அன்புடன் வரவேற்கின்றோம்


you are welcome to our web page

எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்

Please give your GOOD IDEAS FOR DEVELOPING
THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPS

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்

வியாழன், 18 பிப்ரவரி, 2010

நுகர்வோர் (பயன்படுத்துவோர்) உரிமைகள்

நுகர்வோர் (பயன்படுத்துவோர்) உரிமைகள்

1. பாதுகாப்பு உரிமை (Right to Safety)
உயிருக்கும் உடமைக்கும் தீங்கு விளைவிக்கும் பொருட்களின் விற்பனையிலிருந்து காக்கப்படும் உரிமை என்று பொருள்படும். வாங்கப்படும் பொருள் உடனடித் தேவையைப் பூர்த்தி செய்வதோடல் லாமல் நீண்டகால நலன்களையும் நிறைவு செய்வதாகவும் இருத்தல் வேண்டும்.
பொருட்களை வாங்குவதற்கு முன்பாக பொருளின் தரம், தேவை ஆகியவற்றுக்கு உத்திரவாதம் அளிக்குமாறு நுகர்வோராகிய நாம் வற்புறுத்த வேண்டும். அக்மார்க், ஐ.எஸ்.ஐ.(I.S.I.) முதலான தரக் குறியீடுள்ள பொருள்களை மட்டுமே நாம் வாங்குவது என உறுதி கொள்ள வேண்டும்.
உதாரணம் :
மின்சாதனங்கள், ஸ்டவ், பிரிட்ஜ், குக்கர்கள், காஸ் சிலிண்டர்கள் மற்றும் சில பொருட்கள் அரசின் நிர்ணயம் செய்யப்பட்ட தரத்தில் மட்டுமே தயாரிக்கப்பட வேண்டும். I.S.I முத்திரை இல்லாமல் மேற்குறிப்பிட்ட பொருட்கள் தயாரிக்கப்படக்கூடாது.
கலப்படமில்லாத உணவுப் பொருட்களை பெறுகின்ற உரிமை

விவரம் அறியும் உரிமை (Right to be informed)

முறையற்ற வணிகத்திற்கெதிராய் நம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் வகையில் பொருள்களின் தரம், அளவு, திறன், தூய்மை, வரைநிலை, விலை ஆகியவற்றைத் தெரிந்து கொள்வதற்கான உரிமை என்று பொருள்படும.
ஒரு பொருளை/சேவையை/ தேர்வு செய்வதற்கு/பயன்படுத்துவதற்கு முன்பு அப்பொருளைப் பற்றி அல்லது சேவையைப பற்றி முழு விபரங்களை அளிக்குமாறு நுகர்வோராகிய நாம் விற்பனையாளரை வற்புறுத்த வேண்டும். இது அவரை பொறுப்புடனும், புத்திசாலித்தனத்துடனும் நடந்து கொள்ளச் செய்வதுடன், பெரும் நிர்ப்பந்த வியாபார உத்திகளின் தாக்கத்திற்கு நாம் இரையாகாது காக்கச் செய்யும். விளம்பரத்திற்காக ஒரு பொருளை வாங்காமல், கொடுக்கும் விலைக்கு உரிய பொருளை வாங்குகிறோமா என்பதை நாம் ஆராய வேண்டும்.
உதாரணம் :
பொட்டலப், பொருட்கள் சட்டம் - பொட்டலப் பொருட்கள் சட்டப்படி, பொட்டலப் பொருட்கள் அனைத்திலும் தயாரிப்பாளர்
  1. பெயர் விலாசம்
  2. என்னபொருள் (Content)
  3. எடை
  4. பொருளின் விலை MRP(வரிகள் உள்பட)
  5. காலாவதியாகும் தேதி (Expiry Date)
போன்ற விபரங்கள் அச்சடிக்கப்பட்டு இருக்க வேண்டும். இதே போன்று மருந்துகளில் உள்ள மூலப் பொருள்களின் பெயர், விற்பனையாளர் (Manufacturers Brand Name) வைத்து இருக்கும் பெயரை விட பெரிய அளவில் அச்சிடப்பட்டு இருக்க வேண்டும். (Example : PARACETAMOL 500 GM Crocin)

தேர்வு செய்யும் உரிமை (Right to Choose)

போட்டி விலைகளில் விற்கப்படும் பலவகைப் பொருட்களை இயன்றவிடத்து கண்ணுற்றுத் தேர்வு செய்யும் உரிமை என்று பொருள்படும். ஏகபோக வர்த்தகமெனில் நியாயமான விலையில் திருப்திகரமான தரம், பணி, சேவை ஆகியவற்றை உறுதி செய்வதற்கான உரிமை என்று பொருள்படும்.
அடிப்படையான பொருள்கள், பணிகள் ஆகியவை குறித்த உரிமையும், இதில் அடங்கும். ஏனெ னில் பொருளைத் தேர்வு செய்வதில் சிறுபான்மையானவரின் கட்டுப்பாடில்லா உரிமை என்பது பெரும் பான்மையானவரின் நியாயமான உரிமைகளைப் பறிப்பதாகும்.
பலவகைப் பொருள்/சேவைகள் போட்டி விலைகளில் கிடைக்கும் போது இந்த உரிமையை மேலும் சிறப்பாகப் பயன்படுத்தலாம்.
உதாரணம் :
டிவி (T.V), (Fridge), வாஷிங் மெஷின், கிரைண்டர் போன்ற பொருள்களை வாங்கும் போது பல தயாரிப்பாளர்களின் மாதிரிகளை (Models) ஒவ்வொன்றையும் ஒப்பிட்டு அவற்றின் விலையிலிருந்து, செயல்திறன் வரை பரிசோதித்துத் தேர்ந்தெடுக்க வாய்ப்பு நமக்கு இருக்கிறது. இது போன்ற ஒரு உரிமை நுகர்வோருக்கு எல்லாத் துறைகளிலும் அவசியமாகின்றது. தற்போது பேருந்து மாத்திரமே தனியார், அரசு இவர்கள் நடத்தி வருவதை ஒப்பிட்டு பார்க்க முடிகிறது. தேர்வு செய்ய முடிகின்றது. இது போன்ற வாய்ப்பு மின்சாரம், டெலிபோன், ரயில்வே, தந்தி போன்றவைகளிலும் நுகர்வோருக்கு கிடைக்க வேண்டும். இது நமது அடிப்படை உரிமை ஆகும்



4. கேட்கப்படும் உரிமை (Right to be Heard)

நுகர்வோரின் நலன்கள் உரிய மன்றங்களில் (Court/Forum) முழுமையாகப் பரிசீலிக்கப்படும் உரிமை என்று பொருள்படும். நுகர்வோர் நலன்களைப் பாதுகாக்க அமைக்கப்படும். பல்வேறு மன்றங்களில் அங்கம் வகிப்பதற்கான உரிமையும் இதில் அடங்கும்.
நுகர்வோர் தொடர்பாக அரசும், அரசு சார்பு நிறுவனங்களும் ஏற்படுத்தும் குழுக்களில், கட்சி, வணிக சார்பற்ற நுகர்வோர் அமைப்புகள் பிரதிநிதித்துவம் பெறச் செய்யலாம்.
உதாரணம் :அநேக அரசுத்துறைகளில் இதற்கென நுகர்வோர் குறை கேட்கும்/தீர்க்கும் நாள் அரசு நடத்தி வருகின்றது. தவிர நுகர்வோர் பொதுமக்கள் அடங்கிய ஆலோசனைக் குழுக்கள் அவ்வப்போது நுகர்வோர் புகார்களை மற்றும் ஆலோசனைகளை ஏற்று கேட்டுத் தீர்க்க முயற்சி செய்து வருகின்றது. இது நமது அடிப்படை உரிமைகளில் ஒன்றாகும். நாம் இவைகளை முறையாக பயன்படுத்தி நமது குறைகளை இந்த கூட்டத்திலேயே தீர்த்துக் கொள்ள முயற்சி செய்தல் வேண்டும்.
உதாரணம் :
டெலிபோன் டெலிபோன் அதாலத்
தபால் தந்தி வாரத்தில் ஒரு நாள்
மின்சாரம் வாரத்தில் ஒரு நாள்
மாவட்ட ஆட்சியர் மனு நீதி நாள்
வங்கிகள் ஒவ்வொரு 15ஆம் தேதி


நுகர்வோரில் குறை தீர்க்கப் பெறுவதற்கான உரிமை (Right to Seek Redressal)

நியாயமற்ற வணிக முறைகள், தயக்கமற்ற சுரண்டல், கலப்படம், பதுக்கல், மிகைப்படுத்தும் விளம்பரங்கள் இவைகளைத் தீர்க்கும் உரிமை என்று பொருள்படும் உண்மையான குறைகளை நியாய மான முறையில் தீர்த்து வைப்பதற்காக உரிமையும் இதில் அடங்கும். இதற்காகவே தான் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 1986 (Consumer Protection Act 1986) இயற்றப்பட்டு நுகர்வோர் குறைதீர் மன்றங்கள் (Consumer Redressal Forum) போன்றவை மூலம் குறைகளை நிவர்த்தி செய்து கொண்டு வருகின்றன.
நுகர்வோர் தங்கள் குறைகளைத் தீர்;த்துக் கொள்ள நுகர்வோர் அமைப்புகளில் (Consumer Protection Council) உதவியையும் நாடலாம்

நுகர்வோரில் குறை தீர்க்கப் பெறுவதற்கான உரிமை (Right to Seek Redressal)

நியாயமற்ற வணிக முறைகள், தயக்கமற்ற சுரண்டல், கலப்படம், பதுக்கல், மிகைப்படுத்தும் விளம்பரங்கள் இவைகளைத் தீர்க்கும் உரிமை என்று பொருள்படும் உண்மையான குறைகளை நியாய மான முறையில் தீர்த்து வைப்பதற்காக உரிமையும் இதில் அடங்கும். இதற்காகவே தான் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 1986 (Consumer Protection Act 1986) இயற்றப்பட்டு நுகர்வோர் குறைதீர் மன்றங்கள் (Consumer Redressal Forum) போன்றவை மூலம் குறைகளை நிவர்த்தி செய்து கொண்டு வருகின்றன.
நுகர்வோர் தங்கள் குறைகளைத் தீர்;த்துக் கொள்ள நுகர்வோர் அமைப்புகளில் (Consumer Protection Council) உதவியையும் நாடலாம்


நுகர்வோர் கல்வி பெறும் உரிமை (Right to Consumer Education)

நுகர்வோர் உரிமை, கடமை, சட்டம் பற்றி அறிவதற்கும் அவர் விழிப்புணர்வு பெறுவதற்கான கல்வி பெறுவதற்கும் உரிமை பெற்றுள்ளனர்.
நம் போன்ற குழுக்கள் இது போன்ற பணியை செய்வதுடன், பள்ளிப் பாடத்திலேயே நுகர்வோர் கல்வி சேர்க்கப்பட வேண்டிய அவசியம் பற்றி எடுத்து உரைத்து வருகிறது. குடும்பத்திற்கான பொருட்களை அன்றாடம் வாங்குவது பெண்கள். எனவே பெண்கள் விழிப்புணர்வு பெறுவது மிக மிக அவசியமாகும்.

தூய்மையான சுற்றுபுறச் சூழலைப் பெறுவதற்கான உரிமை (Right to Health Environment)

தூய்மையான நீர், காற்று, நிலம் இவைகளைப் பெறுவது நமது அடிப்படை உரிமையாகும். இவற்றை மாசுபடுத்துவதற்கு யாருக்கும் உரிமையில்லை. ஒலி மாசுவைக் கட்டுப்படுத்த ஏர்ஹாரன் போன்றவற்றை கட்டுப்படுத்தி ஒலிக்கச் செய்யவும். மரங்களையும், இயற்கை சூழ்நிலைகளையும் அழிக்காமல் பாதுகாக்கவும், மரங்களை நட்டு இயற்கை சூழலை மேம்படுத்தும உள்ள உரிமையாகும்.
 

அடிப்படைத் தேவைகளுக்கான உரிமை (Right to Basic Needs)

உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் போன்றவை மனிதரின் அடிப்படை உரிமை யாகும். நமக்கு தேவையான உணவு, உடை, இடம் ஆகியவற்றை நம்மை ஆளுகின்றவர்கள் நம்மிட மிருந்து வரி வசூலிக்கும் அரசிடமிருந்து பெறுகின்ற உரிமை.
உரிமைகள் 7-ம், 8-ம் அண்மைக்காலத்தில் I.eh. சபையானது நுகர்வோர் உரிமைகளாகச் சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக