பந்தலூர் அருகே நாயக்கன்சோலை கிராமத்தில்
இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.
கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் ,
மக்கள் மையம் , தமிழ்நாடு அறக்கட்டளை;
நீலகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம்;
நாயக்கன்சோலை கிராம மக்கள்;
ஷாலோம் சாரிட்டபிள் டிரஸ்ட்
ஆகியவை இணைந்து
நாயக்கன் சோலை நடுநிலைப்பள்ளி வளாகத்தில்
முகாமில் கண் பரிசோதகர்கள் பயனாளிகளுக்கு கண் பரிசோதனை செய்தனர்
முகாமில் ஆர்வமுடன் பங்கேற்ற மக்கள்
கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு குறித்து
மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்க திட்ட மேலாளர் டாக்டர். அமராவதிராஜன் விளக்கமளித்தார் .
இதில், மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்க திட்ட மேலாளர் டாக்டர். அமராவதிராஜன் மற்றும் டாக்டர்கள் 100 நோயாளிகளை பரிசோதனை செய்தனர். அதில், 12 பேர் கண் புரை அறுவை சிகிச்சைக்காக ஊட்டிக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
ஊர் பிரமுகர் தியாகராஜா வரவேற்றார். கிராம தலைவர் தேவராஜன் தலைமை வகித்தார். நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்ரமணியம், எச்.ஏ.டி.பி., சமுதாய ஒருங்கிணைப்பாளர் பழனிச்சாமி, தேவதாஸ், பள்ளி ஆசிரியர் அனிதா, ஷாலோம் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகிகள் சாமுவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக