அன்புடன் வரவேற்கின்றோம்


you are welcome to our web page

எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்

Please give your GOOD IDEAS FOR DEVELOPING
THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPS

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்

வியாழன், 18 பிப்ரவரி, 2010

நுகர்வோர் உரிமை அறிய


இணைய பக்கம் துவக்கம்

ஊட்டி, பிப். 18:

பொதுமக்கள், மாணவர்கள் நலன் கருதி கூடலூர் நுகர்வோர் மனித உரிமை சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் இணைய பக்கத்தை துவக்கியுள்ளது.

மைய தலைவர் சிவசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கை:

கடந்த 6 ஆண்டுகளாக மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கூடலூர் நுகர்வோர் மனித உரிமை சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் மாவட்ட மக்கள், மாணவர்கள் மத்தியில் நுகர்வோர் மனித உரிமைகள், சுற்றுச்சூழல், ரத்ததானம், கண்தானம் மற்றும் எய்ட்ஸ் உட்பட பல் வேறு விழிப்புணர்வு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

மையம் சார்பில் ‘இணைய பக்கம்‘ ஒன்றையும் உருவாக்கி உள்ளது. இந்த இணைய தளத்தில் நுகர் வோர் உரிமைகள், கடமை கள், நுகர்வோர் பாதுகாப்பு சட்டம், தர முத்திரைகள், உணவு கலப்படம், மனித உரிமை சட்டம், தகவல் உரி மை சட்டம், இந்திய சாட்சிய சட்டம், கண்தானம், ரத்ததானம் மற்றும் மாநில நுகர்வோர் குறைதீர் மன்ற முகவரிகள் உட்பட பல்வேறு தகவல்களை சேகரித்து வெளியிட்டுள்ளது.

நுகர்வோர் குறித்தும், பிற தகவல்கள் குறித்தும் இந்த இணைய பக்கத்தில் தேடி பெறலாம். நுகர்வோர் குறித்த ஆலோனைகருக்கு 94885&20800, 93453&98085 எண்களை தொடர்பு கொள்ளலாம்.

அரசு வேலை நாட்களில் நுகர்வோர் குறித்த புகார், ஆலோசனைகளுக்கு மாநில நுகர்வோர் சேவை மையத்தை 044&28592828 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

நன்றி தினகரன் 18\ 02 \2010

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக