2.நுகர்வோர் பாதுகாப்பு போட்டி வென்றவர்களுக்கு சான்றிதழ்
பந்தலூர் : நுகர்வோர் பாதுகாப்பு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.உலக நுகர்வோர் தினத்தை முன்னிட்டு, கூடலூர் நுகர்வோர் மனித உரிமை சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் சார்பில், பள்ளி மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டி நடத்தப்பட்டது.
பொன்னானி ஜி.டி.ஆர்., பள்ளியில் நடத்தப்பட்ட போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி, பள்ளி வளாகத்தில் நடத்தப்பட்டது. உதவி ஆசிரியர் முருகன் வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் சமுத்திரபாண்டியன் பேசுகையில், ""ஏட்டுக் கல்வியை மட்டுமல்லாமல், சமுதாயத்தில் நடக்கும் நிகழ்வுகளையும் தெரிந்துக் கொள்ள, சமூக நல அமைப்புகள் சார்பில் பள்ளிகளில் பல நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இது, மாணவர்களுக்கு பயனாக உள்ளது,'' என்றார்.
டாக்டர் கதிரவன் பேசுகையில், ""நுகர்வோரின் கடமை மற்றும் உரிமை குறித்து மாணவப் பருவத்திலேயே தெரிந்துக் கொள்ள, இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது, விழிப்புணர்வை ஏற்படுத்தும்,'' என்றார்.
உப்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் ரம்யா, மையத் தலைவர் சிவசுப்ரமணியம், எச்.ஏ.டி.பி., சமுதாய ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி, மைய நிர்வாகிகள் கணேசன், முருகன், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். உதவி ஆசிரியர் ரவிகுமார் நன்றி கூறினார்.
நன்றி : தினமலர் 28 .02 .2010
Top
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக