அன்புடன் வரவேற்கின்றோம்


you are welcome to our web page

எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்

Please give your GOOD IDEAS FOR DEVELOPING
THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPS

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்

வியாழன், 5 மே, 2011

உடல், கண், ரத்த தான விழிப்புணர்வு முகாம்

உடல், கண், ரத்த தான விழிப்புணர்வு முகாம்

உதகை,  , கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் -  மக்கள் மையம்  உதகை நகர மக்கள் விழிப்புணர்வு சங்கம் சார்பில் ரத்த தானம், உடல் தானம் மற்றும் கண் தான விழிப்புணர்வு முகாம், உதகை நீலகிரி மெட்ரிக். பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது (படம்).

 பள்ளித் தாளாளர் ரெமா பத்மநாபன் தலைமை வகித்தார். 
சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற, மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்க திட்ட மேலாளர் அமராவதி ராஜன் பேசியது:
 தற்போதைய சூழலில் உடல் உறுப்பு தானம் மிகவும் அத்தியாவசியமானது. சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல், இதயம், கண் விழித்திரை போன்றவற்றை தானமாக வழங்கலாம்.
 அதேபோல, 18 வயதுக்கு மேற்பட்டோர் 3 மாதத்துக்கு ஒருமுறை ரத்த தானம் செய்யலாம். கண் தானமும் அவசியமாகும். இறந்த பின்னர் மண்ணுக்குள் போகும் உடலிலிருந்து எடுக்கப்படும் உறுப்புகள், மற்றவர்களுக்கு புதிய வாழ்க்கையைக் கொடுக்கும் என்பதால், இது குறித்து அதிக அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றார். 
மக்கள் சட்ட மைய நிறுவனர் விஜயன் பேசுகையில், 
அன்னதானம், ஆடை தானம் ஆகியவற்றின் பரிணாம வளர்ச்சியாக தற்போது ரத்த தானம், உடல் உறுப்பு தானம், கண் தானம் போன்றவை பிரபலமாகி வருகிறது. இதில் தவறுகள் ஏதும் நடக்கக்கூடாது என்பதற்காகவே சட்ட விதிகளும் உருவாக்கப்பட்டுள்ளன என்றார்.

 உதகை நகர மக்கள் விழிப்புணர்வு சங்கச் செயலர் ஜனார்த்தனன் பேசுகையில், 
உடல் தானத்தால் சிலருக்கு பயன் கிடைத்தாலும், பெரும்பாலான மக்கள் பயனடையாமல் இருப்பதற்கு, முறையான விழிப்புணர்வு இல்லாததே காரணமாகும். எனவே, விழிப்புணர்வுப் பணிகளை நாடு முழுதும் பரவலாக்க வேண்டும் என்றார்.
 கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையத் தலைவர் சிவசுப்ரமணியன் பேசுகையில், 
உடல் தானம் என்பது பெயரளவில் மட்டும் இல்லாமல், செயலிலும் இருக்க வேண்டியது அவசியம். பள்ளி மாணவர்கள் தங்கள் குடும்பத்தாரிடமும், அக்கம்பக்கத்தினரிடமும் இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றார்.

பள்ளி முதல்வர் சாண்டி நன்றி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக