பந்தலூர்: கூடலூர்
நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய தலைவர் சிவ சுப்பிரமணியம்,
கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: மலை மாவட்டம்
என்பதால் எரி பொருள் அதிகளவில் தேவைப்படுகிறது. அரசு மண்ணெண்ணெய் மற்றும்
எரிவாயு வினியோகத்தில் அதிக அக்கறை காட்டுகிறது. இவற்றில் நடைபெறும்
முறைகேடுகள் அதிகளவு நுகர்வோரை பாதிக்கிறது. ரேஷன் கார்டு தாரர்களுக்கு
மண்ணெண்ணெய் வழங்குவதில் ஓதுக்கீடு குறைவு என கூறி குறைந்த அளவே
மண்ணெண்ணெய் வினியோகம் செய்யப்படுகிறது. கேஸ் சிலிண்டர்கள் உரிய காலத்தில்
கிடைக்காமல் நுகர்வோர் அவதியுற்று வருகின்றனர். லாரி ஸ்டிரைக் காரணமாக
கேஸ் சிலிண்டர் சப்ளையை தாமதப்படுத்துகின்றனர். உண்மையான பயனாளிகள்
சிலிண்டர் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். கேஸ் மூலம் இயக்கப்படும் ஆட்டோ,
கார் போன்றவற்றுக்கு கள்ள சந்தையில் விற்பனை செய்வது மட்டும் தங்கு
தடையின்றி நடைபெற்று வருகிறது. தனியாருக்கு அதிக விலைக்கு கேஸ்
சிலிண்டர்கள் விற்பனை செய்யப்படுகிறது. இதனை தடுக்க உரிய நடவடிக்கை
எடுக்க வேண்டும். கேஸ் சிலிண்டர்களை முறையாக வினியோகிக்க வேண்டும். அதுபோல்
கேஸ் சிலிண்டருக்கு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக தொகை
வசூலிக்கப்படுகிறது. கேஸ் சிலிண்டர் வினியோகிக்க அரசால் ரூ.26 வினியோக
கட்டணமாக வழங்கப்படுகிறது. 5 கி.மீ தூரம் வரை போக்குவரத்து கட்டணம்
வசூலிக்க கூடாது என்று அறிவுறுத்தி உள்ளது. 5 கி.மீ மேல் 15 கி,மீ வரை
மாவட்ட வருவாய் அலுவலர் மூலம் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை போக்குவரத்து
கட்டணமாக வசூலிக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் சில கேஸ் ஏஜன்சிகள் அதிக
கட்டணத்தை தொடர்ந்து வசூலித்து வருகின்றன. இதுகுறித்து பல முறை ஆர்டிஓ பல
முறை எச்சரித்தும் பலன் இல்லை. எனவே கேஸ் ஏஜன்சி நிறுவனங்கள் மீது உரிய
நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டு கொண்டுள்ளார்.
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்
மக்கள் மையம்
குன்னூரில் இருந்து, கோவை உட்பட சமவெளிப் பிரதேசங்களுக்கு, மாட்டு கொழுப்பு கொண்டு செல்வது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது; நெய் போன்ற உணவுப் பொருட்களில் கலப்படம் செய்ய பயன்படுத்துவது தெரியவந்ததால், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் டி.டி.கே., சாலையில், குன்னூர் நகராட்சிக்கு சொந்தமாக, ஆடு, மாடு வதை செய்யும் இடம் உள்ளது. வதை செய்யப்பட்ட பின், ஆடு, மாடுகளின் கொழுப்புகளை தனியாக எடுத்து, சட்டத்துக்கு விரோதமாக விற்கப்படுவதாக, குன்னூர் நகராட்சிக்கு தகவல் கிடைத்தது. நகராட்சி தலைவர் கோபால கிருஷ்ணன் ஒப்புதலின் பேரில், சுகாதார ஆய்வாளர் மால்முருகன் மற்றும் சுகாதார ஊழியர்கள் நேற்று முன்தினம் இரவு, அதிரடி ஆய்வு நடத்தினர். அப்துல் ஹமீது என்பவரின் கடையில் சோதனை செய்தபோது, காய்ச்சப்பட்ட கொழுப்பு 20 கிலோ வீதம், 29 டின்களில் அடைத்து வைத்திருப்பதும், உலர்ந்த கொழுப்பு 4 மூட்டைகளில் 15 கிலோ இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இவற்றை பறிமுதல் செய்த சுகாதாரத்துறை அதிகாரிகள், குன்னூர் போலீசில் அப்துல் ஹமீது மீது புகார் கொடுத்தனர். விசாரணையில், கொழுப்புகள், கோவை உட்பட சமவெளிப் பகுதிகளுக்கு அனுப்பப்படுவதும், அங்கு தயாரிக்கப்படும் நெய்யில் கலப்படம் செய்யப்படுவதும் தெரியவந்தது. சுகாதார ஆய்வாளர் மால்முருகன் கூறுகையில், ""இறைச்சிக்காக கொண்டு வரப்படும் மாடுகளின் கொழுப்பை தனியாக காய்ச்சி எடுத்து, நெய் போன்ற பொருட்களுக்கு கலப்படம் செய்வதற்கு அனுப்பி வைப்பது, உணவு கலப்பட தடுப்பு சட்டத்தின் படி குற்றமாகும். இது போன்ற குற்றத்தில் ஈடுபடுபவர்கள் மீது காவல்துறையில் புகார் கொடுக்கப்பட்டு, அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்படும்,'' என்றார். நெய் போன்ற பொருட்களில் கொழுப்புகளை பயன்படுத்துவது, உடல் ரீதியாக பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்துவதுடன், சில சமயங்களில் உயிரிழப்புகள் கூட ஏற்பட வாய்ப்புள்ளதாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். பொதுவாக, கோவில்களில் அதிகளவில் நெய் பயன்படுத்தி வரும் நிலையில், பக்தர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள், இது தொடர்பாக நேரடியாக முழு ஆய்வு நடத்தி விசாரணை நடத்தினால், உணவுப் பொருட்களில் கலப்படம் செய்வது கண்டுபிடிக்கப்பட்டு தடுக்க முடியும்.
thanks to dinamalar nilgiris
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்
ஊட்டி : நீலகிரி மாவட்ட நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு, கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் ஆகியவை சார்பில் நடத்தப்படும் கட்டுரை, கவிதை போட்டிகளில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்ரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கை:
இந்தியாவில் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்டு 25ம் ஆண்டை(1986-2011) எட்டிய நிலையில் மக்கள் மத்தியில் நுகர்வோர் விழிப்புணர்வு குறைவாகவே உள்ளது. இதனை அதிகப்படுத்தும் நோக்கில் மாவட்ட அளவிலான கவிதை-கட்டுரை போட்டிகள் நடத்தப்படவுள்ளது.
நீலகிரி மாவட்ட நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு, கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் ஆகியவை சார்பில் நடத்தப்படும் இப்போட்டிகளில் பல தரப்பினரும் பங்கேற்கலாம்.
கவிதையின் தலைப்பு "கலப்படம் செய்யும் கல் நெஞ்சங்கள்', "மயக்கும் மாயங்கள்' ஆகும்.
கவிதைகளை எழுதியோ, கம்ப்யூட்டர் பிரதிகள் மூலமாகவோ அனுப்பி வைக்க வேண்டும்.
ஏற்கனவே பிரசுரிக்க பட்டவையாக இருக்க கூடாது.
சிறந்த கவிதைகளுக்கு பரிசுகள் வரும் டிசம்பர் தேசிய நுகர்வோர் தின விழாவில் வழங்கப்படும்.
கவிதைகளை வரும் 25ம் தேதிக்குள்
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், பந்தலூர்',
"நீலகிரி மாவட்ட நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு, வசம்பள்ளம், குன்னூர்',
"ஊட்டி நகர மக்கள் விழிப்புணர்வு சங்கம், டவுன்பஸ் ஸ்டாண்ட், ஊட்டி',
"கோத்தகிரி நுகர்வோர் பாதுகாப்பு சங்கம், புதுமார்க்கெட் ரோடு, கோத்தகிரி'
என்ற முகவரிகளுக்கு அனுப்பலாம்.
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்
தமிழ்நாடு அறக்கட்டளை, நீலகிரி மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம், கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் மற்றும் ஷலோம் சேரிட்டபிள் டிரஸ்ட் இணைந்து குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நந்தட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் ௬ ம் தேதி இலவச கண் சிகிச்சை முகாம் நடக்கிறது.
பல்வேறு வகையான கண் பிரச்னைகளுக்கு இலவசமாக சிகிச்சை மற்றும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளது. ஊட்டி அரசு மருத்துவமனை மருத்துவர் அமராவதி ராஜன் தலைமையிலான குழுவினர் சிகிச்சை அளிக்க உள்ளனர். பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம் சார்பில் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.
ஆக.7 2011: பந்தலூர் அடுத்த கொளப்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், இலவச கண் பரிசோதனை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நிலகிரி மாவட்ட பார்வை இழப்பு சங்கம், கூடலூர் நுகர்வோர்
பாதுகாப்பு மையம் சார்பில் நடைபெற்ற முகாமிற்கு
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவ
சுப்பிரமணியம் தலைமை வகித்தார்.
சேரங்கோடு ஊராட்சி மன்ற துணைத் தலைவர்
ஜி.ஈ. தங்கவேலு முகாமை துவக்கி வைத்துப் பேசினார்.
வட்டார மருத்துவ அலுவலர்
கதிரவன் முன்னிலை வகித்தார்.
டாக்டர்
அமராவதி ராஜன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் பரிசோதனை செய்தனர்.
முகாமில் 160 பேர் கலந்து கொண்டதில்,
13 பேர் அறுவைச் சிகிச்சைக்காக
பரிந்துரைக்கப்பட்டனர்.
மலைப் பகுதி மேம்பாட்டுத் திட்ட சமுதாய ஓருங்கிணைப்பாளர் தேவதாஸ் கொளப்பள்ளி சுகாதார ஆய்வாளர் கணையேந்திரன் சுகாதார செவிலியர்கள் மற்றும் தன்னார்வ செவிலியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்
மக்கள் மையம்
பந்தலூர்:எய்ட்ஸ் கட்டுப்பாடு, மகளிர் நலன் பேணுதல் குறித்த தெருமுனை
பிரசாரம் பந்தலூர் பகுதியில் நடந்து வருகிறது.
தமிழக எய்ட்ஸ் கட்டுப்பாட்டு
சங்கம், நீலகிரி எய்ட்ஸ் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம், கூடலூர்
நுகர்வோர் பாதுகாப்பு மையம் இணைந்து நடத்தும் இந்நிகழ்ச்சியை
பந்தலூரில்
டாக்டர் அறிவழகனும், மேங்கோரேஞ்ச் பகுதியில் டாக்டர் ரமாபிரதாப் துவக்கி
வைத்தனர்.
பிரசாரம் பந்தலூர், மேங்கோரேஞ்ச், அத்திக்குன்னா, உப்பட்டி,
அய்யன்கொல்லி, எருமாடு, சேரம்பாடி, சேரங்கோடு, நெலாக்கோட்டை, பிதர்காடு,
பாட்டவயல் பகுதிகளில் நடத்தப்பட்டு வருகிறது.
கலைக்குழு மூலம் எய்ட்ஸ்
வராமல் தடுக்கும் முறைகள், தாய்சேய் நலன் பாதுகாத்தல், மகளிர் நலன்
பேணுதல், இரத்த தானம், ஆணுறை பயன்பாடு குறித்து ஆடல், பாடல் மூலம் மக்கள் மத்தியில்
தெரிவிக்கின்றனர்.
நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர்
சிவசுப்ரமணியம். நம்பிக்கை மைய ஆலோசகர்கள் அழகுராஜா,
விஜய்சாரதி,ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ், மற்றும் குழுவினர் பங்கேற்றனர்.
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்
மக்கள் மையம்
பந்தலூர் அடுத்துள்ள மேங்கோரேஞ்ச் மருத்துவமனையில் காசநோய் மற்றும் எய்ட்ஸ்
விழிப்புணர்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூடலூர் நுகர்வோர்
பாதுகாப்பு மையமும், அம்பலமூலா பகுதி நீலகிரி-வயநாடு ஆதிவாசிகள் நலச்
சங்கமும் இணைந்து நடத்திய முகாமிற்கு டாக்டர் ரமாபிரகாஷ் தலைமை வகித்தார்.
நுகர்வோர்
பாதுகாப்பு மையத் தலைவர் சிவசுப்பிரமணி, நீலகிரி-வயநாடு ஆதிவாசிகள் நலச்
சங்க திட்ட மேலாளர் ரொனால்டு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பந்தலூர்
அரசு மருத்துவமனை மருத்துவர் விவேகானந்தன் சிறப்பு அழைப்பாளராக கலந்து
கொண்டு விழிப்புணர்வின் அவசியம் குறித்து விளக்கமளித்தார்.
ஆதிவாசிகள் நலச் சங்க ஓருங்கிணைப்பாளர் சோமன், காசநோய் தொடர்பான அறிவுரைகள் வழங்கினார்.அரசு மருத்துவமனை காசநோய் மேற்பாற்வையாளர் யசோதன், நம்பிக்கை மையத்தின் கவிதா ஆகியோர் விளக்கமளித்தனர்.
தோட்டத்
தொழிலாளர்கள் பொதுமக்கள், மருத்துவமனை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
மருந்தாளுநர் கந்தசாமி வரவேற்றார்.
தனிஸ்லாஸ் நன்றி கூறினார்.
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்
மக்கள் மையம்
தாமரை மகளிர் குழு ஊக்குனர் நாராயணி வரவேற்றார்.
குறிஞ்சி மகளிர் குழு நிர்வாகி சாஜி தலைமை வகித்தார். கிரேசி மகளிர் குழு நிர்வாகி இந்திராணி, சினேகா மகளிர் குழு நிர்வாகி மேரி முன்னிலை வகித்தனர். கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்ரமணியம், வார்டு உறுப்பினர் அசோக்குமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர். சூரியா மகளிர் குழு நிர்வாகி ஓமனா நன்றி கூறினார்.
கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்ரமணியம், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று மகளிர் உள்ளாட்சி மன்ற தேர்தலில் மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த பெண்களை போட்டியிட மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கசநோய் குறித்தும் விளக்கமளித்தார்.
வார்டு உறுப்பினர் அசோக்குமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்
கூட்டத்தில் காசநோய், பொது சுகாதரம், தேர்தலில் பங்கேற்பது குறித்து விரிவாக பேசப்பட்டது. மேலும் வரும் உள்ளாட்சி மன்ற தேர்தலில் மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த பெண்களை போட்டியிட வைப்பது; குழு வேட்பாளர்களுக்கு அனைத்து மகளிர் குழுவினரும் ஒத்துழைப்பது; நோய்பரவுவதை தடுக்கவும், பொது சுகாதாரத்தை பேணிகாக்கவும் வீட்டிற்கு ஒரு தனி கழிப்பிடம் அமைத்து கொள்ளுதல் உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்
பெண் சிசுக்களை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்து உதகையில் நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசளிக்கப்பட்டது. கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மக்கள் மையம் மற்றும் உதகை நகர மக்கள் விழிப்புணர்வு சங்கத்தின் சார்பில் நடத்தப்பட்ட பெண் மகவின் சிறப்பு என்ற தலைப்பிலான கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு உதகையில் அரசினர் தாவரவியல் பூங்காவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் பரிசளிக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையத் தலைவர் சிவசுப்ரமணியம் தலைமை தாங்கினார்.
விழிப்புணர்வு சங்கத் தலைவர் ஜனார்த்தனன், கவிஞர் சோலூர் கணேசன் நெஸ்ட் அமைப்பின் அறங்காவலர் சிவதாஸ், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆங்கிலத்தில் நடைபெற்ற இந்த கட்டுரைப் போட்டியில் ஜி.விஜிதா மற்றும் தூனேரி அரசு மேனிலைப்பள்ளி மாணவன் கார்த்திக் ஆகியோருக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.
தமிழில் கட்டுரை எழுதிய வித்யாவுக்கு முதல் பரிசும், ஆதித்தியாவிற்கு இரண்டாவது பரிசும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக சதானந்தன், மாவட்ட தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் ஜேபி, மாவட்ட தமிழ் சங்கத் தலைவர் அய்சானுல்லா, கவிஞர் கமலம் ஆகியோருடன் மலைச்சாரல் மன்றத்தை சேர்ந்த பலரும் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பெண் சிசு பாதுகாப்பு குறித்து விளக்கினர். அம்சவல்லி பெண்ணுலகம் சந்திக்கும் அவலங்கள் குறித்து விவரித்தார். கவிஞர் மயில்வாகனம் பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்
தமிழகத்தில் பள்ளிகள் ஜூன் 15 முதல் செயல்படத் தொடங்கிவிட்டன. சுமார் 20 நாள்கள் கடந்துவிட்ட நிலையில், தருமபுரி மாவட்ட ஆட்சியர் ஆர். லில்லி நடத்திய திடீர் ஆய்வின்போது தெரியவந்த அதிர்ச்சியான தகவல்: பள்ளிகளின் குடிநீர்த் தொட்டிகள் ஒன்றுகூட கழுவப்படவில்லை, பள்ளியின் கழிப்பறைகள் தண்ணீரே இல்லாமல் மோசமான நிலையில் காணப்பட்டன. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மாவட்ட ஆட்சியர், உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. ஆனால், தமிழகம் முழுவதிலும் உள்ள அரசுப் பள்ளிகள் அனைத்திலும் இதுதான் நிலைமை என்பதைச் சொல்லியாக வேண்டியிருக்கிறது. பள்ளி இறுதித் தேர்வு முடிந்தவுடன் விடுமுறையில் செல்லும் ஆசிரியர்கள், பள்ளி திறக்கப்பட்ட பிறகுதான் வருகிறார்கள். மிகச் சில நாள்களில் பள்ளிக்கு வர நேர்ந்தாலும் தலைமையாசிரியர் அறை மட்டுமே சுத்தப்படுத்தப்படுகிறது. பல பள்ளிகளுக்கு இரவுக் காவலர் பெயரளவுக்கு இருக்கிறார்கள். சில இடங்களில் அதற்கும்கூட ஆள் கிடையாது. விடுமுறை நாள்களிலும், இரவு நேரங்களிலும் மது அருந்திப் பொழுதுபோக்கும் இடமாகக்கூடப் பல அரசுப் பள்ளிகள் செயல்படுகின்றன என்பது விவரம் தெரிந்தவர்களுக்குத் தெரியும். இரண்டு மாதங்களுக்குப் பிறகு பள்ளி திறக்கப்படும்போது, வகுப்பறைகள் மட்டும் பெருக்கி தூய்மை செய்யப்படுகின்றன. ஆனால், குடிநீர்த் தொட்டிகளைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. கழிப்பறைகளைப் பற்றியும் யாரும் கவலைப்படுவதில்லை. தேசத் தந்தை காந்தி இந்தச் சூழ்நிலையில் என்ன செய்திருப்பார். அவரே ஒரு துடைப்பம், வாளியுடன் கழிப்பறையைச் சுத்தம் செய்யும் பணியில் இறங்கியிருப்பார். அவருடன் அவரது தொண்டர்களும், மாணவர்களும்கூட இறங்கியிருப்பர். ஆனால், இப்போது மாணவர்களை இதில் ஈடுபடுத்தினால் எதிர்ப்புகள் கிளம்பும். குழந்தைகளைப் படிக்க அனுப்புகிறோமா அல்லது கழிவறையைக் கழுவ அனுப்புகிறோமா என்று பெற்றோர்கள் கூச்சல் எழுப்புவர். அத்தகைய பெற்றோரிடம், இதுவும் ஒரு பாடம்தான் என்று திருப்பிச் சொல்லும் வலிமை இன்றைய ஆசிரியர்களிடமோ, அரசிடமோ இல்லை என்பதுதான் நமது பலவீனம். மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான சிறப்புப் பள்ளிகளில் அக்குழந்தைகளுக்குச் சொல்லித் தரும் அடிப்படைப் பயிற்சியே, இயற்கை அழைப்பு நேர்ந்ததும் அவர்களாகக் கழிவறைக்குச் செல்வதும், அவர்களாக முடிந்தவரை தண்ணீரைப் பயன்படுத்தி சுத்தப்படுத்திக் கொள்வதும்தான். பள்ளியில் கற்கும் இந்தப் பழக்கத்தை அக் குழந்தைகள் வீட்டில் நடைமுறைப்படுத்தி, பெற்றோருக்குச் சங்கடங்களைக் குறைக்கின்றன. மனவளர்ச்சி குறைந்த குழந்தைகளுக்குச் சொல்லித்தரும் நாம், பொதுப் பள்ளிகளில் நல்ல திறனுடன் வரும் மாணவர்களிடம் இதைச் சொல்லித் தருவதில்லை. அதனால்தான் பள்ளிக் கழிப்பறைகள் மோசமான நிலைக்கு இலக்காகின்றன. அந்த மாணவர்கள் வீட்டுக் கழிவறைகளையும்கூட, மோசமாகப் பயன்படுத்தும் வழக்கந்தான் நிலைக்கிறது. மனசாட்சியுடன் பெற்றோர்கள் இதை எண்ணிப் பார்த்தால் அவர்களுக்கே புரியும். தொடக்கப் பள்ளிகளில் சொல்லித் தர வேண்டியதை கல்லூரி வரையிலும்கூட கற்பிக்காததன் விளைவுதான் தெருவோரம் சிறுநீர் கழிக்கும் அநாகரிகம் என்பதைப் பெற்றோருக்குப் புரிய வைத்தால், தேசப்பிதா அண்ணல் காந்தியடிகள் ஏன் தானே கழிவறையைக் கழுவ முற்பட்டார் என்பதைப் புரிந்துகொள்வது எளிது. இந்தப் பணிகளுக்காகத் தனியாரை ஈடுபடுத்துவது குறித்து அதிகாரிகள் பரிந்துரை செய்தாலும், அவர்களும் இதே மெத்தனப் போக்கில் செயல்படுவதும், பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் முக்கிய நபர்களுக்கு வேண்டப்பட்ட அமைப்பாக அவை அமைந்துவிடுவதும் பணவிரயத்தை ஏற்படுத்துமேயல்லாமல், பயன் தராது. இதைப் பள்ளியில் உள்ள ஒவ்வொருவரின் பணியாக மாற்றுவதுதான் இதற்கான தீர்வாக இருக்க முடியும். இந்தச் செயலை மாணவர்கள் மட்டுமே செய்ய வேண்டும் என்பதுகூட அவசியமில்லை. எடுப்புக் கழிவறைகள் இன்றில்லை. அனைத்துமே நீர்ஊற்றுக் கழிவறைகளாக மாற்றப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் உள்ளாட்சியில் உள்ள துப்புரவுப் பணியாளர்களை அழைத்து வந்து அவர்கள் சுத்தம் செய்வதைக் கண்காணிக்கும் பொறுப்பை ஏற்றாலே போதுமானது. சுழற்சி அடிப்படையில் மாணவர்கள் இந்தக் கண்காணிக்கும் பணியை மேற்கொள்ளும்போது, கழிவறைத் தூய்மையின் இன்றியமையாமையை உணர்வார்கள். ஒவ்வொரு பள்ளியிலும் பசுமை மன்றம், நாட்டு நலப்பணித் திட்டம், சாரணர், தேசிய மாணவர் படை என பல்வேறு பிரிவுகள் இருக்கின்றன. இவர்களில் சூழல் அக்கறை கொண்ட மாணவர்களை இதற்கான கண்காணிப்பாளர்களாக நியமிக்கலாம். கழிவறைத் தூய்மைக்கு மிகவும் முக்கியமானது தண்ணீர். பெரும்பாலும் எல்லாப் பள்ளிகளில் இந்த வசதி இல்லை. தண்ணீர் வசதியை ஏற்படுத்திக் கொடுப்பதுதான் உள்ளாட்சிகளின் மிக முக்கியமான பொறுப்பு. இதைக் கண்காணித்து, அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டுசெல்வதும், அதன் மீது உடனடி நடவடிக்கையும் மிகமிக முக்கியம். இப்போதெல்லாம் 20, 30 குடியிருப்புகள் உள்ள வளாகத்துக்கு ஒரு மினி ஆர்.ஒ. பிளான்ட் (குடிநீர் சுத்திகரிப்பு கருவி) பொருத்தப்படுகிறது என்றால், இதைப் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் செய்வதில் என்ன தடை இருக்க முடியும்? பல ஆண்டுகளுக்கு முன்பே, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் தனக்கென சிறியதாக ஒரு குடிநீர் ஆலை அமைத்து, மாணவர்களுக்கு மிகக் குறைந்த விலையில் பாட்டில் குடிநீர் வழங்கியது. அரசு நினைத்தால், ஆயிரம் மாணவர்கள் படிக்கும் ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு சிறிய அளவில் குடிநீர் சுத்திகரிப்பு ஆலையை நிறுவி, மாணவர்களுக்குச் சுத்தமான குடிநீரை வழங்க முடியும். இதற்கெல்லாம் பெரிய நிதிஒதுக்கீடு தேவை இல்லை. நேரத்தை ஒதுக்கினால் போதும். கழிப்பறைத் தூய்மையும் கற்றலின் ஒரு பகுதி என்கிற மனம் இருந்தால் போதும். பள்ளிகளைச் சுத்தமாக்குங்கள். தேசத்தின் தெருக்கள் சுத்தமாகும். மாணவர்களைப் பண்படுத்துங்கள். பண்பாடு காப்பாற்றப்படும். இதையெல்லாம் அரசாங்கம் செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு!
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், மக்கள் மையம், நீலகிரி வயநாடு ஆதிவாசிகள் நல சங்கம், எய்ட் அட் ஆக்ஷன் இணைந்து நெலாக்கோட்டை எய்ட் அட் ஆக்ஷன் கணித மையத்தில் காசநோய் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
எய்ட் அட் ஆக்ஷன் ஒருங்கிணைப்பாளர் சசிதரன் தலைமை வகிததார்.
நீலகிரி வயநாடு ஆதிவாசிகள் நல சங்க திட்ட ஒருங்கிணைப்பாளர் சோமன், கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவ சுப்பிரமணியம்,
பந்தலூர் அரசு மருத்துவமனை காசநோய் கட்டுப்பாடு மைய மருத்துவ மேற்பார்வையாளர் யசோதரன்,
கூடலூர் அரசு மருத்துவமனை காசநோய் மேற்பார்வையாளர் விஜயகுமார் ஆகியோர் காசநோய் குறித்து விளக்கி பேசினார்.
நிகழ்ச்சியில் தணீஸ்லாஸ், ஆதிவாசிகள் நல சங்க அலுவலர் நாராயணன் ஆகியோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
முன்னதாக கணினி பயிற்சி மைய ஆசிரியர் நவீன் வரவேற்றார்.
முடிவில் பயிற்சி மைய ஆசிரியர் சந்திரமோகன் நன்றி கூறினார்.
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்
: "நீலகிரி மாவட்டத்தின் இயற்கை வளங்களை பாதுகாப்பதில் இளைஞர்கள்
முன் வரவேண்டும்,' என வலியுறுத்தப்பட்டுள்ளது.
சி.பி.ஆர். பவுண்டேஷன்,
"நெஸ்ட்' அமைப்பு, கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்
மக்கள் மையம் பந்தலூர் ,
"எய்ட் அட் ஆக்ஷன்' ஆகிய அமைப்புகள் இணைந்து பந்தலூர் அருகே
நெலாக்கோட்டையில் உலக பல்லுயிர் பெருக்க தின விழிப்புணர்வு நிகழ்ச்சியை
நடத்தின.
இதில், சி.பி.ஆர். பவுண்டேஷன் கள அலுவலர் குமாரவேல்
பேசுகையில்,""பல்லுயிர் பெருக்கம் என்பது பூமியில் உள்ள நீர் மற்றும்
நிலத்தில் வாழ கூடிய கணக்கிலடங்காத உயிரினங்களின் வரிசை தான். மரபு வழி
பண்பில் பல்வகை, சிற்றினங்களில் பல்வகை, சூழ்நிலை அமைப்பில் பல்வகை, ஒரு
குறிப்பிட்ட பகுதிக்கு உரித்தான பல்வகை, அறிமுகப்படுத்தப்பட்ட
உயிரினங்களில் பல்வகை என பல்வேறு வகை படுத்தப்பட்டுள்ளது. இதில் உயிர்வகை
இனங்களை காப்பது என்பது அவற்றின் இருப்பிடங்களில், வாழிடங்களில் வைத்து
காப்பாற்றுவதுதான் சிறப்பான செயலாகும்,'' என்றார்.
நெஸ்ட் அமைப்பின்
அறங்காவலர் சிவதாஸ் பேசுகையில்,
""மக்கள் மத்தியில் விழிப்புணர்வு
ஏற்படுத்தும் வகையில் தான் ஒவ்வொன்றிற்கும் ஒரு தினம் வகுத்து நிகழ்ச்சிகள்
நடத்தப்படுகிறது. பல்லுயிர் பெருக்கத்தின் முக்கிய பங்கு வகிக்கும்
இந்தியாவில் நீலகிரி முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும். அதிலும், கூடலூர்
பகுதியில் அனைத்து வகை உயிரினங்கள், தாவரங்கள், விவசாய பயிர்கள் என
அனைத்தும் வாழும் தன்மை கொண்டதால், நீலகிரியின் இயற்கை வளங்களை
பாதுகாப்பதற்கு இளைய தலைமுறையினர் ஒருங்கிணைந்து விழிப்புடன் செயலாற்றிட
வேண்டும். இப்பகுதி மனிதர்கள் அவற்றை அழிக்காவிட்டாலும், வேறிடத்திலிருந்து
வரும் நபர்கள் மூலம் அழிவு பாதையில் செல்கிறது. மூலிகை தன்மை கொண்ட
தாவரங்கள், மரங்கள், நுண்ணியிரிகள் போன்றவை அழிந்து வருவதை தடுக்க
வேண்டும்,'' என்றார்.
கூடலூர் கல்வி மாவட்ட பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர்
ஆசிரியர் ராபர்ட் பேசுகையில்,""வனப்பகுதியில் வளரும் வனவளங்கள் மட்டுமின்றி
வீட்டு தோட்டத்தில் வளரும் மா, பலா, கொய்யா, நெல்லி போன்ற மரங்களும்
மருத்துவத்துறையிலும், இயற்கை வளங்களை பாதுகாப்பதிலும் முக்கிய பங்கு
வகிக்கிறது. இயற்கையை குப்பை மேடாக்கவதையும், நீரோடைகளை
அசுத்தப்படுத்துவதையும் தடுத்திட மாணவர்கள் முன்வரவேண்டும்,'' என்றார்.
பொன்னானி ஜி.டி.ஆர். பள்ளி தலைமையாசிரியர் சமுத்திரபாண்டியன்
பேசுகையில்,""மனிதன் விட்டுக்கொடுக்கும் தன்மை கொண்டவனாகவும், தன்னம்பிக்கை
உள்ளவனாகவும், எதிர்கால வாழ்க்கையை உணர்ந்தவனாகவும் வாழ கற்றுக்கொண்டால்
சமுதாயத்தில் உயர்ந்த நிலைக்கு வர ஏதுவாகும். தன்னையும், சமுதாயத்தையும்
வளர்த்துக்கொள்ள மாறினால் இயற்கை வளங்களையும் காப்பாற்றும் வகையில் மாறிட
ஏதுவாகும்,'' என்றார்.
நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள்
நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய
தலைவர் சிவசுப்பிரமணியம் பேசுகையில்,""நுகர்வோர் பாதிக்கப்படாலும்,
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையிலும் மனிதன் தன்னை மாற்றிக்கொண்டால்
எதிர்காலத்தில் ஏற்படும் பல்வேறு பேரிடர்களை தடுக்க இயலும். வனப்பகுதிகளை
அழிக்க கூடாது ,'' என்றார்.
நிகழ்ச்சியில் மையத்தின் நிர்வாகி கணேசன் மற்றும் 60 க்கும் மேற்ப்பட்ட பயிற்சி மைய இளைஞர்கள்
உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
எய்ட் அட் ஆக்சன் மையத்தின் ஒருங்கிணைப்பாளர்
சசீதரன் வரவேற்றார்.
எய்ட் அட் ஆக்சன் மையத்தின் ஆசிரியர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.
உதகை, , கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் - மக்கள் மையம் உதகை நகர மக்கள் விழிப்புணர்வு சங்கம் சார்பில் ரத்த தானம், உடல் தானம் மற்றும் கண் தான விழிப்புணர்வு முகாம், உதகை நீலகிரி மெட்ரிக். பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது (படம்).
பள்ளித் தாளாளர் ரெமா பத்மநாபன் தலைமை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற, மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்க திட்ட மேலாளர் அமராவதி ராஜன் பேசியது:
தற்போதைய சூழலில் உடல் உறுப்பு தானம் மிகவும் அத்தியாவசியமானது. சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல், இதயம், கண் விழித்திரை போன்றவற்றை தானமாக வழங்கலாம்.
அதேபோல, 18 வயதுக்கு மேற்பட்டோர் 3 மாதத்துக்கு ஒருமுறை ரத்த தானம் செய்யலாம். கண் தானமும் அவசியமாகும். இறந்த பின்னர் மண்ணுக்குள் போகும் உடலிலிருந்து எடுக்கப்படும் உறுப்புகள், மற்றவர்களுக்கு புதிய வாழ்க்கையைக் கொடுக்கும் என்பதால், இது குறித்து அதிக அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றார்.
மக்கள் சட்ட மைய நிறுவனர் விஜயன் பேசுகையில்,
அன்னதானம், ஆடை தானம் ஆகியவற்றின் பரிணாம வளர்ச்சியாக தற்போது ரத்த தானம், உடல் உறுப்பு தானம், கண் தானம் போன்றவை பிரபலமாகி வருகிறது. இதில் தவறுகள் ஏதும் நடக்கக்கூடாது என்பதற்காகவே சட்ட விதிகளும் உருவாக்கப்பட்டுள்ளன என்றார்.
உதகை நகர மக்கள் விழிப்புணர்வு சங்கச் செயலர் ஜனார்த்தனன் பேசுகையில்,
உடல் தானத்தால் சிலருக்கு பயன் கிடைத்தாலும், பெரும்பாலான மக்கள் பயனடையாமல் இருப்பதற்கு, முறையான விழிப்புணர்வு இல்லாததே காரணமாகும். எனவே, விழிப்புணர்வுப் பணிகளை நாடு முழுதும் பரவலாக்க வேண்டும் என்றார்.
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையத் தலைவர் சிவசுப்ரமணியன் பேசுகையில்,
உடல் தானம் என்பது பெயரளவில் மட்டும் இல்லாமல், செயலிலும் இருக்க வேண்டியது அவசியம். பள்ளி மாணவர்கள் தங்கள் குடும்பத்தாரிடமும், அக்கம்பக்கத்தினரிடமும் இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றார்.
பள்ளி முதல்வர் சாண்டி நன்றி கூறினார்.
திங்கள், 22 பிப்ரவரி, 2010
நுகர்வோர் அமைப்புக்கள் சார்பில்
பள்ளியில் நுகர்வோர் கருத்தரங்கு
ஊட்டி, பிப். 22:கூடலூர்
நுகர்வோர் மனித உரிமை சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், மக்கள் மையங்கள் சார்பில் உலக நுகர்வோர் தினத்தை முன்னிட்டு மாவட்ட அளவிலான கட்டுரை போட்டியை நடத்தியது. ‘உயிரை கொல்லும் உணவு கலப்படம்‘ என்ற தலைப்பில் நடத்தப்பட்ட கட்டுரை போட்டியில் மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவர்கள் 60க்கும் மேற்பட்டவர்கள் கலந்துக் கொண்டு கட்டுரை எழுதினர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, சான்றிழ்கள் வழங்கும் விழா மற்றும் நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கம் காத்தாடி மட்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.
விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் செவணன் தலைமை வகித்தார்.
நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் சிவராஜ் வரவேற்றார்.
நெஸ்ட் அறக்கட்டளை நிறுவனர் சிவதாஸ் முன்னிலை வகித்தார்.
ஊட்டி நகர விழிப்புணர்வு சங்க செயலாளர் ஜனார்த்தனன் கலந்துக் கொண்டு பேசியதாவது:
உணவுப் பொருட்கள் அனைத்தும் கலப்படம் செய்து விற்பனை செய்யப்படுகின்றன. பல்வேறு எண்ணெய்களில் பாமாயில் கலப்படம் செய்யப்படுகிறது. பாலில் கார்பனேட், ஹைட்ராக்சைடு, ரசாயன கழிவுகள் போன்றவை கலக்கப்படுகிறது. தேயிலை தூளில் முந்திரி, புளியங்கொட்டை தோல்களின் துகள்கள் கலந்து விற்கப்படுகிறது. இதனை பயன்படுத்தும் மக்களுக்கு புற்றுநோய், வாதம் போன்ற நோய்கள் தாக்குகின்றன. சாலையோரங்களில் விற்பனை செய்யப்படும் பழங்களில் மண்புழுதிகள், வாகன புகை படிவதால் நோய் ஏற்டுகிறது. எனவே உணவு கலப்படத்தை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்களும் கலப்படம் இல்லாத உணவை உட்கொண்டு உடல் நலத்தை காத்துக் கொள்ள வேண்டும்.
நீலகிரி மாவட்ட நுகர்வோர் கூட்டமைப்பு தலைவர் சிவசுப்பிரமணியம் பேசியதாவது:
உணவே உனது மருந்தாகட்டும், மருந்தே உனது உணவாகட்டும் என்ற முதுமொழிக்கேற்ப நமது உணவு அமைவதில்லை. நமது உணவு தரமானதாக, சுகாதாரமானதாக சரியான விலையில் கிடைக்க வேண்டும். பாதுகாப்பான, தரமான உணவு உண்ணாவிட்டால் நம்மால் சரியாக சிந்திக்கவும், செயல்படவும், அமைதியாக வாழவும் முடியாது. கலப்படம் பல வகைகளில் மேற்கொள்ளப்படுகிறது. உணவு கலப்படத்தை தடுக்க அரசு பல சட்டங்களை அமுல்படுத்தியுள்ளது. பொதுமக்கள் கலப்பட பொருட்கள் விற்பனை செய்வதை கண்டால் உடனடியாக மாவட்ட கலெக்டர், ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வாளர், துணை இயக்குநர், ஊரக நலம், நகாராட்சி நல அலுவலருக்கு புகார் தெரிவிக்க வேண்டும் அல்லது தன்னார்வ நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகளில் புகார் தெரிவிக்கலாம். உணவுப் பொருட்கள் வாங்கும் போதே தரம், தேதி, எடை, காலவதி தேதி அதிலுள்ள சத்துகள் குறித்து அறிந்து கொண்டு வாங்க வேண்டும். உணவு பாதுகாப்புக்கு உருவாக்கப்பட்ட உணவு பாதுகாப்பு சட்டம் 2006 நடைமுறைப்டுத்தினால் நுகர்வோர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறுவார்கள். இவ்வாறு சிவசுப்பிரமணியம் பேசினார்.
கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. தேவர்சோலை நுகர்வோர் சங்க தலைவர் மாரிமுத்து, துணை தலைவர் சிதம்பரநாதன், காத்தாடி மட்டம் நுகர்வோர் சங்க துணை தலைவர் பாபு, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்
4.கலப்படத்தால் நோய்; பாராமல் விட்டால் பாதிக்கும் மெய்! பொருட்களை பார்த்து வாங்க பழகிக்கோங்க...
ஊட்டி : "கலப்பட பொருட்களை உட்கொள்வதால் புற்றுநோய் வரை பாதிப்பு ஏற்படுகிறது' என அதிர்ச்சி தெரிவிக்கப்பட்டது.உலக நுகர்வோர் தினத்தை முன்னிட்டு, கூடலூர் நுகர்வோர் மனித உரிமை சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், மக்கள் மையங்கள் சார்பில், "உயிரைக் கொல்லும் உணவுக் கலப்படம்' என்ற தலைப்பில், மாவட்ட அளவிலான கட்டுரைப் போட்டி நடத்தப்பட்டது. ஊட்டி, குன்னூர், கோத்தகிரி பகுதிகளை சேர்ந்த 60 பேர் கட்டுரை எழுதி அனுப்பினர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி, மாவட்ட நுகர்வோர் குழு கூட்டமைப்பு, பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்றம் சார்பில், ஊட்டி அருகேயுள்ள காத்தாடிமட்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடத்தப்பட்டது. நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் சிவராஜ் வரவேற்றார்.
பள்ளி தலைமை ஆசிரியர் செவணன் தலைமை வகித்து பேசுகையில், ""உணவுக் கலப்படத்தால் மக்கள் பாதிக்கின்றனர்; பல உணவுப் பொருட்கள், உடலுக்கு தீங்கு விளைவிப்பதை அறியாமலே பயன்படுத்துகிறோம். இவற்றை அறிந்துக் கொள்வதுடன், போதை வஸ்துகள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்,'' என்றார்.ஊட்டி நகர விழிப்புணர்வு சங்க செயலர் ஜனார்தனன் பேசுகையில், ""அரிசியில் கல், மண், கோதுமையில் எர்காட், ஊமத்தை விதைகள், கேழ்வரகில் மணல், செயற்கை நிறங்கள், ரவை, கோதுமை, அரிசி மாவுகளில் மரவள்ளி மற்றும் கிழங்கு மாவு, பருப்பு வகைகளில் நச்சுசாயம், வனஸ்பதியில் உருளைக் கிழங்கு மாவு, தேயிலை தூளில் முந்திரி மற்றும் புளியங்கொட்டை தூள் உட்பட பல பொருட்களில் கலப்படம் செய்யப்படுகிறது. சாலையோரங்களில் விற்கப்படும் பழங்கள் மற்றும் உணவுப் பொருட்களில் வாகனப் புகை, மண்புழுதி படிந்திருக்கும். கலப்பட பொருட்களை பயன்படுத்தும் மக்களுக்கு புற்றுநோய் வரை பாதிப்பு ஏற்படுகிறது,'' என்றார்.
நீலகிரி மாவட்ட நுகர்வோர் கூட்டமைப்பு தலைவர் சிவசுப்ரமணியம் பேசியதாவது: தரமாக, சுகாதாரமாக, சரியான விலையில் உணவு கிடைக்க வேண்டும். பாதுகாப்பான தரமான உணவு உண்ணாவிட்டால், நம்மால் சரியாக சிந்திக்கவும், செயல்படவும், அமைதியாகவும் வாழ முடியாது. உணவுக் கலப்பட தடை சட்டம் 1954ன் படி, கலப்படம் செய்வோருக்கு அளிக்கப்படும் தண்டனையை விட, விற்பவருக்கு கூடுதல் தண்டனை கிடைக்கும்.உணவுப் பொருட்கள் வாங்கும் போது தரம், தேதி, எடை, காலாவதி, அதில் உள்ள சத்துக்கள் குறித்து அறிந்து வாங்க வேண்டும். உணவுப் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்ட உணவு பாதுகாப்பு சட்டம் 2006ஐ நடைமுறைபடுத்தினால் பயன் கிடைக்கும். கலப்பட பொருட்கள் விற்பது தெரிந்தால், மாவட்ட கலெக்டர், ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வாளர், துணை இயக்குநர், ஊரக நலம், நகராட்சி நகர் நல அலுவலர், தன்னார்வ நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு நிர்வாகிகளுக்கு புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு, சிவசுப்ரமணியம் பேசினார்."நெஸ்ட்' அறக்கட்டளை நிர்வாகி சிவதாஸ் பேசுகையில், ""ரசாயன உரங்களால், உணவில் ரசாயன தன்மை சேர்ந்து தாய்ப்பாலில் கூட விஷத்தன்மை அடைகிறது. கீரை, பருப்பு, வேர்கடலை, கொண்டை கடலை போன்ற புரத சத்து உணவுகள், பேரிச்சம்பழம், முருங்கை, வல்லாரை, கேழ்வரகு போன்ற உணவு வகைகள், நமது உடலுக்கு பல்வேறு சத்துகளை அளிக்கிறது. மனமும், உடலும் அமைதியாக இருக்க தியானப் பயிற்சி அவசியம். கடைகளில் விற்கப்படும் ஊட்டச்சத்து பொருட்களை விட சத்தான தரமான உணவே, உடலையும், மனதையும் தரமானதாக மாற்றும். இயற்கையாக கிடைக்க கூடிய கீரை, நெல்லி, பழ வகைகள் அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்,'' என்றார்.
தொடர்ந்து, நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கு நடத்தப்பட்டது. ஆறு முதல் 8ம் வகுப்பு பிரிவில், கக்குச்சி மகாத்மா காந்தி பள்ளி மாணவி ஷீபா, கோத்தகிரி ரிவர்சைடு பள்ளி மாணவன் தக்ஷின், பிக்கட்டி பிரியதர்ஷினி பள்ளி மாணவி மனிஷா லாவண்யா முதல் மூன்று பரிசு பெற்றனர். பிளஸ் 1 பிரிவில், காத்தாடி மட்டம் அரசு மேல்நிலைப் பள்ளியின் மஞ்சுளா, சபரி, சரண்யா, ராகுல் முதல் மூன்று பரிசு பெற்றனர். ஊட்டி பிரீக்ஸ் பள்ளி மூன்றாம் வகுப்பு மாணவன் சாமி ஜஸ்னா, ரிவர்சைடு பள்ளி மாணவன் நித்தேசுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. தேவர்சோலை நுகர்வோர் சங்கத் தலைவர் மாரிமுத்து, துணைத் தலைவர் சிதம்பரநாதன், காத்தாடிமட்டம் நுகர்வோர் சங்க துணைத் தலைவர் பாபு, ஆசிரியர்கள் மோகனன் ராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்