காஸ் சிலிண்டர் வினியோகத்தை முறைப்படுத்த வேண்டும்
பந்தலூர்: கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய தலைவர் சிவ சுப்பிரமணியம், கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: மலை மாவட்டம் என்பதால் எரி பொருள் அதிகளவில் தேவைப்படுகிறது. அரசு மண்ணெண்ணெய் மற்றும் எரிவாயு வினியோகத்தில் அதிக அக்கறை காட்டுகிறது. இவற்றில் நடைபெறும் முறைகேடுகள் அதிகளவு நுகர்வோரை பாதிக்கிறது.
ரேஷன் கார்டு தாரர்களுக்கு மண்ணெண்ணெய் வழங்குவதில் ஓதுக்கீடு குறைவு என கூறி குறைந்த அளவே மண்ணெண்ணெய் வினியோகம் செய்யப்படுகிறது. கேஸ் சிலிண்டர்கள் உரிய காலத்தில் கிடைக்காமல் நுகர்வோர் அவதியுற்று வருகின்றனர்.
லாரி ஸ்டிரைக் காரணமாக கேஸ் சிலிண்டர் சப்ளையை தாமதப்படுத்துகின்றனர். உண்மையான பயனாளிகள் சிலிண்டர் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். கேஸ் மூலம் இயக்கப்படும் ஆட்டோ, கார் போன்றவற்றுக்கு கள்ள சந்தையில் விற்பனை செய்வது மட்டும் தங்கு தடையின்றி நடைபெற்று வருகிறது. தனியாருக்கு அதிக விலைக்கு கேஸ் சிலிண்டர்கள் விற்பனை செய்யப்படுகிறது.
இதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கேஸ் சிலிண்டர்களை முறையாக வினியோகிக்க வேண்டும். அதுபோல் கேஸ் சிலிண்டருக்கு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக தொகை வசூலிக்கப்படுகிறது. கேஸ் சிலிண்டர் வினியோகிக்க அரசால் ரூ.26 வினியோக கட்டணமாக வழங்கப்படுகிறது. 5 கி.மீ தூரம் வரை போக்குவரத்து கட்டணம் வசூலிக்க கூடாது என்று அறிவுறுத்தி உள்ளது.
5 கி.மீ மேல் 15 கி,மீ வரை மாவட்ட வருவாய் அலுவலர் மூலம் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை போக்குவரத்து கட்டணமாக வசூலிக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் சில கேஸ் ஏஜன்சிகள் அதிக கட்டணத்தை தொடர்ந்து வசூலித்து வருகின்றன. இதுகுறித்து பல முறை ஆர்டிஓ பல முறை எச்சரித்தும் பலன் இல்லை. எனவே கேஸ் ஏஜன்சி நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டு கொண்டுள்ளார்.
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக