அன்புடன் வரவேற்கின்றோம்


you are welcome to our web page

எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்

Please give your GOOD IDEAS FOR DEVELOPING
THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPS

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்

திங்கள், 22 பிப்ரவரி, 2010

நுகர்வோர் அமைப்புக்கள் சார்பில்
பள்ளியில் நுகர்வோர் கருத்தரங்கு

ஊட்டி, பிப். 22:கூடலூர்

நுகர்வோர் மனித உரிமை சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், மக்கள் மையங்கள் சார்பில் உலக நுகர்வோர் தினத்தை முன்னிட்டு மாவட்ட அளவிலான கட்டுரை போட்டியை நடத்தியது. ‘உயிரை கொல்லும் உணவு கலப்படம்‘ என்ற தலைப்பில் நடத்தப்பட்ட கட்டுரை போட்டியில் மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவர்கள் 60க்கும் மேற்பட்டவர்கள் கலந்துக் கொண்டு கட்டுரை எழுதினர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, சான்றிழ்கள் வழங்கும் விழா மற்றும் நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கம் காத்தாடி மட்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.
விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் செவணன் தலைமை வகித்தார்.




நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் சிவராஜ் வரவேற்றார்.

நெஸ்ட் அறக்கட்டளை நிறுவனர் சிவதாஸ் முன்னிலை வகித்தார்.

ஊட்டி நகர விழிப்புணர்வு சங்க செயலாளர் ஜனார்த்தனன் கலந்துக் கொண்டு பேசியதாவது:
உணவுப் பொருட்கள் அனைத்தும் கலப்படம் செய்து விற்பனை செய்யப்படுகின்றன. பல்வேறு எண்ணெய்களில் பாமாயில் கலப்படம் செய்யப்படுகிறது. பாலில் கார்பனேட், ஹைட்ராக்சைடு, ரசாயன கழிவுகள் போன்றவை கலக்கப்படுகிறது. தேயிலை தூளில் முந்திரி, புளியங்கொட்டை தோல்களின் துகள்கள் கலந்து விற்கப்படுகிறது. இதனை பயன்படுத்தும் மக்களுக்கு புற்றுநோய், வாதம் போன்ற நோய்கள் தாக்குகின்றன. சாலையோரங்களில் விற்பனை செய்யப்படும் பழங்களில் மண்புழுதிகள், வாகன புகை படிவதால் நோய் ஏற்டுகிறது. எனவே உணவு கலப்படத்தை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்களும் கலப்படம் இல்லாத உணவை உட்கொண்டு உடல் நலத்தை காத்துக் கொள்ள வேண்டும்.







நீலகிரி மாவட்ட நுகர்வோர் கூட்டமைப்பு தலைவர் சிவசுப்பிரமணியம் பேசியதாவது:

உணவே உனது மருந்தாகட்டும், மருந்தே உனது உணவாகட்டும் என்ற முதுமொழிக்கேற்ப நமது உணவு அமைவதில்லை. நமது உணவு தரமானதாக, சுகாதாரமானதாக சரியான விலையில் கிடைக்க வேண்டும். பாதுகாப்பான, தரமான உணவு உண்ணாவிட்டால் நம்மால் சரியாக சிந்திக்கவும், செயல்படவும், அமைதியாக வாழவும் முடியாது. கலப்படம் பல வகைகளில் மேற்கொள்ளப்படுகிறது. உணவு கலப்படத்தை தடுக்க அரசு பல சட்டங்களை அமுல்படுத்தியுள்ளது. பொதுமக்கள் கலப்பட பொருட்கள் விற்பனை செய்வதை கண்டால் உடனடியாக மாவட்ட கலெக்டர், ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வாளர், துணை இயக்குநர், ஊரக நலம், நகாராட்சி நல அலுவலருக்கு புகார் தெரிவிக்க வேண்டும் அல்லது தன்னார்வ நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகளில் புகார் தெரிவிக்கலாம்.  உணவுப் பொருட்கள் வாங்கும் போதே தரம், தேதி, எடை, காலவதி தேதி அதிலுள்ள சத்துகள் குறித்து அறிந்து கொண்டு வாங்க வேண்டும். உணவு பாதுகாப்புக்கு உருவாக்கப்பட்ட உணவு பாதுகாப்பு சட்டம் 2006 நடைமுறைப்டுத்தினால் நுகர்வோர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறுவார்கள். இவ்வாறு சிவசுப்பிரமணியம் பேசினார்.



            கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. தேவர்சோலை நுகர்வோர் சங்க தலைவர் மாரிமுத்து, துணை தலைவர் சிதம்பரநாதன், காத்தாடி மட்டம் நுகர்வோர் சங்க துணை தலைவர் பாபு, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்




Thanks to Dinakaran 22-02-10 Ooty



















 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக