: "நீலகிரி மாவட்டத்தின் இயற்கை வளங்களை பாதுகாப்பதில் இளைஞர்கள்
முன் வரவேண்டும்,' என வலியுறுத்தப்பட்டுள்ளது.
சி.பி.ஆர். பவுண்டேஷன்,
"நெஸ்ட்' அமைப்பு, கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்
மக்கள் மையம் பந்தலூர் ,
"எய்ட் அட் ஆக்ஷன்' ஆகிய அமைப்புகள் இணைந்து பந்தலூர் அருகே
நெலாக்கோட்டையில் உலக பல்லுயிர் பெருக்க தின விழிப்புணர்வு நிகழ்ச்சியை
நடத்தின.
இதில், சி.பி.ஆர். பவுண்டேஷன் கள அலுவலர் குமாரவேல்
பேசுகையில்,""பல்லுயிர் பெருக்கம் என்பது பூமியில் உள்ள நீர் மற்றும்
நிலத்தில் வாழ கூடிய கணக்கிலடங்காத உயிரினங்களின் வரிசை தான். மரபு வழி
பண்பில் பல்வகை, சிற்றினங்களில் பல்வகை, சூழ்நிலை அமைப்பில் பல்வகை, ஒரு
குறிப்பிட்ட பகுதிக்கு உரித்தான பல்வகை, அறிமுகப்படுத்தப்பட்ட
உயிரினங்களில் பல்வகை என பல்வேறு வகை படுத்தப்பட்டுள்ளது. இதில் உயிர்வகை
இனங்களை காப்பது என்பது அவற்றின் இருப்பிடங்களில், வாழிடங்களில் வைத்து
காப்பாற்றுவதுதான் சிறப்பான செயலாகும்,'' என்றார்.
நெஸ்ட் அமைப்பின்
அறங்காவலர் சிவதாஸ் பேசுகையில்,
""மக்கள் மத்தியில் விழிப்புணர்வு
ஏற்படுத்தும் வகையில் தான் ஒவ்வொன்றிற்கும் ஒரு தினம் வகுத்து நிகழ்ச்சிகள்
நடத்தப்படுகிறது. பல்லுயிர் பெருக்கத்தின் முக்கிய பங்கு வகிக்கும்
இந்தியாவில் நீலகிரி முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும். அதிலும், கூடலூர்
பகுதியில் அனைத்து வகை உயிரினங்கள், தாவரங்கள், விவசாய பயிர்கள் என
அனைத்தும் வாழும் தன்மை கொண்டதால், நீலகிரியின் இயற்கை வளங்களை
பாதுகாப்பதற்கு இளைய தலைமுறையினர் ஒருங்கிணைந்து விழிப்புடன் செயலாற்றிட
வேண்டும். இப்பகுதி மனிதர்கள் அவற்றை அழிக்காவிட்டாலும், வேறிடத்திலிருந்து
வரும் நபர்கள் மூலம் அழிவு பாதையில் செல்கிறது. மூலிகை தன்மை கொண்ட
தாவரங்கள், மரங்கள், நுண்ணியிரிகள் போன்றவை அழிந்து வருவதை தடுக்க
வேண்டும்,'' என்றார்.
கூடலூர் கல்வி மாவட்ட பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர்
ஆசிரியர் ராபர்ட் பேசுகையில்,""வனப்பகுதியில் வளரும் வனவளங்கள் மட்டுமின்றி
வீட்டு தோட்டத்தில் வளரும் மா, பலா, கொய்யா, நெல்லி போன்ற மரங்களும்
மருத்துவத்துறையிலும், இயற்கை வளங்களை பாதுகாப்பதிலும் முக்கிய பங்கு
வகிக்கிறது. இயற்கையை குப்பை மேடாக்கவதையும், நீரோடைகளை
அசுத்தப்படுத்துவதையும் தடுத்திட மாணவர்கள் முன்வரவேண்டும்,'' என்றார்.
பொன்னானி ஜி.டி.ஆர். பள்ளி தலைமையாசிரியர் சமுத்திரபாண்டியன்
பேசுகையில்,""மனிதன் விட்டுக்கொடுக்கும் தன்மை கொண்டவனாகவும், தன்னம்பிக்கை
உள்ளவனாகவும், எதிர்கால வாழ்க்கையை உணர்ந்தவனாகவும் வாழ கற்றுக்கொண்டால்
சமுதாயத்தில் உயர்ந்த நிலைக்கு வர ஏதுவாகும். தன்னையும், சமுதாயத்தையும்
வளர்த்துக்கொள்ள மாறினால் இயற்கை வளங்களையும் காப்பாற்றும் வகையில் மாறிட
ஏதுவாகும்,'' என்றார்.
நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள்
நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய
தலைவர் சிவசுப்பிரமணியம் பேசுகையில்,""நுகர்வோர் பாதிக்கப்படாலும்,
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையிலும் மனிதன் தன்னை மாற்றிக்கொண்டால்
எதிர்காலத்தில் ஏற்படும் பல்வேறு பேரிடர்களை தடுக்க இயலும். வனப்பகுதிகளை
அழிக்க கூடாது ,'' என்றார்.
நிகழ்ச்சியில் மையத்தின் நிர்வாகி கணேசன் மற்றும் 60 க்கும் மேற்ப்பட்ட பயிற்சி மைய இளைஞர்கள்
உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
எய்ட் அட் ஆக்சன் மையத்தின் ஒருங்கிணைப்பாளர்
சசீதரன் வரவேற்றார்.
எய்ட் அட் ஆக்சன் மையத்தின் ஆசிரியர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக