைக்க வேண்டும்.
ஏற்கனவே பிரசுரிக்க பட்டவையாக இருக்க கூடாது.
சிறந்த கவிதைகளுக்கு பரிசுகள் வரும் டிசம்பர் தேசிய நுகர்வோர் தின விழாவில் வழங்கப்படும்.
கவிதைகளை வரும் 25ம் தேதிக்குள்
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், பந்தலூர்',
"நீலகிரி மாவட்ட நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு, வசம்பள்ளம், குன்னூர்',
"ஊட்டி நகர மக்கள் விழிப்புணர்வு சங்கம், டவுன்பஸ் ஸ்டாண்ட், ஊட்டி',
"கோத்தகிரி நுகர்வோர் பாதுகாப்பு சங்கம், புதுமார்க்கெட் ரோடு, கோத்தகிரி'
என்ற முகவரிகளுக்கு அனுப்பலாம்.
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக